Wednesday, June 7, 2023

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1861 to 1875.

 1861. அப்பா : பிப்ரவரி 14 என்ன நாள் தெரியுமா? 

பையன் : காதலர் தினம் அப்பா. 

அப்பா : முட்டாள், கரண்ட் பில் கட்டக் கடைசி நாள்டா .


1862. “சாத்வீகி” ஆவது மிகவும் கடினம். அதற்கு மிகுந்த மனோபலமும், கடுமையான முயற்சியும், தன்னம்பிக்கையும், இறைவனின் கருணையும் வேண்டும். இறைவனையே எப்போதும் நினைத்துக்  கொண்டு இருப்பவர்கள் சாத்வீகிகள்.


1863. நமக்கு நடிக்கவும் தெரியல்லே. நம்மகிட்ட யார் நடிக்கறாங்க என்று கண்டுபிடிக்கவும் தெரியல்லே. ஒரே கொழப்பமா இருக்கு.


1864. விமானம் என்றால் என்ன? வானூர்தி என்றால் என்ன? விமான நிலையத்திற்கும் வானூர்தி நிலயத்திற்கும் வித்தியாசம் என்ன?


1865. சாமிக்கு மொட்டை போடுறேன்னு ஏமாத்தி கூட்டிக்கிட்டு வந்துட்டு எனக்கு மொட்டை போட்டுட்டாங்க — ஒரு மூன்று வயது சிறுமியின் அழுகை.


1866. எல்லோரும் தனக்குத்தானே பட்டம் கொடுத்துக் கொள்கிறார்கள். ஒரு பல்கலைக்கழகம் கொடுப்பது தான் பட்டம். மற்றதெல்லாம் காற்றில் பறக்கும் பட்டம்தான்.


1867. துவையலுக்கும் சட்னிக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

1. க.பருப்பு, உ.பருப்பு, பெருங்காயம், புளி, மிளகாய் சேர்த்து வருத்து அரைப்பது துவையல். தேங்காய், பொ.கடலை, மிளகாய் வைத்து  அரைப்பது சட்னி.

2. சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவது துவையல். சட்னியை அப்படி சாப்பிடுவதில்லை.

3. துவையலுக்கு தாளிப்பதில்லை. சட்னிக்கு தாளிப்பது உண்டு.

4. துவையலில் தண்ணீர் சேர்ப்பதில்லை. சட்னியில் சேர்ப்பது உண்டு.


1868. தொப்பையைக் மறைப்பதற்கு இரண்டே இரண்டு வழிகள் உண்டு. 1. உணவுக்கட்டுப்பாடு/உடற்பயிற்சி. 2. பெரிய சைஸ் சட்டையை அணிவது. இதில் இரண்டாவது சுலபம்.


1869. ஏழைத் தொழிலாளிகள், வேலைக்காரர்கள், சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசுவது மனிதாபிமானம் அல்ல. மேலே போட்டுக் கொடுப்பது [டிப்ஸ்] உத்தமம்.


1870. சங்கு சக்கரத்தோடு மகாவிஷ்ணு வந்து உபதேசம் செய்ய மாட்டார். நம் நல விரும்பிகள் மூலம் சொல்லுவார். அதைக் கேட்பதும் விடுவதும் நம் இஷ்டம்.


1871. கடவுள் இல்லை என்று கூறி கடவுளைப் பற்றியே பேசுபவர்கள் நாஸ்திகர்கள். கடவுள் இருக்கிறார் என்று கூறி கடவுளை மறந்தவர்கள் ஆஸ்திகர்கள்.


1872. யாராவது யாரைப் பத்தியும் எதையாவது சொன்னா நம்பாதே, ஏன்னா யாராவது உன்னைப் பத்தி எதையாவது யாரிடமாவது சொல்லுவா.


1873. கன்யாதானம், பூதானம், கோதானம், ரத்ததானம், சொர்ணதானம், அன்னதானம், புத்திதானம், அங்க தானம், சிரமதானம், நிதானம் எது சிறந்தது?


1874. “நாய் தேங்காய் தின்ன மாதிரி” என்பார்கள். தானும் தின்னாது பிறரையும் தின்னவிடாது. சிலருக்கு தானாகவும் தெரியாது. சொன்னாலும் புரியாது.


1875. தோசையை நின்னுகிட்டே ஊத்தணும் ஆனா கால் வலிக்கும். இட்லியை ஊத்திட்டு உட்காரலாம். ஆனா நிறைய பாத்திரம் கழுவணும். எல்லாம் கஷ்டம்தான்.



No comments :

Post a Comment