Monday, March 23, 2020

ஆட்டத்தைத் துவங்குங்கள்..!

இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் கற்பனை செய்து கொள்கிறார்கள். 50 வயதிலேயே ரிட்டயர்மென்ட் மனநிலையை நோக்கி பயணிக்கற பலரை இப்போது பார்க்க முடிகிறது.

50 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கறோம். 10,000 கி.மீ வண்டியை ஓட்டுங்க, அதுக்கப்பறம் வண்டி ஸ்மூத்தா இருக்கும் என்பார்கள்..... 50 வயதும் அப்படிதான்..... பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ்தான்..!!

50 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள்.

1. புதியதை தேடுங்கள்: சிலர் “பார்ன் வித் ஏ சில்வர் ஸ்பூனாக” இருக்கலாம். 50களில் வாழ்க்கையில் ஓரளவு செட்டில் ஆகியிருந்தால் இந்த உந்துசக்தி குறைந்து போகும். சோம்பேறித்தனம் அதிகமாகும். எனவே புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான ஒன்றைக் கையிலெடுங்கள். உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளக் கூடிய ஒன்றைச் செய்யுங்கள்.

2. இளைஞர்களோடு பழகுங்கள்: 50 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து அங்கிள் அசோசியஷனை உருவாக்காதீர்கள். உங்களை விட வயதில் குறைவானவர்களோடு பழகுங்கள்..! உங்களுக்கு 25 வயதில் இருந்த உற்சாகம், அவர்களிடம் இருக்கும், அந்த எனர்ஜி உங்களுக்கும் கிடைக்கும். அங்கிள் அசோஷியனில் உட்கார்ந்தால் இன்னும் வயசாகும்..!

3. அழகாக உடை உடுத்துங்கள்: அழகான உடைகளை தேர்வு செய்யுங்கள்..... காமா சோமா என்று ஒரு காம்பினேஷனில் உடை அணியாதீர்கள்..! 50 வயதில் நரையும் வழுக்கையும் அழகுதான். உலகின் அழகான நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 50+கார்கள்தான் அதிகம்..!

4. பயணம் செல்லுங்கள்: உடனே 50+ ஆட்கள் பத்துபேரை கூட்டிக் கொண்டு கோயில் கோயிலாக கிளம்பிவிடாதீர்கள். இளைஞர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வித்தியாசமான இடங்களுக்கு செல்லுங்கள். வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள். திசையறியா பயணங்கள் செல்லுங்கள். இல்லையென்றால், 50 வயதில் அங்கிள் ஆன நீங்கள், 60 வயதில் கிழவனாகி விடுவீர்கள்..!

5. நிறைய படியுங்கள்: மூளைக்கு தீனிபோட, நிறைய படியுங்கள். தேர்வு செய்து படியுங்கள்..! புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களை வாசியுங்கள். அவர்கள் பேச்சை கேளுங்கள். அறிவுப் பகிர்தல் நடக்கும் இடங்களில் எல்லாம் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள்..!

6. இளமையில் தத்துவப் பாடல்களைக் கேட்டால் மனது நல்ல வழியில் செல்லும். முதுமையில் காதல் பாடல்களைக் கேட்டால் மனது இளமையாக இருக்கும்.

மேற்சொன்ன விஷயங்களை செய்தால் 50+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. மூளையும் மனசும் சரியாக இயங்க ஏற்பாடு செய்துவிட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வரப் போகிறது..?

எப்போதுமே முதல் இன்னிங்கசை விட இரண்டாம் இன்னிங்கஸ்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கறது..... நீங்கள் 50+ காரராக இருந்தால் தாமதிக்காதீர்கள்...!இது உங்கள் ஆட்டம்.....ஆட்டத்தைத் துவங்குங்கள்..!


No comments :

Post a Comment