அனுமனுக்கு சுந்தரம் என்கின்ற பெயர் உண்டு அதில் வரும் எல்லாமே அழகான விஷயங்கள். சுந்தரம் என்றால் அழகு என்றும் ஒரு அர்த்தம் உண்டு. இந்த சுந்தர காண்டம் ராமாயணத்துக்கே திருப்புமுனையாக அமைந்தது.
இந்த காண்டத்தில் தான் ஆஞ்சநேயர் கடல் தாண்டி போய் ஸ்ரீ ராமரின் கணையாழி யை கொடுத்து சீதா மாதாவின்.சூடாமணி கொண் டு வந்து கொடுத்த பின் தான் தசரத மைந்தன் ராமனுக்கு ஹனுமனின் பிரபாவம் புரிந்ததாம்.
அனுமனின் செயற்கரிய செயலுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? மனதார அவரை ஆலிங்கனம் செய்து கொண்டாராம். இதை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது. இப்படிப்பட்ட ஆச்சரிய புருஷரான அனுமனை உலக மஹா தமிழ் கவி கம்பன் நன்கு தேர்ந் தெடுத்த சொற்களால் இப்படித் துதிக்கிறார்
🌷" அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.." 🌷
இதன் பொருள்:-
🌷அஞ்சிலே ஒன்று பெற்றான் = ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்
🌷அஞ்சிலே ஒன்றைத் தாவி = ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி
🌷அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி = ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று
🌷அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் = ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு
🌷அஞ்சிலே ஒன்றை வைத்தான் = அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்
🌷அவன் எம்மை அளித்துக் காப்பான் = அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்..
பஞ்ச பூதங்களின் உதவியுடன் சீதா தேவியை அடைந்தான் ஹனுமன். இதை தினமும் அனு சந்தி்த்து வருபவர்களுக்கு ராமன், ஹனுமன் இருவரின் அருளும் கிடைக்கும்.

No comments :
Post a Comment