1. உங்களுக்கு ஒரு சின்ன பரிட்சை.
நீங்கள் உங்கள் வீட்டில் தனியாக இருக்கிறீர்கள். அப்போது கீழ்க்கண்ட செயல்கள் நடக்கின்றன. அவைகளை எந்த வரிசையில் செய்வீர்கள் என்பதை வரிசைப் படுத்தி சொல்லவும்.
1. ஒரு வயதுக் குழந்தை தொட்டிலில் அழுகிறது.
2. அடுப்பில் பால் பொங்கப் போகிறது.
3. பாத் ரூமில் பக்கெட் நிரம்பி வழிகிறது.
4. வாசலில் தபால்காரன் தந்தி கொண்டு வந்திருக்கிறார்.
5. மாடியில் துணிகள் மழையில் நனையும் போல இருக்கிறது.
1, 2, 3, 4, 5 என்று வரிசைப் படுத்தவும்.
பி.கு. சரியான விடை: அவ்வளவு மோசமாக நான் என் வீட்டை வைத்துக் கொள்ள மாட்டேன்.
2. தமிழ் தொலைக்காட்சி சீரியல்களின் தத்துவம்.
இன்று அறுவை தாங்க முடியவில்லை, நாளை கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் மறுநாள் பார்க்கும் போது அதைவிட மஹா அறுவையாக இருக்கும். அதற்கு அடுத்த நாளும் அப்படியே இருக்கும். இதுதான் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களின் தத்துவம்.
3. சூப்பர் ரசம் தயார்.
இன்று எங்கள் வீட்டில் ரசம் செய்வதில் ஒரு புது முயற்சி.
மூன்று ஸ்பூன் பச்சை நிறம் மாறாத தனியா, இரண்டு ஸ்பூன் ஜிரகம், ஒரு ஸ்பூன் வெந்தையம் தேவையான சிவப்பு மிளகாய் இவை நான்கையும் சிறிதளவு எண்ணை விட்டு, தனித்தனியாக வறுத்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை பயன் படுத்தி எப்போதும் போல ரசம் தயாரிககவும். சிறிது வெல்லம் சேர்க்கவும். சூப்பர் ரசம் தயார்.
4. வாழ்க்கை
ஒருநாளைக்குக் குறைந்தது பத்து பக்கங்களாவது படிக்காவிட்டாலும், ஒரு பக்கமாவது எழுதாவிட்டாலும், ஒரு பதினைந்து நிமிடமாவது நல்ல இசையைக் கேட்காவிட்டாலும், அரை மணி நேரமாவது நகைச்சுவை, சினிமா போன்ற பொழுதுபோக்கும் நிகழ்ச்சிகள் பார்க்காவிட்டாலும், அவர் தனது வாழ்க்கையை வீண் செய்து விட்டதாகும்.