1. தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.
2. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெய அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
3. பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும்.
4. பிஸ்கட்டுகளை டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது, டப்பாவிற்குள் டிஷ்யூ 🗞பேப்பரை வைத்துவிட்டால், பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்கும்.
5. சமைத்த பாத்திரங்களில் இருந்து எண்ணெய் பசையை எளிதாக சுத்தம் செய்ய அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போடுங்கள்.
6. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
7. கொத்துமல்லி, புதினா துவையல்கள் அரைக்கும் போது, தண்ணீருக்குப் பதில் சிறிது தயிர் சேர்த்தால் சுவை தரும்.
8. கத்தரிக்காய் கூட்டு, பொரியல் செய்யும்போது கொஞ்சம் கடலை மாவைத் தூவிப் பாருங்கள். கூட்டு, பொரியல் சுவையாக இருக்கும்.
9. ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஓவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க "பளிச்'சென்று இருக்கும்.
10. பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்பு தோலை எடுத்துவிட்டு துண்டுகளாக்கினால் கறை ஒட்டாமல் இருப்பதோடு, காய் நறுக்குவதற்கும் எளிதாக இருக்கும்.
11. கண்ணாடி பாட்டில் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் கடுகைப் போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்துக் கழுவுங்கள். துர்நாற்றம் போய்விடும்.
12. வடைக்கு அரைக்கும்போது மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் ஒரு தேக்கரண்டி நெய் விட்டால் மாவு இறுகிவிடும்.
13. கிரைண்டரில் உளுந்தம் பருப்பு பாதி மசிந்ததும் ஏழெட்டு ஐஸ் க்யூப்களைப் போட்டு அரையுங்கள். மாவும் அதிகம் கிடைக்கும். இட்லியும் பூப்போல மெத்தென்றிருக்கும்.
14. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.
15. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.

No comments :
Post a Comment