Friday, May 29, 2020

SAFETY MEASURES FOR CORONA VIRUS

The Center for Disease Control in the USA has issued a notification on the emerging scientific evidence on coronavirus transmission.

1. VERY LOW RISK of transmission from surfaces.

2. VERY LOW RISK from outdoor activities.

3. VERY HIGH RISK from gathering enclosed spaces like offices, cinema halls, religious places, gyms, and theatres.

4. These findings that have been emerging for a while, need to be applied by people to manage the situation in the best possible manner. Time to reduce panic about surface transmission, and not be too eager to go back to the office.

Q. Who is expected to catch coronavirus? 
Q. What does it take to infect? 

TO SUCCESSFULLY INFECT A PERSON, THE VIRUS NEEDS A DOZE OF - 1000 VIRAL PARTICLES [VP]

The typical environmental spread of activities

>Breath 20 vp/minute

>Speaking 200 vp/minute

>Cough 200 million vp enough of these will remain in the air for hours in a poorly ventilated environment.

FORMULA: SUCCESSFUL INFECTION-[exposure to virus x time.

SCENARIOS:

1. Being in the vicinity of someone [with 6 feet distancing]- low risk if limited to less than 45 minutes.

2. Talking to someone face to face [with mask]-low risk if limited to less than 4 minutes.

3. Someone passing by like walking, jogging, cycling-low risk.

4. Well ventilated spaces with distancing-low risk [limit duration]

5. Grocery shopping- medium risk.[can reduce to low by limiting time and by following hygiene.

6. Indoor spaces-HIGH RISK.

7. Public bathrooms/common areas: HIGH FOMITE/SURFACE TRANSFER RISK.

8. Restaurants: HIGH RISK [can be reduced to medium risk by surface touch awareness]

9. Workplaces, schools [even with social distancing]- VERY HIGH RISK including high fomite transfer risk.

10. Parties/weddings: VERY HIGH RISK.

11. Business networking/conferences: VERY HIGH RISK.

12. Arenas/concerts/cinemas: VERY HIGH RISK.

The bottom line factors you can use to calculate your risks are:

> indoors vs outdoors
> narrow spaces vs large ventilated spaces.
> high people density vs low people density.
> longer exposure vs brief exposure.

the risks will be higher for former scenarios.



இந்திய, அமெரிக்கக் கலாசாரங்கள்.

1. அமெரிக்காவில் குழந்தைகளை வளர்ப்பதற்குத் தான் உரிமை. குழந்தைகளை கண்டிப்பதற்கு, தண்டிப்பதற்கு உரிமை இல்லை. இந்தியாவில் உரிமை உண்டு. அதனால் சுயமாக சிந்திக்கும் எண்ணம் வளருவதில்லை.

2. அமெரிக்காவில் 18 வயது ஆகிய ஆண் பெண்களுக்கு தனி மனித சுதந்திரம் முழுமையாக உண்டு. இந்தியாவில் முழுமையாகக் கிடையாது.

3. அமெரிக்காவில் 18 வயது ஆகிய ஆணும் பெண்ணும் பழகுவது, காதலிப்பது, உடல் உறவு கொள்வது, எல்லாவற்றிலும் சுதந்திரம் உண்டு. இந்தியாவில் துளியும் கிடையாது. கட்டுப்பாடுக  ள் அதிகம். தண்டனையும் உண்டு.

4. அமெரிக்காவில் எல்லா ஆண்களும், பெண்களும் வயது வித்யாசம் இன்றி கவர்ச்சியாக உடை உடுத்தலாம். அதனால் அங்கு கவர்ச்சி தெரிவது இல்லை. இந்தியாவில் இளம் பெண்கள் மட்டும் கவர்ச்சியாக உடை அணியும் போது கவர்ச்சி தெரிகிறது. மனம் தடுமாறுகிறது. ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

5. அமெரிக்காவில் உடலின் தூய்மை [கற்பு ]புனிதமாகக் கருதப்படவில்லை. இந்தியாவில் உடல் தூய்மை புனிதமாகக் கருதப் படுகிறது. அதனால் அதைக் காப்பாற்ற பெண்கள் மிகவும் போராட வேண்டி இருக்கிறது.

6. அமெரிக்காவில் கற்பழிப்பு போன்ற குற்றங்கள் புகார் செய்யப் படுகிறது. இந்தியாவில் வேறு பல காரணங்களால் மறைக்கப் படுகிறது.

7. அமெரிக்காவில் குற்றம் சாட்டுபவர் குற்றத்தை நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும். இதனால் ஏழைகள் பாதிக்கப் படுகிறார்கள். பணக்காரர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

8. அமெரிக்காவில் ஒரு மதம், ஒரு புனித நூல். இந்தியாவில் பல மதங்கள், பல புனித நூல்கள். அதனால் கருத்து வேறுபாடுகள் இந்தியாவில் அதிகம்.

9. அமெரிக்காவில் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கிடையாது. இந்தியாவில் குடும்பம் மிகவும் முக்கியம். பாட்டி, தாத்தா முதற்கொண்டு எதிலும் தலையிடுவார்கள்.

10. அமெரிக்காவில் கணவன் மனைவி இதையே கருத்து வேறுபாடு இருந்தால் உடனே விலகலாம். விவாகரத்து உடனே கிடைக்கும். இந்தியாவில் விலக முடியாது. விவாகரத்து உடனே கிடைக்காது.

11. அமெரிக்காவில் கலாசாரத்தை புனிதமாகக் கருதவில்லை. அதைப்பற்றி யாரும் பேசுவது இல்லை. இந்தியாவில் கலாசாரம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. அதனால் கருத்து வேறுபாடு அதிகம் உண்டாகிறது.

12. அமெரிக்காவில், சரியோ தவறோ எல்லோரும் ஒரே கலாசாரத்தைப் பின்பற்றுகிறார்கள். இந்தியாவில் தலைக்கு ஒரு கலாசாரத்தைப் பின்பற்றுகிறார்கள். அதனால் வன்முறை அதிகம் காணப்படுகிறது.

13. அமெரிக்காவில் சினிமா கலாசாரத்தை பாதிப்பது இல்லை. இந்தியாவில் சினிமா நமது கலாசாரத்தை மிகவும் பாதிக்கிறது. அதை எதிர்த்து யாரும் போராடுவது இல்லை.

14. அமெரிக்காவில் பிறர் விஷயங்களில் யாரும் தலையிடுவது இல்லை. இந்தியாவில் பிறர் விஷயங்களில் தலையிடுவதே முக்கியமான வேலை.

15. நான் இந்தியன். இந்தியக் கலாசாரத்தைப் பெரிதாக மதிப்பவன். ஆனால் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையில் வேறுபடும் போது பிரச்னை உண்டாகிறது என்பது என் தாழ்மையான எண்ணம். இந்தியாவில் ஏதாவது ஒரு கலாசாரத்தை எல்லோரும் பின்பற்றினால் நல்லது என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது நடக்கப் போவதில்லை.
ஏதோ ஒரு நல்ல எண்ணத்தில் இதை எழுதினேன். புரிந்தால் சரி. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

Tuesday, May 26, 2020

சிரிப்பு வெடிகள் - 8

1. ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....??? 

ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்
************** 

2. டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....!!! முதல் உதவி என்ன செஞ்சீங்க....??? 

வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்....!!! 
*************

3. கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே....???'' 

டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்......??? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே....!!!'' 
***************

4. "மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."

"அப்ப... கீழே இருந்து மேலே போனால்....???" 

"அது.... குருவி....!!!" 
*****************

5. ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே....??? உங்களுக்குத் தெரியுமா.....??? 

நண்பர்: தெரியுமாவாவது....??? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன். 
******************

6. பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க, நான் வாய் பேச முடியாத ஊமை." 

வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...எனக்கு காது கேட்காது." 
****************

7. ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்...??? 

ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.

வேற எதாவது பெரிசா சொல்லு.

ஒரு MRF டயர் வாங்கிக்கொடு....??? 
******************

8. (பரீட்சை ஹாலில்)

ரகு : வயித்தைக் கலக்குதுடா.

ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு அப்பவே சொன்னேன், கேட்டியா...???
*****************

Saturday, May 23, 2020

பூனைக் கதை

ஒரு பஞ்சாலையில் நான்கு பார்ட்னர்கள். பஞ்சு குடோனில் எலித் தொல்லை தாங்க முடியவில்லை. பூனை ஒன்று வளர்ப்பதென்று முடிவெடுத்தார்கள். எலிகள் அட்டகாசம் குறைந்தது. பூனை, ஓனர்களுக்குச் செல்லப் பிராணி ஆனது. நான்கு பேருமே பூனைக்குச் செல்லம் கொடுத்து, சொந்தம் கொண்டாடினர். உரிமை பேரம் முற்றி, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தனர்.

பூனையை நால்வரும், முறை வைத்து, சமமாகப் பராமரிப்பது என்று. ஓடித் துரத்தி எலி வேட்டையாட, அதன் கால்கள் வலுவானதாக இருக்க வேண்டும். எனவே, நால்வரும் அப்பூனையின் கால்களை, தலா ஒன்றாகப் பராமரித்துக் கொள்ள முடிவு செய்தனர். ஒவ்வொருவரும் அவரவர்க்கு என்று சொந்தம் கொண்டாடிய அதன் காலை சிங்காரித்தனர்.

நல்ல உணவு. கவனிப்பு. பூனையின் உடல், பூசினாற்போல வெயிட் போட்டது. கொழுத்துப் போன பூனை ஒருநாள் பஞ்சுப் பொதிகளின் உச்சியிலிருந்து, தடுமாறி கட்டாந்தரையில் விழுந்து, வலது முன்னங்கால் முறிந்து, வலியால் அழுதது.

அந்தக் காலைப் பராமரித்த உரிமைப்பட்ட முதலாளி, அதற்கு வைத்தியம் பார்த்து, காலுக்கு எண்ணெய்க் கட்டு போட்டு விட்டார். அந்தக் கால் ஒடிந்ததில் மற்ற மூன்று பார்ட்னர்களுக்கும், மனதிற்குள் அடக்க முடியாத சந்தோஷம்! அவருக்கு வேதனையான வேதனை.

ஒருநாள் இரவு பூனை, தூரமாய் எரிந்து கொண்டிருந்த ஒரு எண்ணெய் விளக்கு அருகில் கவனக் குறைவாகச் செல்ல, அதன் காலில் சுற்றியிருந்த துணியில் தீப் பற்றிக் கொண்டது. வலியால் அலறியடித்த படியே, ஆலையின் மூலை முடுக்கெல்லாம் அந்தப் பூனை தாவியிருக்கிறது.

அத்தனை பஞ்சுப் பொதிகளும் தீப்பிடிக்க, நெருப்பை அணைக்கும் முன், ஆலையே முழுதாய் எரிந்து சாம்பலானது. பங்குதாரர்களுக்குள் பெரிய சண்டை மூண்டது. வழக்கு நீதிமன்றத்துக்குப் போனது.

பூனையின் உடைந்து போன காலுக்கு, எண்ணெய்க் கட்டுப் போட்ட பார்ட்னர், மற்ற மூவருக்கும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று அம்மூவரும் உரக்கக் கோரிக்கை வைத்தார்கள்.

இது விபத்துதான் என்றும், இதற்கு, தான் பொறுப்பேற்க முடியாது என்றும் கட்டுப் போட்டவர் வாதாடினார். மனிதாபிமான அடிப்படையில் போட்ட கட்டு, இப்படி விபரீதத்தில் முடியும் என்று, தான் சற்றும் எதிர் பார்க்கவில்லை என்று வழக்கு மன்றத்தில், அந்த ஒற்றை முதலாளி ஒற்றைக்காலில் நின்று, இறைஞ்சினார். முரண்டு பிடித்த மற்ற பார்ட்னர்கள் பிடிவாதம் தளர்த்தவில்லை.

நடுநிலை தவறாத நீதிபதி, தனித்தனி விசாரணைக்குப் பின், தீர்க்கமாக யோசித்து, தனது தீர்ப்பை எழுதி வாசித்தார்.

"பூனை தவறி விழுந்து, காலொடித்துக் கொண்டது பூனையின் குற்றம். அதன் எலும்பு முறிந்த காலுக்கு, எண்ணெய்க் கட்டுப் போட்டது அந்தக் காலைப் பராமரிப்பவரின் மனிதாபிமானம். தார்மீகக் கடமை. அந்தக் காலில் இருந்த எண்ணெய்த் துணியால்தானே இத்தனை பெரிய விபத்து நேர்ந்தது? இத்தனை நஷ்டத்துக்கும் அந்த முறிந்த காலும், அதைப் பராமரித்தவரும் ஈடு கொடுக்கக் கடமை."

ஒருவர் அதிர, மூவர் மகிழ்ச்சியில் துள்ளினர்.

"பொறுங்கள், மீதித் தீர்ப்பும் சொல்லி விடுகின்றேன்" என்ற நீதிபதி தொடர்ந்தார். "பூனை முறிந்து போன தன் வலது கால் ஒன்றின் உதவியால் மட்டுமே, அரையடி தூரம் கூட நகர முடியாது." எனவே, எண்ணெய் விளக்கு அருகில் பூனை செல்வதற்கும், கால் கட்டில் தீப்பற்றிய பின்பு, அது வலியால் ஆலை முழுதும் ஓடுவதற்கு உதவியாக இருந்து, நெருப்பு பரவுவதற்கும் காரணமாயிருந்த மற்ற மூன்று கால்களுமே, இந்த விபத்துக்குப் முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

அந்த மூன்று கால்களையும் பராமரித்த பங்குதார முதலாளிகள் மூவரும் இணைந்து, மற்ற ஒரு பார்ட்னருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்கின்றேன்".

இது அந்தக் காலத்து நீதிக் கதை.

Wednesday, May 20, 2020

சின்ன சின்ன சமையல் டிப்ஸ் 151 TO 165

151. . நைலான் கயிரை வாங்கியவுடன் சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.

152. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.

153. ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

154. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

155. மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

156. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

157. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

158. சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

159. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

160. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

161. பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

162. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

163. குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

164. குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.


Sunday, May 17, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1411 TO 1425

1411. சல்லடையில் தண்ணீர் தங்காது. ஆனால் அழுக்கான சல்லடை சுத்தமாகும். நல்ல விஷயங்கள் நமது மனதில் தங்காது. ஆனால் அழுக்கான மனது சுத்தமாகும்.

1412. ஒருமுறை, இருமுறை அல்ல, பலமுறை அனுபவித்த பிறகும் நான் சிறிதும் திருந்த மாட்டேன் என்று கூறினால் விதி வலியது என்று தானே கூற வேண்டும்?

1413. தும்மும் போது "நன்றாய் இரு", "இறைவனுக்கு நன்றி" என்று சொல்வதுண்டு. உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு "மில்லி செகண்ட்" நிற்குதாம்.

1414. கெட்டவனாக இருக்க வேண்டாம். கெட்டவனோடு சகவாசம் வைத்துக் கொண்டாலே போதும், அழிவதற்கு வேறெதுவும் தேவையில்லை என்பதை நாம் அறிய வேண்டும்.

1415. ஒரு புத்தகத்தைப் படிப்பதில் பொழுது போவதற்காகப் படிப்பதும், பின்பற்றுவதற்காகப் படிப்பதும் வேறு வேறு என்பது எனது தாழ்மையான எண்ணம்.

1416. மஹான்கள் எழுதுவதற்கும், மனிதர்கள் எழுதுவதற்கும் வித்யாசம் உண்டு. எதைப் போற்றுவது, எதை ஒதுக்குவது என்பது நமது அறிவைப் பொருத்தது.

1417. மிகச்சிறந்த வாழ்க்கை வாழ்ந்தவர்களால் தான் மிகச்சிறந்த கருத்துகளைக் கூற முடியும்.அந்தக் கருத்துகள் மட்டுமே நம்மை நல்வழிப் படுத்தும்.

1418. 20 கிராம் படிகாரம் எடுத்து இரண்டு லிட்டர் நீரில் கலக்கவும். இத்துடன் 100 கிராம் கல் உப்பை கலக்கவும். இயற்கையான ஸானிடைஸர் ரெடி.

1419. செல்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் அரிசி வைத்திருக்கும் டப்பாவில் போடவும். அரிசிக்கு தண்ணீரை இழுத்துக் கொள்ளும் சக்தி உண்டு.

1420. செல்போன் வெகு விரைவில் சார்ஜ் ஆக வேண்டுமா?. செல்போனை ப்ளைட் மோடில் வைத்து சார்ஜ் செய்யுங்கள். வெகு விரைவில் சார்ஜ் ஆகிவிடும்.

1421. வீட்டில் வெங்காயம் நறுக்கும் பொழுது கத்தியில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் தடவிவிட்டு நறுக்குங்கள். உங்கள் கண்களில் தண்ணீர் வரவே வராது.

1422. வீட்டு மொட்டை மாடியில் அல்லது காம்பவுண்ட் சுவரில் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி வையுங்கள். அது பறவைகளின் தாகத்தை தணிக்க உதவும்.

1423. வாயுள்ள நாம் பிறரிடம் உதவி கேட்க முடியும். வாயில்லா ஜீவன்களான பறவைகள் யாரிடத்தில் உதவி கேட்கும். இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

1424. நடிகரின் முகம் பிடித்து விட்டால் அவர் எது செய்தாலும் அலுப்பதில்லை.அவர் முகம் அலுத்து விட்டால் அவர் எது செய்தாலும் பிடிப்பதில்லை.

1425. மகன்/ மருமகன் அரை நிஜார் அணியும் போது ஏற்றுக்கொள்ளும் தாய் , மகள்/ மருமகள் முன் தனது கணவன் அரை நிஜார் அணிவதை ஏன் விரும்புவதில்லை?


Thursday, May 14, 2020

கோபத்தில் ஏன் சத்தம் போடணும்?

கோபம் வந்தா என்ன செய்வோம்? யார்மேல நமக்கு கோபமோ, அவங்ககிட்ட சத்தம்போட்டு சண்டைபிடிப்போம்!! எப்பவாவது யோசிச்சிருக்கோமா? அவர்கள் அருகில்தானே இருக்காங்க! எதுக்கு ஊருக்கே கேட்கிறமாதிரி சத்தம் போடனும்? மெதுவா சொல்லவேண்டியதை சொன்னாலே அவங்களுக்கு கேட்குமே! 

எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்!

மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும்! அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்!

ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது? அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்!

காரணம், அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்! மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!

இதைவிடவும், அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்? அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்!

இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது! அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!

அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது, "உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்! மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள்!"

அப்படி செய்யாமல் போனால், "ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்.



Monday, May 11, 2020

RANDOM THOUGHTS 811 TO 825

811. When there is a surge in demand for a product, and the supply is also less, its price goes up leading to hoarding and corruption.

812. Two things are important. 1. Our Karma. 2. Our lifestyle from the beginning. No use of crying at an old age as we cannot go back.

813. To become financially strong, one of the options is a reinvestment plan. Savings must be reinvested every year instead of spending.

814. If a runny nose and sputum occur during a cold, it is not coronavirus pneumonia. Only a dry cough without a runny nose will occur.

815. In the US, at the entrance of Costco, a sanitizer packet and a waste bin are kept to clean the cart and the hands before entering.

816. Fair-thinking is an act to analyze impartially right and wrong to make a decision. It is difficult to follow in personal matters.

817. The parents should contribute to domestic chores to compensate for the care extended by the children. This is called mutual love.

818. NOTA does not serve its purpose. It should be made more meaningful. Then we can expect to see interesting incidents in the polls.

819. Two popular actors of Tamil Nadu always indulge in politics. Two popular actors of Kerala never talk about politics. Why is it so?

820. The movie actor is a hero only in the movie. He earns his living by acting. Once we are out of the theater, we should forget him.

821. India has 5,79,092 VIPs more than the total in the entire world. They are politicians and Govt officers. Cost of security is high.

822. It is funny that we are worried about deadly deceases when we are not even bothered about dangerous politicians who will rule us.

823. A bird inside a cage is protected from attack by outsiders. The same cage protects the outsider from attack by animals from inside.

824. The day will disappear in the night, the sun in the west, the rain in the river, the river in the ocean and corona is no exception.

825. The words sir and madam are archaic. Madam was offensive slang used to address a married woman or one in a position of authority.

Tuesday, May 5, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1396 TO 1410

1396. முடியுமோ, முடியாதோ என நினைத்து, முடிவாக முடிவு செய்து விட்டால், முடியாத காரியம் ஆனாலும், முடித்து வைப்பவன் அவனே, என்பது முடிவான முடிவல்லவோ!!

1397. அன்னை உந்தன் அடிபணிந்தேன் என்னை ஆதரிப்பாய். முன்னை பழவினைகள் என்னை அணுகாமல் கோள் வினைகள் மேலும் தொடராமல் உன்னை கைகூப்பித் தொழுதேன்.

1398. நாம் சந்தோஷமாக இருக்கும் போது இறைவனை மறந்தாலும், நமக்குத் துன்பம் வந்து கஷ்டப்படும் போது நமக்கு அவன் கண்டிப்பாகத் துணை இருப்பான்.

1399. கற்றதும் குருவின் அருளாம். பெற்றதும் அவரே காரணமாம். பற்றியே இருந்திடு குருவடியைத் தவமாய். வெற்றியும் தோல்வியும் நிலைத்திடும் சமமாய்.

1400. மிருகங்களில் யானை அபூர்வமானது. அதை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது. மனதில் ஆச்சரியமும் சந்தோஷமும் தோன்றும். இறைவனும் அப்படியே.

1401. சிலர் நம்மை உயர்த்திப் பேசுவது போல் கிண்டல், நக்கலுடன் பேசுவார்கள். இவர்களுடன் நட்பாகவும் இருக்க முடியாது, விலக்கவும் முடியாது.

1402. ஒரு கருத்துக்கு மாற்றுககருத்தை வரவேற்கலாம். பொதுவான கருத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை. குறிப்பிட்ட கருத்துக்கு மட்டும் அது உண்டு.

1403. மாற்றுக்கருத்தை நல்ல பண்பான முறையில் தெரிவிக்கவேண்டும். தனிப்பட்ட முறையில் எழுதுவது தவறான செயலாகும். அது கண்டிக்க வேண்டியதும் கூட.

1404. நரி வலமாய்ப் போனால் என்ன, அல்லது இடமாய்ப் போனால் என்ன, கடிக்காமல் போனால் சரி என்றொரு பழமொழி உண்டு. தெரியுமா?

1405. கல்வி கற்றதன் பயனையும், சிந்தித்துத் திறனாயும் திறமையும் நமது கல்வி பலருக்குத் தரவில்லை  மூடநம்பிக்கைகள் மிகுந்து காணப்படுகின்றன.

1406. மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் விட்டாலும் நாறும். வெண் பொங்கல் வைத்த பாத்திரத்தை கழுவாமல் விட்டாலும் நாறும். பாத்திரத்தைக் கழுவணும்.

1407. கொரோனா வைரஸ் உலகத்தையே இந்திய முறைப்படி வணக்கம் செலுத்த வைத்துள்ளது . பல உலக நாடுகளும் இந்திய முறைப்படி வணக்கம் செலுத்துகிறது.

1408. படித்தவர்கள் கை கூப்பி வணங்குவது இல்லை. படிக்காதவர்கள் கை குலுக்குவதில்லை. படிப்பதற்கும் கை குலுக்குவதற்கும் சம்பந்தம் இருக்கிறதா?

1409. எதிரிகளிடம் இல்லாத உண்மை என்னும் ஆயுதம், நல்ல உள்ளம் என்னும் ஆயுதம், நண்பர்களிடம் இருப்பதுதான் நல்லவர்களின் உண்மையான பாதுகாப்பு.

1410. பிரச்சனைகள், சச்சரவுகள் இல்லாத குடும்பமே இல்லை. அதை சமாளிப்பதே தனிக் கலை. விலகி வெளியேறினால் வருவது தொல்லை. அதில் சந்தோஷமே எல்லை.

Saturday, May 2, 2020

நீதித்துறையில் நீதிமான்கள்

தியாக வாழ்க்கை வாழ்ந்த நீதிமான்கள் நிறைய பேர் நீதித்துறையில் அன்று இருந்தார்கள்.
--------------------------------------------------------------------------------
1. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த மெகர் சந்த் மகாஜன் டார்ஜிலிங் சுற்றுலா போனார். அங்கே அவர் கார் ஓட்டிச் சென்றபோது போக்குவரத்து விதியை மீறினார். தவற்றை ஏற்று அபராதம் கட்டுவதாகச் சொன்ன மகாஜன், மறுநாள் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போய் நின்றார். ``உங்கள் பெயர் என்ன?'' என்று மாஜிஸ்திரேட் கேட்க... ``மகாஜன்'' என்றார். '``என்ன வேலை பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டபோது, ``சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கிறேன்'' என்று தயங்காமல் சொன்னார். உடனே அந்த மாஜிஸ்திரேட் ``மை லார்டு'' எனப் பதறி எழுந்து மகாஜனை வணங்கினார். ``உட்காருங்கள். உங்கள் டூட்டியைச் செய்யுங்கள்'' என்றார் மகாஜன். ``முதல்முறை தவறு செய்கிறவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்கு உண்டு. அதனால், உங்களை விடுவிக்கிறேன்'' என்றார் அந்த மாஜிஸ்திரேட். மகாஜன் வெளியில் வந்தார்!
--------------------------------------------------------------------------
2. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.சத்தியதேவ் ஒரு நாள்கூட விடுமுறை எடுத்ததே இல்லை. அவர் மகனுக்கு வீட்டில் வைத்துத்தான் பதிவுத் திருமணம் நடத்தப்பட்டது. அந்தத் திருமணத்துக்காக வந்த, சக நீதிபதிகள் எல்லாம் அரை நாள் விடுமுறை போட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், சத்தியதேவ் தன் மகனின் திருமணம் முடிந்த கையோடு கோர்ட்டுக்குக் கிளம்பிப் போனார்.

அவருக்குத் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு வாய்க்கவில்லை. தலைமை நீதிபதி 6 வாரத்துக்கு மேல் விடுமுறை எடுத்தால் `பொறுப்பு தலைமை நீதிபதி’ நியமிக்கப்படுவது வழக்கம். அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ஆனந்த், பொறுப்பு தலைமை நீதிபதியாக சத்தியதேவ் சில காலம் இருக்க வேண்டும் என்பதற்காகவே 6 வாரம் விடுமுறை எடுத்தார். அந்த அளவுக்கு மதிக்கப்பட்டவர் சத்தியதேவ்!
--------------------------------------------------------------------------------
3. குரு பிரசன்ன சிங். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர். ``பள்ளி ஆவணத்தில் சொல்லப்பட்ட வயதுக்கும் உண்மையான வயதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உண்மையான வயது அடிப்படையில் எனக்கு ரிட்டையர்மென்ட் தேதி வந்துவிட்டது. அதனால், ஓய்வு பெறுகிறேன்'' எனச் சொல்லிக் கிளம்பிவிட்டார். குரு பிரசன்ன சிங் உண்மையை மறைத்திருந்தால் கூடுதலாக ஒன்றரை ஆண்டு இருந்து, பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாகி இருப்பார். மனசாட்சிக்குப் பயந்து நேர்மையோடு நடந்துகொண்ட புண்ணியவான்!
---------------------------------------------------------------------------------
4. நீதிபதி கே.பி.சுப்பிரமணியம் கவுண்டரின் தந்தை கே.எஸ்.பழனிசாமி கவுண்டர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். சென்னை சென்ட்ரல் அருகே அவர் ஓட்டி வந்த கார் சிக்னலைத் தாண்டி வந்துவிட்டது. அந்தக் காரை மடக்கி அருகில் இருந்த நடமாடும் நீதிமன்றத்தில் பழனிசாமியை நிறுத்தினார்கள். இவரைப் பார்த்ததும் மாஜிஸ்திரேட் அரண்டு போனார். ``அபராதம் கட்டத் தேவையில்லை'' என மாஜிஸ்திரேட் சொல்லியும் பத்து ரூபாய் அபராதத்தைக் கட்டிவிட்டுத்தான் போனார் நீதிபதி பழனிசாமி.
---------------------------------------------------------------------
5. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுப்பிரமணிய ஐயர். அவர் முன்பு வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கின் ஆவணங்களை அவரிடம் நீட்டியபோது அதைப் படிக்கச் சிரமப்பட்டார் சுப்பிரமணிய ஐயர். இன்னொரு கண்ணாடியை மாற்றிப் போட்டுப் படிக்க முயன்றும் முடியவில்லை. பெஞ்ச் கிளார்க்கிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். படித்துக் காட்டப்பட்டது. வழக்கறிஞரும் அதைப் படித்தார். என்ன நினைத்தாரோ உடனே சேம்பருக்குப் போன சுப்பிரமணிய ஐயர், ஆளுநருக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டார். ஆம். `கண் பார்வை மங்கிய பிறகு பணியில் இருப்பதில் அர்த்தம் இல்லை’ எனப் பதவியை உதறியவர் சுப்பிரமணிய ஐயர்.
-------------------------------------------------------------------------------
6. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதியின் தியாகம் இது! ஒரு வழக்குக்குத் தீர்ப்பு தேதி குறித்துவிட்டார் அந்த நீதிபதி. அன்றைய தினம் கோர்ட்டுக்கு வந்த நீதிபதியின் முன் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள். ``என்ன விவரம்?'' என்று அவர் கேட்க... ``இன்று எங்களது வழக்குக்குத் தீர்ப்புச் சொல்வதாகச் சொல்லி இருந்தீர்கள்'' என்று வழக்கறிஞர்கள் சொன்னார்கள். உடனே கேஸ் கட்டை எடுத்துப் பார்த்தவர். ``இதோ வருகிறேன்'' எனச் சொல்லி அறைக்குப் போனார். தன் மறதிக்கான தண்டனையாக, ராஜினாமா கடிதத்தை எழுதித் தந்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார்.