மனதில் தோன்றிய எண்ணங்கள் 1846 to 1860.
1846. எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீங்களும் அதே பாதையில் அவர்கள் பின் செல்லாதீர்கள். உங்களுக்கான பாதையை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.
1847. எத்தனை கைகள் நம்மை கை விட்டாலும், நமது நம்பிக்கை நம்மை கை விடாது.
1848. இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதீர்கள். கனவுகள் தோன்றுவது இருளில் தான்.
1849. சந்தேகத்தை எரித்துவிடுங்கள். நம்பிக்கையை விதைத்துவிடுங்கள். மகிழ்ச்சி தானாகவே மலரும்...
1850. துன்பம் நம்மை சூழ்ந்த போதும்மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம். எனக்கு ஒளியாக நீயிருப்பதால் இருளைபற்றிய கவலை எனக்கில்லை இறைவா.
1851. பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும் தரையில் இருக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டீர்கள்.
1852. நம்மை அவமானப்படுத்தும் போது அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும் அடுத்த நொடியில் இருந்துதான் நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது.
1853. தனித்து போராடி கரைசேர்ந்த பின் திமிராய் இருப்பதில் தப்பில்லையே. எப்போதும் என் அடையாளத்தை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்
1854. முட்களையும் ரசிக்க கற்றுக்கொள். வலிகளும் பழகிப்போகும். அடுத்தவரோடு ஒப்பிட்டு உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே. உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே.
1855. பல முறை முயற்சித்தும் உனக்கு தோல்வி என்றால் உன் இலக்கு தவறு சரியான இலக்கை தேர்ந்தெடு..
1856. வேதனைகளை ஜெயித்துவிட்டால் அதுவே ஒரு சாதனைதான். உன்னால் முடியும் என்று நம்பு. முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றியே.
1857. எந்த சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கலாம் தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால். குறி தவறினாலும் உன் முயற்சி அடுத்த வெற்றிக்கான பயிற்சி.
1858. ஒரு நாள் விடிவுகாலம் வரும் என்ற நம்பிக்கையில் தான் அனைவரின் வாழ்க்கையும் நகர்ந்துக்கொண்டிருக்கு.
1859. தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு. உறவுகள் தூக்கியெறிந்தால் வருந்தாதே வாழ்ந்துக்காட்டு, உன்னை தேடிவருமளவுக்கு.
1860. எல்லாம் தெரியும் என்பவர்களை விட என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே வாழ்வில் ஜெயிக்கின்றார்.
No comments :
Post a Comment