Saturday, September 19, 2020

சிரிப்பு வெடிகள் -- 12

1. ஆசிரியர் : ரூபாய் நோட்டப் பத்தி மூனு வரில ஏதாவது சொல்லு?!

மாணவன் : RBI அடிக்குது! !

SBI கொடுக்குது!!

FBI புடிக்குது!!

****************************

2. நண்பன்1 : மச்சி வாழ பிடிக்கல டா

நண்பன்2 : வாழ பிடிக்கலன்னா தென்ன மரம் வைக்க வேண்டியது தான.

************************

3. மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி கொடுங்க.

அப்பா: கடவுள் நமக்கு 2 கால் எதுக்கு கொடுத்திருக்காரு?

மகன்: ஒண்ணு கியர் போட.. இன்னொண்னு பிரேக் போட .. 

*************************

4. ஒரு பக்கம் ஷார்ப்பா இருந்தா நைஃப்.

எல்லா பக்கமும் ஷார்ப்பா இருந்தா ஒய்ஃப்.

இதைப் புரிஞ்சவனுக்கு நல்லாருக்கும் லைஃப்...

*************************

5. ஆசிரியர்: இந்த பீரியட் முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.

மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா????

ஆசிரியர்: ?????

**************************

6. "விளையாட்டு வினையாகிடும்ங்கறது சரியா போச்சு"!

"எப்படி சொல்ற?"

"விளையாட்டா அவ பின்னாடி சுத்தினேன். அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க"

*********************

7. BOY : பெண்ணே என் இதயத்துக்குள் வா!

GIRL : செருப்ப கழட்டவா..?

BOY : லூசு.. லூசு.. என் இதயம் என்ன கோயிலா? சும்மா செருப்போடவே வா..!

*******************

8. பேஷண்ட்: காதுவலின்னா டாக்டர் ஏன் கன்னத்துல டார்ச் லைட் அடிச்சு கையால தடவிப் பாக்குறார்?

நர்ஸ்: உங்க மனைவியோட கைவிரல் பதிவு இருக்கான்னு பார்த்திருப்பார். 

************************************



No comments :

Post a Comment