Monday, December 2, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1306 TP 1320

1306. இளம் வயதில் பெரியவர்கள் நமக்குப் பாடங்கள் போதிக்கும் போது கற்கத் தவறினால் பிறகு வாழ்க்கையில் பாதிக்கும் போது கற்க வேண்டி வரும்.

1307. இறை தேடலும், இரை யாவதும், மறை படிப்பதும், நரை வருவதும், கறை போவதும், பிறை காண்பதும், திரை விழுவதும், பறை அடிப்பதும் இயற்கை நண்பரே.

1308. கசகசா,பார்லி,ஜவ்வரிசி சம அளவு அரைத்து,ஒரு முறைக்கு 30 கிராம் கஞ்சி வைத்து 3 மாதம் தினம் இரு வேளை சாப்பிட முதுகு வலி காணாமல் போகும்.

1309. பிரம்மாவுக்கு வணக்கம், அக்ிக்கு வணக்கம், பூமிக்கு வணக்கம், மூலிகைகளுக்கு வணக்கம், பேசும் சக்திக்கு வணக்கம், பகவான் விஷ்ணுக்கு வணக்கம், பரம்பொருளுக்கு வணக்கம்.

1310. எல்லாம் "கிரகச்சாரம்" என்று சொல்வது உண்டு. எந்த ராசியில் எந்த கிரகம் எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்கிறது என்பது கிரகச்சாரம்.

1311. எத்தனை வெற்றி,தோல்விகள், எத்தனை மகிழ்ச்சி,துன்பங்கள், எத்தனை நண்பர்,பகைவர்கள்,எத்தனை உறவு,பிரிவுகள், எத்தனை பிறப்பு,இறப்புகள்.

1312. நல்ல மனிதர்களும், நண்பர்களும், தீய மனிதர்களும், பகைவர்களும் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளவும்.

1313. ஆசையும் பாசமும் மனிதனின் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் காரணம். ஆனால் கௌதம புத்தர் துன்பத்திற்கு மட்டும் என்று கூறி உள்ளார். ஏன்?

1314. ஆசையும் பாசமும் மனிதனின் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் காரணம் என்பது நம் எண்ணம். ஆனால் புத்தர் துன்பத்திற்கு மட்டுமே காரணம் என்கிறார்.

1315. குழந்தைகளுக்கு இதிகாசங்களும் புராணங்களும் சொல்லிக்கொடுத்து நமது கலாசாரமும், பண்பாடும் தழைத்தோங்கச் செய்வதே நமது தலயாய கடமை ஆகும்.

1316. நாம் நோய்வாய்ப்படும் போதுதான்  நமது உடலில் "உபயோகமில்லாத பாகம்" எதுவுமில்லை என்று நமக்கு நன்கு புரிகிறது,

1317. இலவசமாக எது நமக்குக் கிடைத்தாலும் அதைப் பெற்றால் அது சோம்பேறித்தனத்தை வளர்த்து விடும். உழைக்கும் சிந்தனையை மறக்க வைத்து விடும்,

1318. ஒரு மொழியில், ஒரு சொல் பல அர்த்தங்களைக் கொடுக்கும். எந்த இடத்தில், என்ன அர்த்தம் தருகிறது என்பதைப் புரிந்து கொண்டு எழுத  வேண்டும்.

1319. "வாச ரோஜா வாடிப் போகலாமா", "வா சரோஜா வாடி போகலாமா" ஆகிய இரு வரிகளும் வெவ்வேறு அர்த்தங்களைத் தருகிறதை நன்கு கவனித்து எழுத வேண்டும்.

1320. பெண்கள் தலைமுடியை முடியாவிட்டால் கெடுதல் என்பதற்கு திரௌபதியும், கண்ணகியும் உதாரணம். இறந்த வீட்டில் பெண்கள் தலை முடியமாட்டார்கள்.



No comments :

Post a Comment