1231. எதையும் இறைவனுக்கு முதலில் அர்ப்பணம் செய்யவேண்டும். ஆபத்து காலத்தில் அவன் நமக்கு நிச்சயம் துணை வருவான். இதில் நம்பிக்கை வேண்டும்.
1232. வாழ்க்கையில் இறைவன் சூழ்நிலைகளை உருவாக்குகிறார். அந்த சூழ்நிலைகள் தான் ஒரு மனிதனை உருவாக்குகிறது. மனிதன் சூழ்நிலைகளை உருவாவதில்லை.
1233. செய்யும் தொழில் இறைவனால் கொடுக்கப் பட்டது. கூலியும் இறைவனால் கொடுக்கப் பட்டது. வேலையை நேர்மையாகவும் உண்மையாகவும் செய்ய வேண்டும்
1234. "இதற்கு மேல் என்ன மோசமாக நடந்து விடும்" என்று நினைத்து அதற்கு நாம் தயாராகி விட்டால், எந்த இக்கட்டான நிலமையையும் சமாளிக்க முடியும்.
1235. நாம் உண்ணும் உணவில் எது நமக்கு ஏற்புடையதில்லை என்று பார்த்து அதைத் தவிர்த்தாலே போதும் வியாதி நம்மிடம் நெருங்காது. ஆரோக்கியம் கூடும்.
1236. இனிமையாக பேசுங்கள், பிறர் உங்களை விரும்புவார்கள். கடுமையாக பேசுங்கள் பிறர் உங்களை வெறுப்பார்கள்.எது வேண்டும்?முடிவு உங்கள் கையில்.
1237. மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் மக்களுடைய அரசின் பலவித செலவினங்களுக்காக, மக்களிடம் இருந்து பெறப்படும் பங்களிப்பு வரி எனப்படும்
1238. தமிழ்நாட்டில் லக்ஷக்கணக்கான இளைஞர்கள் தங்களை ரஜினியாக,அஜித்தாக, விஜய்யாக,சேதுபதியாக நினைத்து கொண்டு வாழ்க்கையை வீண் செய்கிறார்கள்.
1239. இப்படித்தான் வாழவேண்டும் என்றொரு முறை இருக்கிறது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று இன்னொரு முறையும் இருக்கிறது. எது விருப்பம்?
1240. கார் வைத்திருக்கிறீர்களா?வயதான பெற்றோரை மாதம் ஒருமுறை பிக்னிக் மாதிரி அழைத்துச் சென்று வீட்டில் தயாரித்த உணவை பகிர்ந்து உண்ணுங்கள்.
1241. ஏசி ரயில் பயணம் செய்வதை நான் விரும்புவது இல்லை.பலர் உபயோகித்த படுக்கை, சுவாசித்த காற்று,தீப்பிடிக்கும் ஆபத்து,அதிக கட்டணம் ஆகியவை.
1242. தோல் சம்பந்தமான மருத்துவ நிபுணரை சந்திக்க நேர்ந்தது.வயதானவர்கள் CLINIBATH 5.5 என்ற சோப் உபயோகிப்பது நல்லது என்றார்.விலை ரூ.200/-!!
1243. உழைப்புதான் பணம். பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்புதான். உழைப்பு இல்லாமல் ஒண்ணுமே கிடையாது. ஒண்ணுமே கிடைக்காது. அதனால் உழையுங்கள்.
1244. லோக்சபா தேர்தலில் பிராந்திய கட்சிக்கு வாக்களிப்பது உசிதமல்ல. அதேபோல அசெம்பிளி தேர்தலில் தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதும் உசிதமல்ல.
1245. நான் அரசியல் சார்பு இல்லாதவன். இந்த தேர்தலில் இதுவரை யார் லஞ்சம், ஊழல், கறுப்புப் பணம் சேர்க்கவில்லையோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள்

No comments :
Post a Comment