Monday, August 19, 2019

சின்ன சின்ன சமையல் டிப்ஸ். 31 TO 45

31. நைலான் கயிரை வாங்கியவுடன் சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.

32. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.

33. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.

34. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.

35. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.

36. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.

37. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.

38. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.

39. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.

40. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.

41. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.

42. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.

43. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.

44. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

45. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

No comments :

Post a Comment