Wednesday, April 8, 2020

அர்த்தமுள்ள தமிழ்ப் பழமொழிகள்

1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.

2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.

3. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.

4. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

5. கரந்தப் பால் காம்பில் ஏறாது.

6. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.

7. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.

8. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.

9. இறுகினால் களி. இளகினால் கூழ்.

10. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.

11. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.

12. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

13. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.

14. காற்றில்லாமல் தூசி பறக்காது.

15. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.

16. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.

17. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.

18. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.

19. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.

20. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.

21. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?

22. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

23. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.

No comments :

Post a Comment