Thursday, May 3, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 286 TO 300

286. பிறருக்கு புரிந்தது போல் பேசுபவர் அஞ்ஞானி. புரிந்தும் புரியாதது போல் பேசுபவர் விஞ்ஞானி. ஒன்றுமே புரியாதது போல் பேசுபவர் தான் ஞாநி.

287. பாவங்களைச் செய்யும் பொழுது அனுபவிக்கும் சந்தோஷங்களை விட, அந்த பாவங்களைச் செய்வதால் ஒருவர் அடையும்  தண்டனைகளின் வேதனை அதிகமானது.

288. எப்பொழுதும் பொய் சொல்லக் கூடாது. உண்மையே சொல்ல வேண்டும். பிறருக்கு தீங்கு விளைவிக்கும் என்றால் உண்மையைப் பேசாமல் இருப்பது நல்லது.

289. தாய், சகோதரி, மனைவி மூவரும் ஒருவருக்கு முக்கியமானவர்கள். யார் உயர்வு, தாழ்வு என்று பார்க்கும் போது தான் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

290. மனைவியின் தெய்வ பக்தி கணவனின் நலன் காக்கும் பாதி கவசமாகும். கணவனும் தெய்வ பக்தியுடன் இருந்தால் இருவருக்கும் முழுக் கவசம் ஆகும்.

291. ஒருவருடன் நான் பேசும் போது, இதற்கு மேல் பேசினால் விவாதம் வரும் என்று எனக்கு தெரியும். அப்போது மேலே பேசாமல் உடனே நிறுத்தி விடுவேன்.

292. நாற்பது வயதிற்குள் ஒருவர் சொந்தமாக வீடு கட்டி இருக்க வேண்டும். அதுதான் திட்டமிட்ட வாழ்க்கைக்கு அடையாளம். அதன் பலன் பிறகு தெரியும்.

293. நடப்பது எல்லாம் ஒரு காரணத்தை முன்னிட்டு நடக்கின்றன. நடப்பது நமக்குத் தெரிகிறது. காரணம் தான் புரியவில்லை. அது இறைவனின் திட்டம் போலும்.

294. சாதாரணமாக, ஆண் குழந்தைகள் அம்மாவிடமும், பெண் குழந்தைகள் அப்பாவிடமும் பிரியமாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். உங்கள் அனுபவம் என்ன?

295. அன்பு, கடமை, பணம் இவை மூன்றையும் சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் கையாளுவது ஒரு கைவந்த கலை. அதில் வெற்றி பெறுவது மிகவும் கடினம்.

296. பிறர் வயிற்றுப் பசிக்கு உணவு அளிப்பது பெண்களின் சிறப்பு. அவர்கள் படும் கஷ்டத்தை உணரவேண்டும். குறை சொல்வது தவறு. பாராட்ட வேண்டும்.

297. தோல்வி வாழ்க்கையின் முடிவு அல்ல. நன்றாக யோசித்து ஒருவர் தன்னுடைய தவறுகளைத் திருத்திக் கொண்டால் வெற்றியை நிச்சயம் அடைய முடியும்.

298. எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பவர்களிடம் வைரஸ் கிருமி நெருங்காது என்று நான்  நினைக்கிறேன். ஏனென்றால் சிரிப்பே ஒரு வைரஸ் தானே.

299. எழுதுவது என்பது ஒரு தனிக் கலை. அது கற்பனையின் சிறந்த வடிவம். எவ்வளவு படித்தாலும் எழுதுவது கடினம். எழுத்தாளர்கள் தனிப்பட்டவர்கள்.

300. எனக்கு ஒன்று பிடிக்காது என்று கூறினால், உங்களுக்கு அது பிடிக்கும் என்று கூறலாம். ஆனால் எனக்கு வாழத் தெரியவில்லை என்று கூறுவது தவறு.




Monday, April 16, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 271 TO 285

271. பிறரிடம் எதையாவது எதிர்பார்ப்பதே எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணம். எதிர்பார்க்காமல் வாழக்கற்றுக் கொள்ள வேண்டும். அந்த மகிழ்ச்சியே தனி

272. தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்வதே வாழ்க்கையின் தத்துவம். கஷ்டங்களைப்  பொறுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஏற்படும் மனத்திருப்தியே தனி.

273. தனியான, சுதந்திரமான வாழ்க்கையே மகிழ்ச்சியானது. வயதாகி, உடல் முடியாவிட்டால் குழந்தைகளுடன் அனுசரித்துப் போகும் வாழ்க்கையும் சிறந்தது

274. "எல்லாம் இறைவன் செயல்" என்பார் சிலர். "முயற்சி திருவினையாக்கும்" என்பார் சிலர். இரண்டுமே முக்கியம். ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை.

275. இறைவன் அருளில் பிறருக்குக் கஷ்டம் தராத இறப்பு வேண்டும். அதற்கு மனக் கட்டுப்பாடு, ஆரோக்கியம் மிக முக்கியம். அதற்கு முயற்சி அவசியம்.

276. காமத்தில் காதல் பிறக்கும். காதல் வந்த பின் காமம் மறந்து போகும். காதல் நிலைக்கும். வயதான காலத்தில் காதல் இல்லையேல் வாழ்க்கை நரகம்.

277. பெற்றோர்களிடம் இருந்து தான் குழந்தைகள் நல்லது,கெட்டதுகளை தெரிந்து கொள்கிறார்கள். அவர்கள் எப்படியோ அப்படித்தான் குழந்தைகள் இருக்கும்

278. வீடோ, நிலமோ விற்க வேண்டும் என்றால், கருப்புப் பணம் வாங்கிக் கொண்டால் அதிக விலை. வேண்டாம் என்றால் குறைந்த விலை. இது என்ன நியாயம்?

279. வீட்டிலோ, நாட்டிலோ, காட்டிலோ, வானத்தில்லோ நிலைமை உங்களை மீறிப் போய் விட்டால், உங்கள் விதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

280. என் மனைவி குழந்தைகளின் தவறுகளைத் திருத்த என்னை நான் தண்டித்து கொள்வேன்.அவர்களும் உணருவார்கள். அவர்களுக்கு என் மீது அன்பும் பெருகும்

281. அந்த காலத்தில், நான் ஒரு பையில் மளிகை வாங்கி வந்தேன். என் மகன் ஒரு காரில் வாங்கி வருகிறான். என் பேரன் ஒரு லாரியில் வாங்கி வருவான்.

282. நான் சாப்பாட்டில் நெய் உபயோகப் படுத்துவதில்லை. நல்லெண்ணை தான் உபயோகப் படுத்துகிறேன். ஆரோக்கியம், மனக் கட்டுப்பாடு இரண்டு காரணங்கள்

283. சில சமயம் இசையின் தரத்தால் பாடகரின் குரல் சிறப்பாக தெரியும்.சில சமயம் பாடகரின் குரல் வளத்தால் இசை இனிமையாக தெரியும். இரண்டும் இனிமை

284. ஒரு பாடகர் பாடும் போது சிரித்த முகத்துடன் பாட வேண்டும். முகத்தில் கஷ்டங்களை காட்ட கூடாது. உச்சஸ்தாயியில் குரலில் பிசிர் தட்ட கூடாது.

285. குளிர் பிரதேசங்களில் உணவு பொருட்கள் சீக்கிரம் கெட்டுப் போவதில்லை. அதனால் அவர்களுக்கு தினம் சமைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை.



Saturday, April 7, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 256 TO 270

256. வயதான தம்பதிகள் இருவரில், யாரேனும் ஒருவர் இல்லாமல் தனியாக கஷ்டப்படும் மற்றவரை பற்றி, நீங்கள் எப்பொழுதாவது நினைத்துப் பார்த்தது உண்டா?

257. ஒருவன் வெற்றி அடைந்தால் கல் எறிவார்கள். தோல்வி அடைந்தால் எள்ளி நகையாடுவார்கள். அது தான் சமூகம். அவர்களைச் சிறிதும் பாராட்டக் கூடாது.

258. உங்களுக்கு பிடித்ததை சாப்பிடுங்கள், அளவோடு சாப்பிடுங்கள், நேரத்துக்கு சாப்பிடுங்கள், ஜீரணம் ஆவதை சாப்பிடுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே.

259. ஒரு பாடத்தை சரியான வயதில், சரியான முறையில் கற்பிப்பது ஆசிரியர் கடமை. அதை சரியான முறையில் கற்றுக்கொண்டு அதன்படி நடப்பது மாணவன் கடமை.

260. அரசாங்கம், எல்லா ஏழைகளுக்கும் "நெட்லான்" கொசுவலை இலவசமாக அவர்கள் வீட்டில் வைத்துக் கொடுத்தால் டெங்கு, மலேரியா வியாதிகள் வராதல்லவா?

261. ஸ்ரீஸைலம் ஜ்யொதிர்லிங்க மல்லிகார்ஜுன சுவாமியையும், ப்ரமரம்ப தேவியையும் தரிசித்த பின் எனக்கு ஸ்படிக மாலை வாங்கி கொடுத்தான் என் மகன்

262. தேவைகள் மாறுவதால் பாதைகள் மட்டும் மாறுகின்றன. காலங்கள், காட்சிகள் மாறுவதில்லை. மனிதனும் மாறுவதில்லை. புதியவை மட்டும் தான் பழசாகும்

263. காலங்கள் மாறும் போது மனிதர்களும் மாற வேண்டும்.வாழ்க்கை புதிதாகிக் கொண்டே இருக்கிறது.மனிதன் பழசாகிவிடக் கூடாது. முடியுமா, முடியாதா?

264. அமெரிக்காவில் குடியேறி விட்டதால், தான் ஒரு அமெரிக்கன் ஆகப் போகிறோம் என்ற எண்ணத்தில், இந்தியக் கலாசாரத்தை இழிவாகப் பேசுவது நியாயமா?

265. எதிர்த்துப் பேசும் குணம் எனக்குப் பிடிப்பதில்லை. கருத்து வேறுபாடா, ஒத்துப் போகவில்லையா, மௌனம் ஸர்வார்த்த சாதனம்.மௌனம் கலகம் நாஸ்தி.

266. என்ன காரணத்தினால் குழந்தைகளைக் குறைத்தோம்? ஒரு மகனின் தயவில் எப்படி வாழ முடியும்? அவனுக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் என்ன செய்வது?

267. மற்ற மாநிலங்களில் இருந்து வந்து,தமிழ் நாட்டில் வேலை செய்து பொருள் சம்பாதித்தால் அது தமிழனின் "வந்தாரை வாழ வைக்கும் பண்பு" சரிதானே?

268. ஒரு மொழியின் அழகே, ஒரு சரியான வார்த்தையை, சரியான இடத்தில், சரியான அர்த்தத்தில், ஒரு நீர் ஓட்டம் போல உபயோகிப்பதில் தான் இருக்கிறது.

269. திருமணத்தில், மனைவி தன்னைக் கணவனிடம் அடமானம் வைக்கவில்லை. Marriage does not mean a woman morgages herself to her husband [ supreme court]

270. வெளி உலகத்துக்கு வந்து, பிரச்சனைகளை சந்தித்து, கஷ்டப் படுவதை விட கற்பத்திலேயே இருந்து இறைவனுடன், தாயுடன் பேசிக் கொண்டு இருக்கலாமே.




Wednesday, April 4, 2018

THE UTERUS / கர்பப்பை

THE  UTERUS 

In the late 1980s, I worked in a leading chemical company situated in the southern part of Tamil Nadu. The area was serene with a beautiful Vinayakar temple, auditorium, recreation club, etc. 


A small dispensary was available within the premises to provide first aid to all the employees. For serious cases, the company had an annual agreement with a hospital in the nearby town. 


One day, the wife of a colleague fell sick. She was suffering from acute abdominal pain. Initial treatment at the dispensary had no effect. She was taken to the hospital in the nearby town. 


The doctor who attended to her said that her uterus had descended and it should be removed immediately, otherwise it would be dangerous to the patient. 


The patient was a well-educated wife of a senior official. Even while she was suffering in pain, she laughed uncontrollably and inquired the doctor where did he study medicine. 


The doctor was surprised and answered her. Then he asked her why she was asking. The lady quietly replied that her uterus was already removed two years back.


கர்பப்பை 

1980களில், நான் தமிழ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு  கிராமத்தில் இருக்கும் பெரிய கெமிகல்  தொழிற்சாலையில் வேலை பார்த்தேன். ஒரு விநாயகர் கோயில், கலை அரங்கம், பொழுது போக்கு சங்கம் என்று அந்த இடம் மிக அமைதியாக இருக்கும்.

முதலுதவிக்காக ஒரு சிறிய மருத்துவ மனை உண்டு. பெரிய வியாதிகளுக்கு அருகில் உள்ள நகரத்தில்  ஒரு பெரிய மருத்துவ மனையுடன் வருட ஒப்பந்தம் உண்டு.


ஒரு நாள் எனது நண்பரின் மனைவிக்கு தீவிர வயிற்று வலி. எந்த முதல் உதவியும் சரியாக வில்லை. அவர்களை பெரிய மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர்.


அவரைப் பரிசோதித்த மருத்துவர், அவருக்கு கர்பப்பை  கீழே இறங்கி இருக்கிறது என்றும் உடனே அறுவை சிகிச்சை செய்து அதை அகற்ற வேண்டும், இல்லாவிடில் நோயாளிக்கு ஆபத்து என்று கூறினார்.


இதைக் கேட்ட அந்தப் பெண்மணி அந்த வலியிலும், சிறிது புன்முறுவலுடன் மருத்துவரைப் பார்த்து நீங்கள் மருத்துவம் எங்கு படித்ீர்கள் என்று வினவினார்.


அதற்கு பதில் கூறிய மருத்துவர் என் கேட்கிறீர்கள் என்று வினவினார். அதற்கு அந்தப் பெண்மணி, எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே கர்பப்பை  எடுத்தாகி விட்டது என்று சொன்னார்.


மனதில் தோன்றிய எண்ணங்கள் 241 TO 255

241. தற்கொலை செய்து கொள்ள ஒருவருக்கு நூறு காரணங்கள் இருக்கலாம் ஆனால் உயிர் வாழ ஒரு காரணம் போதும். வாழ்வில் வெற்றி உங்களைத் தேடி வரும்.

242. இருட்டு, மூச்சில்லை, கண்தெரியாது, பேச/நகர முடியாது, 9 மாதங்கள் ஆகும். அந்தச் சிறு குழந்தை படும் கஷ்டத்தை விடவா உங்கள் கஷ்டம்?யோசியுங்கள்.

243. தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சகோதரன், சகோதரி, நண்பர், தெரிந்தவர், தெரியாதவர் தன்னை விட வயதானவராக இருந்தால் எழுந்து மரியாதை செய்வது உண்டா?

244. தாய், மனைவி, சகோதரி, மகள் இவர்களைத் தவிர மற்ற பெண்கள் ஆபத்தில் இருக்கும் பொழுது அவர்களுக்கு உதவி செய்ய யாரும் முன் வருவதில்லை ஏன்?

245. நானே ராஜா, நானே மந்திரி, நானே சேவகன். என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். அதை எப்படி வாழ்வதென்று எனக்கு நன்கு தெரியும். ஏன் கவலை?

246. நம் தவறை பிறர் சுட்டி காட்டும் போது உடனே ஒப்புக்கொண்டால், பிறர் தவறை எப்போதும் சுட்டி காட்டாமல் இருந்தால், நமக்கு கோபம் வரவே வராது.

247. ஓய்வுக்குப் பிறகு நமது வருமானம் குறையும். செலவு அதிகமாகும். அதற்கு இப்போதே மாதாமாதம் குறுப்பிட்ட தொகையை சேமித்தால் கஷ்டம் தெரியாது

248. மனைவியின் பெற்றோரை சேர்த்து தாய் தந்தையர் நால்வர். அறுபது வயதிற்குள் அவர்களுக்கு ஆஸ்பத்திரி செலவு காப்பீடு செய்தால் கஷ்டம் தெரியாது

249. இப்போது கல்விச் செலவு மிகவும் அதிகமாக இருக்கிறது. மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கல்விச் செலவுக்காக ஓதுக்கினால் கஷ்டம் தெரியாது.

250. பிறக்கும் போது சிசு தானே மூச்சு விடுகிறது, வளர்கிறது, அறிவாளி ஆகிறது. பெற்றதற்கு நீ உதவி செய்கிறாய்.பின் எங்கிருந்து வந்தது உரிமை?

251. அமாவாசை,திதி நாளில், மனக் கட்டுப்பாடு முக்கியம்.பித்ருக்கள் காரியம் முக்கியம். அவர்களை பூஜிப்பது முக்கியம்.மற்றவை முக்கியம் இல்லை.

252. ஆறுவது சினம், கூறுவது தமிழ், அறியாத சிறுவனா நீ? மாறுவது மனம், சேருவது இனம், தெரியாத மனிதனா நீ? இறைவனடி நாடு,பேரின்பம் தேடுவாய் நீ.

253. பழகப் பழக பாலும் புளிக்கும் என்ற கருத்தில் ஆண் பெண் உறவில் சுதந்திரம் இருந்தால் கொலை, கற்பழிப்புக் குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டா?

254. அரசியலைப் பற்றி விழுந்து விழுந்து எழுதுகிறார்களே,  "காலுக்கு ஆகாத செருப்பை கழற்றி எறியனும்" என்ற நமது பழமொழி யாருக்குமே தெரியாதா?

255. மேலை நாகரீகத்தைப் பின் பற்றி உணவு, உடை, இருப்பிடம் எல்லாவற்றிலும் மாறி விட்டோம். ஆண், பெண் உறவில் மட்டும் ஏன் இன்னும் மாறவில்லை?



Tuesday, April 3, 2018

FOR THE YOUNGER GENERATION / இளைய தலைமுறைக்கு

FOR THE YOUNGER GENERATION

1. The present-day man and woman are well educated and they should discuss their emotional and intellectual levels before marriage and come to an understanding about their compatibility. 


2. It is difficult for two people who are emotionally inclined or intellectually inclined to live together.

3. After marriage, any matter between the husband and wife is purely their concern and not that of others. 


4. In the case of mental, physical, financial, psychological torture by the husband and/or his people, the girl should come back to her parents and they should take care of her and her children. 


5. Similarly, if a woman tortures her husband and his people by any means, then there is no other go but to divorce her.


6. Nowadays, many couples wish to live separately after marriage.  If the parents also want to live with them they should be accepted and taken care of. 


7.  I have written an article FOUR PILLARS OF A FAMILY on this subject describing the roles of the husband, the wife, his parents and her parents for the happy running of the family.


இளைய தலைமுறைக்கு   

1. இப்பொழுது ஆணும் பெண்ணும் நன்கு படித்து இருக்கிறார்கள். அவர்கள் திருமணத்திற்கு முன்பே தங்களின் மன ஒற்றுமையைப் பற்றி நன்கு கலந்து ஆலோசித்து, அது உணர்ச்சி வசபட்டதா அல்லது அறிவு சம்பந்தப் பட்டதா என நன்கு அறிந்து பின் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

2. உணர்ச்சி வசப்படும் இருவரும், அறிவு சார்ந்து சிந்திக்கும் இருவரும் சேர்ந்து வாழுதல் சிறிது கஷ்டமான காரியம் ஆகும்.

3. திருமணத்திற்குப் பின் எந்த ஒரு விஷயத்திலும் அவர்கள் இருவரும் கூடி முடிவு எடுக்க வேண்டும். மற்றவர்கள் அல்ல.

4. மனத்தாலோ, உடலாலோ, பணத்தாலோ, வேறு எந்த விதத்திலும் கணவன் அல்லது அவரைச் சேர்ந்தவர்கள் பெண்ணைத் துன்புறுத்தினால் அவள் தன்னுடைய பிறந்த வீடு செல்லுவது சிறந்தது. அவளுடைய தந்தைக்கு அவளையும் அவள் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உண்டு.

5. அதே போல, ஒரு பெண் திருமணத்திற்குப் பின் கணவனையோ அவரைச் சார்ந்தவர்களையோ எந்த விதத்திலும் துன்புறுத்தினால். அவளை விவாகரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

6. இப்பொழுது பல தம்பதிகள் திருமணம் ஆன பின் தனியாக வாழ விரும்புகிறார்கள். அது தவறு. அவர்கள் பெற்றோர்கள் கூட இருக்க விரும்பினால் அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு.

7. கணவன், மனைவி, அவனுடைய பெற்றோர், அவளுடைய பெற்றோர் ஆகியவர்களின் பொறுப்புகளைப் பற்றி  நான் ஒரு கட்டுரை [ ஃபோர் பில்லர்ஸ் ஆஃப் அ ஃப்யாமிலீ] எழுதி இருக்கிறேன். அதைப் படித்தால் எல்லோரும் சந்தோஷமாக வாழ வழி தெரியும்.






THE TEACHINGS OF A SAINT

During the late 1980s, I was working in a chemical company situated in the southern part of Tamil Nadu. The management took great interest in religious activities also. There was a beautiful Vinayakar temple, an auditorium, recreation club and a guest house within the premises. Eminent personalities were regularly invited to give lectures on various subjects. 

His Holiness Shri Bheerth Swamigal, Sankaracharya of Shri Sringeri Mutt was once invited to give a lecture. The program was scheduled to start at 6 PM in the auditorium. All the people assembled on time. As per custom, men, while visiting a temple or a religious head, were not supposed to wear a dress above their waist.


The swami's voice was reverberating in the hall. After the prayer, he said, " for those who are performing their duties without like or dislike, those who are making their parents happy, those who are helping the poor to their might, and those who are worshiping God daily, I have nothing to preach. They are already fulfilling the purpose for which they are born".


I remembered, my father also told me the very same words when I was young. I have been trying to practice these principles in my life for a very long time. I was wondering how my father was able to give similar advice like that of the great saint.