Friday, November 8, 2019

சின்ன சின்ன சமையல் டிப்ஸ் 91 TO 105

91. மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் நெடியைத் தவிர்க்கலாம். ஹச்...... ஊச்......... என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.

92. வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் பொறித்தால் நன்றாக பொறிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.

93. வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது.

94. அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமீன்களும் அருகம்புல்லில் அதிகம்.

95. ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் அதிகமாகாமலும், நன்றாக எடுக்க வரும். 

96. கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.

97. மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.

98. ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால் பூசனம் பிடிக்காமல் இருக்கும்..

99. பாயசத்திற்கு, திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

100. வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

101. சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

102. சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

103. தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

104. உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

105. கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

Tuesday, November 5, 2019

RANDOM THOUGHTS 406 TO 420

406. To grudge over the wrong, a person has done to you in the past, affects only your health and not that of his. He goes scot-free.

407. It is impossible to keep two swords in a sheath. Similarly, the parents of the SIL and that of the DIL cannot live under one roof.

408. I am not for keeping pet animals/birds for they are deprived of freedom, to prey, to eat natural food, and be a master on its own.

409. Battle is a sustained fight between large organized armed forces. War is armed conflict between two nations or states or groups. 

410. Men should remember while the Queen on the chessboard can move freely anywhere, the King can move only one square around at a time

411. Among other things, what I appreciate the most about the US is well-laid roads, disciplined traffic, and excellent signal system.

412. If a person is not convinced with what another person has written, he should ignore it instead of asking for proof or statistics.

413. When a person does not succeed in spite of best efforts, he should not brood over his misfortune but try other avenues to succeed.

414. Whenever someone gifts me a book, I feel I have a long way to go in learning and it will be a difficult task to become a teacher.

415. In US, the clocks are moved back by one hour at 2AM on 1st Sunday in Mar. It is moved forward by one hour on 2nd Sunday in Nov.

416. When a woman has leadership, she is branded bossy. When a man has the same quality, he is declared as a decisive and born leader.

417. A husband and wife, always try to have control over the other under the guise of LOVE. Many are not aware of this and fall as prey.

418. I think men have more love, care, sympathy, and concern for a pregnant woman than the women, though they belong to the same group.

419. Since the women already know and experienced pregnancy, they care less for other women when compared to men who are very ignorant.

420. Sarcasm is irony to mock or convey contempt at others.It is unfriendly.It should not be encouraged.It should be nipped in the bud.

Monday, November 4, 2019

MY DAILY ROUTINE

Health and wealth are like the two sides of a coin. Wealth without good health is of no use. During our earlier life, we were in pursuit of wealth. At least, in our later years, we should take care of our health. To follow a routine and systematic life after retirement is important to maintain good health as medical expenses are high now.

I am 76 and I give below my daily routine as guidance for others. You may make suitable adjustments according to your lifestyle. The younger generation may also follow. However, please remember "early to bed and early to rise" make a person healthy wealthy, and wise.

5-00 AM  Wake up.
5-30 Getting up from the bed.
5-30 to 6-00 Brushing / prayer.
6-00 Black coffee.
6-00 to 6-30 Reading Times of India.
6-30 to 7-00 Mild exercises.
7-00 to 8-00 Morning walk.
8-00 to 8-30 Browsing The Hindu, BBC News. etc,
8-30 Organic green tea with ginger and lemon or soup.
8-30 to 9-00 Morning chores / bath etc.
9-00 to 10-00 Prayer / meditation.
10-00 to 10-30 Morning meals [Rice, sambar or rasam, vegetable, buttermilk].
10-30 to 1-30 Reading / writing / music.
1-30 to 2-00 Nap
2-00 Black coffee.
2-00 to 3-30 Reading / writing / music.
3-30 to 4-00 Evening tiffin [idly, dosa or steam cooked] with buttermilk.
4-00 to 5-00 Evening walk.
5-00 to 5-30 Browsing Internet / WhatsApp.
5-30 to 6-00 Evening bath / prayer.
6-00 to 7-00 Reading / writing / music.
7-00 to 7-30 Dinner [same as in the morning].
7-30 to 9-00 Reading / writing / music.
9-00 To bed.

PLEASE NOTE:
1. I read about 75 pages a day.
2. I wash my clothes myself.
3. I browse the Internet for knowledge.
4. I see a movie on TV with family once a week.
5. I rarely make calls on my phone.
6. I help with domestic chores.
7. Dinner in the hotel and movie once a month with family.
8. Mostly, I dine together with my family.
9. I help my granddaughter with her studies.
10. This routine may vary on special days.


Friday, November 1, 2019

சுந்தர காண்டம்

அனுமனுக்கு சுந்தரம் என்கின்ற பெயர் உண்டு அதில் வரும் எல்லாமே அழகான விஷயங்கள். சுந்தரம் என்றால் அழகு என்றும் ஒரு அர்த்தம் உண்டு. இந்த சுந்தர காண்டம் ராமாயணத்துக்கே திருப்புமுனையாக அமைந்தது.

இந்த காண்டத்தில் தான் ஆஞ்சநேயர் கடல் தாண்டி போய் ஸ்ரீ ராமரின் கணையாழி யை கொடுத்து சீதா மாதாவின்.சூடாமணி கொண் டு வந்து கொடுத்த பின் தான் தசரத மைந்தன் ராமனுக்கு ஹனுமனின் பிரபாவம் புரிந்ததாம்.

அனுமனின் செயற்கரிய செயலுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? மனதார அவரை ஆலிங்கனம் செய்து கொண்டாராம். இதை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது. இப்படிப்பட்ட ஆச்சரிய புருஷரான அனுமனை உலக மஹா தமிழ் கவி கம்பன் நன்கு தேர்ந் தெடுத்த சொற்களால் இப்படித் துதிக்கிறார்

🌷" அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.." 🌷

இதன் பொருள்:-

🌷அஞ்சிலே ஒன்று பெற்றான் = ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்

🌷அஞ்சிலே ஒன்றைத் தாவி = ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி

🌷அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி = ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று

🌷அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் = ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு

🌷அஞ்சிலே ஒன்றை வைத்தான் = அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்

🌷அவன் எம்மை அளித்துக் காப்பான் = அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்..

பஞ்ச பூதங்களின் உதவியுடன் சீதா தேவியை அடைந்தான் ஹனுமன். இதை தினமும் அனு சந்தி்த்து வருபவர்களுக்கு ராமன், ஹனுமன் இருவரின் அருளும் கிடைக்கும்.


Tuesday, October 29, 2019

RANDOM THOUGHTS 391 TO 405

391. If one always speaks the truth, there are two benefits. 1. He will have peace of mind. 2. People will believe he talks only truth.

392. Each one of us may not be connected through a blood line, we may not even be friends. But we are all connected through humanity.

393. When you find someone is facing a problem and if you think it is not your concern, he will do the same when you face a problem.

394. We are all engaged in this amazing journey called life. We must observe what is happening and extend a helping hand to the needy.

395. Some people wrongly think, as long as they do not get caught, they can escape. It is not so. They can never escape from the Lord.

396. If anything good or bad happens in society, everyone wants to air his views irrespective of the fact whether it is right or wrong.

397. I always tell the kids during a dinner that Goddess Sri Lakshmi lives only in the food wasted and they all laugh. Is it so funny?

398. We are totally blinded by our attachments to the material world. Every attachment creates a delusion and we are carried away by it

399. The Goddess of food for Saivaites is Dhanyalakshmi, one of Ashtalakshmi, and Annapurani, avatar of Parvathi, is for Vaishnavites.

400. Whether the body spray is used to enhance the good odour or to suppress the bad odour? Which is the best one that you recommend?

401. How much the children love a parent or hate them is the result of 28 years of upbringing. No point in crying over the split milk.

402. In India, if a man and woman are found talking together, eyebrows raise for obvious reasons. In US, no one cares to look at them.

403. I wonder while people are making a mountain out of a molehill, I am only able to make a mountain into a molehill. Poor performance.

404. Life is not about pleasing oneself. It is about realizing oneself. My daughter told me. Children, nowadays, are more intelligent.

405. If the older generation is not able to live with their son and daughter in law, there is no value for whatever they have achieved.





Sunday, October 27, 2019

I HAVE A DOUBT

IN MAHABHARATA
1. King Chandanu was the emperor of the Kuru dynasty.
2. His son Bhishma relinquished kingdom and wowed not to marry.
3. The king married fisherwoman Sathyavathi.
4. Sathyavathi had an illegitimate son Dvypayanar prior to the marriage.
5. After marriage, she had two sons, Chithrangathan and Vichitraveeriyan.
6. Bhishma also married them to Ambikai and Ambalikai respectively.
7. Bhishma crowned the eldest son Chitrangathan after Chandanu.
8. Chitrangathan died due to ill-health and Bhishma crowned his younger brother next.
9. Vichitraveeriyan also died and both of them did not have any children.
10. To get heirs to the throne, Sathyavathi persuaded the widows to copulate with Dvypayanar.
11. Drudharashtran to Ambikai, Pandu to Ambalikai and Viduran to a maid were born.
12. The eldest son Drudharashtran was blind and hence relinquished the throne to Pandu.
13. Later, Pandu gave back the kingdom to Druharashtran, went to the forest and died.
14. Drudharashtran's wife Kanthari conceived and delivered a huge ball made of flesh.
15. Dvypayanar converted it into 100 sons and 1 daughter. Duryodhana was the eldest.
16. Pandu's wives Kunthi and Mathri got six illegitimate children thro celestial gods. Karna was the eldest.
17. Drudarashtran, the eldest, was alive and he was the King.
18. As per tradition, his eldest son Duruyodana should be crowned.
19. With elder brother Karna alive, Yudishtran has no right to claim for the kingdom.
20. Why Duruyodhanan was denied his rightful right to the kingdom leading to a great war?

IN RAMAYANA
1. Dasaratha was a great emperor and he had four wives.
2. His second wife Kaikeyi knew war tactics.
3. Hence he took her to war as a charioteer.
4. In the war, she saved him from near death.
5. Dasaratha was pleased and gave her two boons.
6. Kaikeyi said she will take it when the time comes.
7. She asked for the two boons when Lord Rama was to be crowned.
8. One, to crown her son Bharatha and two, to send Rama to the forest.
9. Being the king, Dasaratha should have fulfilled his promise.
10. He should have equal love for all his sons including Bharatha.
11. He should have crowned Bharatha and gone to the forest along with Rama.
12. Why should he die?

Wednesday, October 23, 2019

சின்ன சின்ன சமையல் டிப்ஸ் 76 TO 90

76. தோசைக்கல்லில் தோசை வார்க்கும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைச் சேர்த்து வார்த்தால் தோசை மொறு மொறுப்பாக வரும்.

77. இட்லி வார்க்கும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி வார்த்தால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்.

78. சாம்பார் செய்யும்போது வறுத்த வெந்தயத்தை போட்டால் சாம்பார் சுவையாகவும், நல்ல மணமாகவும் இருக்கும்.

79. காப்பர் பாத்திரம் மங்காமல், பளிச்சென்று இருக்க சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் புசி துணியால் அழுத்தி தேய்க்கலாம்.

80. இட்லி சாம்பார் செய்யும் போது கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

81. கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

82. மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற முடியவில்லை என்றால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

83. இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

85. முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

86. உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது புளிப்பு இல்லாத தயிர் அரைக் கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்

87. வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

88. கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எறிந்துவிடாமல் இட்லி பானையின் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.

89. சில்வர் பேப்பரில் சப்பாத்தியை சுற்றி வைத்தால் சப்பாத்தி எப்போதும் சுடாக இருக்கும்.

90. ரசம் தயார் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாகவும். மணமாகவும் இருக்கும்.