மனதில் தோன்றிய எண்ணங்கள் 1666 TO 1680
1666. ஒருவரின் நண்பரை வைத்து அவரின் தரத்தை மதிப்பீடு செய்யலாம். ஒருவர் படிக்கும் புத்தகத்தை வைத்து அவரின் தரத்தை மதிப்பீடு செய்யலாம்.
1667. ஞானிகள் எழுத்தில் கருத்து இருக்கும், வார்த்தை ஜாலம் இருக்காது. சாமானியர்கள் எழுத்தில் வார்த்தை ஜாலம் இருக்கும், கருத்து இருக்காது.
1668. ஞானிகளின் எழுத்து வழிகாட்டியாக இருக்கும். பின்பற்ற வேண்டும். சாமானியர்களின் எழுத்து வெறும் கற்பனையாக இருக்கும். ரசிக்க வேண்டும்.
1669. நாம் ஞானிகளின் புத்தகங்களை பின்பற்றுவதற்காகப் படிக்கச் வேண்டும். சாமானியர்களின் புத்தகங்களை பொழுது போக்குவதற்குப் படிக்கவேண்டும்.
1670. மனதில் உறுதி வேண்டும் என்பது நல்ல காரியங்கள் செய்வதற்கும், கெட்ட காரியங்கள் செய்யாமல் இருப்பதற்கும் மன உறுதி வேண்டும் என்று பொருள்.
1671. மாதா, பிதா, குரு, மனைவி, குழந்தைகள், நெருங்கிய நண்பன் ஆகியோருக்கு தவறுகளைத் திருத்தும் உரிமை உண்டு. அதை சரியாக எடுத்துக் கொள்வது ஒருவரின் மனோபாவத்தைப் பொறுத்தது.
1672. இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் பெண்கள் இருந்த இருப்பென்ன, இப்போது இருக்கும் இருப்பென்ன? எப்படி இருந்தவங்க எப்படி ஆயிட்டாங்க? அதிருதில்லே?
1673. கல் தோன்றி மண் தோன்றாக் காலம் முதல், இன்று ஜீன்ஸ் காலம் வரை, மருமகள்/ நாத்தனார் இடையே சுமுகமான உறவு இல்லையே, காரணம் என்ன தெரியுமா?
1674. எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள் மனதிற்கு இதமாக இருக்கும். பெரும்பாலும் தற்காப்பு முறையாக இருக்கும். இப்போது கொலை வெறி தெரிகிறது.
1675. இசையமைப்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் தனித் திறமை உண்டு. எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மன். இவர் இசையமைப்பாளர்களின் பிதாமகர்.
1676. எனக்குப் பிடித்த ஆண் பாடகர்கள்: ஜி.என்.பி, எஸ்.டி.பர்மன், முகமத் ரபி, கிஷோர் குமார், அர்மான் மலிக், ஸிட் ஸ்ரீராம். உங்களுக்கு?
1677. எனக்குப் பழய பாடல்கள் தான் பிடிக்கும். ஆனாலும் காலத்திற்கு தகுந்தால் போல மாறவேண்டும். இன்று அர்மான் மலிக், ஸிட் ஸ்ரீராம் காலம். அதையும் ரசிக்கப் பழகணும்.
1678. தமிழ்த் திரைப்படம்/பாடல்களை மட்டும் பார்த்து /கேட்டுக்கொண்டிருந்தால் அதனுடைய தரம் தெரியாது. மற்ற திரைப்படம்/பாடல்களையும் பார்க்க/கேட்கவேண்டும்.
1679. சாஸ்திரிகள் கையில் தர்ப்பை கட்டு வைத்து இருப்பதைப் போல ஒவ்வொருவரும் அவரவர் கையில் ஒரு செல் போனை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்!!!
1680. காதல் வேறு , காமம் வேறு. காதல் அன்பைத் தரும். காமம் உடல் பசியைத் தரும். காதல் வருவதற்கு நேரம் ஆகும். காமம் உடனே வரும். காதல் நிலையானது. காமம் தற்காலிகமானது. காதல் புனிதமானது. காமம் வெறுக்கத்தக்கது.
No comments :
Post a Comment