Friday, April 26, 2024

ராம நவமி / பரத தசமி !!

ராம நவமி தெரியும் !!!! பரத தசமி தெரியுமோ ?!?


ராமன் பிறந்தது நவமியில் ! அவன் தம்பி பரதன் பிறந்தது தசமியில் !


கௌசல்யா ராமனைத் தந்தது நவமியில் ! கைகேயி பரதனைத் தந்தது தசமியில் !


புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் ! பூசம் பரதனின் நட்சத்திரம் !


பரத தசமி தெரிந்தது. லக்ஷ்மண தசமி தெரியுமோ?


லக்ஷ்மணனும், அவன் தம்பி சத்துருக்கனனும் பிறந்ததும் தசமியில்தான்!


சுமித்திரை பகவானுக்காக லக்ஷ்மணனைப் பெற்றதும்,

பாகவதனுக்காக சத்துருக்கனனைப் பெற்றதும் தசமியிலே!


ஆயில்யம் அடைந்தது லக்ஷ்மணனையும், சத்துருக்கனனையும் தந்தது!


நவமியில் வந்தவன் ஒருவன். அவனே ஆதிமூலன் !


தசமியில் முதலில் வந்தவன் ஒருவன் !

அவனே பரதன் !


இருவரில் முதலில் வந்தவன் ஒருவன் !

அவனே லக்ஷ்மணன் !


நால்வரில் கடையனாய் வந்தவன் ஒருவன் ! அவனே சத்துருக்கனன் !


ராமன் உலகைக் காக்க வந்தான் !

லக்ஷ்மணன் அவனைக் காக்க வந்தான் !


பரதன் நாட்டைக் காக்க வந்தான் !

சத்துருக்கனன் அவனைக் காக்க வந்தான் !


ராமன் தர்மம் சொன்னபடி நடந்தான் !

லக்ஷ்மணன் ராமன் சொன்னபடி நடந்தான் !


பரதன் ராம பாதுகையோடு நடந்தான் !

சத்துருக்கனன் பரதனுக்கு பாதுகையாய் நடந்தான் !


ராமன் சீதையோடு நடந்தான் !

லக்ஷ்மணன் ராமனோடு நடந்தான் !


பரதன் ராமனுக்காய் நடந்தான் !

சத்துருக்கனன் பரதனுக்காய் நடந்தான் !


ராமன் தந்தை சொல் காத்தான் !

லக்ஷ்மண் தாய் சொல் காத்தான் !


பரதன் ராமன் சொல் காத்தான் !

சத்துருக்கனன் பரதன் சொல் காத்தான் !


ராமனோ தர்மம் !

லக்ஷ்மணனோ கைங்கரியம் !

பரதனோ நியாயம் !

சத்துருக்கனனோ சத்தியம் !


படித்ததில் ருசித்தது!!!

No comments :

Post a Comment