Thursday, January 20, 2022

சிரிப்பு வெடிகள் -- 17

1.காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன் ?

ஏன் ?

காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.

*********************

2.அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ?

ஏன் ?

அது ஜாம் ஜாம்னு நடக்கற கல்யாணம்.

**********************

3.இன்னைக்கு நைட் 12 மணிக்கு..உங்க ரூமுக்கு பேய் வரும்....பயந்து லைட்ட மட்டும் போட்டுடாதீங்க

ஏன்??

பாவம், பேய் பயந்திரும்!!

****************************

4.எங்கள் தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே...

ஏன்? அவர் பெரிய வயலினிஸ்டா?

இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.

******************************

5.ஒரு அப்பா அவரோட 5 வயது மகன் கிட்ட கேட்கிறார்

அப்பா: யேன்டா அழுவுர நான் உனக்கு ப்ரெண்டு மாதிரி என் கிட்ட சொல்லுடா

மகன் : அது இல்ல மச்சி இன்னும் கொஞ்சம் ஹார்லிக்ஸ் கேட்டதுக்கு உன் ஆளு என்ன அடிச்சிட்டா.

*************************

6.மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

தெரியலையா?

அது கண்ணுக் குட்டி!

கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

*****************************

7.எதுக்காக இந்தியா பூராவும், அதிகமா போஸ்ட் மேன் போட்ருக்காங்க?

ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.

***************************** 

No comments :

Post a Comment