1. நண்பர்: பஸ் ஸ்டாண்ட் போகணும். எவ்வளவு ஆகும்?
ஆட்டோ டிரைவர்: 20 ரூபா ஆகும்
நண்பர்: 5 ரூபாய்க்கு வரீங்களா?
ஆட்டோ டிரைவர்: 5 ரூபாய்க்கு யார் வருவாங்க?
நண்பர்: பின்னாடி உட்காருங்க. நான் உங்கள கூட்டிகிட்டு போறேன்.
*************************
2. மனைவி: டாக்டர் ஒரு மாதம் நல்ல மலைப் பகுதியான இடத்துக்குப் போய் ஓய்வெடுக்க சொல்றார். நாம எங்க போகலாம்?
கணவன்: வேற டாக்டர்கிட்ட போகலாம்.
*****************************
3. நீ திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த ?
அது திருட்டு ரயிலா என்னன்ற விபரமெல்லாம் நீங்க ரயில்வே டிபார்ட்மெண்டைத்தான் சார் கேட்கணும்.
************************
4. கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?
மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்!
=======================
5. ஒருவன் 2 நீச்சல் குளங்களை கட்டினான். ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான். ஏன்னு கேட்டதற்கு...அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா என்றான்.
-------------------------
6. மாடு போல சின்னதா இருக்கும்...! ஆனா அது மாடு இல்ல...! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி!
கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
---------------------------
7. கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்
தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்?
---------------------------
8. டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?
---------------------------
No comments :
Post a Comment