Friday, May 29, 2020

இந்திய, அமெரிக்கக் கலாசாரங்கள்.

1. அமெரிக்காவில் குழந்தைகளை வளர்ப்பதற்குத் தான் உரிமை. குழந்தைகளை கண்டிப்பதற்கு, தண்டிப்பதற்கு உரிமை இல்லை. இந்தியாவில் உரிமை உண்டு. அதனால் சுயமாக சிந்திக்கும் எண்ணம் வளருவதில்லை.

2. அமெரிக்காவில் 18 வயது ஆகிய ஆண் பெண்களுக்கு தனி மனித சுதந்திரம் முழுமையாக உண்டு. இந்தியாவில் முழுமையாகக் கிடையாது.

3. அமெரிக்காவில் 18 வயது ஆகிய ஆணும் பெண்ணும் பழகுவது, காதலிப்பது, உடல் உறவு கொள்வது, எல்லாவற்றிலும் சுதந்திரம் உண்டு. இந்தியாவில் துளியும் கிடையாது. கட்டுப்பாடுக  ள் அதிகம். தண்டனையும் உண்டு.

4. அமெரிக்காவில் எல்லா ஆண்களும், பெண்களும் வயது வித்யாசம் இன்றி கவர்ச்சியாக உடை உடுத்தலாம். அதனால் அங்கு கவர்ச்சி தெரிவது இல்லை. இந்தியாவில் இளம் பெண்கள் மட்டும் கவர்ச்சியாக உடை அணியும் போது கவர்ச்சி தெரிகிறது. மனம் தடுமாறுகிறது. ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

5. அமெரிக்காவில் உடலின் தூய்மை [கற்பு ]புனிதமாகக் கருதப்படவில்லை. இந்தியாவில் உடல் தூய்மை புனிதமாகக் கருதப் படுகிறது. அதனால் அதைக் காப்பாற்ற பெண்கள் மிகவும் போராட வேண்டி இருக்கிறது.

6. அமெரிக்காவில் கற்பழிப்பு போன்ற குற்றங்கள் புகார் செய்யப் படுகிறது. இந்தியாவில் வேறு பல காரணங்களால் மறைக்கப் படுகிறது.

7. அமெரிக்காவில் குற்றம் சாட்டுபவர் குற்றத்தை நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும். இதனால் ஏழைகள் பாதிக்கப் படுகிறார்கள். பணக்காரர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

8. அமெரிக்காவில் ஒரு மதம், ஒரு புனித நூல். இந்தியாவில் பல மதங்கள், பல புனித நூல்கள். அதனால் கருத்து வேறுபாடுகள் இந்தியாவில் அதிகம்.

9. அமெரிக்காவில் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கிடையாது. இந்தியாவில் குடும்பம் மிகவும் முக்கியம். பாட்டி, தாத்தா முதற்கொண்டு எதிலும் தலையிடுவார்கள்.

10. அமெரிக்காவில் கணவன் மனைவி இதையே கருத்து வேறுபாடு இருந்தால் உடனே விலகலாம். விவாகரத்து உடனே கிடைக்கும். இந்தியாவில் விலக முடியாது. விவாகரத்து உடனே கிடைக்காது.

11. அமெரிக்காவில் கலாசாரத்தை புனிதமாகக் கருதவில்லை. அதைப்பற்றி யாரும் பேசுவது இல்லை. இந்தியாவில் கலாசாரம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. அதனால் கருத்து வேறுபாடு அதிகம் உண்டாகிறது.

12. அமெரிக்காவில், சரியோ தவறோ எல்லோரும் ஒரே கலாசாரத்தைப் பின்பற்றுகிறார்கள். இந்தியாவில் தலைக்கு ஒரு கலாசாரத்தைப் பின்பற்றுகிறார்கள். அதனால் வன்முறை அதிகம் காணப்படுகிறது.

13. அமெரிக்காவில் சினிமா கலாசாரத்தை பாதிப்பது இல்லை. இந்தியாவில் சினிமா நமது கலாசாரத்தை மிகவும் பாதிக்கிறது. அதை எதிர்த்து யாரும் போராடுவது இல்லை.

14. அமெரிக்காவில் பிறர் விஷயங்களில் யாரும் தலையிடுவது இல்லை. இந்தியாவில் பிறர் விஷயங்களில் தலையிடுவதே முக்கியமான வேலை.

15. நான் இந்தியன். இந்தியக் கலாசாரத்தைப் பெரிதாக மதிப்பவன். ஆனால் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையில் வேறுபடும் போது பிரச்னை உண்டாகிறது என்பது என் தாழ்மையான எண்ணம். இந்தியாவில் ஏதாவது ஒரு கலாசாரத்தை எல்லோரும் பின்பற்றினால் நல்லது என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது நடக்கப் போவதில்லை.
ஏதோ ஒரு நல்ல எண்ணத்தில் இதை எழுதினேன். புரிந்தால் சரி. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

No comments :

Post a Comment