1. எல்லாமே தமாஷ் தான்.
என் மனைவி பெயர் அலமேலு. நான் சந்தோஷமாக இருக்கும் போது அவரை அலமேலு, அம்புஜம்,, அகிலாண்டம், அமர்க்களம், அதிர்ஷ்டம், ஆச்சரியம், அந்நியோன்யம், அட்டகாசம், அற்புதம், அமிர்தம், என்று அழைப்பேன். கோபமாய் இருக்கும் போது, என்னை நானே அசடு, அநியாயம், அவசரம், அக்கிரமம், அஹங்காரம், என்று அழைத்துக் கொள்வேன். ஹா ஹா ஹா.
2. மோர்க்களி
இன்று என்ன டிபன் பண்ணுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். தினம் மண்டையை குடையும் விஷயம் இது. வேறு எதுவும் தயாராக இல்லை. கடைசியில் மோர்க்களி செய்யலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் இது உடனே செய்யக் கூடிய டிபன் இல்லை. முதல் நாளே ஏற்பாடு செய்ய வேண்டும். புளித்த மோர் கூட இல்லை. பரவாயில்லை என்று எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சமாளித்தேன். மிக அருமையாக இருந்தது என்று அவர் சொன்னார். ஹா ஹா ஹா.
3. தோலியில் துவையல்.
சிலர் சில காய்கறிகளில் துவையல் செய்வார்கள். சிலர் சில காய்கறிகளின் தோலியில் துவையல் செய்வார்கள். உதாரணமாக சௌ சௌ தோலியில் துவையல் செய்வதுண்டு. என் மனைவியை அதை செய்யச் சொன்னால், மாட்டிற்கு எதுவும் சாப்பிட வைக்க மாட்டீர்கள் போல இருக்கிறதே என்பார்கள். ஹா ஹா ஹா.
4. இளமை / முதுமை.
வாழ்க்கையில் இளமைப் பருவத்தில், குழந்தைகள் பெற்றோர் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். அது அவர்களது முன்னேற்றத்திற்கு உதவும். முதுமைப் பருவத்தில், பெற்றோர்கள் குழந்தைகள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும். அது அவர்களது நிம்மதிக்கு உதவும். ஹா ஹா ஹா.
No comments :
Post a Comment