1516. எம்பெருமானை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால் தர்மம் தழைக்கும் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமை.
1517. மஹாபாரத போரில் பிதாமகர் பீஷ்மர் அம்பு படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கும்போது அருளியது தான் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம்.
1518. திருடனாக இருந்தவன், ராமநாமத்தை மரா, மரா, மரா என்று தவறாக உச்சரித்தவன், வால்மீகி மகரிஷியாக உயரவில்லையா? அது தான் ஸ்ரீராம நாம மகிமை.
1519. தன்னுடைய தவறுகளால் வருவது கஷ்டங்கள். அதை சிறிதும் உணராமல் கடவுளைத் திட்டுவது இன்னொரு தவறு. கடவுள் மனித உருவத்தில் உதவி செய்கிறார்.
1520. நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.
1521. ஆடை இன்றிப் பிறந்தோமே, ஆசை இன்றிப் பிறந்தோமா. ஆசைகளைத் துறக்காமல் ஆண்டவனை எந்த வழியிலும் அடைய முடியாது என்பது என்னுடைய நம்பிக்கை.
1522. நமது வலியை உணர முடிந்தால் உயிரோடு இருக்கிறோம் என்று பொருள். பிறர் வலியை உணர முடிந்தால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள்.
1523. அகங்காரம் கொள்ளும் நேரம், பாசம் கண்களை மறைக்கும் நேரம், ஆசைகள் எல்லையை மீறும் நேரம், கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம், ராகுகாலம்.
1524. நமது தேகம் கவர்ச்சியில் மூழ்கும் நேரம், மனம் சஞ்சலப்படும் நேரம். பயப்படும் நேரம். கலங்கும் நேரம். உடல் உழைக்காத நேரம் குளிகை.
1525. நாம் பிறரைக் கண்டு பொறாமைப் படும் நேரம், புறம் கூறும் நேரம், கோள் சொல்லும் நேரம், சதி செய்யும் நேரம், ஏமாற்றும் நேரம், எமகண்டம்.
1526. நேர்மை அறிவை விடப் பெரிது. பல இடங்களில் நேர்மை வெற்றி பெற்றுள்ளது. நேர்மையாளர் அஞ்ச வேண்டிய தேவையில்லை. தலை நிமிர்ந்து நடக்கலாம்.
1527. நேற்றைய வாழ்க்கை பிரச்சனை இல்லாமல் நிம்மதியாகக் கழிந்ததா. இன்றும், நாளையும் அதேபோல இருந்தால் போதும் இறைவா. இதுவே என் தினசரி பிரார்த்தனை.
1528. எனக்குக் கடவுள் பக்தி உண்டு. அதற்காக கடவுள் பக்தி இல்லாதவர்களை நான் வெறுப்பதில்லை. எல்லா மதங்களிலும் இரண்டு வகை மனிதர்களும் உண்டு.
1529. கடவுள் இல்லை,கடவுள் இல்லவே இல்லை என்று கூறியே, கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்போதும் கடவுளைப் பற்றி நினைக்கிறார்கள், பேசுகிறார்கள்.
1530. 20/20/20 ரூல் என்னவென்றால், 20 நிமிடம் கணணி, கைப்பேசியை உபயோகப்படுத்தினால் 20 அடி தள்ளி உள்ள பொருளை 20 வினாடிகள் பார்க்கவேண்டும்.

No comments :
Post a Comment