Tuesday, June 18, 2024

கொஞ்சம் சிரிங்க.. தப்பில்லை!

எனக்கு கொஞ்ச நாளா வலது கண் மங்கலா தெரிய ஆரம்பிச்சுது. அப்பா கிட்ட கேட்டேன். " டாக்டரை போய் பாரு!" என்றார். 


"போய் பார்த்தேன் அப்பா! அவரும் மங்கலாத்தான் தெரியராரு!"--


"நீ உருப்படமாட்டே!"....


மறு நாள் டாக்டரிடம் போவதற்காக பஸ் ஏறினேன். 


"கண்டக்டர்! இந்த பஸ் எவ்வளவு தூரம் போகும்? "---


"டீசல் இருக்கற வர ஓடும்! ஆமாம், நீ எங்கே இறங்கணும்? "---


"படிக்கட்டு வழியாதான்!"


ஒரு வழியா டாக்டர் வீடு வந்து சேர்ந்தேன். அறையினுள் நுழைந்தேன். 


"டாக்டர்! கொஞ்ச நாளா என் வலது கண் மங்கலா தெரியறது!" --- 


"sorry! நான் வக்கீல்! பக்கத்து ரூம் போங்கோ! அங்கேதான் டாக்டர் இருக்கார்!" 


பக்கத்து ரூம் போனேன். கதவை தட்டினேன். கதவை திறந்த டாக்டர் 


"என்ன, எல்லாரும் இப்படி கும்பலா நின்னா எப்படி? எல்லோரும் Q வரிசையில் வாங்கோ!"---


திரும்பி பார்த்தேன். நான் ஒருத்தன் தான் நின்னுண்டு இருக்கேன்!


"டாக்டர்!சரியா பாருங்கோ! நான் ஒருத்தன் தான் நின்னுண்டு இருக்கேன்!"--


டாக்டர்! கண்ணாடியை கழற்றி பார்த்தார். " ஆமாம், சர்தான்! நீ உள்ளே வா!" 


உள்ளே போனேன். "அந்த chair லே உக்காரு!" உட்கார்ந்தேன். 


"எழுந்துரு! அது என் chair!"---" என்ன கம்பளைண்ட்? "---- 


"ஸார்! கொஞ்ச நாளா வலது கண் மங்கலா தெரியறது!"---


" சரி, இந்த எழுத்தை படி!"---


"எழுத்து எங்கே ஸார் இருக்கு? "--


"அந்த போர்டு லே இருக்கு!"--


"Board எங்கே ஸார் இருக்கு? "---


"அதோ அந்த சுவத்துல!"---


" சுவர் எங்கே இருக்கு ஸார்"---


"சர்தான்! முத்தின கேஸ் தான்!ஆபரேஷன் பண்ண வேண்டியது தான்!


நீ போய் நான் எழுதி கொடுக்கிற மருந்தேல்லாம் வாங்கிண்டு வா!"-


அவர் கொடுத்த சீட்டை வாங்கிக்கொண்டு மருந்தேல்லாம் வாங்கி வந்தேன்.


" டாக்டர்!! நீங்க கடைசியா எழுதிக்கொடுத்த மருந்து எந்த பார்மசி யிலும் கிடைக்கவில்லை,!"--


"அதுவா? நான் பேனா சரியா எழுதறதா ன்னு பார்க்க கிறுக்கினது!"----


ஒரு வழியா ஆபரேஷன் முடிந்தது. டாக்டர் ஒரு அசட்டு சிரிப்போடு 


"சாரி!ஒரு தப்பு நடந்து போச்சு!வலது கண்ணுக்கு பதிலா இடது கண்ணை ஆபரேஷன் பண்ணிட்டேன்!"--


"ஸார்! உங்கள பத்தி நன்னா தெரிஞ்சுண்டுதான் நான் மாத்தி சொன்னேன். எனக்கு நிஜமா இடது கண் தான் trouble!" -----


வீட்டிற்கு வந்தேன். "ஜானகி! நான் ஆபரேஷன் பண்ணிண்டாச்சு. கண்ணு இப்போ நன்னா தெரியறது!"----


" நான் உங்க ஜானகி இல்லை! உங்க வீடு அடுத்த தெருல இருக்கு!"

No comments :

Post a Comment