Tuesday, April 23, 2019

RANDOM THOUGHTS -- 136 TO 150

136. Housing, children's care, four parent's medical expenses, saving for their retired life are the major problems for this generation.


137. Though his children are well off, an ideal father does not wish to be a thorn in their flesh. He will only try to reduce their burden.


138. All retired persons should try to live within their income. If they live with their children, they should try to compensate them.


139. Joint family is a pleasure if everyone knows their Lakshman Rekha. You know what happened to Sri Sita when she crossed the line.


140. I consider life is similar to a relay race. The baton should be handed over to the children at the appropriate time for them to win


141. Too much of anything is bad for health including attachment to children. Better keep away from them as for as possible to be happy


142. Money is important. Happiness is also important. One cannot forgo happiness for money nor money for happiness. One must be judicious.


143. Can you keep normal, when others in your family do things that are not to your liking? That means you are a fully realized person.


144. The argument never wins. It leads to fight. To accept other's views is not acceptable. To keep quiet is also difficult. Then what to do?


145. The year is divided into Spring, Summer, Autumn, and Winter. The day is also similarly divided into morning, noon, evening and night.


146. Everyone follows a method. The success or failure depends on the attitude of the individuals. More exactly based on their Karma.


147. I am a big zero in share trading, horse racing, and mutual funds. I am content with deposits in the post office and nationalized banks.


148. Owning a house is a great investment. It gives you shelter, security, confidence, pride, possession and value addition. Go for it.


149. The same pinch is an expression of joy and surprise that another person has the same idea as the speaker with a pinch on the shoulder.


150. Electoral ink contains 10%, 14% or 18% silver nitrate, alcohol for drying and a biocide to ensure bacteria are not transferred.


RANDOM THOUGHTS - 121 TO 135

121. Greediness is the root cause of all human problems. The contended mind is the need of the hour.No point in crying over the spilt milk.


122. It is a matter of regret that people do not have the patience to read lengthy articles but they are interested only in snippets.


123. Usage of right words at the right places is the beauty of any language. One must observe closely how a word is used while reading.


124. Read your lines twice. For any doubt, check with Google for spelling, grammar, and usage. Many a time, I have found myself correct.


125. Synonyms are words having a similar meaning. Antonyms are words having the opposite meaning. Learning them helps in the usage of words.


126. In English, Gerund is a verb taking the suffix 'ing' and acting as a noun.Eg. Walking is good exercise. Here' walking' is a gerund.


127. Marriage is the union of man and woman. Wedding is the celebration. Only the word 'wedding' should be mentioned in our invitations.


128. In any invitation, the left side is assigned to the eldest living male of the wife's side as a matter of respect extended to him.


129. Weather is the day-to-day condition of the atmosphere in a place. Climate is the weather of a place averaged over a period of time


130. Humidity is the moisture content in the air. When it is less, it absorbs our sweat and we feel no sweating. If it is more, we sweat.


131. If the percentage votes not polled, together with invalid votes and NOTA, is more than 50%, the election should be null and void.


132. It is really a great wonder that HINDU DHARMA is able hold all the Indian people together in spite of their linguistic differences


133. Lead a simple life. Save for your old age. Go for necessities, delay the comforts and avoid the luxuries. You will be surely happy.


134. Do your duty without likes and dislikes, make your parents happy, help the poor, then pray to God. Sure, you will always be happy.


135. No one is perfect. It is human to commit mistakes.The greatness lies in accepting it and not in disowning it. It teaches a lesson.











Sunday, April 14, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1246 TO 1260

1246. நாடகமே இந்த உலகம், நாம் ஆடுவதோ பொம்மலாட்டம் என்று சொல்பவர்களை யாரும் நம்ப வேண்டாம். இங்கு எல்லோரும் கூத்தாடுபவர்களாக பிறப்பதில்லை.

1247. கண்கெட்ட பிறகும் சூரிய நமஸ்காரம் செய்யலாம். தவறுகள் செய்த பிறகும் ஒருவர் திருந்த முடியும். உணர்வுகள் பார்வைகளுக்கு அப்பாற்பட்டது.

1248. காரத் தன்மையையும் அமிலத் தன்மையையும் 1லிருந்து 14 வரை அளப்பது PH FACTOR எனப்படும்.7நடுநிலை. அதற்கு கீழ் அமிலம். அதற்கு மேல் காரம்.


1249. நம் உடலில் காரம், அமிலம் இரண்டில் எது கூடினாலும் ஆபத்து. எல்லாப் பொருள்களிலும் இரண்டும் இருக்கிறது. இரண்டையும் சமமாக உண்ண வேண்டும்


1250. சில வியாதிகளுக்கு சித்தா வைத்தியம்,சில வியாதிகளுக்கு ஆயுர்வேத வைத்தியம், சீரியஸ் வியாதிகளுக்கு ஆங்கில வைத்தியம். இது என்னுடைய வழி.


1251. "ஷிங்கில்ஸ்" என்கிற நோய் கண்ணில் வந்துவிட்டால்,24 மணி நேரத்திற்குள் VALCIVIR என்ற மருந்தை சாப்பிடாவிட்டால், அவருடைய கதி அதோகதிதான்


1252.அன்டிபயாடிக் மருந்துகள் அதிகம் சாப்பிடுவதால் குடலில் நல்ல பக்டீரியாக்களை கெட்ட பக்டீரியாக்கள் அழித்து பலவித குடல் நோய்கள் வருகிறது.


1253. அன்டிபயாடிக் மருந்துகள் அதிகம் சாப்பிடுவதால்  உடலில் அந்த மருந்துக்கு எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது. அதனால் வியாதி குணம் அடைவதில்லை.


1254. அன்டிபயாடிக் மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நல்ல பக்டீரியாக்களை அதிகரிக்க ப்ரோபயாடிக் மருந்துகள் சாப்பிடுவது நல்லது.


1255. வயதானவர்கள் இரவு உறங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்,அதாவது இரவு ஏழு மணிக்கு முன்,தங்களுடைய இரவு உணவை முடித்து கொள்வது நல்லது


1256. 
நம்ம கடிகாரத்திலேயே நம்மால் நிமிடம் காட்டும் முள்ளை தான் திருப்ப முடியும்.மற்ற இரண்டு முட்களையும் திருப்ப முடியாது.என்னே நம் திறமை!

1257. வீட்டின் வாசல் படியில் மாவிலையை சொருகினால் விசேஷம், யாரும் வரலாம். வேப்பிலையை சொருகினால் கஷ்டம், யாரும் வரக்கூடாது. சிறந்த பண்பாடு


1258. பண்டிகை நாள், பிறந்த நாள், திருமண நாள், சிரார்த்த நாள் ஆகிய நாட்களில் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து இருப்பது சரியல்ல


1259. அன்பு,பாசம்,காதல், அக்கறை,மரியாதை இவை எல்லாம் இருவழிப் பாதை.ஒருவழிப் பாதையல்ல.பலர் இதைப் புரிந்து கொள்வதில்லை.மன வருத்தம் வருகிறது


1260. 
துரோகிகளிடம் கோபம் இருக்காது. கோபப்படுபவர்களிடம் "துரோகம்" நிச்சயமாக இருக்காது. உங்களிடம் கோபப்படுபவர்களையும் கொஞ்சம் நேசியுங்கள்.



Friday, April 12, 2019

இறைவனுக்கு நன்றி

நான் தினமும் காலையும் மாலையும் நடைப்பபயணம் செய்வது வழக்கம். அது உடலுக்கு மட்டுமில்லாமல் மனதுக்கும் ஆரோக்கியமானது. அப்படி செல்லும் போது சில சமயங்களில் சில காட்சிகள் கண்ணில் படும். அதைக் கட்டுரையாக எழுதுவது வழக்கம்.

இன்று காலையில் நடந்து செல்லும் போது ஒரு காட்சியைக் கண்டேன். ஒரு வீட்டிற்கு வெளியே ஒருவர் பூ பறித்துக் கொண்டிருந்தார். செம்பருத்திப் பூ. இறைவனுக்கு உகந்தது. அவருடைய இறை பக்தியை மனதில் பாராட்டிக் கொண்டு மேலே பயணத்தைத் தொடர்ந்தேன்.


ஒரு சுற்று முடிந்து இரண்டாவது சுற்று வரும் போது அதே நபரை இன்னொரு வீட்டுக்கு வெளியே பூ பறிப்பதைக் கண்டேன். ஆச்சரியமாக இருந்தது. இவருக்கு எத்தனை வீடு? அவரை நெருங்கி விசாரித்தேன். அவர் கூறியது ஆச்சரியமாக இருந்தது.


அவருக்கு எந்த வீடும் சொந்த வீடு இல்லை. தினமும் பல வீடுகளில் பூக்களைப் பறித்து தன்னுடைய வீட்டில் பூஜைக்கு பயன் படுத்துவது அவர் வழக்கம். மேலும் கேட்டதில் அவர் ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும், இறை நம்பிக்கை அதிகம் உண்டு என்றும் தெரிந்து கொண்டேன்.


நான் அவரிடம் இதைக் கூறினேன். "சார், நான் கூறுவதைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். கடவுள் நமக்குப் படி அளக்கிறான். அதற்கு நன்றி சொல்ல நாம் பூஜை புநஸ்காரம் என்று செய்கிறோம். அது ஒருவருடைய நேர்மையைக் காட்டுகிறது. ஆனால் அதில் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது" என்றேன். என்ன என்று வினவினார்.


"நாம் இறைவனுக்குக் கொடுப்பதை, இறைவன் நமக்குக் கொடுத்ததில் இருந்து கொடுக்கவேண்டும். நமக்கு அவன் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அதிலிருந்து ஒரு பத்து ரூபாய் கொடுத்தால் போதும், அவன் சந்தோஷப் படுவான். பிறருடைய பொருளை எடுத்துக் கொடுக்கக் கூடாது. அதில் பலன் எதுவும் இல்லை. அது திருடுவதற்குச் சமம். அதற்குத் தண்டனையும் உண்டு." என்றேன்.


சிறிதும் எதிர்த்துப் பேசாமல், நான் சொல்வதை ஒப்புக்கொண்டு," மிகவும் நன்றி சார். நீங்கள் சொல்வது புரிந்தது. இனிமேல் அப்படியே செய்கிறேன்" என்று கூறி விடை பெற்றார். என்னுடன் எந்தவிதமான விவாதமும் செய்யவில்லை. இந்தக் காலத்தில் இது போல ஒருவரை நான் முதன்முதலாக பார்க்கிறேன்.


நான் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஸ்வாமி அலமாரியில் வைத்து எடுத்து, பிறகு தான் மேலே வேலை துவங்குவேன். நாம் எதையும் இறைவனுக்கு முதலில் அர்ப்பணம் செய்யவேண்டும். ஆபத்து காலத்தில் அவன் நமக்கு நிச்சயம் துணை வருவான். இதில் முழு நம்பிக்கை வேண்டும். 
நான் பலமுறை அதை அனுபவித்து இருக்கிறேன். அதைப்பற்றி கட்டுரைகளும் எழுதி இருக்கிறேன்.



Thursday, April 11, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1231 TO 1245

1231. எதையும் இறைவனுக்கு முதலில் அர்ப்பணம் செய்யவேண்டும். ஆபத்து காலத்தில் அவன் நமக்கு நிச்சயம் துணை வருவான். இதில் நம்பிக்கை வேண்டும்.

1232. 
வாழ்க்கையில் இறைவன் சூழ்நிலைகளை உருவாக்குகிறார். அந்த சூழ்நிலைகள் தான் ஒரு மனிதனை உருவாக்குகிறது. மனிதன் சூழ்நிலைகளை உருவாவதில்லை.

1233. செய்யும் தொழில் இறைவனால் கொடுக்கப் பட்டது. கூலியும் இறைவனால் கொடுக்கப் பட்டது. வேலையை நேர்மையாகவும் உண்மையாகவும் செய்ய வேண்டும் 


1234. "இதற்கு மேல் என்ன மோசமாக நடந்து விடும்" என்று நினைத்து அதற்கு நாம் தயாராகி விட்டால், எந்த இக்கட்டான நிலமையையும் சமாளிக்க முடியும்.


1235. நாம் உண்ணும் உணவில் எது நமக்கு ஏற்புடையதில்லை என்று பார்த்து அதைத் தவிர்த்தாலே போதும் வியாதி நம்மிடம் நெருங்காது. ஆரோக்கியம் கூடும்.


1236. 
இனிமையாக பேசுங்கள், பிறர் உங்களை விரும்புவார்கள். கடுமையாக பேசுங்கள் பிறர் உங்களை வெறுப்பார்கள்.எது வேண்டும்?முடிவு உங்கள் கையில்.

1237. மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் மக்களுடைய அரசின் பலவித செலவினங்களுக்காக, மக்களிடம் இருந்து பெறப்படும் பங்களிப்பு வரி எனப்படும்


1238. தமிழ்நாட்டில் லக்ஷக்கணக்கான இளைஞர்கள் தங்களை ரஜினியாக,அஜித்தாக, விஜய்யாக,சேதுபதியாக நினைத்து கொண்டு வாழ்க்கையை வீண் செய்கிறார்கள்.

1239. 
இப்படித்தான் வாழவேண்டும் என்றொரு முறை இருக்கிறது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று இன்னொரு முறையும் இருக்கிறது. எது விருப்பம்?

1240. 
கார் வைத்திருக்கிறீர்களா?வயதான பெற்றோரை மாதம் ஒருமுறை பிக்னிக் மாதிரி அழைத்துச் சென்று வீட்டில் தயாரித்த உணவை பகிர்ந்து உண்ணுங்கள்.

1241. ஏசி ரயில் பயணம் செய்வதை நான் விரும்புவது இல்லை.பலர் உபயோகித்த படுக்கை, சுவாசித்த காற்று,தீப்பிடிக்கும் ஆபத்து,அதிக கட்டணம் ஆகியவை.


1242. தோல் சம்பந்தமான மருத்துவ நிபுணரை சந்திக்க நேர்ந்தது.வயதானவர்கள் CLINIBATH 5.5 என்ற சோப் உபயோகிப்பது நல்லது என்றார்.விலை ரூ.200/-!!


1243. உழைப்புதான் பணம். பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்புதான். உழைப்பு இல்லாமல் ஒண்ணுமே கிடையாது. ஒண்ணுமே கிடைக்காது. அதனால் உழையுங்கள்.


1244. லோக்சபா தேர்தலில் பிராந்திய கட்சிக்கு வாக்களிப்பது உசிதமல்ல. அதேபோல அசெம்பிளி தேர்தலில் தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதும் உசிதமல்ல.


1245. நான் அரசியல் சார்பு இல்லாதவன். இந்த தேர்தலில் இதுவரை யார் லஞ்சம், ஊழல், கறுப்புப் பணம் சேர்க்கவில்லையோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள்


செய்யும் தொழிலே தெய்வம்

வீட்டைக் கட்டிபார், கல்யாணத்தை பண்ணிப் பார் என்று சொல்வார்கள். வீடு கட்டுவது மிகவும் கஷ்டம். நான் எனது 35 வயதிலேயே வீடு கட்டிவிட்டேன். அதற்கு நான் பட்ட  கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. 

ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் எண்ணூறு ரூபாய் வீட்டிற்கே போய்விடும். மீதி பணத்தில் குடும்பம் நடத்த வேண்டும். அதில் இரண்டு குழந்தைகள் வேறு. தாய் தந்தைக்கு பணம் அனுப்ப வேண்டும். 


வீடு கட்டினால் மட்டும் போதாது. அதை ஒழுங்காகப் பராமரிக்க வேண்டும். கிராமங்களில் வருடாவருடம் சுண்ணாம்பு அடிப்பார்கள். நகரங்களில் சிமெண்ட் பெயிண்ட் அடிப்பார்கள். கொஞ்சம் வசதி உள்ளவர்கள் அக்ரிலிக் எமல்ஷன் பெயிண்ட் அடிப்பார்கள்.


எனக்கு வெள்ளை நிறம் மிகவும் பிடிக்கும். வீட்டின் உள் பக்கம் வெள்ளை நிறமும் வெளியே சந்தன நிறமும் அடித்து இருந்தேன். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை எமல்ஷன் பெயிண்ட் அடிககவேண்டும். எவ்வளவு வருடங்கள் ஆனாலும் என் வீடு இப்போது பெயிண்ட் அடித்தது போல் சுத்தமாக இருக்கும்.


ஒருமுறை நிலமை நன்றாக இருந்த போது பெயிண்ட் அடிக்கத் தீர்மானித்தேன். அதற்கு பட்ஜெட் போட வேண்டும். பெயிண்ட் அடிக்க ஆள் ஏற்பாடு செய்ய வேண்டும். அவருடன் ரேட் பேசி இவ்வளவு நாட்களில் முடிக்க உறுதி வாங்க வேண்டும்.


ஷாகுல் ஹமீத் என்ற பெயிண்ட்டரை ஏற்பாடு செய்து இருந்தேன். மிகவும் திறமைசாலி. கூலியும் கம்மி. வேலை சுத்தம். குறித்த நேரத்திற்கு வந்து குறித்த நேரத்தில் போய் விடுவார். எப்போது பார்த்தாலும் பணம் கேட்கும் வழக்கமில்லை. 


வீட்டிற்குள்ளேயே தங்கி பெயிண்ட்டும் அடிப்பது மிகவும் கஷ்டம். உள் பக்கம் சீக்கிரம் பெயிண்ட் அடித்து முடித்துக் கொடுத்தார். வெளியில் அடிக்க ஆரம்பித்த போது ஒரு  சின்னப் பிரச்னை வந்தது. நான் வீட்டின் முகப்பிலேயும் சன்னல்கள் மேலும் மெரூன் கலர் அடித்து இருந்தேன்.


அவர் சொன்னார்,"சார், சுற்றி எல்லா வீடுகளிலும் இதே பெயிண்ட் அடித்து இருக்கிறார்கள். நாமும் அதே பெயிண்ட் அடித்தால் நன்றாக இருக்காது. வேறு கலர் நான் கொண்டு வருகிறேன். உங்களுக்குப் பிடித்தால் அதை அடிக்கலாம்" என்றார். 


எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. வேலையை செய்து விட்டு கூலியை கராராக வாங்கிக் கொண்டு போகும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதனா !! என் வீட்டில் எந்தப் பெயிண்ட் அடித்தால் நன்றாக இருக்கும் என்று இவருக்கு ஏன் அவ்வளவு அக்கறை? என்று தோன்றியது. அவர் மீது மதிப்பும் மரியாதையும் இன்னும் கூடியது.


மறுநாள் மெல்லிய பச்சை நிறத்தில் ஒரு லிட்டர் பெயிண்ட் கொண்டு வந்து எல்லா இடங்களிலும் அடித்தார். எனக்கு அந்தக் கலர் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. என் மனைவிக்கும் பிடிக்கவில்லை. ஆனால் அவருக்கு ஷாகுல் ஹமீதைப் பிடிக்கும்.


மாலையில் வேலை முடிந்த பிறகு வீட்டில் இருந்து சிறிது தூரம் தள்ளி நின்று வீட்டைப் பார்த்தார். அவருக்கும் பிடிக்கவில்லை போல் இருந்தது. என்னிடம் வந்து, "நன்றாக இல்லை சார். நாளை வேறு கலர் கொண்டு வருகிறேன் அதைப் பாருங்கள்" என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.


மறுநாள் ஃபாரஸ்ட் க்ரீன் கலரில் ஒரு லிட்டர் பெயிண்ட் கொண்டுவந்தார். அதை எல்லா இடங்களிலும் அடித்தார். மிக அருமையாக இருந்தது. நானும் என் மனைவியும் பாராட்டினோம். முதல் தடவை அடித்த பெயிண்ட்டுக்கு பணம் வேண்டாம் என்று கூறியது இன்னும் சிறப்பு. 


பேசிய தொகைக்கு மேலே அவருக்குப் பணமும், எல்லோருக்கும் வேட்டி தூண்டும், எவர்ஸில்வர் பாத்திரங்களும் பரிசாகக் கொடுத்து அனுப்பினேன். அவர் எனது நெருங்கிய நண்பராகி விட்டார்.


நாம் செய்யும் தொழில் இறைவனால் கொடுக்கப் பட்டது. நமக்கு வரும் கூலியும் இறைவனால் கொடுக்கப் பட்டது. வேலையை நேர்மையாகவும் உண்மையாகவும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வருவதில்லை.

Wednesday, April 10, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1216 TO 1230

1216. உங்களுக்கு ஒரு அரசியல் கட்சியை ஆதரிக்க உரிமை இருக்கும்போது, எந்தக் கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலையில் இருக்க எனக்கு உரிமை இல்லையா

1217. பலவித கொள்கைகள் கொண்ட பலவித அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பு கூட்டணி ஒப்பந்தம் செய்வது எந்த சட்டத்தில் உள்ளது என்று தெரியவில்லை


1218. பதவிக்கு வருவதையே குறிக்கோளாகக் கொண்டு, சட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றி, தேர்தலில் கூட்டணி அமைத்து, மக்களை ஏமாற்றுவது என்ன நியாயம்?


1219. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனித்தனியாக போட்டி இடவேண்டும். அதிக சதவிகித வாக்குகள் பெரும் கட்சி ஆட்சி அமைப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.


1220. ஒரு தேர்தலில் 65 சதவிகிதம் வாக்குகள் போடப்பட்டால், மீதம் 35 சதவிகிதம், போடப்படாத வாக்குகள், நடுநிலை வாக்குகள் என்று அறியவேண்டும்.


1221. ஒரு கட்சி வெற்றிபெற, போடப்படாத வாக்குகளையும் விட அதிகம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் ஐந்து வருடங்கள் சுதந்திரமாக ஆட்சி செய்யலாம்.


1222. ஒரு கட்சி 41%, இன்னொரு கட்சி 39% ஒட்டு பெற்றிருக்கும். வேறொரு கட்சி 3% ஓட்டை வைத்துக்கொண்டு இரண்டு கட்சிகளையும் ஆட்டிப் படைக்கும்.


1223. நோட்டாவினால் எந்தப் பலனும் இல்லை.அது வெறும் கண் துடைப்பு.அதில் மற்றவர்களை விட அதிகமான ஒட்டு விழுந்தால் தேர்தலை ரத்து செய்யவேண்டும்


1224. நான் கூறிய வழியில், தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவர, எந்த அரசியல் கட்சியும் ஒப்புக் கொள்ளாது. அது அவர்களுக்கு சாதகமானது அல்ல.


1225. மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுவதற்காக இதை எழுதுகிறேன். தயவுசெய்து நன்றாக யோசித்துப் பாருங்கள். தவறு இருந்தால் மன்னிக்கவும்.


1226. அரசியலைப் பற்றி உங்கள் கருத்துக்களும் என் கருத்துக்களும் ஒன்றாக இருக்காது என்பது முடிவான முடிவு. இருந்தாலும் எனக்கு ஒரு அற்ப ஆசை.


1227. தனிமனிதனாக குடும்பத்தில் சாதிக்கலாம். ஆனால் ஜனநாயகத்தில் ஓட்டுப் போடுவதைத் தவிர வேறு எதுவும் சாதிக்க முடியாது.பிறகு ஏன் வீண் வேலை?


1228. மழை காலத்தில் விட்டில் பூச்சிகள் நெருப்பில் விழுகின்றன. தேர்தல் காலத்தில் அரசியல் கட்சி என்ற நெருப்பில் அறியா மக்கள் விழுகின்றனர்.


1229. பாமர மக்கள் தான் பைத்தியமாக அரசியல் கட்சிகள் பின்னால் ஓடுகின்றனர் என்றால் படித்தவர்கள் கூடவா அவர்களைப் போல இருக்கவேண்டும்? கடவுளே.


1230. இரண்டு கோழிகள் சண்டை பார்த்திருக்கிறேன். இரண்டு ஆடுகள் சண்டை பார்த்திருக்கிறேன். இப்போது நாட்டின் பொதுத் தேர்தல் பார்க்க போகிறேன்.


காய்கறிகள் வாங்கும்போது

சென்னையில் நான் குடியிருந்த பகுதியிலும், தள்ளு வண்டியிலும் காய்கறி விலை மிக அதிகமாக இருந்ததால், நான் கோயம்பேடு மார்க்கட் போவதுண்டு

மார்க்கட்டில், ஒரு சில வியாபாரிகளிடம் தான் காய்கறி வாங்குவேன். ஏனென்றால் அவர்கள் என்னிடம் மனம் விட்டு அவர்கள் கஷ்டத்தை கூறுவார்கள்


கூறு கட்டி விற்கும் சிறிய வியாபாரிகளிடம் தான் இஞ்சி, பச்சை மிளகாய், எலுமிச்சம்பழம், கொத்தமல்லி, கருவேப்பிலை முதலியன வாங்குவேன்.


பேசிக்கொண்டே தரமான காய்கறிகளை எனக்கு கொடுப்பார்கள். நான் பொருக்குவது கிடையாது. தேவைக்கு மேல் அதிகம் வாங்கி கேட்ட பணத்திற்கு மேல்  கொடுப்பேன்


அப்படி வாங்கிய காய்கறிகளின் விலை அதிகமாக இருக்கும், அல்லது அளவு அதிகமாக இருக்கும், அல்லது என் மனைவிக்குப் பிடிக்காததாய் இருக்கும்.


அவர்களுடைய கஷ்டங்கள் என் மனதை மிகவும் பாதிக்கும். என்னுடைய கஷ்டங்கள் மிகவும் சாதாரணமாகப் போய்விடும். எங்களுடைய நட்பு அதிகமாகும்.


ஒருமுறை கடையில் ஒரு இளைஞன் அமர்திருந்தார். கடைக்காரர் மகனாய் இருக்கும். மிகவும் கராராய் பேசினார். பக்கத்து கடைக்காரர் அவரை கூப்பிட்டு பேசியபின் மரியாதை கூடியது


இந்த 44 வருடங்களில் ஒரு தடவையாவது என் மனைவியிடம் காய்கறி வாங்குவதில் பாராட்டு பெற்றது கிடையாது. எப்பவும் ஏதாவது குற்றச்சாட்டு தான்


வேறு கடையில் வாங்குவதில் இஷ்டமில்லை. பேரம் பேசுவதில் இஷ்டமில்லை. தேவைக்கேற்ப குறைவாக வாங்குவதில் இஷ்டமில்லை. நான் என்னதான் செய்வது?


சென்னையை விட்டு ஹைதராபாத் வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.ஒவ்வொரு முறையும் இங்கு காய்கள் வாங்கும்போது அவர்கள் ஞாபகம் எனக்கு வரும்


இங்கு பாஷை தெரியாது. இருந்தாலும் மனது வலிக்கும். கஷ்டப்பட்டு வேலை செய்யும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எத்தனை சோகங்கள் இருக்கின்றன.


Sunday, April 7, 2019

பெற்றோர்

பெற்றோரை_நமஸ்கரிப்போம். இந்த பூமியை விட பாரமானவள் தாய். ஆகாசத்தை விட உயர்ந்தவர் தந்தை. ஒரு முறை தாய் தந்தையர்க்கு நமஸ்கரித்தால் பசுவை தானம் செய்த பலன் கிட்டும். ஸத்யம்_தாய், ஞானம்_தந்தை. 

பத்து உபாத்யாயர்களை விட ஆசார்யர் சிறந்தவர். நூறு ஆசார்யர்களை விட தந்தை சிறந்தவர். தந்தையை விட ஆயிரம் மடங்கு சிறந்தவள் ஜென்மாவைகொடுத்ததாய். 

அவர்களுக்கு சேவை செய்தால் 6 முறை பூமண்டலத்தை ப்ரதக்ஷிணம் செய்த பலனும், 1000 முறை காசி யாத்திரை செய்த பலனும், 100 முறை ஸமுத்திர ஸ்நானம் செய்த பலனும் கிட்டும். 

எந்த மகன், மகள் மாத்ரு தேவதையை சந்தோஷமாக வைத்திருக்க மாட்டார்களோ, சேவை செய்ய மாட்டார்களோ அவர்களின் சரீர மாமிசம், நாய் மாமிசத்தை விட ஹீனமானது என்று வேதம் கூறுகிறது. 
எப்பேற்பட்ட சாபத்திற்கும் விமோசனம் உண்டு. பெற்றதாய் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்தால் அதற்குஒரு லட்சம் பசுக்களை தானம் செய்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஸ்வமேத யாகங்கள் செய்தாலும் போகாது.

தாயை விட சிறந்த தெய்வம்  இல்லை, காயத்ரியை மிஞ்சிய மந்திரம் இல்லை...

ஓம்மாத்ருதேவோ_பவ.....

ஓம்பித்ருதோவோ_பவ...

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1201 TO 1215

1201. ஒவ்வொருவரும் நெஞ்சில் கைவைத்து நான் நேர்மையாக வாழ்கிறேனா என்று கேளுங்கள். ஆமாம் என்று பதில் உண்மையாக வந்தால் நீங்கள் சிறந்தவர்கள்.

1202. வேலை செய்வது கஷ்டமில்லை.தொழில் செய்வது கஷ்டம்.அதற்கு மனத்திடம்,ஆர்வம், ஈடுபாடு,நுணுக்கம், முதலீடு,கடும் உழைப்பு, முதலியன வேண்டும்.


1203. 
கல்வி கற்கும் வரை கஷ்டத்தைக் கொடுக்கும். பாதுகாப்பது சுலபம். செல்வம் சம்பாதிக்கும் வரை கஷ்டத்தைக் கொடுக்கும். பாதுகாப்பது கஷ்டம்.

1204. அரசியல்வாதிகள் அறிவாளிகள் ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை. நேர்மையானவராக, லஞ்சம், ஊழல், கறுப்புப் பணம் இல்லாதவர் ஆக இருக்க வேண்டும்.


1205. சர்க்கரை ஒரு ஸ்பூன், உப்பு ஒரு ஸ்பூன், இதை தனித்தனியாக சாப்பிட்ட பிறகு இரண்டுக்கும் வித்யாசம் தெரியாதவன் ஞாநி, தெரிந்தவன் அஞ்ஞானி.


1206. ஐம்புலன்களான கண், மூக்கு, செவி, வாய், சருமம் இவைகளை, தனது கட்டுகோப்பில் வைத்து நல்ல வழியில் உபயோகப் படுத்துபவன், வெற்றி அடைகிறான்.


1207. வாழ்க்கையில் நேர்மையாக வாழ்பவர்கள் சிறு சிறு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். நேர்மையாக வாழாதவர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.


1208. பரமாச்சாரியார் கூறுகிறார்:கடந்த 50 வருடங்களில் மக்களின் மனப்பான்மையில் ஏற்பட்ட மாறுதல்,அதற்கு முந்திய 500 வருடங்களில் ஏற்படவில்லை 


1209. முகச்சவரம் செய்யும் டிஸ்போஸெபல் ப்ளேடில் மேற்புறம் நீல நிற கோடு ஒன்று இருக்கும்.அது வெள்ளையாக மாறும் வரை தான் ப்ளேட் வேலை செய்யும்


1210. சோப்பு தீரும் நிலை வரும்போது அதைத் தூக்கி ஏறியாமல், அடுத்து உபயோகிக்கும் புதிய சோப்பில் அதை ஒட்டிக் கொள்வது, சிக்கனமா கஞ்சத்தனமா?


1211. தினம் பனியன்,அண்டர்வேர், துண்டு,இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வேட்டி,மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாண்ட்,சட்டை. இதைத் நாமே துவைக்கலாமே.


1212. கற்பனை செய்வது எல்லோருக்கும் பொது.நேரம் தான் மாறுபடும்.எனக்கு குளிக்கும் போது, நடைப்பயணம் போகும் போது கற்பனை பெருகும். உங்களுக்கு?


1213. ஏனோ தெரியவில்லை, நான்,கால் மேல் கால் போட்டு [அட்நகால்] உட்காருவதும் இல்லை,அப்படி உட்காருபவர்களை எனக்கு கொஞ்சமும் பிடிப்பதும் இல்லை


1214. ஹிந்து, ஹிந்து என்று பெருமைப் படுகிறோம். திருநீரோ, திருமண்னோ தினம் அணியவேண்டும். வைஷ்ணவர்கள் அணிகிறார்கள். சைவர்கள் அணியவேண்டும்.


1215. 
இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட நமது வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம். நினைத்தால் சிரிப்பு வருகிறது. நாடகமே உலகம்.

Thursday, April 4, 2019

LEARNING ENGLISH LANGUAGE

1. English is a beautiful language. It weaves magic in 26 letters. Why people are not interested to learn this language is a mystery.

2. There was a time when I did not know the a,b,c of the language. My employers scolded me for the lack of my knowledge of English. 


3. I could not remain permanently in any particular job. I felt ashamed and heartbroken. I wowed to learn the language at any cost.


4. Then I started reading newspapers, magazines, and novels. I read the lines slowly to understand grammar and line formation.


5. It took me a long time to write a few lines on my own. Slowly it improved. I developed the habit of writing. I was happy about it 


6. Writing is my passion. I write in simple language, easy to understand for the common man. I do not use bombastic words to show off. 


7. I can guide and show the route. It is for the person to reach his destination. I cannot travel for him to reach the destination.


8. There are 23 languages in India. Hindi and English are spoken by the majority. We must learn an additional language apart from Tamil.


9. Hard work never fails. When I can do it, why not you? There is nothing wrong with learning a language. It helps. May God bless you.

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1186 TO 1200

1186. ஒருவருடன் உரையாடும் போது என் மனதில் தோன்றும் உண்மையான எண்ணங்களைக் கூறினால் அவர் மனம் வருத்தப்ப்டுமே என்று கூறாமல் விட்டு விடுவேன்.

1187. தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கிறோம். பறவைகள், வீட்டு மிருகங்கள் என்ன செய்யும்?வீட்டு வாசலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வையுங்கள்.


1188. இப்போது எல்லா விருந்தாளிகளும், அவர்களே ஒலாவை ஏற்பாடு செய்து கொண்டு, அவர்களே லக்கேஜை தூக்கிக்கொண்டு, அவர்களே வண்டி ஏறவேண்டியதுதான்.


1189. எண்ணம் நன்றாக இருந்து செயல் தவறாக இருந்தால் தவறில்லை. எண்ணம் தவறாக இருந்து செயல் நன்றாக இருந்தால் தவறு. எண்ணம் மிகவும் முக்கியம்.


1190. 
வயதாக, வயதாக மனம் அமைதியாக இருக்க வேண்டும். மனதை பாதிக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது. கெட்ட நினைவுகள் தூக்கத்தை கெடுக்கும்.

1191. கிராமங்களில் கொண்டக் கடலையை வேகவைத்து ப்ளாஸ்டிக் பையில் வைத்துக் கொண்டு பேருந்தில் பயணம் செய்யும் போது சாப்பிடுவார்கள். நகரத்தில்?


1192. அதிக அளவு கணனி மற்றும் கைபேசி உபயோகிப்பதால் கண்ணீர் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு கண்கள் காய்ந்து போகிறது. பலவித கண் நோய்கள் வருகிறது.


1193. 
கார் பழுதானால் காலம் நின்றுவிட்டது. ஏஸி பழுதானால் எல்லாமே முடிந்தது. வாஷிங் மெஷின் பழுதானால் உயிரே போய்விட்டது. என்ன வாழ்க்கை இது?

1194. 
நாம் ஒரு வீட்டிற்கு விருந்தாளியாக போகும்போது சந்தோஷமாக இருக்கிறது. நம் வீட்டிற்கு யாராவது விருந்தாளி வந்தால் சந்தோஷமாக இருக்கிறதா?

1195. இப்போது பெண்கள் அதிகம் வேலைக்குப் போவதால் அவர்கள் திருமணம் தாமதமாகிறது. அதனால், பையன்கள் திருமணமும் பெண் கிடைக்காமல் தாமதமாகிறது.


1196. 
பெண்கள் திருமணம் தாமதமானால் அவர்கள் குழந்தைகள் டவுன்ஸ் ஸின்ட்ரோம் என்ற மூளை குறைபாடு நோய்க்கு ஆளாகும் என்பது பலருக்குத் தெரியவில்லை.

1197. தினம் அலுவலகம் சென்று, வேலை செய்து, சம்பாதித்து, குடும்பத்தை காப்பாற்றுவது சந்தோஷமா அல்லது ஒழுங்கான ஓய்வு பெற்ற வாழ்க்கை சந்தோஷமா?


1198. கற்பனை நிஜத்தில் இருந்து மிகவும் மாறுபட்டது. கற்பனையில் பிரமாதமாகத் தெரியும் விஷயம் நிஜத்தில் சாதாரணமாக இருக்கும். உண்மை கசக்கும்.


1199. ஒரு பழமொழி உண்டு. காக்கா பறக்கும் போதே தெரியும், இவ்வளவு உயரம் தான் பறக்கும் என்று. காக்கா ஒருபோதும் பருந்தைப் போல பறக்க முடியாது.


1200. தமிழ் மக்கள் ஹிந்தி கற்கக் கூடாது என்ற எண்ணத்தை விட, அகில இந்தியக் கட்சிகள் தமிழ் நாட்டில் காலடி வைக்கக் கூடாது என்பது குறிக்கோள்.