Sunday, March 1, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1366 TO 1380

1366. கதை, கட்டுரை, காதல், கவிதை, கற்பனை, நாடகம், சினிமா இவற்றில் ஆர்வம் கொண்டவர் வாழ்க்கையைத் தொலைத்தவர்களாய் இருப்பார்கள் என்பது சரியா?

1367. பெற்றோர் சொல் கேளாமல், படிக்காமல், கெட்ட சகவாசம், கெட்ட பழக்கங்களைக் கற்று, வாழ்க்கையை வீணாக்கியவர்கள் மேல் இரக்கம் கொள்வது சரியா?

1368. வாழ்ந்த பிறகு புரிகிறது, இன்னும் நன்றாக வாழ்ந்திருக்கலாமோ என்று. அதற்குள் வாழ்க்கை முடிந்து விடுகிறது. வாழும் போதே நன்றாக வாழ்வோம்.

1369. கஷ்டம் வந்துட்டாப் போதும், எல்லாரும் ஓடிவிடுவாங்க. நமது மூளையையும் கைத்திறமையையும் உபயோகித்து மறுபடி முயற்சி செய்ய வேண்டியதுதான்.

1370. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் கடவுள் நம்பிக்கையை உருவாக்கவோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களால் கடவுள் நம்பிக்கையை அகற்றவோ இயலாது.

1371. கடவுள் பக்தி வருவதும், வராமல் போவதும் அவரவர் நம்பிக்கை."உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாக்கியதே" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

1372. கடவுள் நம்பிக்கை உருவாக்கவோ அகற்றவோ இயலாது. நம்பிக்கை, பக்தி அவரவர் மனதில உருவாவது. உள்ளவர்கள் நம்பலாம். இல்லாதவர் விட்டுவிடலாம்.

1373. கவிதை எழுதுவது சுலபமல்ல. முயற்சி செய்வதிலும் தவறில்லை. வராவிடில் முயற்சி செய்வதை விட்டுவிட வேண்டும். பிறரைத் துன்புறுத்தக் கூடாது.

1374. தமிழ் பாடல்களில் எதுகை, மோனையுடன் பல வார்த்தைகள் வந்துவிட்டன. புதிதாக கவிதை எழுதுவோர் வார்த்தைகள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்.

1375. கவிதை வேறு உரைநடை வேறு. நல்ல கருத்தை, எளிமையான வார்த்தைகளால், இலக்கணம் தவறாமல், வெண்பா நடையில், நன்கு புரியும்படி சொல்வது கவிதை.

1376. சாம வேதத்தில் தத்-துவம்-அஸி. தத்: அது (அப் பரம் பொருள்), துவம்: நீ(யாக), அஸி:இருக்கின்றாய்."நீ அதுவாக இருக்கின்றாய்" என்று பொருள்.

1377. இளமையில் தத்துவப் பாடல்களைக் கேட்டால் மனது நல்ல வழியில் செல்லும். முதுமையில் காதல் பாடல்களைக் கேட்டால் மனது இளமையாக இருக்கும்.

1378. அறியாமையில் சுகம் கண்டவர்களுக்கு ஆன்ம விடுதலை எப்படிக் கிடைக்கும்? அறியாமையிலிருந்து விடுபட வேண்டும். பிறகு ஆன்மீகம் காண வேண்டும்!

1379. பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஒரு மதகுரு எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து நமக்கு நல் வழி காட்டிய மஹான்.

1380. நேற்று எனக்கும் என் மனைவிக்கும் பெரிய சண்டை. என்ன அவ அடிக்க, அவ என்ன அடிக்க பெரிய சண்டை. அக்கம் பக்கமெல்லாம் கூடி ரொம்ப அவமானம்.


No comments :

Post a Comment