Thursday, April 22, 2021

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1621 TO 1635

1621. தாயார் ஒரு தெய்வம். பூஜிக்கவேண்டும். மனைவி நமது வாழ்க்கைத் துணைவி. சந்தோஷப் படுத்த வேண்டும். கடைசி வரை நம்முடன் இருப்பது மனைவிதான்

1622. நமக்கு மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாதிருந்தால் ,நமது வாழ்க்கை ஒரு சுமக்க முடியாத பெரும் சுமையாக, நரகமாக இருந்திருக்கும்.

1623. வாழ்வில் வெற்றி பெற அதிகாலையில் எழும் பழக்கம் வேண்டும். நாம், பூமி, இயற்கை  உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும் நேரம் பிரம்ம முஹூர்த்தம்.

1624. நாம் தவறு செய்து விடுவோமோ என்று பயந்து பயந்து எவ்வித முயற்சியும் செய்யாமல் சும்மா இருப்பது வாழ்க்கையில் வெற்றிக்கு அறிகுறி இல்லை.

1625. நேற்று நடந்தது திரும்பி வராது. நாளை நடக்க போவது என்ன வென்று தெரியாது.இன்றைக்கு நடக்கப் போவதே நம் முயற்சியின் வெற்றிக்கு அஸ்திவாரம்.

1626. எல்லா மனிதர்களுக்கும் மரபு அணு 99.99% ஒரே மாதிரியாக இருக்கிறது. மீதி 0.01% தான் எல்லா வித்யாசங்களுக்கும், கோளாறுகளுக்கும் காரணம்.

1627. இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம் அறிவு. அதை நல்ல வழியில் உபயோகிக்க வேண்டும். பெரியவர்களுடன் பழகியே ஒருவனால் அறிவாளி ஆக முடியும்.

1628. விவேகானந்தர்: மரணத்தைப் பற்றி கவலைப் படாதே.நீ இருக்கும் வரை அது வரப் போவதில்லை. அது வந்த பின் நீ இருக்கப் போவதில்லை.பின் ஏன் கவலை?

1629. ராமாயணம், மஹாபாரதம் இரண்டும் சகோதர ஒற்றுமையை வலியுறுத்திக் கூறுவது. அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக வாழவேண்டும். பலன் பிறகு தெரியும்.

1630. சும்மா பகல் கனவுகள் கண்டு கொண்டிருப்பது வாழ்க்கை இல்லை. முயற்சி செய்தால் தான் வெற்றி கிடைக்கும். சாதனைகள் படைக்க அதுவே சிறந்த வழி.

1631. தேர்ந்தெடுத்த அரசை எதிர்த்து ஆயிரம் கேள்விகள் கேட்கிறோம். ஆனால் தனது கட்சியின் தலைமையை எதிர்த்து ஒரு கேள்வி கூட கேட்க முடிவதில்லை.

1632.நம் நாட்டில் படிக்காத பாமர மக்களைக் கட்சி அரசியலில் இருந்து வெளிக் கொண்டு வருவது  மிகக் கஷ்டம். அதில் தான் நாட்டின் வெற்றி உள்ளது.

1633. ரகசியத்தை வெளிப்படுத்துவது தவறு. துக்கத்தை வெளிப் படுத்தாதது மற்றொரு தவறு. இரண்டு செய்கையிலும் மன நிம்மதி இருக்காது. தவிக்கும்.

1634. அரசியல், மதம், ஜாதி, சினிமா இவை எல்லாம் ஒரு ஆழ்கடல். அதில் மூழ்கி முத்தெடுக்க முனையும்  முடிவில்லாத முயற்சியில் மூச்சு முட்டும்.

1635. முகநூலில் விருப்பு வெறுப்பு இல்லாமல், வீட்டுக்கு, நாட்டுக்கு, மக்களுக்கு நல்லவற்றை இனிய வார்த்தைகளில் சொல்வதே எழுதுபவரின் சிறப்பு.



No comments :

Post a Comment