மனதில் தோன்றிய எண்ணங்கள் 1966 to 1980.
1966. உலகத்தையே எதிர்த்து நின்று ஜெயிக்கலாம் என்று தோன்றும், ஒரு சாதாரண ஜலதோஷம் பிடிக்கும் வரை.
1967. நோய்வாய்ப் படும்போதுதான் அந்த அவயவம் எவ்வளவு முக்கியமானது என்பது நமக்குத் தெரிகிறது.
1968. மருத்துவ மனையும், மாயான பூமியும் தான் நமக்கு ஞானத்தைக் கொடுக்கும் இடங்கள்.
1969. தீமையும் நன்மையும் சமுதாயத்தின் இரு பக்கங்கள். ஒன்றில்லாமல் ஒன்றில்லை. இரண்டும் அழியாதது. அழிக்க முடியாதது.
1970. தனது மகிழ்ச்சியை விரும்பினால் சுயநலவாதி. பிறர் மகிழ்ச்சியை விரும்பினால் பொதுநலவாதி. பிறர் கஷ்டத்தை விரும்பினால் தீவிரவாதி.
1971. எப்பொழுது 'நான்' என்பது இல்லாமல் போகிறதோ, அங்கு மோட்சம் இருக்கிறது. 'நான்' இருக்கும்போது, அங்கு மோட்சம் இருக்க முடியாது.
1972. கடவுள் பக்தி வேறு. வாழ்க்கைப் போராட்டம் வேறு. வாழ்க்கைப் போராட்டம் சென்ற பிறவியின் பலன். கடவுள் பக்தி அடுத்த பிறவியின் பாதுகாப்பு.
1973. மீனுக்கு சிக்கியது புழு. மனிதனுக்கு சிக்கியது மீன். அப்போ புழுவுக்கு? மனிதன் மண்ணுக்குள் வரும் வரை காத்திருந்தது புழு.
1974. முடியும் வரை முயற்சி செய்ய வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் பயிற்சி செய்ய வேண்டும். அயற்சியோ தளர்ச்சியோ கூடாது.
1975. இந்த தலைமுறை விளையாட்டு வீரர்கள் எதற்கும் கவலைப்படுவது கிடையாது. கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.
1976. சேத்த பணத்த சிக்கனமா, செலவு பண்ண பக்குவமா, அம்மா கையிலே கொடுத்துப் போடு செல்லக்கண்ணு. அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக் கண்ணு.
1977. மச்சான் என்பவர் மனைவியின் சகோதரர் அல்லது சகோதரியின் கணவர். இந்த வார்த்தையை ப்ராமணர்கள் உபயோகிப்பது இல்லை ஏன்?
1978. தாயின் சகோதரர் மாமா. பிறகு கணவனை எப்படி மாமா என்று அழைக்கலாம்?
1979. திருடன், கொள்ளைக்காரன், லஞ்சம் வாங்குபனைக் குறித்த வடமொழிச் சொல். இல்லாததை உள்ளதாகவும், உள்ளதை இல்லாததாகவும் சொல்பவன் தான் டுபாக்கூர்.
1980. உணவுப் பசி இரண்டு வகைப்படும். ஒன்று வயிறு காலியாகி கேட்பது. இரண்டு நாக்கு வேண்டும் எனக் கேட்பது. முதலாவது நல்லது. இரண்டாவது கெடுதல்.
No comments :
Post a Comment