சிரிப்பு வெடிகள் -20.
1. மனைவி என்பவள் திருக்குறள் போன்றவள்.....
அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா! அவ்வளவு அதிகாரங்களா?
********************
2. மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.
கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது
******************
3. தக்காளி சோறு பிரியாணி மாதிரி இருந்தா அது அம்மா சமையல்!
பிரியாணியே தக்காளி சோறு மாதிரி இருந்தா அது பொண்டாட்டி சமையல்!
சாப்ட்ட ஒடனே வாந்தி வந்துச்சுன்னா அது லவ்வர் சமையல்!
******************
4. பர்ஸ்ல உள்ள காசு எல்லாம் புடுங்கிட்டு ஒரு புது காலி பர்ஸ் கொடுப்பான் பாரு...
அவன் தான் நகை கடைக்காரன்.
******************
5. சாப்பாட்டுல நீளமா முடி இருக்கேன்னு.. பொண்டாட்டிட்ட கேட்டா... அது காத்துல பறந்து வந்து விழுந்துருக்கும்.. எடுத்து தூக்கி போட்டுட்டு சாப்பிடுங்கன்னு அசால்டா சொல்றா..
சட்டைல நீளமான முடி இருந்ததுக்கு... சண்டைக்கு வரா...!என்ன லாஜிக்னே புரியல பாஸ்..!!
*******************
6. வீட்டுக்கு விளக்கு ஏத்த வரியானு என் பக்கத்து வீட்டு பொண்ணுகிட்ட கேட்டேன்..
.
வெளக்குமாத்தோட வரேன்னு சொல்லுது..
.
ஒரு வேளை வீட்ட கூட்டி விட்டுட்டு விளக்கு ஏத்துவாளோ..
***************
7. நம்ம பொண்ணை தீர விசாரிக்காமல் ஒரு முட்டாப் பயலுக்குக் கட்டிக் கொடுத்துட்டோம்..!
எங்கப்பா கூட இப்படித்தாங்க…நமக்கு கல்யாணம் ஆன பிறகு ரொம்ப நாள் புலம்பிக்கிட்டிருந்தாரு…!
*****************
8. "இந்த மாதிரி மாப்பிள்ளை எங்க தேடினாலும் கிடைக்காது..."
"அப்படியா"
"போலீஸே இவர மூணு வருசமா தேடிக்கிட்டு இருகாங்கனா பார்த்துக்கோங்களேன்..!"
*****************
No comments :
Post a Comment