Tuesday, September 28, 2021

மற்றவர் மனசுல இடம் இருக்கா?

அக்கறையுடன் ஆதரவை நல்கி நமக்கு உதவி புரிந்தவர்கள் நம் நெஞ்சிருக்கும் வரை நம் நினைவில் இருப்பார்கள் -

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக் கூடாது. ரொம்ப மண்டையைப் போட்டு பிச்சுக்கக் கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. பரவாயில்ல, அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க….  தயாரா?.....

1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்..

2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…

3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க….

4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க…..

5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…

உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லேதானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ, அல்லது தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தவர்களோ பெரும்பாலும் நினைவில்  இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்களெல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல. அந்தந்த துறையில் உச்சத்தை தொட்டவர்கள், மிகப் பெரிய சாதனை யாளர்கள்.

ஆனால்……?

கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன. சாதனைகள் மறக்கப் பட்டுவிட்டன. விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்து போய் விடுகின்றன. இப்பொழுது இன்னொரு ஐந்து கேள்விகள் கேட்கிறேன்- பதில் உடனே கி்டைக்குதா என்று பாருங்கள்-

1) உங்கள் பள்ளிக் காலத்தில் மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்களின் பெயரை சொல்லுங்கள்.

2) உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களை சொல்லுங்கள்…

3) உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலர் பெயரை கூறுங்கள்…

4) உங்கள் வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், மிகுந்த சுவாரசியமாகவும் மாற்றிய சிலரை கூறுங்கள்….

5) நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ அவர்கள் பெயர்களை சொல்லுங்கள்…

இந்த கேள்விகளுக்கு சில மணித் துளிகளில் விடைகளை பட்டென்று எழுதி குவித்திருப்பீர்களே? இதிலிருந்து என்ன தெரிகிறது? உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் பணக்காரர்களோ? புகழ் பெற்றவர்களோ? அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ? அல்ல. இவர்கள் உங்கள் மீது அக்கறை செலுத்தியவர்கள், செலுத்துபவர்கள் மட்டுமே. மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை, ஏன்?

பணம் பட்டம் பதவி இவற்றின் மூலம் பெறும் புகழோ, வெற்றியோ நிலையானதல்ல. ஆனால், பிறருக்கு உதவி செய்து, பிறர் மீது அக்கறை கொண்டு ஒருவர் பெறும் புகழே, பெருமையே, வெற்றியே நிலையானதாகும் -

உங்களுக்கு தெரிந்த சிலரிடம் இப்படி கேள்விகள் கேட்டு, அவர்களில் ஒருவராவது விடையில் உங்கள் பெயரையும் சொல்லுவார்கள் என்றால்… நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்றே அர்த்தம்.

எனவே,அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க வேண்டுமென்றால், எப்போதும் நல்லதே நினையுங்கள். எல்லோருக்கும் நல்லதையே சொல்லுங்கள். நல்லதையே செய்யுங்கள். 

கோவிலுக்கு போய் விழுந்து விழுந்து கும்பிட்டு கடவுள் மனசுல இடம் பிடிக்கிறது இருக்கட்டும். முதலில் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் மனசுல நமக்கு இடம் இருக்கான்னு பார்ப்போம்.

 

Sunday, September 26, 2021

JOKES IN ENGLISH 1 TO 10

1. Doctor: Which soap do you use?

Patient: K. P. Namboodiri's soap.

Doctor: Paste?

Patient: K. P. Namboodiri's paste

Doctor: Shampoo?

Patient: - K. P. Namboodiri's shampoo.

Doctor: Is K.P. Namboodiri an international brand?

Patient: No. K. P. Namboodiri is my Roommate!

********************

2. A bookseller conducting a market survey asked a woman – “Which book has helped you most in your life?”

The woman replied – “My husband’s Chequebook !!”

***********************

3. A prospective husband in a book store “Do you have a book called, ‘Husband – the Master of the House?

Sales Girl: “Sir, Fiction and Comics are on the 1st floor.

************************

4. Someone asked an old man : 

“Even after 70 years, you still call your wife "Darling, Honey, Love". What’s the secret?

Old man: I forgot her name and I’m scared to ask her.

*************************

5. A man in Hell asked the Devil: Can I make a call to my Wife?

After making the call,  he asked how much to pay.

Devil: Nothing. Hell to hell is Free.

****************************

6. Husband to wife, "Today is a fine day"

The next day he says: Today is a fine day. 

Again the next day, he says the same thing.

Finally, after a week, the wife can’t take it and asks her husband – since last one week, you are saying this “Today is a fine day. I am fed up. What’s the matter?

Husband: Last week when we had an argument, you said, “I will  leave you one fine day.” I was just trying to remind you.

************************

7. An argument between a British and an Indian.

British: we spoiled ur motherland for 200 yrs. hahaha.

Indian: We are spoiling your mother tongue daily. hahaha.

************************

8. Teacher - What is the full form of MATHS?

Student- Mentally Affected Teacher Harassing Student.

***********************

9. Student in computer exam.

Examiner- what is Microsoft excel?

Student - I think it is a new brand of Surf Excel to clean the computer...

*****************************

10. A man asked his friend,

"Why Narendra Modi goes walking in the evening, and not in the morning". The friend replied ''Brother,  Modi is PM, not AM'

************************

 

Saturday, September 25, 2021

RANDOM THOUGHTS 886 TO 900

886. Life can be lived within certain rules. It may also be lived in whatever way one likes. Which one do you prefer?

887. One who does not know the difference between salt and sugar is a saint. Who knows the difference is human, and who knows but does not reveal is the husband. Hahaha.

888. If you keep mango leaves at the entrance of the house, it is auspicious. If you keep neem leaves it is inauspicious. Great culture.

889. I don't prefer to travel by AC sleeper on the train. Common bed, no fresh air, fire accident, and high fare are the reasons.

890. Traitors never exhibit anger. So people who show anger are not traitors. So love them for the care shown to you.

891. While you try to overtake the fellow going ahead, please be careful about the fellow following you. He can overtake you anytime.

892. In marriage, the man searches for a woman with a good past and the woman searches for a man with a good future.

893. Be like a child in learning the nuances of life. If it falls, it does not feel ashamed. It cries and then gets up and walks ahead.

894. Most of the time our genuine anger gets subdued just because we have to face the person again which is unavoidable.

895. Consider others on par with you. Don't do anything to them what you don't want to be done to you.

896. If you feel sleepy during the daytime, that means the body is weak. If you don't get sleep during the night that means, the mind is weak.

897. Even the child tossed up for fun, knows that it is not going to be dropped. That much confidence in us.

898. Before going to bed, we set the alarm on the clock. It shows how much we are confident in waking up on the next day.

99. We see so many people suffering their life after getting married. Even then we are planning to marry.

900. Instead of telling that your age is 60, you can say your age is 20 and you have 40 years of experience. That is self-confidence.

 

Wednesday, September 22, 2021

செய்யக் கூடாதவை.

வெறுங்கையாகும் அளவிற்கு தர்மம் செய்யாதீர்கள்..!

முகம் சிவக்கும் அளவிற்கு கோபம் கொள்ளாதீர்கள்..!*

குறுக்கு வழிக்குப் போகுமளவிற்கு பொறாமையை வளர்க்காதீர்கள்!

மனம் வலிக்குமளவிற்கு வார்த்தையை விடாதீர்கள்!

அடிமையாகும் அளவிற்கு அன்பை செலுத்தாதீர்கள்!

சண்டை உண்டாகுமளவிற்கு விவாதத்தை தொடராதீர்கள்!

அமைதியை கெடுக்குமளவிற்கு ஆசையை சேர்க்காதீர்கள்!

பழிவாங்கும் அளவிற்குப் பகையை வளர்க்காதீர்கள்!

மனம் வெறுக்கும் அளவிற்கு செயல்கள் செய்யாதீர்கள்!

கண்ணீர் வடியுமளவிற்கு கவலைப்படாதீர்கள்!

நீங்கள் அடைவதெல்லாம் இறைவன் தந்த பரிசு.. நீங்கள் இழப்பதெல்லாம் மற்றவருக்கு தரும் வாய்ப்பு..!!*

நேரங்கள் நேர்மையானவை..!அதனால் தான் அவை யாருக்கும் காத்திருப்பதில்லை.!!

ஏழையின் வீட்டில் பசிதான் நோய்க்கு காரணம்..!பணக்காரன் வீட்டில் உணவுதான் நோய்க்கு காரணம்..!! 

 

Monday, September 20, 2021

மந்திர தந்திரம்.

ஒரு குறுநில மன்னரிடம், ஒரு பிராமண மந்திரி வேலை பார்த்தார்.அவர் மிக புத்திசாலி. அவரது மேதாவிலாசத்துக்கு அவர் தினமும் சொல்லும் காயத்ரீ மந்திரமே காரணம் என்பதை மன்னர் அறிந்தார். 

தனக்கும் காயத்ரீ மந்திரத்தை உபதேசம் செய்யவேண்டும் என்று மந்திரியை தினமும் மன்னர் நச்சரிக்கத் துவங்கினார்.ஆனால் மந்திரி மறுத்துவிட்டார். 

அந்த மன்னரிடம் வேறு ஒரு பிராமணர் சமையல்காரராக வேலை பார்த்துவந்தார். அவரை மன்னர் அழைத்தபோது,அவருக்கும் காயத்ரீ மந்திரம் தெரியும் என்பதை மன்னர் அறிந்தார். மிரட்டியும் லஞ்சம் கொடுத்தும், காயத்ரீ மந்திரத்தை அவரிடம் கற்றுத்தேர்ந்தார். 

ஒருநாள் அரசவையில் எல்லோருக்கும் முன்பாக மன்னர், தனக்கும் காயத்ரீ மந்திரம் தெரியும் என்று சொல்லவே, மந்திரி வியப்புடன் அதைச் சொல்லும்படி மன்னரிடம் வேண்டினார். மன்னர் கம்பீரமாக மந்திர உச்சாடனம் செய்தார். 

மந்திரியோ அது காயத்ரீ மந்திரம் இல்லை என்று சொல்லிவிட்டார். மன்னர் உடனே சமையல்காரனை அழைத்து காயத்ரீயை சொல்லச் சொன்னார். இதுதான் காயத்ரீ என்று மந்திரி சொன்னார்.

அதைத் தானே நானும் சொன்னேன் என்று மன்னர் சொல்ல,அது காயத்ரீ மந்திரம் இல்லை என்று மந்திரி மீண்டும் கூறினார்.மன்னருக்கு ஒரே ஆத்திரம். ஒருவேளை மந்திரிக்கு மனக்கோளாறு போல என்று எண்ணினார்.

மன்னரின் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்பது மந்திரிக்குப் புரிந்தது. திடீரென்று மந்திரி சேவகனைப் பார்த்து, “ஏ சேவகா! மன்னர் கன்னத்தில் பளார் என்று இரண்டு அரை கொடு” என்றார். எல்லோரும் திகைத்து நின்றனர். மீண்டும் மந்திரி அதேக் குரலில் அதே உத்திரவைச் சொன்னார்.

சேவகன் ஒன்றும் செய்யவில்லை. மந்திரிக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதென்று எண்ணியிருந்த மன்னர், கோபத்தோடு, "ஏ சேவகா! மந்திரி கன்னத்தில் பளார் என்று இரண்டு அரை கொடு” என்றார். சேவகன் ஒரு நொடி கூட தாமதிக்காமல், மந்திரியின் கன்னத்தில் இரண்டு அரை விட்டான் 

"மன்னரே! இதுதான் வித்தியாசம்.நானும் ஒரே கட்டளையைத் தான் இட்டேன். நீரும் அதே கட்டளையைத் தான் இட்டீர். நீர் சொன்னவுடன் என் கன்னத்தில் இரண்டு அரை கிடைத்தது. நான் சொன்னபோது ஒன்றும் நடக்கவில்லை. சொல்லக்கூடாதவர் சொன்னதால் எனக்கு தண்டனை கிடைத்தது.

"இதுபோலத்தான் சில மந்திரங்களும். சொல்லக்கூடாதவர், சொல்லத் தகுதி இல்லாதவர், சொன்னால் எதிரிடை விளைவுகளை உண்டாக்கும். ஒரு மந்திரம் என்பது சப்தங்களின் தொகுப்புதான் என்றாலும் தகுதி உடைய ஒருவருக்கு, சாஸ்திர விதிகளின் படி, ஒரு குரு சொல்லும்போதுதான் அது மந்திர ரூபம் பெறுகிறது. 

இதனால்தான் புத்தகத்தில் இருந்து கற்கும் மந்திரங்கள் பலன் தருவதில்லை. இதை அறியாததால் மந்திரங்களைக் குறைத்து மதிப்பிடுகின்றனர்.தகுதி உடைய ஒருவர்கூட, சாஸ்திர விதிகளின்படி மந்திரங்களைச் சொன்னால்தான் பலன் கிடைக்கும். 

அப்படி இருக்கையில்,தகுதி இல்லாதோர் விதிமுறைகளைப் பின்பற்றாதவாறு மந்திரங்களைச் சொன்னால், நல்ல விளைவுகளைவிட எதிரிடை விளைவுகளைத்தான் எதிர்பார்க்கலாம். மந்திர விஷயங்களில் சாஸ்திரங்கள் சொல்லுவதைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்

 

Tuesday, September 14, 2021

MUSIC AND ME

MUSIC AND ME

Music is divine. It gives solace to the troubled mind. There are so many health benefits of music. It's heart-healthy. Research has shown that blood flows more easily when music is played, elevates mood, reduces stress, relieves symptoms of depression, stimulates memories, eases pain, helps people eat less, helps people in works endurance, makes the baby sleep, and so on.

Next to reading books and writing articles, I love listening to music. Lilting is the correct word to be used. It is characterized by a rhythmical swing, a spirited and cheerful song or tune. It gives a swing, flow, or cadence.

I am a music addict. My wife, daughter, and granddaughter are good singers. Some of my relatives are good singers. I love listening to good music. If I get a tune early in the morning, I go on humming it for the whole day. It may belong to any genre, classical or movie songs in any language. I spend an hour a day listening to good music.

My favorite singers are GNB, MLV, Sudha Ragunathan in Carnatic music, and Mohd. Rafi, and Kishore Kumar in movie songs. I like other singers also who have a good voice. GNB, MS, DKP, Semmangudi, Chembai, and Maharajapuram developed their own style of singing. But I like the fast-paced style of GNB.

Elderly people say that they like only old movie songs and not new songs. The younger generation says that they like only the new songs and not the old ones. Both of them are wrong and they should realize that both types are good and they should try to enjoy both instead of disliking the other.

Some people say that they are able to enjoy only Carnatic music and movie songs in their mother tongue. That is not the correct view. If we know the lyrics, we can appreciate the meaning. But music is different. Most of the Carnatic songs are in Telugu and we enjoy them without even knowing the meaning. If we are particular about the meaning, we will only be missing the abundant soulful music available around our nation.

I am 77 and I go with the trend. I like all types of songs. To enjoy a song, I give importance to three aspects.

1. The voice of the singer must be unique and beautiful.

2. The tune must be different and melodious.

3. The lyrics must be clear and audible.

The present-day movie songs are totally based on the western type. Unlike the old songs, the tune is almost the same but only the voice modulation is different. Moreover, the stereo recording makes it even worse. So, I pick up only those songs which are different and melodious.

I have the Spotify app installed on my iPhone by my daughter. It is the most popular and cheapest music app in the world with about 894K membership and the premium membership is about Rs.200 Per month which can be shared by 6 people. I am included along with the four members of my daughter’s family.

I have downloaded more than 450 songs that run for nearly 30 hours. I have 21 playlists viz. Classical, SD Burman, Mohd. Rafi, Kishore Kumar, AM Raja, TMS, PB Srinivas, Chandrababu, Sid Sriram, Armaan Malik, Arjit Singh, Hindi, Telugu, Kannada, Malayalam, Punjabi, Tamil old, Tamil, Tamil new, English, and My pick.

Whenever I listen to a melodious song or see a classical movie or write a good article, I do not know why instantly I get an adrenaline rush to share it with the person whom I love the most. But unfortunately, all are busy and no one is interested.

Sunday, September 12, 2021

PRICING OF PETROLEUM PRODUCTS

What determines petrol and diesel prices and why does it change every day?

First, the cost of crude oil, second the taxes the Centre and states impose. There's also dealer's commission and VAT that gets added before it's sold to the consumer. Petrol and diesel are expensive, primarily, because of the central and state taxes, otherwise, they would be much cheaper. Taxes on fuels is a huge revenue generator for the government, and it's a tough decision for the governments - Centre and states - to cut it to reduce fuel prices.

As for the everyday change in fuel prices, it's because of a dynamic pricing system that reflects fluctuations in the global oil market. Earlier petrol prices were revised every fortnight, meaning that unlike now, the prices changed on the 1st and 16th of every month. However, on June 16, 2017, a new scheme was implemented under which prices were to be revised every morning at 6 am. This shift from administrative price mechanism (APM) to dynamic pricing was done to ensure that the benefit of the smallest change in international oil prices can be put into effect by dealers. Moreover, the move was made keeping in mind that it would prevent huge leaps in prices at the end of the fortnight.

One of the crucial differences between APM and dynamic pricing is price decontrol. Before dynamic pricing was implemented, private companies protested government-controlled pricing saying that it reduced their profitability. It also impacted competition, leaving consumers with little choice. On the other hand, market pricing not only allowed competition, it was also supposed to benefit the consumers and bring parity with international product prices. It was also believed that dynamic pricing would keep speculative market forces in check. When prices changed fortnightly, it led to speculation about the fluctuation of prices leading consumers to behave accordingly. 

Since India imports 84% of petroleum products, any change in the global crude oil prices significantly impacts the prices in the country. If the global crude prices are high, then India too procures it at a high rate. For instance, Indian Oil Corporation would then pay refineries an amount on each litre of fuel, selling it after that to dealers at a higher rate than it paid refineries. Additionally, excise duty, dealer commission and VAT are added to decide on the retail price.

Taxes

One of the most important factors is the tax levied by the state and central governments. As of now, fuel has been kept outside the purview of Goods and Services Tax (GST). It has been a common practice in the past to cut duties when global crude prices increased. However, since 2014, the government has been found increasing excise duty even as global prices fell, leading to an increase in the central government's revenue.

Currently, petrol is taxed at a little more than 100 per cent, while it amounts to 66.48 per cent on diesel. Interestingly, while the retail prices have gone up, the price at which the fuel is sold to petrol pump dealers has come down drastically since 2013. The government's effective tax rate on petrol in 2013 was at around 43 per cent and presently it is a little over 100 per cent.

According to the Ministry of Finance's revenue collection estimates, the Centre expects to collect more than Rs 2.579 lakh crore by levying taxes on petroleum products by the end of this fiscal. This is a massive jump from the gross revenue collection of around Rs 88,600 crore in 2013/14. In the last fiscal the collection was Rs 2.016 lakh crore.

Another factor affecting the prices is the value of the dollar. International prices for diesel, petrol and LPG are priced in dollars. It essentially means that the strength of the local currency against the US dollar vastly impacts the prices. Rupee, currently, stands at Rs 71.56 against the dollar dictating the rise in fuel prices.

First, the cost of crude oil, second the taxes the Centre and states impose. There's also dealer's commission and VAT that gets added before it's sold to the consumer. Currently, petrol is taxed at a little more than 100 per cent, while it amounts to 66.48 per cent on diesel. Another factor affecting the prices is the value of the dollar as international prices for diesel, petrol and LPG are priced in dollars.

 

Wednesday, September 8, 2021

சின்ன சின்ன சமையல் டிப்ஸ் 181 TO 195

181. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.

182. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.

183. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.

184. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.

185. *கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

186. *இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

187. *தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொருப்பாக வரும்.

188. *கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.

189. *வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

190. *கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

191. *வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

192. *சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது

193. *பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

194. *கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது

195. *காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.

 

Friday, September 3, 2021

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1726 TO 1740

1726. எதுவும் நமக்கு சொந்தமில்லை. நாம் இறந்த பின் எந்த பொருளையும் எடுத்து செல்ல முடியாது. ஒரு பொருளை தவிர. அதுதான் நாம் செய்த தான தர்மம்.

1727. வாழ்க்கையில் நம்பிக்கை மிகவும் முக்கியம். தன்னம்பிக்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

1728. பகவான் கிருஷ்ணன்: குளிர்ச்சி நீரின் இயல்பு. வெப்பம் நெருப்பின் இயல்பு. உலகில் எல்லா உயிர்கள் மீது அதிக கருணை காட்டுவது என் இயல்பு.

1729. சிலர் எதிர்மறையாகப் பேசி தன்னை அறிவாளியாகக் காட்டுகிறார்கள். சிலர் நேர்மையாகப் பேசி அடக்கமாக இருக்கிறார்கள். இறைவனின் சிருஷ்டிகள்.

1730. நமக்கு இருப்பதோ ஒரு வயிறு. ஆனால் அந்த ஒரு வயிறுக்கு உணவு அளிக்க, உழைப்பதற்கு இறைவன் கொடுத்திருப்பதோ இரண்டு கைகள். பிறகு என்ன கவலை?

1731. நல்லதோ கெட்டதோ, ஒரு விஷயத்தை அறிந்த பிறகு அது எவ்வளவு தூரம் உண்மை என்று நன்கு விசாரித்த பிறகே வேறு ஒருவரிடம் சொல்ல வேண்டும்.

1732. பணமில்லாத ஒருவனை யாரும் அனாதை என்று சொல்வதில்லை. ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் அவன் ஒரு அனாதை தான்.

1733. உங்களை யாரும் புறக்கணித்தால் தயவுசெய்து அவரைத் தவறாக நினைக்காதீர்கள். ஏதோ ஒரு சூழ்நிலை. அது அவருக்கு மட்டும் தான் தெரியும்.

1734. நான்  வயதானவன் . பழமையான எண்ணங்களைக் கொண்டவன். என்னுடைய குழந்தைகளுடன் பழகிப் பழகி தற்கால எண்ணங்களை மிக நன்றாகப் புரிந்து கொண்டவன்.

1735. ஒரு வயதில் விரும்பியதை பத்து வயதில் விரும்புவதில்லை. அறிவு வளர்ச்சி ஒரு பயணம். நடுவில் நின்று விட்டால் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.

1736. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நன்கு திட்டம் போட்டு ஒரு பத்து நாள்,சுற்றுலா இடமோ, உறவினர் வீடோ சென்றால் சந்தோஷம், மன அமைதி உண்டாகும்.

1737. நம் நாட்டில் கலைச் செறிவு மிகுந்த கோவில்களும் அழகான இடங்களும் லக்ஷக் கணக்கில் இருக்கின்றன.ஆனால் நாம் எப்பொழுது பார்க்கப் போகிறோம்?

1738. ஏழை தன்னிடம் உள்ள கொஞ்சம் பணத்தை பிறருக்கு உதவக் கொடுக்கும் பொழுது சிறிதும் யோசிப்பதில்லை. ஆனால் பணக்காரன் அதிகம் யோசிக்கிறான்.

1739. நமது அரசாங்கம் இருப்பவர்களிடம் வாங்கி இல்லாதவர்களுக்குக் கொடுக்கிறது. "ஏழைகளுக்குப்" பாதகமாக எதுவும் செய்தால் தட்டிக் கேட்கலாம்.

1740. படித்தவன் படிக்காதவனைப் பார்த்து இரக்கம் கொள்ள வேண்டும். அவனுக்கு தகுந்த அறிவுரை செய்தால் நாடும், வீடும் மக்களும் முன்னேறுவார்கள்.