எனக்குக் கடவுள் பக்தி அதிகம் கிடையாது. நல்ல எண்ணங்களும், மனித நேயமும், பெரியவர்களிடம் அன்பும் மரியாதையும், நேர்மையான வாழ்க்கையும் தான் முக்கியம். ஆனாலும், மிகச் சிறிய அளவில் இறைவனை வணங்குவது உண்டு.
1. தினமும் காலையில் பல் விளக்கியவுடன், காப்பி குடிப்பதற்கு முன், திருநீறு அணிந்து, ஸ்ரீ விஷ்ணவே நமஹ, ஸ்ரீ சிவாய நமஹ, ஸ்ரீ சத்திய காமாயை நமஹ, என்று கூறி, நாராயணா, விக்னேஸ்வரர், முருகன், ஸ்ரீதுர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகியோரை வணங்கி, 108 முறை கீழ்க்கண்ட நாராயண மந்திர ரத்தினத்தை தியானிப்பேன்.
"ஸ்ரீமன் நாராயண ஸரனொவ் ஸரநம் ப்ரபத்யெ ஸ்ரீமதே நாராயணாய நமஹ"
2. பிறகு, காலைக் கடன்களை முடித்து, எனது உடைகளைத் துவைத்த பின், குளித்து விட்டு மறுபடியும் மேலே கூறியதை திரும்பச் செய்வேன். அத்துடன் 12 தோப்புக்கரணம் போடுவேன்.
3. பிறகு மாலை ஆறு மணி வாக்கில் குளித்துவிட்டு, மேலே கூறியதை திரும்பச் செய்வேன்.
4. முடிந்த போது அல்லது வருடம் ஒருமுறை திருச்சி லால்குடிக்கு அருகில் உள்ள திண்ணியத்தில் அமர்ந்திருக்கும் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ வள்ளி தேவயானி ஸமேத சுப்ரமணிய ஸ்வாமி கோவிலுக்கு செல்வது வழக்கம்.
5. மற்றும் பிறந்தநாள், திருமணநாள், திதி நாட்களில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி உண்டியலில் ரூ 500 காணிக்கை செலுத்துவது வழக்கம்.
6. மற்றபடி, என் மனைவி வருடம் முழுவதும் எல்லாப் பண்டிகைகளையும் பக்தியுடன் கொண்டாடுவது வழக்கம். அந்த சமயத்தில் நானும் அவருடன் சேர்ந்து இறைவனை வணங்குவது வழக்கம்.
7. இவைகளைத் தவிர வேறு விதமான பக்தி நடவடிக்கைகள் எதுவும் என்னிடம் கிடையாது. யாரிடமும் பக்தியை உபதேசம் செய்வதும் கிடையாது.