Tuesday, September 15, 2020

தட்டை செய்யும் முறை

பிராமணர்களுடைய பக்ஷணங்களில் முருக்கு, சீடை, தட்டை மூன்றும் மும்மூர்த்திகளைப் போன்றது. அவைகளில் முருக்கு செய்வது கொஞ்சம் கடினமானது. பலருக்கு சுற்ற வராது. தட்டை செய்வது சுலபம். தட்டை செய்யும் முறை.

தேவையான பொருட்கள்:

1. மாவு பச்சரிசி: 2 டம்ளர் [400 கிராம்]

2. க. பருப்பு: 1 டீஸ்பூன்

3. பா. பருப்பு: 1 டீஸ்பூன்

4. உளுந்து பொடி: 2 டீஸ்பூன்.

5. ப. மிளகாய்: 4

6. பெருங்காயம்: 1 டீஸ்பூன்

7. வெண்ணை: 2 டேபிள் ஸ்பூன்

8. தேவையான அளவு எண்ணை. உப்பு, தண்ணீர்.

செய்முறை:

1. பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு நீரை வடித்து, காய்ந்த துணியில் உலர்த்தவும். கால் மணி நேரம் கழித்து, மிக்ஸியில் நீர் விடாமல் நைசாக அரைத்து, சலித்துக் கொள்ளவும். பிறகு மாவை வாணலியில், அடுப்பை ஸிம்மில் வைத்து, கை பொறுக்கும் சூடில் வறுத்துக் கொள்ளவும். மாவு ஆறிய பிறகு, சல்லடையில் கட்டி இல்லாமல் சலிககவும்.

2. கால் டம்ளர் [50 கிராம்] உளுத்தம் பருப்பை வெறும் வாணலியில் பொன் நிறமாக வறுத்து மீக்சியில் நைசாக அரைத்து, சலித்துக் கொள்ளவும். பிறகு க. பருப்பு, பா. பருப்பு இரண்டையும் பத்து நிமிடம் உற வைத்து, ப. மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து நைசாக மிக்ஸியில் நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

3. வறுத்து சலித்த பச்சரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 2 டீஸ்பூன் உளுந்து பொடி, உப்பு, அரைத்த ப. மிளகாய் விழுது, வெண்ணை, உற வைத்துள்ள பருப்பு வகைகளை கலந்து, தேவையான நீர் ஊற்றி, பிசைந்து கொள்ளவும். பிறகு ஒரு உலர்ந்த துணியில் உருண்டையாக உருட்டி, தட்டையாக மெலிதாகத் தட்டி, அரை மணி காய விடவும். பிறகு எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

ருசியான தட்டை ரெடி. சாப்பிடும் போது என்னை நினைத்துக் கொள்ளவும்.

No comments :

Post a Comment