Thursday, August 20, 2020

THIS IS NOT A STORY

I wanted to buy some groceries and I went to the supermarket to-day following all the precautions by wearing face-mask, applying the gel, and distancing required due to the current situation created by Coronavirus.

I then started collecting the things that were on my shortlist. When I was standing in the queue to pay the bill, while taking the money from my purse, a 500 rupee note slipped out of my hand and, fell on the floor. Suddenly, the man who was standing in front of me bent down and picked up my note.

I held out my hand expecting him to give back my money to me. I still could not believe that there were people ready to extend a helping hand when others were in difficulty. Wow. How much sympathy and kindness he had in these pandemic times - I thought. 

I was trying to stay away as a precaution so that he would feel safe and I was also preparing to thank him for his gesture. But suddenly, what he told me was shocking. He said the money belongs to him and he justified that whatever that is lying on the ground belongs to the person who found it. 

Uttering those unkind words, he left the scene just like that, as if he had not done anything wrong. I looked pathetically at the lady standing behind me and the people next to me. They all looked at me in shock and disbelief, whispering between them.

For a moment, I was trying to evaluate myself. I wanted to do justice on my own. I left my purchases, because I had no money to pay, and went after him to the parking lot, to have my 500 returned.

However, I realized that a few people standing close to me in the line came along with me, curious to know what was going to happen. I spoke to him demanding my money but he just looked at me with contempt and acted as if I was no one to him.

When he got to his car, he put his two shopping bags, he was holding in his hands, on the floor to take the key out of his pocket to open the trunk. And I thought it is the time now to act and repay!

Immediately, I grabbed his two bags lying on the floor and told him the same words that he had told me earlier in the queue. "What you find on the floor belongs to the person who finds it". I started moving with laughter and some fear and for being proud of my revenge.

The people around started applauding me and I could see that the “smart guy" was outsmarted and he left the place driving furiously dropping security cones on his path. I felt a rush of adrenaline, fright, and nervousness, but then I cried with laughter.

When I got home I opened the bags and found:

- 2 kg of apples
- 1 kg each of sugar and salt.
-  cheese and yogurt of two flavors
- whole-grain bread
-  2 packs of orange juice
- 2 jars of strawberry jam
- 2 kg of very good quality green peas
- 1 jar of pickles

I could not have imagined buying so many items with just Rs.500.00. Sitting leisurely on my couch, I am now sipping a glass of orange juice thinking whether I am a vigilante or a vindictive person?

HAVE YOU READ THIS UNTIL HERE? THANK YOU FOR READING.

Actually, this never happened to me. The habit of reading is on the decline due to the advent of the Internet and other apps. Reading stimulates the mind and imagination and also to communicate. I just wished to make you read a passage and develop the habit!

Monday, August 17, 2020

THE MIRACLE

An eight-year-old child overheard her parents talking about her little brother. All she knew was that he was very sick and they had no money left to treat him. They were moving to a smaller house because they could not afford to stay in the present house after paying for his medical expenses. Only a very costly surgery could save him now and there was no one to loan them the money.

When she heard her father told her tearful mother in a whisper, 'Only a miracle can save our son now', the little girl went to her bedroom and pulled her piggy bank from its hiding place in her closet. She poured all her savings out on the floor and counted it carefully.

Clutching the precious piggy bank tightly, she slipped out off the back door and made her way to the local drugstore six blocks away. She took a portion of her money and placed it on the glass counter.

"What do you want?" asked the pharmacist.

"I want to buy a miracle. It is for my little brother. He is really very sick." answered the girl

"I beg your pardon?" said the pharmacist.

"His name is Ram and he has something bad growing inside his head and my daddy says only a miracle can save him. So how much does a miracle cost?"

"We don't sell miracles here, child. I'm sorry," the pharmacist said, smiling sadly at the little girl.

"Listen, I have the money to pay for it. If it isn't enough, I can try and get some more. Just tell me how much it costs."

Near her, a well-dressed customer was standing. He stooped down and asked the little girl, "What kind of a miracle does your brother need?"

"I don't know," she replied with her eyes welling up. "He's really sick and mommy says he needs an operation. But my daddy can't pay for it, so I have brought my savings".

"How much do you have?" asked the man.

"Twelve rupees and fifty paise; but I can try and get some more", she answered in a breaking voice.

"Well, what a coincidence," smiled the man, "Twelve rupees and fifty paise - the exact price of a miracle for little brothers."

He took her money in one hand and held her hand with the other. He said, "Take me to where you live. I want to see your brother and meet your parents. Let's see if I have the kind of miracle you need."

That well-dressed man was Dr. Carlton Armstrong, a neurosurgeon. The operation was completed without charge and it wasn't long before Andrew was home again and doing well.

"That surgery," her mom whispered, "was a real miracle. I wonder how much it would have cost."

The little girl smiled. She knew exactly how much the miracle cost ... twelve rupees and fifty paise ... plus the faith of a little child.

Perseverance can make miracles happen! A miracle can come in various forms - as a doctor, as a lawyer, as a teacher, as police, as a friend, as a stranger, and many others.

A river cuts the rock not because of its power, but because of its consistency. Never lose your hope & keep walking towards your vision.

SOURCE: INTERNET

Saturday, August 15, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1516 TO 1530

1516. எம்பெருமானை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால் தர்மம் தழைக்கும் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமை.

1517. மஹாபாரத போரில் பிதாமகர் பீஷ்மர் அம்பு படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கும்போது அருளியது தான் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம்.

1518. திருடனாக இருந்தவன், ராமநாமத்தை மரா, மரா, மரா என்று தவறாக உச்சரித்தவன், வால்மீகி மகரிஷியாக உயரவில்லையா? அது தான் ஸ்ரீராம நாம மகிமை.

1519. தன்னுடைய தவறுகளால் வருவது கஷ்டங்கள். அதை சிறிதும் உணராமல் கடவுளைத் திட்டுவது இன்னொரு தவறு. கடவுள் மனித உருவத்தில் உதவி செய்கிறார்.

1520. நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.

1521. ஆடை இன்றிப் பிறந்தோமே, ஆசை இன்றிப் பிறந்தோமா. ஆசைகளைத் துறக்காமல் ஆண்டவனை எந்த வழியிலும் அடைய முடியாது என்பது என்னுடைய நம்பிக்கை.

1522. நமது வலியை உணர முடிந்தால் உயிரோடு இருக்கிறோம் என்று பொருள். பிறர் வலியை உணர முடிந்தால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள்.

1523. அகங்காரம் கொள்ளும் நேரம், பாசம் கண்களை மறைக்கும் நேரம், ஆசைகள் எல்லையை மீறும் நேரம், கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம், ராகுகாலம்.

1524. நமது தேகம் கவர்ச்சியில் மூழ்கும் நேரம், மனம் சஞ்சலப்படும் நேரம். பயப்படும் நேரம். கலங்கும் நேரம். உடல் உழைக்காத நேரம் குளிகை.

1525. நாம் பிறரைக் கண்டு பொறாமைப் படும் நேரம், புறம் கூறும் நேரம், கோள் சொல்லும் நேரம், சதி செய்யும் நேரம், ஏமாற்றும் நேரம், எமகண்டம்.

1526. நேர்மை அறிவை விடப் பெரிது. பல இடங்களில் நேர்மை வெற்றி பெற்றுள்ளது. நேர்மையாளர் அஞ்ச வேண்டிய தேவையில்லை. தலை நிமிர்ந்து நடக்கலாம்.

1527. நேற்றைய வாழ்க்கை பிரச்சனை இல்லாமல் நிம்மதியாகக் கழிந்ததா. இன்றும், நாளையும் அதேபோல இருந்தால் போதும் இறைவா. இதுவே என் தினசரி பிரார்த்தனை.

1528. எனக்குக் கடவுள் பக்தி உண்டு. அதற்காக கடவுள் பக்தி இல்லாதவர்களை நான் வெறுப்பதில்லை. எல்லா மதங்களிலும் இரண்டு வகை மனிதர்களும் உண்டு.

1529. கடவுள் இல்லை,கடவுள் இல்லவே இல்லை என்று கூறியே, கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்போதும் கடவுளைப் பற்றி நினைக்கிறார்கள், பேசுகிறார்கள்.

1530. 20/20/20 ரூல் என்னவென்றால், 20 நிமிடம் கணணி, கைப்பேசியை உபயோகப்படுத்தினால் 20 அடி தள்ளி உள்ள பொருளை 20 வினாடிகள் பார்க்கவேண்டும்.

Thursday, August 13, 2020

தன்னம்பிக்கை

வாழ்க்கையின் பெரும் பகுதியை ஒரு சாதாரண குமாஸ்தாவாக கழித்தவர் சீனிவாசன். வாயையும், வயிறையும் கட்டி தன் ஒரே பிள்ளை கோகுலை இன்ஜினியரிங் படிக்க வைத்து ஒரு வேலை வாங்கிக் கொடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது..

தன் முதல்மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாயை கவரில் போட்டு அம்மாவிடம் கோகுல் கொடுத்த போது வந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் நிலைக்காது என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.

கோகுலின் சம்பளம் ஆண்டுதோறும் கூடினாலும், சீனிவாசனின் வங்கிக் கணக்கில் போடும் தொகையோ, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. பாவம், கல்யாணமாகி ஒரு குழந்தையையும் வைத்துக்கொண்டு அவனுக்கு என்ன கஷ்டமோ?

சில கடைகளில் கணக்கு எழுதி சீனிவாசன், அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து ஓரளவு சரி கட்ட முயன்றார். இருப்பினும், செலவை சமாளிப்பது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. பகவானை வேண்டுவதைத் தவிர அவருக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை.

ஒவ்வொரு முறை, சீனிவாசன் பணத்திற்காக அல்லாடும் போது, லட்சுமிக்கு ஏதாவது செய்து, இந்த கஷ்டத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்ற சிந்தனை ஊறத் துவங்கும். பலவிதமாக யோசனை செய்தாள். வழி எதுவும் புலப்படவில்லை.

ஒருநாள், பக்கத்து வீட்டு, கௌரி அம்மாள், ''உனக்கு தெரிஞ்ச சமையல்காரம்மா யாராவது இருந்தா சொல்லேன் என்றதும், தெனமும் எங்களுக்கு சமைக்கும்போது,  உங்களுக்கு ஒரு டிபன் பாக்சில் போட்டு தருகிறேன்.. தினமும் என்ன சமைக்கணும்ன்னு சொல்லிடுங்க, அதுமாதிரியே சமைச்சு தருகிறேன்.''

அந்த யோசனை நல்லதாகத்தான் பட்டது.  லட்சுமியின் கைப்பக்குவத்தை பற்றி, கௌரிக்கு நன்கு தெரியும். முதலில் ஒரு சில சிரமங்கள் இருந்தாலும், ஒரே வாரத்தில், லட்சுமிக்கும், கௌரிக்கும் இந்த ஏற்பாடு பிடித்து விட்டது. 

கௌரியின் தயவால், லட்சுமியின் கைப்பக்குவம் பற்றிய செய்தி, அக்கம் பக்க வீடுகளில் வேகமாகப் பரவ, மேலும் பலர், சாப்பாடு செய்து தரமுடியுமா என்று கேட்கத் துவங்கினர்.

இந்த நான்கு மாதத்தில், ஐ.டி.,யில் வேலை பார்க்கும் ஒண்டிக்கட்டைகள், வயதான தனிமை தம்பதியர், சமையல் செய்ய சோம்பல் படும், 'ஸ்விகி ஜெனரேஷன்' குடும்பங்கள் என்று, லட்சுமியின், 'கேட்டரிங் சர்வீசு'க்கு, அநேகம் பேர் வாடிக்கையாளர்களாகி இருந்தனர்.

லட்சுமி, சமையலை கவனித்துக்கொள்ள, சீனிவாசன், கணக்கு வழக்கு மற்றும் சாப்பாடு விநியோக உரிமையை எடுத்துக் கொண்டார். காய்கறி நறுக்க, பாத்திரம் கழுவ ஒரு உதவியாளர், சாப்பாடு விநியோகத்திற்கு ஒரு பையன் என்று, இரண்டு ஆட்களை வேலைக்கு அமர்த்தி, இப்போது ஒரு முதலாளி ஆகிவிட்டிருந்தாள், லட்சுமி.

அன்று, மாதக் கணக்கை பார்த்த, சீனிவாசனுக்கு சந்தோஷம் தாளவில்லை. ''லட்சுமி, உன்னோட கைராசி, இந்த மாசம் நம் வருமானம், 40 ஆயிரம் ரூபாய்.'' ஆரம்பத்தில் இருந்த சிரமங்களைத் தாண்டி, தங்கள் உழைப்பின் பலனை கண்கூடாகப் பார்க்கும்போது, லட்சுமிக்கும் - சீனிவாசனுக்கும் மனது நிறைவாக இருந்தது.


Tuesday, August 11, 2020

சிரிப்பு வெடிகள் - 11

1. தொலைபேசி : சார் இங்க ஒருத்தரச் சுட்டுட்டார்.
காவலர் : சுட்டது யாருன்னு தெரியுமா?
தொலைபேசி : தெரியும் சார்.
காவலர்: யார் சுட்டது?
தொலைபேசி: சுடலை சார்.
*************************

2. நீங்க அடிச்ச கள்ள நோட்டு ஒரிஜினல் மாதிரிதானே இருக்கு. பிறகு எப்படி மாட்டினீங்க?
காந்திக்கு கண்ணாடி போட மறந்துட்டேன்யா!!
**************************

3. மொளச்சி மூணு இலை விடலை..பாவி மக இப்படி பண்ணிட்டாளே"
என்ன பண்ணிட்டா..?"
தொட்டிச் செடியை புடுங்கி போட்டுட்டா…!"
**************************

4. மனைவி: ஏங்க, போன்ல ஃபிரண்டு என்ன பண்றன்னு கேட்டா உள் பாவாடைக்கு நாடா கோத்து கிட்டு இருக்கேன்னா சொல்வீங்க?
கணவன்: இல்லடி , செல்லம் ! அந்தப் பக்கம் அவனும் அதையே செய்யறதா சொல்லிட்டு , வாட் ஏ கோ இன்ஸிடன்ஸ்ன்னு சொல்லி சிரிக்கறான்.
மனைவி: !!!??
**************************

5. "அண்ணே, இந்த ஆத்துத் தண்ணியெல்லாம் எங்கண்ணே போகுது?"
"இதெல்லாம் கடலுக்குப் போகும்"
"திரும்பி வருமாண்ணே?"
"திரும்பி வராது"
"அப்பறம் எதுக்குண்ணே திரும்பி வராத ஆறுகளுக்கு "ரிவர்ஸ்"னு பேரு வச்சுருக்காங்க?"
*****************************

6. அவன்: ஏண்டா, ஒரு பெண்ணைப்பற்றி தெரியாம எப்படிடா கல்யாணம் பண்ணிக்கிறது?
இவன்: ஏண்டா, ஒரு பெண்ணைப்பற்றி தெரிஞ்ச பிறகு எப்படிடா கல்யாணம் பண்ணிக்கிறது?
****************************

7. கல்யாணத்திற்கு முன் ஒரு பெண் செல்வி. கல்யாணத்திற்குப் பின் அவள் திருமதி.
கல்யாணத்திற்கு முன் ஒரு ஆண் திரு. கல்யாணத்திற்குப் பின் அவன் திரு திரு.
**************************

Sunday, August 9, 2020

THE PHILOSOPHY OF LOGIC

A young man in his mid-twenties knocks on the door of a renowned Guru. He says: “I’ve come to you because I wish to study Vedas.”

“Do you know Sanskrit?” the Guru asks.

“No,” replies the young man.

“Have you studied any Indian philosophy?”

“No. But don’t worry. I just finished my doctoral dissertation at Harvard on logic. So now, I would just like to round up my education with a little study of the Vedas.”

“I doubt,” the Guru says, “that you are ready to study Vedas. It is the deepest knowledge ever known. If you wish, however, I am willing to examine you in logic, and if you pass that test I will teach you Vedas.”

The young man agrees.

Guru holds up two fingers. “Two men come down a chimney. One comes out with a clean face; the other comes out with a dirty face. Which one washes his face?”

The young man stares at the Guru. “Is that really a test in logic?”

The Guru nods.

”The one with the dirty face washes his face“- he answers confidently.

“Wrong. The one with the clean face washes his face. Examine the logic. The one with the dirty face looks at the one with the clean face and thinks his face is clean. The one with the clean face looks at the one with the dirty face and thinks his face is dirty. So, the one with the clean face washes his face.”

“Very clever,” the young man says. “Give me another test.”

The Guru again holds up two fingers. “Two men come down a chimney. One comes out with a clean face, the other comes out with a dirty face. Which one washes his face?”

“We have already established that. The one with the clean face washes his face.”

“Wrong. Each one washes his face. Examine the logic. The one with the dirty face looks at the one with the clean face and thinks his face is clean. The one with the clean face looks at the one with the dirty face and thinks his face is dirty. So, the one with the clean face washes his face. When the one with the dirty face sees the one with the clean face wash his face, he also washes his face. So, each one washes his face.”

“I didn’t think of that,” says the young man. It’s shocking to me that I could make an error in logic. Test me again.”

The Guru holds up two fingers. “Two men come down a chimney. One comes out with a clean face; the other comes out with a dirty face. Which one washes his face?”

“Each one washes his face.”

“Wrong. Neither one washes his face. Examine the logic. The one with the dirty face looks at the one with the clean face and thinks his face is clean. The one with the clean face looks at the one with the dirty face and thinks his face is dirty. But when the one with the clean face sees the one with the dirty face doesn’t wash his face, he also doesn’t wash his face. So, neither one washes his face.”

The young man is desperate. “I am qualified to study Vedas. Please give me one more test.”

He groans, though, when the Guru lifts two fingers. “Two men come down a chimney. One comes out with a clean face; the other comes out with a dirty face. Which one washes his face?”

“Neither one washes his face.”

“Wrong. Do you now see why logic is an insufficient basis for studying Vedas? Tell me, how is it possible for two men to come down the same chimney, and for one to come out with a clean face and the other with a dirty face? Don’t you see? The whole question is nonsense, foolishness, and if you spend your whole life trying to answer foolish questions, all your answers will be foolish, too.”

*That's why having wisdom is more important than having logic...*

LESSON: He in fact taught him the last portion of Vedanta vizara. The guruji taught him all logic, argued threadbare, and the conclusion is reached.

Friday, August 7, 2020

SOAPS AND SHAMPOOS ALLERGY

Introduction:
The surface of the skin is slightly acidic. Studies have shown that the potential of hydrogen (pH) of skin increases in proportion to the pH of cleanser used. An increase in pH causes an increase in dehydrative effect, irritability, and propionibacterium count. 

Changes in the pH are reported to play a role in the pathogenesis of some skin diseases. Therefore, the use of skin cleansing agents with a pH of about 5.5 may be of relevance in the prevention and treatment of those skin diseases.

Aims and Objectives:
The aim and objective of this study were to assess the pH of different brands of bathing soaps and shampoos available in the market.

Background:
Normal healthy skin has potential of hydrogen (pH) range of 5.4-5.9 and normal bacterial flora. The use of soap with high pH causes an increase in skin pH, which in turn causes an increase in dehydrative effect, irritability and alteration in bacterial flora. The majority of soaps and shampoos available in the market do not disclose their pH.

Sample collection:
Samples of branded soaps and shampoos were collected from shops in the locality. They included bathing soaps, Anti-acne soaps, ayurvedic soaps, and those promoted for dermatological conditions. A sample of homemade soap was also collected. We also collected a sample of imported soap to compare with the same brand in the Indian market. The solution of each sample was made and pH was measured using pH meter.

The procedure used for soap:
Soap sample weighing 150 mg was mixed in 15 ml distilled water without producing much lather. It was kept undisturbed for 24 h for the maximum dissolution of soap. Then the pH of each sample was measured.

The procedure used for shampoo:
Sample of shampoo of 1.5 ml is taken in a glass beaker and water is added to the sample to make its volume to 15 ml. Mixing is done well without producing lather. The solution is kept undisturbed for 30 min. Then the pH of each sample was measured.

Results:
The majority of the soaps have a pH within the range of 9-10. The majority of the shampoos have a pH within the range of 6-7.

Conclusions:
The soaps and shampoos commonly used by the population at large have a pH outside the range of normal skin and hair pH values. Therefore, it is hoped that before recommending soap to the patient especially those who have sensitive and acne-prone skin, due consideration is given to the pH factor and also that manufacturers will give a thought to pH of soaps and shampoos manufactured by them so that their products will be more skin and hair-friendly.

Source: Internet

Wednesday, August 5, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1501 TO 1515

1501. உலகில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். பிறரிடம் தன்னுடைய கஷ்டத்தை சொல்வதினால் எந்தப் பலனுமில்லை.

1502. வெற்றி உங்களை இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தும். ஆனால் தோல்விதான் இந்த உலகை உங்களுக்கு அறிமுகப்படுத்தும். தோல்வியால் துவளாதீர்கள்.

1503. உங்கள் வாழ்க்கை உங்களுக்காக என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது.

1504. எனக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டபோது, வாய்ப்புக்கள் பறி போயின! தோற்று விடுவோம் என்று நம்பியபோது வெற்றிகள் வந்து என்னைத் தழுவிக்கொண்டன.

1505. உங்களுக்கு எது தேவை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் .நீங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த விஷயத்திலும் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு.

1506. உங்கள் குடும்ப சூழ்நிலை, உங்களுடைய ஆற்றல், உங்களுடைய திட்டம், தேவை, விருப்பம் இவற்றை மனதில் கொண்டு உங்கள் முடிவை தேர்ந்தெடுங்கள்.

1507. ஆண்கள் பேசிக்கொண்டால் இருக்கும் சுவாரசியத்தை விட பெண்கள் பேசிக்கொண்டால் சுவாரசியமாக இருக்கும் என்று பேசிக்கொள்கிறார்களே, அப்படியா?

1508. போன தலைமுறையில், திருமணமான பெண்ணை அவள் பெற்றோர் ஆடி மாதத்தில் பிறந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்கள். என்ன காரணம் தெரியுமா?

1509. உங்களுக்குத் தெரியுமா, காலம் காலமாக ஒவ்வொரு பிராமண வகுப்பு திருமணமும் மகாவிஷ்ணுவிற்கும், மகாலக்ஷ்மிக்கும் நடக்கும் திருமணம் என்று?

1510. முன்பு ஒரு லிட்டர் பாட்டில்லே அம்பது ரூபா பெட்ரோல் பிடிக்கும்.இப்போ அதே பாட்டில்லே நூறு ரூபா பெட்ரோல் பிடிக்குது.முன்னேற்றம் தானே?

1511. வருத்த பொட்டுக்கடலை/உடைத்த கடலையுடன், பாதி அளவு சர்க்கரை, சிறிது ஏலம் கலந்து,  மிக்ஸியில் நைசாக அரைத்து, சாப்பிட்டால் ருசியோ ருசி.

1512. ரவா உப்புமா செய்யும் போது, வேர்க்கடலை/நிலக்கடலையையும் வறுத்து, மற்ற பொருட்களுடன் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் அதன் ருசியே தனி.

1513. 100 கிராம் பெரிய கொண்டக்கடலையைக் கழுவி, வேகவைத்து, உப்பு, காரம் சேர்த்து, அத்துடன் 500 மில்லி மோருடன் பிரயாணம் செய்தால் சந்தோஷம்.

1514. கோவையில் 100ம் நம்பர் டவுன்பஸ் காந்திபுரத்தில் புறப்பட்டு, காந்திபுரத்தில் முடியும். அதே மாதிரி வேறு எங்கேயாவது டவுன்பஸ் இருக்கிறதா?

1515. இட்லி மிளகாய் பொடியில் சிலர் மிளகாய் அதிகம் சேர்ப்பார்கள்.அது உடலுக்கு கேடு. 150கி மிளகாய்க்கு 200கி வெள்ளை எள் சேர்த்தால் நல்லது.

Tuesday, August 4, 2020

தீர்காயுஷ்மான் பவ, ஸௌம்ய

“தீர்காயுஷ்மான் பவ, ஸௌம்ய!" அதுக்கு என்ன அர்த்தம்? காஞ்சி பரமாச்சார்யார் கேள்வி.

ஒருநாள் பெரியவாளை தர்ஸனம் செய்ய, “ஸிரோமணி” பட்டம் பெற்ற பண்டிதர்கள், நாலைந்து வித்வான்கள் ஆகியோர் வந்தார்கள். பரமாச்சார்யார் ஸாஸ்த்ர விஷயங்களை அவர்களுடன் ஸம்பாஷித்துக் கொண்டிருந்த போது பேச்சுவாக்கில்…

”இங்க வரவால்லாம் நமஸ்காரம் பண்ணினா, நா…திருப்பி 'நாராயண, நாராயண' ன்னு சொல்லி ஆஸிர்வாதம் பண்றேன். நா….ஸன்யாஸி! ஆனா, ஸம்ஸாரிகள்… நீங்கள்ளாம் என்ன சொல்லி ஆஸிர்வாதம் பண்ணுவேள்?”

“தீர்காயுஷ்மான் பவ, ஸௌம்ய!” ன்னு சொல்லுவோம்….. பெரியவா”

“ஸெரி…. அதுக்கு என்ன அர்த்தம்?”

“ரொம்ப நாள், தீர்க்கமான ஆயுஸ்ஸோட, ஸௌக்யமா இருன்னு அர்த்தம்”

அங்கிருந்த எல்லா வித்வான்களிடமும் வரிஸையாக கேட்டார்.

“அதே அர்த்தந்தான்…” எல்லோருமே ஆமோதித்தனர்.

பரமாச்சார்யார் கொஞ்ச நேரம் மௌனமா இருந்துவிட்டு, ஒரு அழகான புன்னகையோடு,  ”நீங்க அத்தன பேரும் சொன்ன அர்த்தம் தப்பு !”

பண்டிதர்களுக்கு தூக்கி வாரி போட்டது! அது எப்படி? ஏதோ கொஞ்சமாக ஸம்ஸ்க்ருதம் தெரிந்தவர்கள் கூட இதற்கு அர்த்தம் சொல்லிவிடுவார்கள். அவ்வளவு ஸுலபமான சொல்! அது எப்படி தப்பாகும்! ஒன்றும் புரியவில்லை.

“நானே சொல்லட்டா?”

“பெரியவாதான் எங்களுக்கும் சொல்லணும்” எல்லோரும் காதைத் தீட்டிக் கொண்டார்கள்.

“இருபத்தேழு யோகங்கள்ள, ஒரு யோகத்தோட பேர் 'ஆயுஷ்மான்'! பதினோரு கரணங்கள்ள ஒரு கரணம் 'பவ'ங்கறது! வார நாட்கள்ள 'ஸௌம்யவாஸரம்' ன்னு புதன் கிழமை ! …

இந்த மூணும், அதாவது, ‘புதன்’ கெழமைல ‘ஆயுஷ்மான்’ யோகமும், ‘பவ’ கரணமும் சேர்ந்து வந்தாக்க… அந்த நாள், ரொம்ப ஸ்லாக்யமா சொல்லபட்டிருக்கு. 

அதுனால, 'ஆயுஷ்மான் பவ, ஸௌம்ய'..ன்னு இந்த மூணும் கூடி வந்தா… என்னென்ன நல்ல பலன்கள் கெடைக்குமோ, அதெல்லாம் ஒனக்கு கெடைக்கட்டும்னு ஆஸிர்வாதம் பண்றேன்!…னு அர்த்தம்”

அத்தனை வித்வான்களும் ஒரே நேரத்தில், தண்டம்போல் பரமாச்சார்யார் ஸரணத்தில் விழுந்தனர். இத்தனை எளிய வாழ்த்துக்கு, இவ்வளவு ஆழ்ந்த அர்த்தத்தை காட்டிக்கொடுத்த அந்த “ஞான மேரு”வின் முன் ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுவதை விட வேறென்ன செய்யமுடியும்?

இதைத்தான் தமிழில் “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்று சொல்லுவார்களோ! புதன் கிழமையோடு இந்த யோகமும், கரணமும் சேர்ந்து அமையும் நல்ல நாள் அரிது என்பதாலோ!

ஸிரோன்மணிகளுக்கென ஒரு வகை பாடம். நாம் என்றுமே நம் பெரியவாளுக்கு செல்லக் குழந்தைகளாகவே இருப்போம்…… மனஸில் எந்த கல்மிஷமும் இல்லாமல்!

தேங்காயும், வாழைப்பழமும் ஏன் இறைவனுக்கு நெய்வேதியப் பொருட்களாக படைக்கப் படுகின்றன? 

மற்ற எல்லாப் பொருட்களும் மனிதனோ, மிருகமோ எச்சில் செய்து விளைகின்றன. இவை இரண்டும் எச்சில் படாமலேயே விளைகின்றன. வாழை கன்றாக விளைகிறது. தேங்காய் முழுதாக நடப்படுகிறது.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!  காஞ்சி மகா குருவே சரணம்!

Sunday, August 2, 2020

DIFFICULTIES IN PASSING URINE

WHAT TO DO WHEN SUDDENLY YOU ARE UNABLE TO PASS URINE ...

Normally, I do not wish to write about medical treatments as I believe that it varies from person to person. What is medicine for one may be a poison for the other. Only a qualified doctor should treat and prescribe medicine for any ailment.

However, I read this article written by a Facebook friend recently. As it does not involve any medicine and as I find, it may be useful for the public, I am sharing this with you. It is now open to you in sharing with others.

Recently I met an ENT specialist for some personal matter. He is a senior citizen in his 70's. I was astonished to listen to one of his experiences which he was kind enough to share with me.

One day, early in the morning,  he had a problem with passing urine. He had the urge but unfortunately, he could not pass urine for some unknown reason. 

Some people may sometimes face such a problem when they become old, and if they try two or three times they may possibly succeed. He tried a few times, but he could not make it.

His continuous efforts did not bear fruit. He realized then, that he should consult a doctor. Though he himself was a doctor, he was also susceptible to physical ailments like everyone. 

Now, his lower abdomen became heavy and he was unable to sit or stand as the pressure built up. Immediately he called a known urologist on the phone and explained his condition. 

The Urologist told him that he was held up in a hospital on the outskirts and it would take an hour and a half for him to come to his house if he could manage till then.

Unexpectedly, by God's grace, at that time, he received a call from another doctor, a childhood friend. With great difficulty, he explained his condition to his friend.

His friend said, “Don't worry, your bladder is completely full and hence you are not able to pass urine. Do as I suggest and you will be able to pass urine in no time”.

And he further gave the procedure to be followed: “Stand up and jump vigorously lifting your hands up as though you are plucking mangoes from a tree. Do that 15 to 20 times and tell me”.

He was surprised that he wanted him to jump when he was having a full bladder and that too when he was not even able to stand. He was a little skeptical and with some difficulty, he tried.

What a sudden relief when, within 5 to 6 jumps, urine started passing. He felt overwhelmed and was thankful to his childhood friend for solving the issue with such a simple method.

Otherwise, he should go to a hospital, get a catheter inserted in his bladder, injections, antibiotics, etc incurring thousands of rupees in addition to physical and mental stress for everyone.