Monday, February 1, 2021

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1591 to `1605

1591. விட்டுக் கொடுத்தவன் கெட்டுப்போனது கிடையாது கெட்டுபோனவன் விட்டுக் கொடுத்தில்லை. கெட்டதை மறப்பதும், சமாதானம் காப்பதும் நல்லது.

1592. காலம் கறுப்பை வெள்ளை ஆக்கும். கரியை வைரம் ஆக்கும். பராரியைக் கோடிஸ்வரன் ஆக்கும். துக்கத்தை மறக்க வைக்கும். காலத்தை மதிக்க வேண்டும்.

1593. குஷ்ட நோய் உள்ள ஒரு நோயாளியை ஒருவன் பூரண அன்புடன் தயக்கமின்றி தொட்டுப் பழக முடிந்தால், இறைவன் அவன் உள்ளத்தில் இருக்கிறார்.

1594. தன்னை விட வயதான அனுபவப் பட்ட பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு இருந்தால் அவர்களுடன் மறுத்துப்  பேசாமல் மௌனமாக இருத்தல் நல்ல குணம்.

1595. கற்றது கை அளவு, கல்லாதது  உலகஅளவு. கடைசி மூச்சு உள்ள வரை நாம் கற்றுக்  கொண்டு இருக்கிறோம் என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்க வேண்டும்.

1596. ஒருவர் எவ்விதம் யோசிக்கிறார் என்று மற்றவர் சரியாக கணிக்கத் தவறுவதால் தான் இருவர் இடையே கருத்து வேறுபாடும் மனஸ்தாபமும் வருகிறது.

1597. ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் உண்டு.  எனக்கு சண்டை போடுதல், விவாதம் செய்தல்,  தரக் குறைவாகப் பேசுதல் இவை எல்லாம்  பிடிக்காது.

1598. ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக செயல் படும் ஒரு அமைப்பு. அதில் நடக்கும் நல்லது கெடுதலுக்கு அவர்களே பொறுப்பு. நன்கு யோசிக்கணும்.

1599. நன்கு படித்த,நேர்மையான, பண்புள்ள, அனுபவப்பட்ட புத்திசாலிகள் அதிகாரத்தில் இருந்தால் தான் நாடும் மக்களும் நல்வழியில் செல்வார்கள்.

1600. பொருளாதாரக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு குடியரசு, தொழிலாளர், ஜனநாயகம் என்ற மூன்று கட்சிகள் மட்டும் இந்த நாட்டில் இருக்க வேண்டும்.

1601. ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி சார்பில்லாத, எல்லா விதத்திலும் சிறந்த ஒருவரை மக்களே தேர்தலில் வெற்றி பெறச் செய்து அரசாள அனுப்பவேண்டும்.

1602. எவ்வளவோ படித்த, பண்புள்ள, கட்சி சார்பில்லாத, நல்ல மனிதர்கள், மக்களுக்காக உழைக்க விரும்புகிறார்கள். அவர்கள் நம் கண்ணில் படுவதில்லை.

1603. இளைஞர்களுக்கு ஒரு சவால்: உங்கள் பெற்றோர்  சொல்வதைத் தட்டாமல், மறுக்காமல், ஒரே ஒரு நாள் மட்டும்  உங்களால் கேட்டு நடக்க முடியுமா?

1604. உங்கள் முழுக்கட்டுப்பாட்டில் உங்களுக்கு உள்ளேயோ, வெளியேயோ ஏதாவது ஒன்று இருக்கு,  என்று கூறுங்கள் நான் உங்களுக்கு அடிமை ஆகிறேன்.

1605. 27 வயதில் இருந்த எண்ணங்கள், விருப்பங்கள், கொள்கைகள், கற்பனைகள், நட்புகள், 72 வயதில் தலை கீழாக மாறி விடுகின்றன.எப்படி இந்த மாற்றம்? 

No comments :

Post a Comment