Wednesday, May 9, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 301 TO 315

301. தண்ணீரை எத்தனை முறை கலக்கினாலும் மறுபடியும் தெளிவு நிலை அடையும். எத்தனை சோதனைகள் வந்தாலும் நேர்மையான மனது தெளிந்த நிலையில் நிற்கும்.

302. வரவிலிருந்து செலவைக் கழித்தபின் மீதி சேமிப்பு என்பது நியதி. ஆனால் வரவிலிருந்து சேமிப்பைக் கழித்தபின் மீதி செலவு என்பது என் கோட்பாடு.

303. இறைவனை தினம் ஒருமுறை நினைத்தால் செய்த பாவங்கள் அழியும். இருமுறை நினைத்தால் தனம் வந்து சேரும். மூன்றுமுறை நினைத்தால் விரோதிகள் இல்லை.

304. சினிமாவில் காட்சிகள் நம் கண்களுக்குத் தெரிகின்றன. பின்னால் இருக்கும் திரை இல்லாமல் காட்சிகள் இல்லை. இறைவன் இல்லாமல் இயக்கம் இல்லை.

305. பிறரை மதிப்பிடுவது சரியான செயல் அல்ல. ஏனென்றால் ஒவ்வொருவரும் அவரவர் அறிவின் படி செயல் படுகிறார்கள் என்பது நன்கு புரிய வேண்டும்.

306. வயதாக வயதாக உணவு மற்றும் உறவுகளுடன் ஒட்டுதலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து "அவசியத்திற்கு மட்டும்" வைத்துக்கொண்டால் மனம் அமைதி பெரும்.

307. இன்றைய இளைஞர்கள் நிலை மிகவும் கஷ்டம். வீடு, குழந்தைகள் கல்வி, பெற்றோர்கள் மருத்துவம், பிற்கால சேமிப்பு என்று குருவி தலையில் பனங்காய்.

308. வெள்ளைத் துணியில் உள்ள கரும் புள்ளி தான் நம் கண்களுக்கு தெளிவாகத் தெரியும். பிறரிடம் உள்ள நல்ல குணங்கள் நம் எண்ணத்தில் நிலைக்காது.

309. ஒரு காலத்தில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்று இருந்தனர். இப்பொழுது இரண்டுமே தெரியவில்லை. சொன்னால் கோபம் மட்டும் வருகிறது.

310. உங்கள் வீட்டில் பிறந்த நாள், திருமண நாள், திதி நாட்களில் உங்களால் முடிந்த அளவு பணத்தை அருகில் உள்ள கோயில் உண்டியலில் செலுத்தவும்.

311. திருமணத்திற்குப் பின் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவரின் ஆக்ரமிப்பு அதிகம் காணப்படுகிறது. அனுசரிப்பு மிகக் குறைவாக இருக்கிறது.

312. ஒரு பெண் தன்னை மணக்கப் போகும் ஆணிடம் எதிர்பார்க்க வேண்டிய முதல் தகுதி "கெட்ட பழக்கம் / முன்கோபம்" எதுவும் அவரிடம் இல்லை என்பதுதான்.

313. கடமையில் தவறக் கூடாது. ஏப்ரல் மாதத்தில் அந்த ஆண்டுக்கான வீட்டு வரி, குடிநீர் வரி, சாலை வரி போன்ற வரிகளை தவறாமல் செலுத்த வேண்டும்

314. இனிமையான, காலத்தால் அழியாத தத்துவப் பாடல்களைத் தமிழ் சினிமாவில் ரசித்திருப்பீர்கள். உங்களுக்குப் பிடித்த சிறந்த தத்துவப் பாடல் எது?

315. தமிழ் சினிமா, சீரியல் எல்லாவற்றிலும் மது அருந்தும் காட்சிகள் அதிகம் வருவது மிகுந்த கவலையை அளிக்கிறது. எதிர் காலம் பாதிக்கப்படும்.


Tuesday, May 8, 2018

WHO IS TO LEAVE FIRST?

Many married women pray to God to bless them to leave the world prior to their husband [as Sumangali with the sacred thread]. Is it fair on their part to make such a request? It is a debatable question and I wish to say my views on this issue. 

Man is respected until he earns and the woman until she works. In our society, the social stigma attached to a woman after losing her husband makes it difficult for her to lead a decent life when compared to the life of a man after losing his wife. 


Secondly, both of them lose their independence once they are at the mercy of somebody. If the woman is healthy she can manage for some time but the man cannot unless he is accustomed to the domestic chores.


Thirdly different couples express their love in different ways. Some by smiling, some by kissing, some by embracing and some by chiding. It depends on their understanding. Old people normally express their love by controlling the other.


How it will look if the wife says she expects her husband to leave first? It will look awkward. Only to show her love for the husband, she wants to leave first. She wants her husband to live long and enjoy life with children and grandchildren.  


The taste of the pudding is in the flour. The quality of life is in living. If one leads a perfect life, loving and caring, all people will definitely reciprocate. There is nothing to worry whether the person is single or couple.

Monday, May 7, 2018

WHOSE MISTAKE? / யார் தவறு?

WHOSE MISTAKE?
You and your brother have love, mutual respect, and good understanding.  You are living in a different place. When your tenant vacated your house, on your behalf, he got the keys and also paid Rs. one lakh towards refund of the advance. 

You requested him to give his bank account number so that you could credit his account. He did not give as he valued the relationship. So you sent him a cheque through the post. After a few days, your account was debited. 


After a month, you came to know that someone had encashed the cheque. Now tell me whose mistake it was?


1. Your brother, in not giving his account number. OR

2. Your sending him a cheque.

யார் தவறு? 

நீங்களும் உங்கள் சகோதரரும் ஒருவருக்கு ஒருவர் அன்பு, மரியாதை, ஒற்றுமை உள்ளவர்கள். நீங்கள் வேறு ஊரில் வசிக்கிறீர்கள். உங்கள் வீட்டில் குடி இருந்தவர் காலி செய்த போது உங்களால் போக முடியவில்லை. 

உங்களுக்காக உங்கள் சகோதரர் வீட்டு சாவியைப் பெற்றுக் கொண்டு அவருக்கு கொடுக்க வேண்டிய முன் பணம் ரூபாய் ஒரு லட்சம் கொடுக்கிறார். 


அவருக்கு பணம் அனுப்ப நீங்கள் உங்கள் சகோதரரை அவருடைய வங்கி கணக்கு எண்ணை கொடுக்கும்படி கேட்டும் அவர் கொடுக்கவில்லை. அவருக்கு உறவு முக்கியமாகப் பட்டது. 


அதனால் நீங்கள் அவர் முகவரிக்கு தபால் மூலம் ஒரு காசோலை அனுப்புகிறீர்கள். சில நாட்கள் கழித்து உங்கள் கணக்கில் அந்தப் பணம் டெபிட் ஆகி விட்டது. 


ஒரு மாதம் கழித்து வேறு யாரோ உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுத்து விட்டது தெரிகிறது. உங்கள் சகோதரருக்கு பணம் போகவில்லை. இது யார் தவறு?


1. உங்கள் சகோதரர் அவருடைய கணக்கு எண்ணை கொடுக்காததா?

2. நீங்கள் தபால் மூலம் காசோலை அனுப்பியதா?


ALLIANCE PROPOSAL / திருமணப்பேச்சுவார்த்தை

ALLIANCE PROPOSAL
You have a daughter for marriage. She is 23, beautiful, well educated and employed. A handsome boy,28, well educated and employed from a good family came to see your daughter. 

After some time, when you contacted them, the mother said they saw 4 girls of whom she had selected a girl and they were proceeding on that alliance. 


You closed the matter and forgot about it. After two months, the mother of the boy telephoned to you and said that due to some hiccup they could not proceed on that alliance and that she wanted to discuss with you to reconsider your daughter for alliance.  What you will do?


1. Will you reject her invitation on the belief that once rejected is rejected forever?

2. Will you accept the invitation and go for discussions with them? 

திருமணப்பேச்சுவார்த்தை 

கல்யாணத்திற்கு உங்களுக்கு ஓர் மகள் இருக்கிறார். வயது 23, அழகு, படிப்பு, வேலை, சம்பளம் எல்லாம் திருப்திகரம். ஒரு அழகான பையன் வயது 28, நல்ல படிப்பு, வேலை, சம்பளம், நல்ல குடும்பத்தில் இருந்து உங்கள் மகளைப் பெண் பார்க்க வருகிறார். 

பிறகு அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. நீங்கள் கேட்டதற்கு, பையனின் தாயார், அவர்கள் 4 பெண்களைப் பார்த்ததாகவும் அதில் ஒரு பெண்ணை தான் தேர்ந்து எடுத்து விட்டதாகவும் கூறினார்.


அதன் பிறகு நீங்கள் அந்த விஷயத்தை மறந்து விட்டீர்கள். இரண்டு மாதங்கள் கழித்து, அந்தப் பையனின் தாயார், உங்களுக்கு தொலைபேசியில், அந்த சம்பந்தம் சில காரணங்களால் நிறுத்தப் பட்டது என்றும், உங்கள் பெண்ணை சம்பந்தம் பேச உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் கூறுகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?


1. முடிந்தது முடிந்ததுதான் என்று அவர்களுடைய அழைப்பை மறுத்து விடுவீர்கள்?

2.அவர்களுடைய அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்குப் போவீர்களா?

PROPERTY DIVISION / சொத்து பிரித்தல்

PROPERTY DIVISION
You are 60 plus and retired from service. In your family, you have a wife, a son and a daughter. Apart from cash and jewelry, you have a house property in a city. You are writing your Will. 

After your wife, you wish to apportion the house to your children. Both the children are like your two eyes. How will you do it?


1. Give it to the son.OR

2. Give it to the daughter.OR
3. Give it to both of them.OR
4. You give it to the son on the condition that when it is sold the proceeds should be equally shared.

சொத்து பிரித்தல் 

உங்களுக்கு 60 க்கு மேல் வயதாகி ஓய்வு பெற்று விட்டீர்கள். உங்கள் குடும்பத்தில், மனைவி, மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். பணம், நகைகள் தவிர உங்களுக்கு நகரத்தில் ஒரு வீடு இருக்கிறது. 

நீங்கள் உயில் எழுத விரும்புகிறீர்கள். உங்கள் மனைவிக்குப் பிறகு, உங்கள் சொத்தை உங்கள் குழந்தைகளுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு இரு கண்கள் போல. ஒரு வீட்டை எப்படிப் பிரிப்பீர்கள்?


1. மகனுக்கு கொடுப்பீர்களா?

2. மகளுக்கு கொடுப்பீர்களா?
3. இருவருக்கும் கொடுப்பீர்களா?
4. மகனுக்கு கொடுத்து விட்டு, பின்பு அவர் அதை விற்றால், பணத்தை இருவரும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று எழுதுவீர்களா?

Saturday, May 5, 2018

WHAT WILL YOU DO? / நீங்கள் என்ன செய்வீர்கள்?

WHAT WILL YOU DO?
You are an executive in a public limited company. When you go on an official tour, you are eligible for Rs 500/ as daily allowance and first-class train fare. Once, you could not get a first-class on the train. But the second class was available. 

Since it was urgent, you traveled by second class. After return, you claimed only actual fare through the first-class fare was known to you. The accounts manager who passed your bill advised you to claim the first-class fare without creating a precedent. What will you do?


1. Accept the manager's advice and claim first-class fare.OR 

2. Stick to your point and claim actual fare.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

நீங்கள் ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு அதிகாரி. நீங்கள் வேலை சம்பந்தமாக வெளியூர் சென்றால், உங்களுக்கு தினம் ரூபாய் 500, ரயிலில் முதல் வகுப்பு பயணமும் செய்யலாம். 

ஒரு தடவை உங்களுக்கு முதல் வகுப்பு கிடைக்கவில்லை. எனவே அவசரம் காரணமாக, இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தீர்கள். பின்னர் உங்களுக்கு முதல் வகுப்பு கட்டணம் தெரிந்தும், நேர்மையாக இரண்டாம் வகுப்பு கட்டணத்தை கேட்டு மனுப் போட்டு இருந்தீர்கள். 


உங்கள் பில்லை பாஸ் செய்யும் கணக்கியல் அதிகாரி, முதல் வகுப்பு கேட்டு மனு செய்யும் படி அறிவுரை கூறுகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?


1. கணக்கியல் அதிகாரியின் அறிவுரையைக் கேட்டு நடப்பீர்களா?

2. உங்கள் எண்ணம் போல இரண்டாம் வகுப்பு கேட்டு மனு செய்வீர்களா?

Friday, May 4, 2018

தமிழ் நமது தாய் மொழி

1. சைனாவின் ஜனத்தொகை 138 கோடி. சைனீஸ் மொழி பேசுவோர் 120 கோடி. இந்தியாவின் ஜனத்தொகை 131 கோடி. ஹிந்தி மொழி பேசுவோர் 55 கோடி. 

2. உலகில் சைனீஸ்,ஸ்பானிஷ் மொழிகளுக்கு அடுத்து ஆங்கிலம் அதிக மக்களால் பேசப்படுகிறது.அது எல்லா நாடுகளையும் இணைக்கும் மொழியாக இருக்கிறது


3. இந்தியாவில் ஹிந்தி 55 கோடி, ஆங்கிலம் 13 கோடி, பெங்காலி 9 கோடி, தெலுங்கு 8 கோடி, மராத்தி 8 கோடி, தமிழ் 6 கோடி மக்கள் பேசுகிறார்கள் 


4. ஒவ்வொரு மாநிலத்திற்க்கும் தனியாக ஒரு மொழி உண்டு. ஆனால் அந்த மாநிலத்தைச் சேராதவர்கள் பேசும் பொது மொழி ஹிந்தி. தமிழ் நாடு ஒன்றைத் தவிர  


5. வெளி மாநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்கள் தமிழ் கற்று கொள்கிறார்கள். தமிழ் நாட்டில் பலருக்கு சரியாக தமிழில் பேச, எழுத தெரியாது. 


6. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம். உண்மை. ஆனால் அந்தப் பாட்டையே எவ்வளவு நாளைக்குப் பாடிக் கொண்டிருப்பது? 


7. 1965இல் "ஹிந்தி எதிர்ப்பு" என்பதற்கு பதிலாக "தமிழ் ஆதரவு" என்று போராட்டம் செய்திருந்தால், பலர் இரண்டு மொழிகளையும் கற்றிருப்பார்கள்


8. தமிழ் ஒரு சிறந்த மொழிதான். ஆனால் கடந்த ஐம்பது வருடங்களாக அரசியல்வாதிகள் பாமர மக்களை வேறு மொழிகளை கற்க விடாமல் செய்து விட்டார்கள். 


9. சந்தேகம் இல்லை. தமிழ் மொழி  நம்முடைய தாய் மொழி தான். ஆனால் தமிழர்களைத் தவிர வேறு யாரும் தங்கள் மொழியைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதில்லை. 


10. தமிழ் தெரிந்தால், தமிழ் நாட்டில் மட்டும் வாழ முடியும். ஹிந்தி தெரிந்தால், இந்தியாவில் வாழலாம். ஆங்கிலம் தெரிந்தால், உலகில் வாழலாம்  


11. சில வகுப்பினர் மட்டும் எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப் படாமல், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளைக் கற்று முன்னேறுகிறார்கள். மற்றவர்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


12. தமிழ் மக்களின் மேலும், தமிழ் நாட்டின் மேலும் உள்ள அக்கறையால் இதை எழுதினேன். பலருக்கு இது பிடிக்காது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு ஆசை. அதற்காக என்னை ஆள் வைத்து அடிக்க வேண்டாம். நான் வயதானாவன். என்னால் தாங்க முடியாது.