1336. இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? பிறந்த போது அழுதாய், உலகம் சிரித்தது. இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்.
1337. வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லித் தருகின்றார். எனவே எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.
1338. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதில் கவனத்தையும், நேரத்தையும் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக நேரம் செலவழிக்காதீர்கள்.
1339. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவையெனில் அதற்கென தினம் ஒரு முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அப்போது உங்கள் கவலையைப் பற்றி சிந்தியுங்கள்.
1340. வாழ்வில் வெற்றி பெற அதிகாலையில் எழப் பழகுங்கள். சிரிக்கப் பழகுங்கள். அது உங்களுக்கு ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.
1341. நிறைய புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போது புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
1342. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். பட்டியலிடும்போதே மன பாரம் கணிசமாகக் குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கும்.
1343. குழந்தைகள் உங்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு. அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.
1344. தனக்குத் தேவையானதைக் கேட்பவன் சில நேரம் முட்டாளாய்த் தெரிவான். அதைக் கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
1345. எந்த நல்ல பழக்கமும், முழுதும் உங்களுக்கு பழக்கமாக மாற, சில நாட்கள் ஆகும். ஆகவே தேவையான பழக்கங்களைத் திரும்பத் திரும்ப செய்யுங்கள்.
1346. இசை மன அழுத்தத்தைப் போக்குகிறது. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் தரும்.
1347. புதிய மனிதர்களிடம் பேசுவதற்கு சிறிதும் தயங்காதீர்கள். அவர்களிடமிருந்து உங்களுக்கு நல்ல சிந்தனைகளும், நட்பும் கிடைக்க வழியுண்டு.
1348. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. நல்ல மனம் உள்ளவர்கள் தான் பணக்காரர்கள். மூன்று சிறந்த நண்பர்களைக் கொண்டவரும் பணக்காரன் தான்.
1349. எப்போதும் தனித்துவமாக இருங்கள். எதையும் சிறப்பாகச் செய்யுங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக,நேர்த்தியாகச் செய்யப் பழகுங்கள்.
1350. எல்லா புத்தகங்களையும் நீங்கள் முழுவதும் படிக்க வேண்டியதில்லை. சில பக்கங்களில் அது உங்களைக் கவரா விட்டால் மேலும் படிக்காதீர்கள்.

No comments :
Post a Comment