Friday, July 26, 2019

ராகுவும், கேதுவும்

நவகிரஹம் ஒன்பது உள்ளது. சூரியன், சந்திரன், அங்காரகன், புதன் குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது. ஆனால் வாரம் ஏழு நாட்களே உள்ளது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி. மற்ற இரண்டு கிரஹங்களுக்கும் கிழமை கிடையாதா? 

பகவான் தேவர்களுக்கும், கிரஹங்களுக்கும் பாற்கடலை கடைந்து அமுதத்தை பகிர்ந்து அளிக்கும் போது இடையில் புகுந்த அரக்கன் அதை பெற, சந்திரன் அதை காட்டி கொடுக்க, பகவான் அசுரன் தலையை துண்டித்து விட, அமுதம் பெற்ற அவனுக்கு அழிவு இல்லாததால், அவர்களை இரண்டு கிரஹமாக ஆக்கி இராகு, கேது எனப்பெயர் வைத்து அவர்களுக்கு உரியதாக ராகுகாலம், குளிகைகாலம் என இரண்டு காலத்தை கொடுத்துள்ளார்.

மனிதர்கள் இந்த இராகு காலத்தில் எந்த வேலையைச்செய்தாலும், அது சிரமத்தின் பேரில் தான் நடைபெறும். நற்காரியங்கள் கூடுமானவரை செய்யக்கூடாது. அதேபோல் குளிகனில் கெட்ட காரியங்கள், அபர காரியங்கள் செய்யக்கூடாது எனக்கூறி அருளினார்.

வாரத்துக்கு நாள் ஏழு என ஏழு கிரகஹங்களுக்கும் ஒன்றாக பகவான் உண்டாக்கி, ஒவ்வொரு நாளுக்கும் இருபத்தினான்கு மணி நேரம் என ஏற்படுத்தி நடத்திவரும் போது இடையில் இரு கிரஹங்கள் வருவதால் என்ன செய்ய என யோசித்த பகவான், அனைத்து கிரஹங்களுக்கும் வேலை நேரம் சமமாக இருக்கவேண்டும் அதே நேரம் வார நாட்களையும் கூடுதலாக வருமாறு செய்ய கூடாது என்ற எண்ணத்தில், ஏழு
கிரஹங்களையும் அழைத்து அவர்கள் ஒவ்வொருவர் நேரத்திலும் மூன்று மணிநேரத்தை எடுத்துக்கொண்டார்.

இருபத்திநான்கு மணி நேரம். அதில் மூணு மணி நேரத்தை பகவானுக்கு கொடுத்தது போக மீதி உள்ளது இருபத்தொரு மணி நேரம்.

ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் மாதிரி ஏழு நாட்களுக்கும் எடுத்தால் இருபத்தொரு மணி நேரம்.

இதைத்தான் தன்னால் தலை துண்டிக்கப்பட்டு உடலால் ஒரு கிரஹமாகவும், தலையால் ஒரு கிரஹமாகவும் ஆன ராகு கேதுவுக்கு பிரித்துக்கொடுத்தார்.

ஒவ்வொரு கிழமையிலும் ராகு காலமாக ஒன்றரை மணி நேரமும் குளிகை காலமாக ஒன்றரை மணி நேரமுமாக ஏற்கனவே இருந்த ஏழு நாட்களையும் இருபத்தி நான்கு மணி நேரத்தையும் சமமாக பகிர்ந்தார்.

ராகுவும், கேதுவும் ஒரே உடலின் இரண்டு அங்கம் ஆனதால், அந்த இருபத்தொரு மணி நேரத்தை இரண்டாக பிரித்து ஆளுக்கு பத்தரை மணிநேரம் அதாவது ஒவ்வொரு நாளிலும். ஒன்றரை மணி நேரம் ஏழு நாட்களில் ஏழு பெருக்கல் ஒன்றரை அதாவது பத்தரை மணிநேரமாக கொடுத்துள்ளார்.

பகவான் நல்லவர்களை அரவனைப்பதும், துஷ்டனுக்கு சந்தர்பம் கொடுத்து திருத்தவும், சில சோதனைகளை செய்வான். அப்போதும் செய்பவன் அவனே என அவனிடம் நாம் சரணடைந்து விட்டால் போதும் அவன் நம்மை ஆட்கொண்டுவிடுவான்.

No comments :

Post a Comment