ஒருவருடைய செயல் சரியா அல்லது தவறா என்று கண்டு பிடிக்க அவருடைய என்ணத்தையும் செயலையும் பார்க்க வேண்டும். இரண்டில் எண்ணம் மிகவும் முக்கியம்.
1. நல்ல எண்ணத்துடன் கூடிய நல்ல செயல் எப்போதும் சரியானது.
2. நல்ல எண்ணத்துடன் கூடிய தவறான செயலும் சரியானதே.
உ-ம் ;ஒரு பெண்ணின் அருகே ஒரு தேள் வருகிறது. அவளைக் காப்பாற்ற அவள் கையை பற்றி இழுக்கிறாய். செயல் தவறாக இருந்தாலும் எண்ணம் சரியாக இருக்கிறது. அதனால் அந்தச் செயல் சரியானதே.
3. தவறான எண்ணத்துடன் செய்யும் நல்ல செயல் தவறானதே.
உ-ம்: உன்னிடம் மிகவும் அழுக்கான ரூபாய் நோட்டு இருக்கிறது. அதை யாரும் வாங்க மறுக்கிறார்கள். அதை ஒரு பிச்சைக்காரனுக்கு போடுகிறாய். பிச்சை போடுவது நல்ல செயல். ஆனால் எண்ணம் தவறானது. அதனால் அந்த செயலும் தவறானதே.
4. தவறான எண்ணத்துடன் கூடிய தவறான செயல் எப்போதும் தவறானதே.
No comments :
Post a Comment