1. டாக்டர், நீங்க சொன்ன மாதிரி தினம் அல்வா சாப்பிடறேன், இருந்தாலும் தொப்பை குறைய மாட்டேன் என்கிறது.
நாசமாப் போச்சு. நான் அளவா சாப்பிடச் சொன்னேன் சார்.
***************
2. பேஷண்ட் : டாக்டர்! நாலு நாளா ஒரே வயித்துவலி. என்னால பொறுக்கவே முடியல.
டாக்டர் : வயித்து வலி இருக்கும்போது உன்னை யாரும்மா 'பொறுக்கச்' சொன்னது?
*****************
3. சார்! என்னோட செக் புக் தொலைஞ்சு போச்சு!
பாத்து சார்! நல்லா தேடிப் பாருங்க. எவனாச்சும் உங்க கையெழுத்தப் போட்டு பணத்தை லவுட்டீரப் போறான்.
நான் என்ன லூஸா? இதுமாதிரி ஏதாச்சும் நடக்கும்னுதான் ஏற்கெனவே எல்லா செக்லயும் கையெழுத்துப் போட்டு வெச்சிட்டேன்.
*********************
4. சார், நீங்க கொடுத்த செக்கை பாங்க்லே போட்டேன், பணம் இல்லைனு திரும்பி வந்துடுச்சு.
பாங்க்லே பணம் இல்லைனா நா என்ன பண்ணுவேன் சார்?
****************
5. டாக்டர் : நீங்க நிறைய டிவி பாப்பீங்களோ?
பேஷண்ட் : இல்லையே டாக்டர்! நான் ஒரே ஒரு டிவிதான் பாக்கறேன்!
*****************
6. நீங்க ரொம்ப 'பேஸ்புக்'ல இருப்பீங்களோ?
எப்படிங்க கண்டுபிடிச்சீங்க?
பின்ன என்னங்க, பேங்க் 'பாஸ்புக்'-க நீட்டி, "இதுலே கொஞ்சம் லைக் பண்ணி கமெண்ட் பண்ணுங்க"-னு சொல்றீங்களே?!
*************************
7. என் மனைவி என்கூட பேச மாட்டேங்கறா ஜோசியர் சார்.
ஐயோ, இது மாதிரி ஆயிரத்திலே ஒருத்தருக்குத்தான் அமையும்.
********************
8. வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க?
கிராமத்தான் : கயிற்றாலே தான்.