மனதில் தோன்றிய எண்ணங்கள் 1951 to 1965.
1951. நீங்கள் உங்களை எவ்வளவு பெரியதாக நினைத்தாலும், உங்களைவிட பெரிய மனிதர் ஒருவர் எப்போதும் இருப்பார். தாழ்மையுடன் இருங்கள்.
1952. பரீட்சைலே பாத்து எழுதினா மாட்டிக்குவேன். பாக்காம பேப்பர்லே எழுத முடியலே. என்ன செய்யறது?
1953. பயமுறுத்தி சொல்லிக் கொடுப்பது நமது முன்னோர்கள் வழி. அதை சரியில்லை என்று கூறுவது சரியல்ல. நிரூபிக்க முடியாத வரை.
1954. சிலருக்கு வாழ்க்கை முழுவதும் கவலைப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தலையெழுத்து இருக்கிறது. மாற்ற முடியாது.
1955. வாழ்க்கையில் சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வரும். அதை சமமாக ஏற்றுக்கொள்வது மனப்பக்குவம். அது மிகவும் கடினம்.
1956. அற்ப விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள்; வாழ்க்கை குறைந்து கொண்டே வருகிறது. எப்போதும் ஹரியின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.
1957. மனம் ஒரு குரங்கு. அது தவறான வழிகளில் போகாமல் இருக்க, சுயக்கட்டுப்பாடுகள் வைத்துக்கொண்டு, நல்ல வழிகளில் யோசிப்பது நல்லது.
1958. மற்றவரைப் பாராட்டுவது ஒரு கலை. யாருக்கும் சுலபத்தில் வராது. ஏன் பாராட்ட வேண்டும் என்று தோன்றும். விடாதீர்கள். பலன் பின்னால் தெரியும்.
1959. எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு. யார் எது சொன்னாலும் மறுத்துப் பேசும் குணம் எப்படி ஒருவருக்கு வருகிறது? அதைத் தவிர்க்க முடியாதா?
1960. நண்பன் கடன் கேட்டால், பணம் முக்கியம் என்றால் நண்பனை மறந்து விடுங்கள், நண்பன் முக்கியம் என்றால் பணத்தை மறந்து விடுங்கள்.
1961. வழியில்லை என்று நதிகள் எங்கும் தேங்கி விடுவதில்லை. வழியில்லை என்று துவண்டால், நமக்கு என்றும் நல்வழிகள் பிறப்பதில்லை.
1962. உங்கள் இயல்புகளை, குடும்பத்தை, நண்பர்களை, உங்களுடன் இருப்பவர்களை நீங்கள் நடத்தும் விதத்தை, பணம் மாற்றி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
1963. கடைசியில், எல்லோரும் பொதுவாக தாங்கள் செய்யாததை நினைத்து வருத்தப்படுவார்கள். செய்ததை மறந்து விடுவார்கள்.
1964. பணத்தை நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை. ஆனால், பணம் நம்மை என்ன செய்கிறது என்பது ரொம்ப முக்கியம்.
1965. எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ணவேண்டும்; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
No comments :
Post a Comment