ஏகாதசி விரதம் இருக்கிற சமயத்துல பால்.மோர் இப்படி உப்புப் போடாத நீர் ஆகாரத்தை ரொம்ப கொஞ்சமா எடுத்துக்கலாம் அப்படிங்கறது விரத விதியிலேயே இருக்கு. அதனால, விரதம் இருக்கிற அன்னிக்கு கொஞ்சமா பால் மட்டும் ஒரே ஒருதரம் எடுத்துப்பார் பரமாசார்யா.
While fasting on Ekadasi day, there is an exception to the rule, that milk without sugar or buttermilk without salt is permitted to be taken in a little quantity. Paramacharya used to take a little quantity of milk without sugar.
ஒரு சமயம் அவர் முகாமிட்டிருந்த இடத்துல மின்சாரம் பழுது பார்த்திண்டிருந்தார் மகாராஷ்ட்ரா ஆசாமி ஒருத்தர். அன்னிக்கும் ஏகாதசிதான். கார்த்தால வேலையை ஆரம்பிச்சவர் உச்சிப்பொழுது நெருங்கியும் அப்படி இப்படி நகரவே இல்லை.
In a place where he was camping, he found an electrician working without going for lunch. It was also an Ekadasi day.
எல்லாத்தையும் கவனிச்சுண்டு இருந்த பெரியவா, " அந்த ஆசாமி பாவம்.எதுவுமே சாப்டாம வேலை பார்த்துண்டு இருக்கான். சாப்டு வந்து வேலை செய்யச் சொல்லு" அப்படின்னு பக்கத்தில இருந்த சீடன்கிட்டே சொன்னார்.
Paramacharya directed his assistant to tell the person to continue the job after taking his lunch.
அதைக் கேட்டுண்டு இருந்த அந்த ஆசாமி, "சுவாமி, இன்னிக்கு ஏகாதசி. நான் பச்சைத் தண்ணிகூட குடிக்கமாட்டேன். அதனால நான் சாப்பிடலையேன்னு நீங்க வருத்தப்படாதீங்க!" அப்படின்னு சொன்னான்.
The electrician replied, that being an Ekadasi day, he will not touch even water. So please do not worry about my taking lunch.
அதைக் கேட்டாரோ இல்லையோ,உடனே பதறிட்டார் பரமாசார்யா. "ஒரு சாமான்யன் நிர்ஜலமா உபவாசம் இருக்கான் . சன்யாசி நான் பால் குடிச்சுண்டு இருக்கேனே. இது தப்பில்லையோ..!"
Paramacharya was surprised that a layman is observing Ekadasi in a strict manner whereas he, a Sanyasi, is drinking milk. Is it not wrong?
அப்படின்னு சொல்லிட்டு அன்னிலேர்ந்து ஏகாதசி அன்னிக்கு கொஞ்சம் பால் குடிச்சுண்டு இருந்தாரே, அதையும் நிறுத்திட்டு நிர்ஜல உபவாசத்தை அனுஷ்டிக்க ஆரம்பிச்சுட்டார் பெரியவா.
Saying this, he started observing fasting without even drinking water on Ekadasi from that day onwards.
அதுவும் எப்படித் தெரியுமா? ஏகாதசி அன்னிக்கு நிர்ஜல உபவாசம். மறுநாள் பாரணை பண்ணணும் இல்லையா? சாஸ்திரப்படி துவாதசி அன்னிக்கு ஸ்ரவண நட்சத்திரம் அமைஞ்சுட்டா அன்னிக்கும் துளி ஜலம் கூடக் குடிக்கக் கூடாது.
Do you know how he followed? On Ekadasi full fasting. On the next day, he can eat. But if Shravana star falls on Dwadasi, he has to fast without water.
அதனால அன்னிக்கும் உபவாசத்தைத் தொடர்வார் மகாபெரியவா. மறுநாள் பிரதோஷம். அன்னிக்கு பகல்ல சாப்டக்கூடாது. சாயந்திரம் சிவபூஜை ஆனப்புறம்தான் சாப்டலாம்.
The next day is monthly Pradosham. He cannot eat during the daytime. He can eat only after Siva Puja in the evening and sunset.
அதேசம்யம் பிரதோஷம் ஞாயித்துக்கிழமைல அமைஞ்சுட்டா, சூரியன் அஸ்தமிச்சப்புறம் சாப்டக் கூடாது. அதனால அன்னிக்கும் உபவாசம்தான். நாலாவது நாள் மாச சிவராத்ரி. அதனால அன்னிக்கும் உபவாசம்.
If Pradosham falls on a Sunday, he cannot eat after sunset. So he has to fast on that day also. The next day is the monthly Sivarathri. He will fast on that day also.
ஆக, தொடர்ந்து நாலுநாள் ஒரு சொட்டு ஜலம்கூட அருந்தாம விரதம் அனுஷ்டிப்பார் பரமாசார்யா.
So he used to fast for four days continuously without even drinking a drop of water.
ஜய ஜய சங்கர! Jaya Jaya Sankara.
ஹர ஹர சங்கர! Hara Hara Sankara