Monday, February 24, 2020

உனக்காக மட்டும் வாழாதே

தன்னுடைய கடையில் சேரும் முருகனை அவர் ஒரு நிபந்தனையுடன் சேர்த்துக் கொள்கிறார். அத்தியாவசியம் தவிர வேறு எந்த செலவுக்கும் நீ காசு கேட்க கூடாது என கண்டித்து சொன்னார்.

உனக்கு தேவையான நேரத்தில் நானே மொத்தமாக கொடுப்பேன் என்றும் சொன்னார். பசியால் வாடி வதங்கியிருந்த அவனுக்கு அப்பொழுது உணவு மட்டுமே தேவையாயிருந்தது .

அவனும் சரியன்று ஒத்துக்கொண்டான். அதற்கு பிறகு அவன் தன்னை முழுமையாக வேலையில் ஈடுபடுத்திக் கொண்டான். அந்த முருக பவனை தனது பவனாக நினைத்து முழுமையாக உழைத்தான்.

இடையில் ஊருக்கு போகவேண்டும் என்று அவன் எவ்வளவு பணம் கேட்டும் அவர் தரவில்லை. ஒருவேளை சோறு போடக் கூட வழியின்றி உன்னை விரட்டியடித்த ஊருக்கு நீ ஏன் செல்கிறாய் என்று அவனை அடக்கி அமைதியாக இருக்க வைத்தார்.

சில வருடங்கள் ஓடியது. அவனுக்கும் அவரின் அன்பும் கண்டிப்பும் பிடித்துப் போனது. எதைப்பற்றியும் கேட்பதில்லை. கடையில் இருந்த மற்ற ஊழியர்கள் அவனை பெண் பார்க்க அழைத்துச் சென்றார்கள் ,சில விடுமுறை தினங்களில் ....முதலாளிக்கு தெரியாமல்....

ஓட்டல் கடையில் வேலை செய்பவருக்கு பெண்ணை தர முடியாது என்று பல இடங்களில் மறுத்துவிட்டனர். அதை எல்லாம் முதலாளி கண்டும் காணாமலும் இருந்தார். அவனை ஏதும் கேட்கவும் இல்லை. அவன் மேல் பரிதாபப்படவும் இல்லை.

இன்றோடு வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. ஒரு நாள் முதலாளி அவனை அழைத்தார். அதிக ஓட்டல் இல்லாத ,ஆனால் பரபரப்பு நிறைந்த ஒரு இடத்திற்குக் கூட்டிச் சென்று புதிய கடையை பார்த்தார் .

முருகா, இந்த இடத்தில் கடையை வைத்தால் ஓடுமா என்று அவனிடம் கேட்டார். அவனும், ஆமாங்க முதலாளி இந்த இடம் நல்ல இடம் நல்ல வியாபாரம் ஆகும் என்றான்.

கடைக்கு முன் பணம் கொடுத்தார். அந்த கடைக்கு தேவையான எல்லாத் தட்டு முட்டு சாமான்களையும் வாங்குதற்கு அவனையே அனுப்பி வைத்தார். அவனோடு இணக்கமாக இருந்த சக தோழர்களையும் அவனோடு பணிக்கு ஒத்தாசை செய்யச் சொன்னார்.

கடை ஆரம்பமாக நாள் குறிக்கப்பட்டது. ஐந்து நாள் முன் அவர் அவனை அழைத்தார். கடை வேலை எல்லாம் சரியாக செல்கிறதா முருகா என கேட்டார். பின்னர் கடை சாவியை அவனிடம் கொடுத்து, அவன்தான் கடைக்கு சொந்தக்காரன் என்றார் .

முதலாளி என்ன இது திடீரென்று இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டான். உன்னுடைய பணம்தான் முருகா. அதில் எனது பங்கும் கொஞ்சம் இருக்கிறது. அது உன் மேல் நான் வைத்திருக்கும் அன்பின் சிறிது சன்மானம் அவ்வளவே...

நீ உன்னுடைய உறவுக்காரர்களை கடை திறப்பு விழாவிற்கு தற்பொழுது அழைத்து உபசரி. பிறகு தானாக எல்லாம் நடக்கும் என்றார். அப்படியே கடை திறப்பு விழாவும் தடபுடலாக இருந்தது. சாப்பாடு போடாமல் விரட்டியடித்த உறவினர்கள் கடை அருமை, சாப்பாடும் அருமை என சொன்னார்கள் .

பிறகு அவனது தூரத்து மாமா ,வசதியான மாமா அவர்களே தனது பெண்ணை அளிக்க முன்வந்தார். பிறகு அவன் முதலாளியின் தலைமையில் மாமா பெண்ணை திருமணம் செய்து மிகவும் வசதியாக வாழ்ந்து வருகிறான். ஆனால் அவர் சொன்ன ஒரு தாரக மந்திரம் அது இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதை அவன் இன்று வரை கடைப்பிடித்து வருகிறான். உனக்காக மட்டும் வாழாதே. உன்னை நம்பி இருக்கும் அனைவரையும் வாழ வை. என்றதை இன்றுவரை அவன் கடைபிடித்து வருகிறான்.

அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட உறவினர்களை காட்டிலும், அவரால் வளர்த்துக் உருவாக்கப்பட்ட மனிதர்களின் அழுகையே அதிகமாக இருந்தது என்னையும் சேர்த்து ....

சில மனிதர்களின் சாதனைகள் வெளியில் தெரிவதில்லை ஆனால் அவர்களது இறுதி ஊர்வலத்தில் தெரியும் என்ற உண்மையை உணர்ந்து கொண்டான் அவன் முதலாளியின் இறுதி ஊர்வலத்தில்.

Friday, February 21, 2020

RANDOM THOUGHTS 736 TO 750

736. There are 247 characters in the Tamil language as against 26 in English. Which language should be more difficult for us to learn?

737. My mother tongue is Tamil and not English. I do not have in-depth knowledge of both languages. Hence I like both languages equally.

738. Translating from English to Tamil or from Tamil to English is not an easy task. We must have a thorough knowledge of both languages.

739. I am unable to understand the American accent. I wonder if an American and Indian dog meets, how will they understand each other.

740. It is better to switch off the main switch before going out of town for long, to avoid electrical short circuits and fire accidents.

741. Bacteria grows on food even when it is kept inside the fridge. Better not to keep for more than 48 hours and the milk for 24 hours.

742. An uneducated person can run the Govt with educated officers. An educated person cannot run the Govt with uneducated officials.

743. Pet dogs might have been vaccinated. How do others know it? They run the risk if the anti-rabies vaccine is not given immediately.

744. To lead an ideal life is difficult. Lord Rama was the epitome of idealism. We should try to be ideal in every aspect of our life.

745. Determination comes out of life situations. Only the wearer knows where the shoe pinches. The sufferings make one understand life.

746. One must try to understand the basic truth behind the law of a religion and not to question the very existence of the law itself.

747. To save electricity, I use 25W in all rooms. I switch on only when needed. I don't use a defrosting fridge, AC, big TV, W/machine.

748. An atheist or rationalist should first thoroughly study and understand all religious texts and finally declare himself what he is.

749. The mouth of all the ferocious dogs, when they are taken out for a stroll, should be tied with a belt. This is a rule in America.

750. A meal in the home is prepared by mummy. Hence it is yummy. But in a restaurant, it is prepared by a dummy. Hence it affects tummy.

Tuesday, February 18, 2020

16 லட்சுமி சுலோகங்கள்

1, தனலட்சுமி - யாதேவீ ஸர்வ பூதேஷு - புஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா: - நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை - நமஸ் தஸ்யை நமோ நம:,

2, தான்யலட்சுமி - யாதேவீ ஸர்வ பூதேஷு - சஷீதா ரூபேண ஸமஸ்த்திதா: - நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை - நமஸ் தஸ்யை நமோ நம:,

3, வித்யாலட்சுமி - யாதேவீ ஸர்வ பூதேஷு - புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா: - நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை - நமஸ் தஸ்யை நமோ நம:,

4, வீரலட்சுமி - யாதேவீ ஸர்வ பூதேஷு - த்ரூதி ரூபேண ஸமஸ்த்திதா: - நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை - நமஸ் தஸ்யை நமோ நம:,

5, ஸெளபாக்யலட்சுமி - யாதேவீ ஸர்வபூதேஷு - துஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா: - நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை - நமஸ் தஸ்யை நமோ நம:,

6, ஸந்தானலட்சுமி - யாதேவீ ஸர்வ பூதேஷு - மாத்ரு ரூபேண ஸமஸ்த்திதா: - நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை - நமஸ் தஸ்யை நமோ நம:,

7, காருண்யலட்சுமி - யாதேவீ ஸர்வ பூதேஷு - தயா ரூபேண ஸமஸ்த்திதா: - நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை - நமஸ் தஸ்யை நமோ நம:,

8, மஹாலட்சுமி - யாதேவீ ஸர்வ பூதேஷு - மஹா ரூபேண ஸமஸ்த்திதா: - நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை - நமஸ் தஸ்யை நமோ நம:,

9, சாந்திலட்சுமி - யாதேவீ ஸர்வ பூதேஷு - சாந்தி ரூபேண ஸமஸ்த்திதா: - நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை - நமஸ் தஸ்யை நமோ நம:,

10, கீர்த்திலட்சுமி - யாதேவீ ஸர்வ பூதேஷு - கீர்த்தி ரூபேண ஸமஸ்த்திதா: - நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை - நமஸ் தஸ்யை நமோ நம:,

11, சாயாலட்சுமி - யாதேவீ ஸர்வ பூதேஷு - ச்சாயா ரூபேண ஸமஸ்த்திதா: - நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை - நமஸ் தஸ்யை நமோ நம:,

12, ஆரோக்கியலட்சுமி - யாதேவீ ஸர்வ பூதேஷு - காந்தி ரூபேண ஸமஸ்த்திதா: - நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை - நமஸ் தஸ்யை நமோ நம:,

13, த்ருஷ்ணாலட்சுமி - யாதேவீ ஸர்வ பூதேஷு - த்ருஷ்ணா ரூபேண ஸமஸ்த்திதா: - நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை - நமஸ் தஸ்யை நமோ நம:,

14, சாந்தலட்சுமி - யாதேவீ ஸர்வ பூதேஷு - ஷாந்தி ரூபேண ஸமஸ்த்திதா: - நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை - நமஸ் தஸ்யை நமோ நம:,

15, விஜயலட்சுமி - யாதேவீ ஸர்வ பூதேஷு - விஜய ரூபேண ஸமஸ்த்திதா: - நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை - நமஸ் தஸ்யை நமோ நம:,

16, சக்திலட்சுமி - யாதேவீ ஸர்வ பூதேஷு - சக்தி ரூபேண ஸமஸ்த்திதா: - நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை - நமஸ் தஸ்யை நமோ நம:

Saturday, February 15, 2020

THE WOMEN IN MY FAMILY

My parents were not in favour of working women as daughters-in-law for their sons. Though educated, none of their daughters was employed also. So I married a girl who was not well educated nor employed. We had two children, a daughter and son, lived within my income and our life was smooth and pleasant.

In those days, the woman was respected only when her husband was alive. If anything happened to her husband, she became a widow and she was not respected nor received either in her husband's family nor her parents. Hence I was worried about my wife and children in case anything happened to me.

To provide and protect my wife, I planned to construct a house in such a way, she could rent out a portion and live out of the rent received. I also planned to educate my children, especially my daughter, so that she need not be at the mercy of anyone in case anything untoward happened to her after her marriage.

She studied well and did her Engineering and also an MBA. Teaching was her passion and she preferred to take it as her career. Later, she got married and settled in the US. She established her own institution and she is now making good money. So I have no worries about her.

My son also studied well and married a good girl. She is also well educated and she preferred doing business. She has established her own shop selling jewelry and various items for women. She is also doing well in her profession making a good income. So I have no worry about her.

I am glad, I have succeeded in my ambition as they are looking after me and my wife with great love, respect, regard, and affection. I am confident that they can stand on their own legs in case of any eventuality. They have children and are leading a happy life and are educating them also.

Nowadays, education is a must for secure and happy living, especially for women. The only important aspect to be noted is that success should not go into their heads and make them arrogant, assertive, authoritative and aggressive in which case their life will get doomed.

Wednesday, February 12, 2020

MY FAMILY DOCTOR

I remember it happened in 1981 when my son was one year old. I was working in Madras. After the office at 5-30 in the evening, I used to go to our recreation club, to avoid the rush on the evening bus. I used to read the newspaper and played table tennis and carrom until 7-30 and then took a bus to return home by 8-30. 

One day when I returned, I saw my wife was cajoling my son who was crying uncontrollably. She was standing on the lawn carrying the child and looking forward to my arrival. When I arrived, I did not know what to do as we were living in a remote place. Then it came to my mind that there was a doctor on the rear street.

We took our son to the doctor late in the night. After explaining the situation, the doctor was kind enough to open the door. He then checked the child and said there must be some food poisoning as his stomach had become hard due to the stoppage of bowel movement. He asked me to get an injection immediately.

I had to go three km away on cycle to a pharmacy which was the only one open at that time. Fortunately, the medicine was available and I brought it in no time to the doctor. He gave the injection to the child and said if the child did not stop crying within an hour, I had to take the child to GH for stomach washing.

We thanked the doctor and returned home. We were clueless as to the cause of food poisoning. Fortunately, my son stopped crying after some time. The doctor charged just Rs.20/ Since then, till 2016, for 35 years, I never consulted any other doctor excepting him. He is my family doctor and even now he charges me only Rs.50/ per visit.

Sunday, February 9, 2020

RANDOM THOUGHTS 721 TO 735

721. When a man becomes old, his wife loves their children and he becomes lifeless. There he thinks about VAANAPRASTHAM  and  SANYASAM.

722. All the people are self-interested only. The percentage only varies. Lesser the percentage more the understanding and vice versa.

723. If we keep the six openings in our head open and the other one closed, we will always be happy. Otherwise, we will surely suffer.

724. When one is in a critical situation, if he is mentally prepared to face the worst, he will have no difficulty to solve the problem.

725. If someone has some belief in something, I do not thrust my belief on him. I just leave it. For, it may lead to misunderstanding.

726. In my opinion, an elderly couple can interfere in a dispute between a younger couple. However, the reverse is not acceptable to me.

727. A restaurant is a place where only the food is provided and a hotel is a place where both accommodation and the food are provided.

728. People advise others not to expect anything from anybody. As long as you make them do things, there is no question of expectation.

729. Every inch in a house should be used. If there is idle and unutilized space, then it is oversize and it is a mere waste of money.

730. Subsequent and consequent have a different meaning. Subsequent means what comes next. Consequent means what is the effect caused.

731. The other side of the river always looks green. Only when we go to another place, we will know the beauty of our place. It is true.

732. The words personal and personnel have different meanings. Personal means belonging to a person. Personnel means employees/workers.

733. Americans believe feeding of the birds causes overpopulation, poor health, the concentration of feces, and aggressive behaviour.

734. If I find that the other person tries to exhibit his knowledge and intelligence, I shall keep my mouth shut and will listen to him.

735. When I sprained my wrist, my doctor friend suggested applying VOVERAN gel instead of MYOSPAS tablet which is harmful to the body.

Thursday, February 6, 2020

BUDGETED RETIRED LIFE

A friend told me that he wanted to lead a budgeted life after his nearing retirement. I gave him the following suggestions. I do not just preach. Determination comes out of life situations. I was bankrupt in 2001 and I became self-sufficient in 2016 by strictly living on these lines for 15 years. It is healthy, economical and satisfactory.

1. Get up at 6 Am.

2. Walk for 30 minutes morning and evening.

3. Breakfast 8 Am, lunch at 1 pm, dinner at 7 pm.

4. No snacks. Only fruits.

5. Wife to broom the floor daily.

6. Husband to mop the floor daily.

7. Wash your dresses.

8. Wife to wash pillow covers once a fortnight.

9. Husband to wash bedspreads once a fortnight.

10. Husband to wash netlon/screens once in two months.

11. Both to clean the house dustfree once in two months.

12. Washing of utensils is to be shared.

13. Go to bed by 9 Pm.

14. Go only for necessities.

15. No debit or credit cards and I phone.

16. Only cash purchase of listed items once a month.

17. To save electricity, use 25W and switch on only when needed. 

18. Do not use a defrosting fridge, AC, large TV, and washing machine.

19. Have only 5 sets of dresses.

20. Always travel by bus or train.

21. Hotel once in 2 months.

22. Cinema once in 2 months.

23. Accounting, reading, writing, music, meditation are to be included.

Total expense for two people per month excluding rent is approximately Rs.6000/ You may add a thousand or two in case of need.



Wednesday, February 5, 2020

RANDOM THOUGHTS 706 TO 720

706. The existence of God cannot be proved. When something goes beyond our control, we seek someone or something to save us. It is God.

707. In life, we do not get all the things we desire and keep complaining. Life is like that. We need to be grateful for what we have.

708. When a spouse helps, some people think it is their duty. Some people think it is a way of expressing love. It depends on attitude.

709. In the case of host and guest, the understanding between the men is equally important as that of the understanding between women.

710. If the rich want to have a relationship with the poor, he must go down to his level. He should not expect him to come to his level.

711. Every person you meet in your life teaches you something important and useful. So be friendly and sympathetic to everyone you meet.

712. Before conducting a party, selecting a theme is important. It includes the colour, dress code, decoration, music, menu, guests etc

713. A hairdresser may charge more for half bald heads as he has to count and cut very carefully. Care, attention, and skill are needed

714. Sense of humour relieves stress. A life without a sense of humour is a waste. One must acquire it to win over others and be loved.

715. Showing too much care will lead to irritation. Showing too little care will lead to disappointment. A neutral stand is preferable.

716. In any relationship, the order is acquaintance, mutual trust, affection and then love blossoms. One has to cultivate it patiently.

717. If one can see the positive side of everything, he can lead a much happier and peaceful life. Hence, be positive and not negative.

718. Avocado is one of the best fruits with lot of health benefits. It is tasteless. Salt and pepper are to be added to make it tasty.

719. Unhappiness is a state of mind. It is always in relation to other persons or things. Avoid them and do things that make you happy.

720. A child plays with toys when it is young. It does not play later as it becomes intelligent. Grandparents are like toys for them.

Tuesday, February 4, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1351 TO 1365

1351. தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக. அது அடிக்கும்போது எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேலையில் இருக்கும் போது பேசாதீர்கள்.

1352. உங்கள் குடும்பத்தின் முக்கியமான நிகழ்வுகளை புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

1353. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைகளுடன் எப்படி அன்பாக இருக்க வேண்டும் என்று சிறிது யோசியுங்கள்.

1354. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே! ஆணவம் ஆயுளை குறைக்கும்.

1355. புளியை சுட்டுக்கொள் உப்பை வறுத்துக்கொள் நெய்யை உருக்கிக்கொள் தயிரை பெருக்கிக்கொள் மொத்தத்தில் வாயைக் கட்டிக்கொள் இதுவே முது மொழி.

1356. கடவுள் எங்கும் நிறைந்து இருந்தாலும் கண்ணுக்குத் தெரிவதில்லை. தன்னிடம் இருக்கும் கடவுளை உணர்வதே இல்லை. அனுபவித்துதான் அறிய முடியும்.

1357. முன்னணி நடிகர்களை ரசிப்பவர்கள் ஜனரஞ்சகமான திரைப்படங்களைத் தான் ரசிப்பார்கள். தரமான படங்களை ரசிக்க மாட்டார்கள். அந்த ரசனையே வேறு.

1358. உலகில் கடினமான உடல் உழைப்பு யாருடையது என்று கேட்டால் எறும்புகள் தான். தன் எடை கொண்ட சக எறும்பை தனியாக முதுகில் எடுத்து செல்லும்.

1359. ஒரு பெண்ணால் மயக்கத்தை வரவழைக்கவும் முடியும், அந்த மயக்கத்தை தெளியவைக்கவும் முடியும். அவளால் முடியாதது ஒன்றுமில்லை. பெண் ஒரு மாயை.

1360. என்னமோ தெரியல்லே, இந்தக் காதல் கத்திரிக்காய் கவிதை கண்ராவியைப் படித்தால் கடுப்புதான் வருகிறது. ஏன் என்று தெரியவில்லை மரமண்டைக்கு.

1361. தனக்குத் தெரியும் என்று நினைப்பவர் சிலர், பிறருக்குத் தெரியாது என்று நினைப்பவர் சிலர், தனக்குத் தெரியாது என்று நினைப்பவர் சிலர்.

1362. 'ஓம் நமோ பகவதே ஸூர்ய நாராயணாய நமஹ" என்று தினமும் 12 தடவை சொல்லி விட்டு, கிழக்கு நோக்கி 12 நமஸ்காரம் செய்தால் ஆரோக்கியம் உண்டாகும்.

1363. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இதயங்கள் சேரும்போது காதல் மலர்கிறது. ஆனால் அவர்களின் மூளைகள் போட்டியிடும்போது அந்தக் காதல் முறிகிறது.

1364. இதய பூர்வமாக சிந்திக்கும் போது அன்பு பிறக்கிறது. அறிவு பூர்வமாக சிந்திக்கும் போது ஆணவம் பிறக்கிறது. அன்பு ஒன்று தான் உலக மகாசக்தி.

1365. அறிவு மூன்று வகை. கடவுள் கொடுத்தது, அனுபவத்தில் வருவது, படிப்பது மூலம் வருவது. ஏதாவது ஒன்று போதாது. எல்லாம் வேண்டும். அது அறிவு.

Monday, February 3, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1336 TO 1350

1336. இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? பிறந்த போது அழுதாய், உலகம் சிரித்தது. இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்.

1337. வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லித் தருகின்றார். எனவே எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.

1338. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதில் கவனத்தையும், நேரத்தையும்  செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக நேரம் செலவழிக்காதீர்கள்.

1339. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவையெனில் அதற்கென தினம் ஒரு முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அப்போது உங்கள் கவலையைப் பற்றி சிந்தியுங்கள்.

1340. வாழ்வில் வெற்றி பெற அதிகாலையில் எழப் பழகுங்கள். சிரிக்கப் பழகுங்கள். அது உங்களுக்கு ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

1341. நிறைய புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போது புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

1342. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். பட்டியலிடும்போதே மன பாரம் கணிசமாகக் குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கும்.

1343. குழந்தைகள் உங்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு. அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

1344. தனக்குத் தேவையானதைக் கேட்பவன் சில நேரம் முட்டாளாய்த் தெரிவான். அதைக் கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

1345. எந்த நல்ல பழக்கமும், முழுதும் உங்களுக்கு பழக்கமாக மாற, சில நாட்கள் ஆகும். ஆகவே தேவையான பழக்கங்களைத் திரும்பத் திரும்ப செய்யுங்கள்.

1346. இசை மன அழுத்தத்தைப் போக்குகிறது. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் தரும்.

1347. புதிய மனிதர்களிடம் பேசுவதற்கு சிறிதும் தயங்காதீர்கள். அவர்களிடமிருந்து உங்களுக்கு நல்ல சிந்தனைகளும், நட்பும் கிடைக்க வழியுண்டு.

1348. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. நல்ல மனம் உள்ளவர்கள் தான் பணக்காரர்கள். மூன்று சிறந்த நண்பர்களைக் கொண்டவரும் பணக்காரன் தான்.

1349. எப்போதும் தனித்துவமாக இருங்கள். எதையும் சிறப்பாகச் செய்யுங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக,நேர்த்தியாகச் செய்யப் பழகுங்கள்.

1350. எல்லா புத்தகங்களையும் நீங்கள் முழுவதும் படிக்க வேண்டியதில்லை. சில பக்கங்களில் அது உங்களைக் கவரா விட்டால் மேலும் படிக்காதீர்கள்.