Tuesday, March 16, 2021

பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… எதுக்குத்தான் இந்த கஷ்டம்  என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.  

பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். பசுவின் வயிற்றில் பத்திரமாய் நான் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். 

அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். 

பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” என்று என்னை நானே நொந்து கொண்டேன். பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 

நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 

அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.

அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்? அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள். உருக்கிய நெயை ஒரு ஜாடியில் ஊற்றி வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், ஜன்ன லுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன். 

ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் இருபது.ரூபா” என்றாள். உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் இருநூறு ரூபா விலை சொல்றான்” என்றாள்.

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். 

பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் இருபது ரூபாதான், ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு இருநூறு  ரூபாயாகக் கூடிவிட்டதே! இதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய். 

இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன? நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்..!!! 

Sunday, March 14, 2021

LORD RAMA AND A FROG

One day, in the forest, Lord Rama was standing with his bow rested on the ground and talking to his brother Lord Lakshmana. After some time, Lakshmana noticed that Rama’s bow was rested on a frog and it was struggling to escape. 

When Lakshmana pointed this to Rama, he took the frog in his hands and affectionately asked, “Why didn’t you speak up and tell me that you were in pain?”. Frog, a self-realized soul, replied “O, Lord, when others hurt me, I chant your name “Rama Rama” – but here it is you giving me the pain – who else can I call? So I accepted this pain as a blessing.”. What a profound wisdom!

In the same way, Bhismar was a great Mahan. If he had wished, he could have made the pain from the arrows go away with his powers. Similarly, Sri Appaya Dikshithar suffered from severe pain. Every day, when He did Shiva puja, He transferred the pain to a Dharbai and retrieved it back after the puja was over.  We have heard many incidents similar to this.

All these Mahans never gave importance to their physical discomforts and hence the pain did not even affect them in any way. They endured the pain as though it is Iswara Prasadam. 

It isn’t a story. It is a reminder that both Suha/Dhukka are related to our mind and body and not to our soul – so let us not get depressed when we face a tough situation in life– it is all His wish.

Hare Rama Hare Rama Rama Rama Hare HareHare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare. 

Wednesday, March 10, 2021

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1606 TO 1620

1606. பக்தியும், உண்மையும், சத்தியத்தின் நேர்மையும், குறையாத இறை நம்பிக்கையும், இரக்க குணமும் உள்ள ஒருவனை இறைசக்தி ஒரு போதும் கைவிடாது.

1607. பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்த பின் தேர்வு வைக்கப்படுகிறது. ஆனால் வாழ்க்கையில் தேர்வு வைத்தபின் பாடம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

1608. கஷ்டத்தில் சந்தர்ப்பத்தைப் பார்க்கிறவன் வெற்றி அடைகிறான். சந்தர்ப்பத்தில் கஷ்டத்தைப் பார்க்கிறவன் தோல்வி அடைகிறான்.  அது மனோபாவம்.

1609. சிக்கனமாக இருப்பது என்பது ஒருவர் எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறார் என்பது அல்ல. எவ்வளவு உபயோகமாக செலவிடுகிறார் என்பதைப் பொறுத்தது

1610. தாய் தந்தையை சந்தோஷப் படுத்தும் நேரம், கடமையில் வழுவாத நேரம், அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம் பிரம்மமுகூர்த்தம்.

1611. ஒருவனுக்கு எது தகுதியோ அது முயற்சியால் அவனை வந்து சேரும். அவன் எதை ஆசைப் படுகிறானோ, என்ன முயற்சி செய்தாலும் அது அவனை வந்து சேராது.

1612. யூதிஷ்டிரன்:தினம் பலர் முதுமையாலும் இறப்பாலும் படும் கஷ்டத்தை பார்த்தும், தான் மட்டும் மாறாமல் இருப்போம் என்று நினைப்பது ஆச்சரியம்.

1613. யூதிஷ்டிரன் கூறியது : பிறப்பினாலோ படிப்பினலோ ஒருவன் பிராமணன் ஆக மாட்டான். நல்ல குணம், நல்ல நடத்தையாலேயே  ஒருவன் பிராமணன் ஆகிறான்.

1614. நாம் வெறும் கையோடு வந்தோம். வெறும்  கையோடு போகப் போகிறோம். ஒருவரை ஏமாற்றி மற்றோருவர் நிம்மதியாய் வாழ்ந்து சிறந்தது என்பது கிடையாது.

1615. எல்லோரிடத்தும், எப்பொழுதும் மகிழ்ச்சி தரும் இனிமையான சொற்களைப் பேசுபவர்களைத் தேடி எல்லோரும் வருவார்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

1616. இறைவன் கொடுத்த தண்ணீரை வீண் ஆக்கினால், பணம் சேராது என்பது முதுமொழி. தண்ணீரை வீணாக்காதீர்கள். அது நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு.

1617. குத்தக் குத்தக் குனிவார்கள், குனியக் குனியக் குத்துவார்கள் என்பது முதுமொழி. நான் குனிவதும் இல்லை, குத்துவதும் இல்லை. இது என் வழி.

1618. என்னங்க, நல்லவர்களைக் காக்கவும், கெட்டவர்களை அழிக்கவும்,  இறைவன் அவ்வப்பொழுது இந்த பூமியில்  அவதரிப்பராமே. ஏன் இன்னும் காணோம்?

1619. தோப்புக்கரணம் ஆண்களின் பிறப்புரிமை. பலர் மனைவிக்கு மறைவாக தினம் போடுவது. எண்ணிக்கைதான் 3,12,108 என்று மாறுபடும். நான் 12, நீங்கள்?

1620. அரசியல், மதம், ஜாதி, சினிமா பற்றி எழுதுவது, பேசுவது எல்லாம் பலன் இல்லாத செயல் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். 

Tuesday, March 2, 2021

நானும் எனது நெருங்கிய நண்பனும். ME AND MY DEAR FRIEND.

1. நான் இளையவன். அவர் மூத்தவர். 

1. I am younger but he is an elder.

2. நான் ஐயர் அவர் முதலியார்.

2. I am a brahmin [Iyer] but he is non-brahmin [Mudaliar].

3. நான் நல்ல நிறம். அவர் கோதுமை நிறம்.

3. I am fair but he is wheat complexioned.

4. நான் சைவம் அவர் அசைவம்.

4. I am a vegetarian but he is non-vegetarian.

5. நான் பட்டதாரி. அவர் எஸ்எஸ்எல்ஸி.

5. I am a graduate but he is a matriculate.

6. எனக்கு இறை நம்பிக்கை உண்டு.  அவருக்குக் கிடையாது.

6. I am a theist but he is an atheist.

7. எனக்கு இனிப்பு பிடிக்காது.  அவர் இனிப்பு பைத்தியம்.

7. I do not relish sweets but he is mad after it.

8. நான் சிக்கனம்.  அவர் செலவாளி.

8. I am a spendthrift but he is extravagant.

9. எனக்கு இரண்டு குழந்தைகள். அவருக்கு மூன்று.

9. I have two children but he has three.

10. எனக்கு பெண் குழந்தை உண்டு.  அவருக்கு கிடையாது.

10. I have a daughter but he does not have a daughter.

11. எனக்கு பெற்றோர் இருந்தனர். அவருக்கு இறந்துவிட்டார்கள்.

11. My parents were alive but his parents were no more.

12. எனக்கு சம்பளம் ரூ 1000. அவருக்கு ரூ 1500.

12. My salary was Rs.1,000 but his salary was Rs.1,500.

13. அவர் சிவாஜி கணேசன் ரசிகர். எனக்கு குறிப்பாக யாரையும் பிடிக்காது.

13. He was an ardent fan of Shri Sivaji Ganesan but I did not like any actor in particular.

14. அவர் கலைஞர் கருணாநிதியின் பக்தன். நான் பரமாச்சாரியரின் பக்தன். 

14. I am a follower of Paramachariya but he is a follower of Shri.M.Karunanidhi.

15. அவர் அரசியல் பேசுவார். நான் பேச மாட்டேன்.

15. He indulged in politics but I did not.

16. அவர் அரசியல் மீட்டிங் போவார். நான் போக மாட்டேன்.

16. He used to attend political meetings but I did not.

17. நான் காமகோடி படிப்பேன் அவர் முரசொலி படிப்பார்.

17. I used to read Kamakoti but he read Murasoli.

18. நான் கடன் வாங்கமட்டேன். அவர் கடன் வாங்குவார்.

18. I do not believe in taking a hand loan but he used to take.

19. அவருக்கு பிராமணர்களை பிடிக்காது. எனக்கு எல்லோரையும் பிடிக்கும்.

19. He did not like brahmins but I liked everyone.

20. அவர் டீ  கடையில் டீ குடிப்பார்.  நான் குடிக்க மாட்டேன்.

20. He used to drink tea in a tea stall but I did not like it.

21. அவருக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி உண்டு. எனக்குக் கிடையாது.

21. He had blood pressure and diabetes but I did not have it.

22. நான் உயிரோடு இருக்கிறேன். அவர் இறந்து விட்டார்.

22. I am still alive but he is no more.

நாங்கள் 1967 இல் இருந்து 1997 வரை முப்பது வருடங்கள் இணை பிரியாத தோழர்கள். இருவரும் சேர்ந்து பஸ் அல்லது சைக்கிளில் வருவோம். தினம் சந்திப்போம். பல விஷயங்களைப் பற்றி பேசுவோம். ஒரு நாள் கூட சண்டை போட்டது கிடையாது. ஒருவர் நம்பிக்கையில் ஒருவர் தலையிட்டது கிடையாது. ஒருவரை ஒருவர் மாற்ற முயற்சி செய்தது கிடையாது. அவரது இளைய மகனும் எனது மகளும் பொறியியல் கல்லூரியில் ஒரே வகுப்பு. இப்போது அவரை நினைத்தாலும் என் கண்கள் கலங்குகின்றன.

We were close friends for 30 years from 1967 to 1997. We used to travel together either by bus or cycle. We met daily. We used to discuss various matters. We never had any misunderstanding. We never interfered in other's beliefs. We never tried to influence the other. His son and my daughter studied in the same class in Engineering. Even now, I get tears in my eyes when I think about him.