Wednesday, April 10, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1216 TO 1230

1216. உங்களுக்கு ஒரு அரசியல் கட்சியை ஆதரிக்க உரிமை இருக்கும்போது, எந்தக் கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலையில் இருக்க எனக்கு உரிமை இல்லையா

1217. பலவித கொள்கைகள் கொண்ட பலவித அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பு கூட்டணி ஒப்பந்தம் செய்வது எந்த சட்டத்தில் உள்ளது என்று தெரியவில்லை


1218. பதவிக்கு வருவதையே குறிக்கோளாகக் கொண்டு, சட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றி, தேர்தலில் கூட்டணி அமைத்து, மக்களை ஏமாற்றுவது என்ன நியாயம்?


1219. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனித்தனியாக போட்டி இடவேண்டும். அதிக சதவிகித வாக்குகள் பெரும் கட்சி ஆட்சி அமைப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.


1220. ஒரு தேர்தலில் 65 சதவிகிதம் வாக்குகள் போடப்பட்டால், மீதம் 35 சதவிகிதம், போடப்படாத வாக்குகள், நடுநிலை வாக்குகள் என்று அறியவேண்டும்.


1221. ஒரு கட்சி வெற்றிபெற, போடப்படாத வாக்குகளையும் விட அதிகம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் ஐந்து வருடங்கள் சுதந்திரமாக ஆட்சி செய்யலாம்.


1222. ஒரு கட்சி 41%, இன்னொரு கட்சி 39% ஒட்டு பெற்றிருக்கும். வேறொரு கட்சி 3% ஓட்டை வைத்துக்கொண்டு இரண்டு கட்சிகளையும் ஆட்டிப் படைக்கும்.


1223. நோட்டாவினால் எந்தப் பலனும் இல்லை.அது வெறும் கண் துடைப்பு.அதில் மற்றவர்களை விட அதிகமான ஒட்டு விழுந்தால் தேர்தலை ரத்து செய்யவேண்டும்


1224. நான் கூறிய வழியில், தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவர, எந்த அரசியல் கட்சியும் ஒப்புக் கொள்ளாது. அது அவர்களுக்கு சாதகமானது அல்ல.


1225. மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுவதற்காக இதை எழுதுகிறேன். தயவுசெய்து நன்றாக யோசித்துப் பாருங்கள். தவறு இருந்தால் மன்னிக்கவும்.


1226. அரசியலைப் பற்றி உங்கள் கருத்துக்களும் என் கருத்துக்களும் ஒன்றாக இருக்காது என்பது முடிவான முடிவு. இருந்தாலும் எனக்கு ஒரு அற்ப ஆசை.


1227. தனிமனிதனாக குடும்பத்தில் சாதிக்கலாம். ஆனால் ஜனநாயகத்தில் ஓட்டுப் போடுவதைத் தவிர வேறு எதுவும் சாதிக்க முடியாது.பிறகு ஏன் வீண் வேலை?


1228. மழை காலத்தில் விட்டில் பூச்சிகள் நெருப்பில் விழுகின்றன. தேர்தல் காலத்தில் அரசியல் கட்சி என்ற நெருப்பில் அறியா மக்கள் விழுகின்றனர்.


1229. பாமர மக்கள் தான் பைத்தியமாக அரசியல் கட்சிகள் பின்னால் ஓடுகின்றனர் என்றால் படித்தவர்கள் கூடவா அவர்களைப் போல இருக்கவேண்டும்? கடவுளே.


1230. இரண்டு கோழிகள் சண்டை பார்த்திருக்கிறேன். இரண்டு ஆடுகள் சண்டை பார்த்திருக்கிறேன். இப்போது நாட்டின் பொதுத் தேர்தல் பார்க்க போகிறேன்.


No comments :

Post a Comment