Friday, October 29, 2021

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1741 TO 1755

1741. குதிரையை தண்ணீர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லத்தான் முடியும். தண்ணீர் குடிப்பது அதன் இஷ்டம். நம்மால் அதைக் குடிக்க வைக்க முடியாது.

1742. நமக்குள் ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும். எல்லோரையும் நம்புவது முட்டாள் தனம். ஒருவரையும் நம்பாமல் இருப்பது அதை விட பெரிய முட்டாள் தனம்.

1743. 50 வயது வரை கடமைகளை செய்ய வேண்டும். 60 வயது வரை ஞானத்தை வளர்க்க வேண்டும். அதன்பின் ஆசைகளை துறந்து கடவுள் மீது பக்தி செலுத்த வேண்டும்.

1744. சட்டப்படி பெண் 18, ஆண் 21 வயதுக்கு முன் திருமணம் செய்யக்கூடாது என்பது 18% மக்களுக்குத் தெரியவில்லை, விருப்பமில்லை, நம்பிக்கையில்லை.

1745. நகைச்சுவை உணர்வு மிக முக்கியம். சிலர் புன்முறுவல் செய்யவே மிகவும் யோசிப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில், மிகவும் கஷ்டப் படுவார்கள்.

1746. ஒருவனை ஏமாற்றுதல் என்பது பெரிய குற்றம். அதிலும் படிப்பறிவு இல்லாதவனையும் ஏழையையும் ஏமாற்றுதல் என்பது மன்னிக்க முடியாத ஒரு குற்றம்.

1747. நாம் சிறைப் பறவைகள். வீட்டிற்கு வெளியே வந்தால் தான் ஊர் தெரியும். ஊருக்கு வெளியே நாடு தெரியும். நாட்டுக்கு வெளியே உலகம் தெரியும்.

1748. வளரும் வயது, பறக்கும் காலம், நிற்காத நேரம், துடிக்கும் இளமை, ஒதுங்கும் உறவுகள், மனதில் லக்ஷியம், இவை தினசரி வாழ்க்கைப் போராட்டம்.

1749. நமது வாழ்க்கையை சுலபமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இருப்பதை நினைத்து சந்தோஷப் படுவோம். இல்லாததை நினைத்து வருத்தப் படாமல் இருப்போம்.

1750. சிலர் எப்பொழுதும் பிறரைத் திருத்த முயற்சி செய்கிறார்கள். தன்னை விட்டு விட்டு பிறரை திருத்த முயலுவது அவர்களின் அறியாமையை காட்டுகிறது.

1751. நமது நாட்டில் ஏழ்மையைக் குறைக்க எனக்குத் தோன்றிய ஒரு வழி. பணக்காரர்கள் ஏழைகளைத் திருமணம் செய்து கொண்டால் ஏழ்மை குறைந்து விடும்.

1752. நாம் குடும்பம் என்ற கூண்டில் அடைபட்டுத் தவிக்கிறோம். உள்ளே இருக்கவும் இஷ்டம் இல்லை. வெளியே போகவும் இஷ்டம் இல்லை. மூச்சு முட்டுகிறது.

1753. வாழ்க்கை ஒரு ரிலே ரேஸ். சரியான சமயத்தில், சரியான விதத்தில் நம் பொறுப்புக்களை அடுத்த தலைமுறைக்குக்  கொடுப்பது தான் புத்திசாலித்தனம்.

1754. காலம் பொன் போன்றது. வாழ்க்கையில் சந்தோஷம் மிக முக்கியம். மகிழ்ச்சியாய் ஒருவர் வாழ்ந்த  தருணங்கள் எல்லாம் வீணாக செலவழிக்க வில்லை.

1755. குழந்தைகளுக்குத் திருமணம் செய்த பின் கடமை முடிந்தது. பொறுப்புகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு கிருஷ்ணா, ராமா என்று சுற்றுலா போகலாமே. 

Tuesday, October 26, 2021

“வாழ்வின் யதார்த்தம்”

நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை.

உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும். ஏதோஒரு பொறுப்பும் இருக்கும்.

எது உங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள். உங்கள் உடல் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே!

உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது, உலகில் வேறு யார் கேட்பார்? உடலை விடுங்கள்.

உங்களின் தலைமுடி கூட உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிர்வதும், வழுக்கை விழுவதும் யாருக்குத் தான் பிடிக்கும்? முடி நரைப்பதையோ, உதிர்வதையோ உங்களால் தடுக்க முடியவில்லையே!

உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு? தெரியாது...

உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள்? அதுவாகவே ஜீரணமாகிறது. இருதயத்தையும், குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா இயக்குகிறீர்கள்?

இல்லையே.... இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள் கட்டுப் பாட்டிலும்,பொறுப்பிலும் இல்லாத போது, உலகில் பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது அறியாமை.

மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது! மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது!

உலகம் உங்களுடைய பொறுப்பிலா சுழலுகிறது? நட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலா ஜொலிக்கிறது?

நீங்கள் தான் வானிலுள்ள கோள்களை கீழே விழாமல் அந்தரத்தில் தாங்கிப் பிடிப்பவரோ!

உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு அறியாமை! எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை.

அனைத்துமான இறைவன் உங்கள் முடியைக் கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை. அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ, அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.

உங்களுக்கு ஏன் வீண் கவலை... எதுவும் உங்கள் கையில் இல்லை.... அமைதியாய் இருங்கள். கடமையை சரிவர செய்யுங்கள். போதும்.

நாராயணா... நாராயணா...!

வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சிப் பெரியவர். தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்திலிருந்து,,, 

Friday, October 22, 2021

கணவன் மனைவி அமைவது.

ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம். கணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி அப்பெண்ணை அணுகி," மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே. ஏன் உன் கணவனைக் கடிந்து கொண்டாய்?

"ஒன்னுமில்லை Aunty, இது என் கணவரது தங்கையின் திருமணம். நானும்கூட வந்து நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம். வீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை. இதிலே என்னைய வேறு கூப்பிடுறார் !

"பெண் என்றால் அடிமையா என்ன..? கணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு. எனக்கே அசதியா இருக்கு. இந்த ஆம்பளைங்களே இப்படிதான் Aunty, தன்மானம் இல்லாதவர்கள். சும்மா கடுப்பேத்திகிட்டு"....

முதியவள் சிறு புன்னகையோடு, "மகளே" முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன். ஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி. எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு. ரெண்டு பேருமே விவசாயமே..தொழில். வயதும் 65ஐ கடந்துவிட்டேன். 

காடு தோட்டமெல்லாம் இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டு, ஒரே மகளான தெய்வநாயகிக்கும் கொஞ்சம் காசு பணம் நகைன்னு கொடுத்துவிட்டு, பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம்....

எங்களோட 2 பிள்ளைங்களும், ஒரு மகளும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம். என் கணவனுக்கு துரதிஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி. தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்....!

இப்ப அவங்க இல்லை, நான் ரொம்ப தனிமையை உணர்கிறேன். என் பகல்கள் ரொம்ப நீளமாயிடுச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாயிடுச்சு. அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு....!

அவங்க சாப்பிட்டு முடிக்காத மீதமுள்ள மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது. அவங்க handphone நம்பர் இருக்கு,! ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க, whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க...!

முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம். இப்ப நான் அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன். சமையலறைக்குத் தனியா போறேன், சமையல்ன்னு பேர்ல எதையோ பண்றேன், வாய்க்கு ருசியா சமைச்சு பகிரஅவங்க இல்லை. கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை...!

விழியோரம் நீர் தேங்க. அதான் மகளே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும் . அதிகமாக போற்றணும். கணவனின் வெற்றியோ தோல்வியோ, பெருமையோ அவமானமோ. லாபமோ, நட்டமோ, மனைவிக்கு அனைத்திலும் சம பங்கு உண்டு...!

எங்கு போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார். பஸ்ஸில் ஏறும் போது, விழாக்களில், விருந்துகளில், எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து....இல்லாவிட்டால் ஏதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார்.!!!

பிரயாணம் செய்யும் போது ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார். பல முறை அவசர பயணத்தின் போது பஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக பக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று வந்திருக்கிறார்....!

இன்னிக்குத் தினமும் என் கணவனின் கல்லறைக்குப் போறேன். எனக்காக எல்லாத்தையும் தயார் செய்த நீங்க முன்னாடி போயிட்டிங்களே, இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.!

சரி மகளே,! நான் வர்ரேன் என்று புறப்பட்ட முதியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் மனைவி். என்ன நினைத்தாளோ மண்டபத்திற்கு உள் சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள்.....!!!!!!

மனைவி எப்படி நடந்தாலும் பரவாயில்லை என கணவனும், கணவன் எப்படி பேசினாலும் பரவாயில்லை என மனைவியும் எண்ண வேண்டும்.! அப்படி ஒருத்தரோட உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பித்தால்...*வாழ்க்கை இனிக்கும்.. & ருசிக்கும்.!!! மனைவி அமைவதெல்லாம் மட்டுமல்ல, கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரமே. 

Friday, October 15, 2021

THE COLOUR OF LORD SRIKRISHNA

There are many reasons attributed to the dark colour of Lord Krishna. Actually, it is bluish-black.

1. Since Lord Krishna was the reincarnation of Lord Vishnu, he looks dark in colour.

2. Lord Krishna turned dark only after drinking the milk of demon Putana.

3. The river Yamuna that flowed adjacent to Vrindavan harbored a five-headed snake. While fighting the snake, the Lord was exposed to the snake’s venom, which made his ski turn bluish-black in colour.

4. However, It is believed that within Lord Krishna there lay a cosmic strength that is invisible to the mortal eyes. Hence his body appears bluish-black in colour.

3. The term Krishna means Black. Both Rama and Krishna are the Avatars of Vishnu. Then why the difference in skin tone? Vishnu appears as, in

Krita Yuga

White, with four arms, with hair, pulled up (Jatamakuta), Wearing Maravuri, clothes made of barks, with Akshamala Kamandalu and Dhanda.

Treta Yuga.

Reddish, Golden hair-locks, With Vedas as Four Arms.

Dwapara Yuga.

Blue-black, With Peethamabra, Sri Vatsa,, Chank(Conch),Chakra, Gatha.

Kali Yuga.

Black, Bare arms and Arrows.

Source.Bhagavatha Purana Chapter 30.

 

Wednesday, October 13, 2021

இது இல்லற ரகசியம்.

ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார்.  ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.  ‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன்.  முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்', என்றது.

‘பறவையே!  உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?  முயற்சிப்பதில் தவறில்லை.  ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்.   பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது  உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு', என்றார் சாது.

தலையசைத்து விட்டு பறந்தது பறவை.  பக்கத்தில் இருந்த சீடனிடம் பேசினார் சாது. ‘சீடனே!  முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்', என்றார் சாது.  

ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது. ‘ஐயா!  கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன்.   நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன்.  இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்', என்றது பறவை.

‘பறவையே!  இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல்.  பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார் சாது. பதினைந்து நாட்கள் ஓடிப்போனது.  மீண்டும் பறவைகள் திரும்ப வந்தன.

‘ஐயா!  எங்களால் கடலில்  நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது.   நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம்.    தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம்.  ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம்.  எங்களுக்கு உதவுங்கள்', என்றது பறவை.

சாது யோசித்தார்.  கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம் கொடுத்தார்.  ‘பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.  சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள்.  அது மிதக்கும்.  அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள்.  களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்', என்றார் சாது.

பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன.  இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன. ‘ஐயா!  உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம்.   குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்', என்றது பறவை.

‘பறவைகளே அருமை!  நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?' என்று கேட்டார் சாது. . .பறவை பேசியது. ‘ஐயா!  சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம்.  சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம்.  அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது.  பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது.  

ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் “குச்சியை நாங்கள் சுமக்கவில்லை.  குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”, என்ற உண்மை புரிந்தது', என்று சொல்லி விட்டு பறந்தது பறவை.

சாதுவைப் பார்த்தான் சீடன்.   சாது பேசினார். ‘சீடனே!  பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது.  துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது.  அதற்குக் காரணம் ‘துணை'.  ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை.   இலக்கை அடைய ‘குச்சி' என்ற கருவி அவசியமாகிறது.  

அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது.  ஆனால்,  அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது.   

பறவைகளுக்கு ‘குச்சியை'ப் போல மனிதர்களுக்கு ‘இல்லறம்' கருவியாகிறது.  ‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை.  ‘இல்லறம்' என்ற குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.  

குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், ‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'.   இதைப் போல, கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், உண்மையில் இல்லறமே அவர்களை வழி நடத்துகிறது.   

இது இல்லற ரகசியம். 

Sunday, October 10, 2021

A QUIZ FOR YOU !!!!

1. If poison expires, is it more poisonous, or is it no longer poisonous?

2. Which letter is silent in the word "Scent," the S or the C?

3. Do twins ever realize that one of them is unplanned?

4. Why is the letter W, in English, called double U? Shouldn't it be called double V?

5. Maybe oxygen is slowly killing you and It just takes 75-100 years to fully work.

6. Every time you clean something, you just make something else dirty.

7. The word "swims" upside-down is still "swims"

8. 100 years ago everyone owned a horse and only the rich had cars. Today everyone has cars and only the rich own horses.

9. If you replace "W" with "T" in "What, Where, and When", you get the answer to each of them.

Six great confusions are still unresolved.

1. At a movie theatre, which armrest is yours?

2. If people evolve from monkeys, why are monkeys still around?

3. Why is there a 'd' in the fridge, but not in the refrigerator?

4.  Who knew what time it was when the first clock was made?

And now a sixer.

Vagaries of English Language! Enjoy!!!

Wonder why the word funeral starts with FUN?

Why isn't a Fireman called a Waterman?

How come Lipstick doesn't do what it says?

If money doesn't grow on trees, how come Banks have Branches?

If a vegetarian eats vegetables, what does a humanitarian eat?

How do you get off a non-stop flight?

Why are goods sent by a ship called CARGO and those sent by truck SHIPMENT?

Why do we put cups in the dishwasher and the dishes in the Cupboard?

Why is it called 'Rush Hour' when traffic moves at its slowest then?

How come Noses run and Feet smell?

Why do they call it a TV 'set' when there is only one?

What are you vacating when you go on a vacation? 

Friday, October 8, 2021

சிரிப்பு வெடிகள் -- 15

1. மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?

ஐந்து கேள்விப்பா..

நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?..

முதல் மூணும், கடைசி இரண்டும்..

வெரிகுட் கீபிடப்...

*************************

2. டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்..இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு ???

*************************

3. என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க ?..

டாக்டர் தான் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்கச் சொன்னார் அதான்..

***********************

4. நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்...

அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் ...

***************************

5. டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி பாக்குறா..

”எந்த அளவுக்கு பாக்குறாங்க?”..

கரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குறா..

*********************

6. நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறானுங்க..

அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை பத்திரமா இருக்கும்..

****************************

7. உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு....

நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்..

************************

8. ஒரு காப்பி எவ்வளவு சார் ?..

ஐந்து ரூபாய்..

எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?...

டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !!!!

************************ 

Sunday, October 3, 2021

I AM A BLOGGER

During our first visit to the US in 2013, our daughter presented a Samsung laptop to my wife on her birthday. She installed U-tube and we enjoyed seeing movies during our stay there for six months. After our return to India, we could not make use of the laptop since we did not have wifi in our home.

Only when we visited our son in Hyderabad, we could make use of the laptop since he had wifi. During our subsequent visits, she got us an Ipad, a Samsung tablet, and two I-phones. In 2015, she opened a blog for me and persuaded me to write articles, kindling my inherent interest in writing. For, when I was a 10-year old boy in Vaigai Dam, I had the taste of writing by publishing a handwritten magazine KALANJIAM.

Since Jan 2016, I have posted about 660 articles and 2600 snippets in English and Tamil in my blog. It is mostly based on my knowledge, imagination, and life experiences. Sometimes it takes hours to get an idea and days to write. The readership of the blog so far has exceeded 80,000 including 47K India, 21K USA, 4K France, and 8K the rest. Daily it is about 50 on average.

My postings in my blog can be classified as follows:

1. My life incidents without naming the person or affecting anyone in any way.

2. Snippets and Random thoughts based on my imagination.

3. Lectures of great people viz Paramacharya.

4. If I come across an article which I consider good for society.

5. Kitchen tips gathered from my wife or elsewhere.

6. Jokes that I come across.

Thank you all.

 

Saturday, October 2, 2021

உன் கடமையைச் செய்

கண்ணா, நான் குழம்பியிருக்கின்றேன், சோர்வடைந்துவிட்டேன், எல்லாம் வீணான முயற்சி என்பது போலாகிவிட்டது. என்னால் இனி ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது. அவர்களே ஆண்டுகொள்ளட்டும். நான் இனி களத்தில் இருக்க விரும்பவில்லை

"அர்ஜூனா சூதாட்டத்தில் காய்களை அவர்கள் பக்கம் விழுமாறு செய்தவன் யார்? நீயா? இல்லை நான், இந்த யுத்தத்தை நடத்த திட்டமிட்டவன், நான்.

நடந்த காட்சிகள், நடக்க வேண்டிய காட்சிகளை நான் அறிவேன், உன்னால் அதை அறியவும் முடியாது, அறிந்து கொள்ளும் அறிவும் உனக்கு கொடுக்கப்படவில்லை, எல்லாம் அறிந்தவன் நான்.

இங்கு எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் உண்டு, அதை நீ அறியமாட்டாய். ஆனால் நான் அறிவேன். விதைப்பது உன் கடமை. விதையினை, நிலத்தை, நீரை உருவாக்கும் சக்தி உனக்கு கொடுக்கபட்டதா? இல்லை. அதெல்லாம் என் பொறுப்பு.

விதைப்பதை விதைத்துவிட்டு போ, விளைச்சலுக்கு, நானே பொறுப்பு. உன் கடமையினை நீ செய், விளைவுகளுக்கு நானே பொறுப்பு. நீ வெறும் கருவி, என் கைபாவை, நான் சொன்னதை மட்டும் செய். எந்த நேரத்தில் எதை எப்படி நடத்தி முடிக்க வேண்டும் என்பதை அறிந்தவன் நான். இது நான் நடத்தும் காட்சிகள்

உனக்கான கடமையினை மட்டும் நீ செய். அடுத்தவன் கர்மாவோ, கடமையோ பற்றி சிந்திக்கும் அவசியம் உனக்கு இல்லை. அதனால் உனக்கு குழப்பமே மிஞ்சும். அவன் வந்த காரியத்தை அவன் செய்யட்டும், நீ வந்த காரியத்தை மட்டும் நீ செய். எல்லோரையும் இயக்கும் நான், என் காரியத்தை நன்றாகவே செய்து கொண்டிருக்கின்றேன்

இங்கு எல்லாம் மாயை. மாயையின் உச்சம் காட்டும் மயக்கத்தில் மயங்கி கிடக்கின்றாய். என்னை உற்றுபார். என் விஸ்வரூபத்தை பார், இவர்களெல்லாம் யார் என பார். எதற்காக இங்கு குவிந்திருக்கின்றார்கள் என பார். எதற்காக அதிகாரம் அவர்களுக்கு கொடுக்கபட்டது என்பதை மட்டும் பார்.

உன் கடமையினை மட்டும் நீ செய். மயக்கத்தில் சிக்கி, இதில் இருந்து நழுவினால் இன்னொருவனை கொண்டு இந்த காட்சிகளை நடத்த எனக்கு தெரியும். ஆனால் உன் சுதர்மத்தை, கர்மத்தை தவறவிட்ட பாவம் உன்னை விடாது. உன் கர்மா கழியவும், உன் கடமை நிறைவேறவுமே இங்கு நீ அழைத்துவரபட்டிருக்கின்றாய். அந்த கடமையினை தெளிவாய் செய். மயக்கம் அறுத்து குழம்பாமல் பற்றறுத்து செய்.

இங்கு காண்பன எல்லாம் மறையும், மறைந்தன எல்லாம் திரும்பும். காலம் காலமாக நான் ஆடும் இந்த‌ ஆட்டம்  உனக்கு புரியாது, புரியாத விஷயத்தை யோசித்து ஏன் குழம்புகின்றாய். இங்கு எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு. அதன்படியே காட்சிகள் அமையும்

அக்கிரமம் ஆட ஒரு காலம் உண்டு. அடங்க ஒரு காலம் உண்டு. எல்லா அதர்மமும் ஆடித்தான் அடங்கும் என்பதை மனதில் கொள். எந்த அக்கிரமும் நெடுநாள் நிலைத்ததில்லை என்பதையும் நினைவில் கொள். கடும் வெயில் மழைக்கு அறிகுறி, மழை செழுமையின் வாசல், வெயில் இன்றி மழை இல்லை. அதர்மம் ஆடாமல் தர்மம் வரவாய்ப்பே இல்லை

இது என் நாடகம், என் இயக்கம். நீங்களெல்லாம் வெறும் பாத்திரங்கள். உன் பாத்திரத்தை நீ ஒழுங்காக செய். அதுதான் நான் கேட்பது. நீ இன்று காணும் எல்லாம் மாறும், எல்லாம் மாறும். 

என்னைச் சரணடை, என்னில் உன் பாரங்களை சுமத்து. என் காவலில் இருந்து உன் கடமையினைச் செய். எப்பொழுதும் உன்னோடு நானிருந்து காத்துவருவேன். கலங்காதே, எழு, மயக்கம் அறு, கடமையினைச் செய். அதை மட்டும் செய், அதற்காகவே நீ படைக்கபட்டிருக்கின்றாய்.