Monday, September 30, 2019

காசிக்கு [வாரணாசி] போக வேண்டுமா?

*காசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?*

*அதன் முகவரி மற்றும் தொலை பேசி எண் என்ன?*

*கீழே கொடுத்துள்ளேன்.*

*அனைவரும் தங்கலாமா?*

இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.

சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது

முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:

Sri Kasi Nattukkottai Nagara Satram
Godowlia,
Varanasi - 221 001 (U.P)
Telephone Nos: 0542 - 2451804,
Fax No: 0542 - 2452404
(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)

Naat Koat Satram
Location Godowlia, Tanga Stand
Behind Sushil Cinema
Varanasi

கட்டணம் உண்டா?

உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது.

உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.

ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள். அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற அட்யாச்ட் பாத் ரூம் அண்ட் ஃப்லஶ் ஔட்உடன் கூடிய அறைகள். மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது

மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் இருக்காது. தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.

எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள்.

இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம்
டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்

குளியல் அறைகளில் Water Heater உண்டு
குடிப்பதற்கு Purified Water உண்டு
மின்தடை இருக்காது Full Gen Set வசதி உண்டு

சரி உணவு?

விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.

1
காலைச் சிற்றுண்டி: நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.
இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு
கட்டணம் ரூ.35:00 மட்டுமே

2.
மதிய உணவு: நேரம் 12:30 மணி 2:30 மணி வரை
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40:00 கட்டணம்

ரூ.4,000:00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.

3. மாலை 4 மணி டீ உண்டு

4. இரவு 7:30 முதல் 9 மணிவரை
இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்
கட்டணம் ரூ.35:00 மட்டுமே

உணவிற்குக் காலை 8 மணிக்கும் கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு. 🙏🙏ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
---------------------------------------------------------------------
ஹனுமான் காட் எனும் பகுதியில் பாரம்பரிய முறையில் தாய் தந்தையருக்கு பித்ரு காரியங்கள் செய்ய சுவாமிமலை சாஸ்திரிகள் பேரன்கள் தங்குமிடத்துடன் கூடிய இடம் இருக்கிறது. ராமசேஷு, கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளின் மைந்தர்கள் திரு சிவா, ரமணன் உங்களை அலகாபாத்திலேயே வரவேற்று(கார் ஏற்பாடு மூலம்) திருவேணி சஙகம ஸ்நானம் செய்து காசிக்கு அழைத்துவருவதுடன் காசியில் கர்மாக்களை முடித்து கயாவுக்கும் ஒரு நாள் சென்று வரலாம். காடியிலிருந்து ரயில் பிடிக்கலாம். திரு சிவாவை தொடர்பு கொள்ள 09815336064.

Saturday, September 21, 2019

RANDOM THOUGHTS 346 TO 360

346. 1. Speak the truth that is pleasing. 2. Do not speak the truth that is not pleasant. 3. Do not speak an untruth that is pleasing".

347. Knowledge through education, devoid of devotion, discipline and sacrifice, will only pave the way for indulging in dishonest acts.

348. Please feel happy when people come to you to solve their problems. It is natural to look for the torch only when they are in dark!

349. Drona asked his students to aim the arrow at the bird sitting on a tree. Then he asked what did they see. Everyone said they saw the tree, branches, leaves and the bird. Arjuna said he saw only the bird.

350. When I go overseas, I take regular medicines for two days in hand-bag. I keep the rest of the medicines, required for the stay, equally in four check-in baggage. Even if one baggage arrived late, the rest will augment the need.

351. Outward calmness is the first step toward inward stillness and this is to be brought about slowly and will not be gained soon.

352. Ice and glass look-alike. Ice melts to become water, but not the glass. Water can become ice and it can also return to its original form.

353. A pet is a domestic animal kept for companionship and pleasure. Even the parent does not get the love, care and attention it gets.

354. In a developing country like India, the trolley at the airports is free to use. But in a developed country like the US, it is $6 or Rs.400/ each.

355What the artists and priests do with all the shawls and dhothies they get on every occasion? Of course, it is none of my business.

356. Previously the bad people took the advice of the good to become good. Now the good people follow the methods of bad to become bad.

357. Nowadays, women are also educated, employed and are earning. Naturally, happiness in the family should be more. Do you think so?

358. A mother endures all pains and sufferings and prays all Gods for her baby's health. How can her children repay such sacrifices?

359. Are you smart? Be careful. It is not advisable to show you are talented. For, people will dump you with more work. Do you like it?

360. Mostly, all two-wheeler riders are in cloud nine. They do not foresee the consequences of an accident. Be careful, it may be fatal.

Sunday, September 15, 2019

RANDOM THOUGHTS 331 TO 345

331. God who is really the light for all of us, appears to us as darkness. But Maya which is really darkness appears to us as light.

332. The word "Teach" means to impart knowledge as to how to do something or to learn or understand something by example or experience.

333. When one's mind is a slave to discontent, anger, and envy, he cannot have peace and happiness like the water kept in a leaky pot.

334. Coincidence is defined as a remarkable concurrence of events or circumstances without any apparent casual connection what so ever.

335. Adolescence is the teenage years between 13 and 19. It is the transitional and most enjoyable period from childhood to adulthood.

336. We should not write in the same way we speak. Similarly, we should not speak in the same manner we write. Both are quite different.

337. Our traditions and culture are unique. They give mental peace and health. By giving them up we have lost vitality and become weak.

338. Our whole existence is a gift from God. From the day of our birth until the day of our death we are on borrowed time by the grace of God.

339. We should love the Lord with all our heart, with all our soul, with all our mind, and with all our strength. It is the wisest way to live.

340. A good song is the joint effort of the music director, lyricist, and singer. It is impossible to pinpoint whose contribution is more.

341. Those who are engaged in genuine social service must have a strong commitment to Dharma and Truth. They should have no fear at all.

342. If one has universal love for all living beings including humans, he will not be looking at the right and wrong of any individual.

343. On their birthday, people are wishing my children happy birthday. But apart from wishing, I thank them for making me a father.

344. Some have the habit of contradicting always whatever others say. Some have the habit of agreeing always. It is in their attitude.

345. Renunciation is rejecting enjoyment and comforts and to lead a holy life free from lust, craving and desire to get enlightenment.

Friday, September 13, 2019

திறமையும், சாந்தமும். / TALENT AND PIETY

உலகில் நான்கு விதமான ஆண்களும் பெண்களும் இருக்கின்றனர்.
There are four types of men and women.

1. திறமை இல்லாதவர்கள் மேலும் சாந்தமானவர்கள்.
1. Those who are not contributing and pious.

2. திறமை இல்லாதவர்கள் ஆனால் கர்வம் உள்ளவர்கள்.
2. Those who are not contributing but authoritative.

3. திறமையானவர்கள் மேலும் சாந்தமானவர்கள்.
3. Those who are contributing and also pious.

4. திறமையானவர்கள் ஆனால் கர்வம் உள்ளவர்கள்.
4. Those who are contributing but authoritative.

இந்த நான்கு பிரிவுகளில், திறமையானவர்கள் மேலும் சாந்தமானவர்கள் தான் சிறந்தவர்கள். கணவன் மனைவி அவ்வாறு இருந்தால் அவர்கள் வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாக இருக்கும். மற்றவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. மிகவும் கஷ்டப்படுவார்கள்.

Among the four, those who are contributing and also pious are the best. If the husband and wife are like that, their life will always be pleasant and happy. The rest of the people will have an unhappy life and they will suffer.




Thursday, September 12, 2019

DIFFERENCES BETWEEN IYER AND IYENGAR

What are the differences between Iyer and Iyengar if both are Tamil Brahmins?

Iyers and Iyengars are both Tamil Brahmins who differ in their core philosophies. In many religions, there is a schism based on the relative priorities accorded to saints and the scriptures. 

Iyers place more emphasis on the Smriti [scriptures], while Iyengars place more emphasis on the Acharyas [teachers]. 

This is again the primary difference between Sunni Muslims [followers of Sunnah] and Shia Muslims [who place more emphasis on the spiritual leaders - Imamah]. 

Again, while Protestants fundamentally trust scriptures to be the sole guide, Catholics accord more importance to saints, prophets, and Pope.

It is not about Shiva vs. Vishnu. Iyers are not Shaivites, but Smartas. It is primarily about philosophy [Vishishtadvaita vs Advaita Vedanta] and priorities [acharya vs smriti].

Iyers follow the Smarta Tradition - a more liberal form of Hinduism whose worship contains 5 key deities - Shiva, Vishnu, Shakti, Surya, Ganesha, and Shanmuga. 

Adi Shankara is their primary guru and Advaita is their primary philosophy. According to Advaita philosophy, there is no difference between God and humans. 

The illusion of Maya makes our souls different from that of the Brahman. A Smarta's goal is to pierce the screen of Maya to reach unity with the Universe. The preferred path is Jnana [knowledge].

Iyengars follow the Sri Vaishnava tradition - a more stringent form of Hinduism where the worship primarily centers around the Vishnu pantheon. 

Iyengars are the followers of Ramanuja and Vishishtadvaita is their primary philosophy. Vishishtadvaita philosophy defines 3 entities - God, living and nonliving things. The goal of the jivas [living] is to merge with the Creator [Parabrahman], primarily through the path of Bhakti [devotion].

Their core philosophy affects their appearance too. Iyers sport the Tripundra [3 marks]- forehead markings made with ash. The ash signifies that everything eventually burns in the end and we must get beyond the worldly illusions of Maya. The three lines signify three barriers to the truth - anava [ego], karma [deeds] and Maya [illusion].

Iyengars sport the Sricharanam [lord's feet] in their forehead. Sricharanam reminds a Srivaishnavite to always think the feet of God and spend their life in devotion. [There are two different sects within the tradition who wear it in slightly different ways.]

​The two outer lines are the Lord's feet [imagine someone standing with their feet in V-shape position] and the inner line is that of Mahalakshmi who is keeping her feet closed due to modesty.

There are again two dominant groups within Srivaishnavism - the northern sect [vadakalai] following Vedanta Desika as one of the key guiding paths, while the southern sect [thenkalai] following Manavala Mamunigal as a guiding spirit.

Key differences between Smarta and Srivaishnavas:

Holy text vs. holy teachers: 
Smarta's primary concern with the Smriti - scriptures. While Smartas respect their teachers too, the Srivaishnavites are unrivaled in their devotion to the teachers [acharya]. For the latter, the acharyas often rank even higher than gods. This interestingly also divides the Sunnis [followers of the scriptures] from the Shias who put more devotion to their Imamah [teachers].

Holy temples: 
Smartas celebrate the 275 temples [Paadal Petra Sthalam] that have been glorified their gurus termed nayanmars. Srivaishnavites celebrate the 106 temples [Divya Desam] that have been glorified by their acharyas. There are intersections of both in Kanchi and Chidambaram. The devotion of the latter towards their 106 holy temples is unrivaled by the former.

Holy scriptures: 
The daily prayers of Smartas center around the 5 Sukhtas [Purusha, Sri, Durga, Narayana, and Rudra]. Srivaishnavas differ in their 5 Sukthas taking Purusha, Sri, Narayana, Bhu, Nila as the five key chapters from Vedas for their everyday recitation.

Language: 
Smarthas include more of Sanskrit in their speech and prayers. Srivaisnavites, especially the thenkalai group include much more of pure Tamil in theirs.

Mission: 
Smarthas all come under the Sankara mutt and most often the one in Kanchi. This is equivalent of their Church with Sankaracharya having the status of the Pope. Vadakalai Srivaishnavas come under 4 big mutts/ashrams - Ahobila, Parakala, Srirangam Andavan Ashram, and Poundrikapuram Andavan Ashram, while the Thenkalai has even more numerous acharyas with the prominent one being the Vanamamalai mutt at Nanguneri.

Besides these, there are noticeable differences in diets, festivals, and traditions involving weddings and other events.

As a final note, many people think Hinduism to be a non-religion because there are no prophets, scriptures or central organization. However, once you get at the level of individual traditions - you can see Srivaishnava or Smartha traditions are religions in every way - with prophets, scriptures, institutions, rules, and symbols. 

Hinduism is just the big tree that carries all these individual branch religions. That again answers a typical question in Tamil Nadu on why the Smartas and Srivaishnavites are so intent on keeping their caste traditions. Because for them, their tradition is their religion and guiding philosophy.

Vedas are like the Himalayas that feed an enormous number of streams. These rivers like religions take different paths, feed different people, but all end up in the ocean of Paramathma. There are many such mountains across the world, feeding many river systems but reaching the same ocean called by different names.

Wednesday, September 11, 2019

GOLD RESERVE

Is the Indian Rupee backed by Gold?

Reserve Bank of India [RBI] is divided into two Divisions, Banking Division and Issue Division from the point of view of accounting. The Issue Division restricts itself to the Liability of the Currency in circulation in the country along with some currency in its own chest. 

This currency belongs to the Govt. of India, hence it is a liability and its value on 30th June 2017 is Rs 15,06,331 crores. On the Asset side, we should expect the same value of Gold if it is backed by Gold, but it only shows Rs 69,030 crores, which is barely 4.58%. To make up for the gap the RBI transfers Foreign Currency Assets worth Rs 14,36,689 crores from its Banking Division.

The Indian rupee is backed mainly by Foreign Currency ( 95.5%) and some Gold ( 4.5%). RBI or the Govt of India does not promise to back the INR with Gold. No country in the world backs its currency.

The Central Bank of the USA has the largest quantity of gold. Once upon a time, it used to back every dollar with 1.5 gms of gold. In 1971 under Nixon, the USA withdrew the promise of 1.5 gms of gold for every dollar.

RBI holds around 618 tonnes of Gold ( 2019). The valuation of these Gold changes from time to time depending on the market price of Gold. This is held in Nagpur, but a part of this is also held in London which was the Gold returned to India after Chandrashekhar Government had to transfer the 47 tonnes of Gold to London as collateral for a $405 million loan in Foreign Exchange.

The RBI Act 1956 mentions the Minimum Reserve System ( MRS ) as far as backing paper money with Gold is concerned. The MRS says that the RBI has to hold Rs 200 crores worth of assets to back paper currency, out of which Rs 115 crores should be the value of Gold held physically by the RBI. As can be seen from the balance sheet, RBI has better reserves than required by MRS.

The following are the top 20 countries according to World Gold Council's latest rankings (as of September 2019)

Rank/Country/Organization/Gold holdings(in metric tons)/Gold's share of forex reserves
1  United States        8,133.5 MT    76.0%
2  Germany               3,366.8           71.9%
— International Monetary Fund 2,814.0 N/A
3  Italy                       2,451.8            67.4%
4  France                   2,436.1            60.8%
5  Russia                    2,219.2            19.6%
6  China                     1,936.5              2.8%
7  Switzerland           1,040.0              5.7%
8  Japan                        765.2              2.7%
9  India                          618.2              6.5%
10  Netherlands             612.5            67.7%
— Logo European Central Bank.svg European Central Bank                                        504.8            27.0%
11  Republic of China   423.6              4.0%
12  Portugal                   382.5            64.7%
13  Kazakhstan              380.0           63.0%
14  Uzbekistan               327.8           54.3%
15  Saudi Arabia           323.1             2.8%
16  United Kingdom      310.3            8.5%
17  Lebanon                   286.8           26.0%
18  Spain                        281.6           17.6%
19  Austria                     280.0           52.1%

20  Poland                      228.2             8.9%

Sunday, September 8, 2019

RANDOM THOUGHTS 316 TO 330

316. To lead a happy life is a blessing. To wish that others also should live the same kind of life that we live is the noblest thought.

317. When does our action result in sin? When we act with selfish desire and indulge in wrongful actions to achieve our selfish goals.

318. God first created the man. He was not happy with his own creation. He wanted to make more improvements. Then He created the woman.

319. Even cruel people can be transformed by those practicing Ahimsa. When a person is full of love, he can make other people love.

320. Acquiring material wealth is of no value. Devotion to God is the only wealth of enduring value that we can acquire in this life.

321. They lived happily married for 50 years. When asked for the secret of their success, they said "It helps sometimes to be a little deaf"

322.  Nature protects a person for righteousness and not anyone else. The same nature kills him if he fails to follow the right path.

323. Within a family, there are seven relationships among its members. The best among them is the love between the mother and daughter.

324. Among the seven relationships within family members, the love between the two sisters is next to that of a mother and daughter

325. Material wealth is of no value for our salvation. Devotion is the only wealth of enduring value that we can acquire in this life.

326. There is nothing wrong in appreciating a good movie. It is entertainment. But it is not advisable to hero-worship the actors.

327. Many people are not aware that the rate of interest [ 8%] minus the rate of inflation [3.15%] is the real earning on our deposits.

328. During the past 50 years, there is growth in the economy as well as corruption and black money. Anyone who can eradicate corruption and black money should be welcomed.

329. Due to lack of Guru- bhakti (devotion to the Guru), Ishwara- bhakti (devotion to God ) is lacking in the hearts of human beings.

330. Interest rates are lowered when the economy improves. To get Rs.100 and spend Rs.80 is the same as to get Rs.80 and to spend Rs.64

Monday, September 2, 2019

என்னை மனிதனாக்க...

வாழைத் தோட்டத்திற்குள் 
வந்து முளைத்த காட்டுமரம் நான். 
எல்லா மரங்களும் எதாவது ஒரு கனி கொடுக்க, 
எதுக்கும் உதவாத முள்ளு மரம் நான்...!

தாயும் நல்லவள், 
தகப்பனும் நல்லவன். 
தறிகெட்டு போனதென்னவோ நான். 
படிப்பு வரவில்லை. 
படித்தாலும் ஏறவில்லை. 
இங்கிலீஷ் டீச்சரின் இடுப்பைப் பார்க்க, 
இரண்டு மைல் நடந்து பள்ளிக்குப் போவேன் .

பிஞ்சிலே பழுத்ததே, 
எல்லாம் தலையெழுத்தென்று 
எட்டி மிதிப்பான் அப்பன். 
பத்து வயதில் திருட்டு, 
பனிரெண்டில் பீடி, 
பதிமூன்றில் சாராயம், 
பதினாலில் பலான படம், 
பதினைந்தில் ஒண்டி வீட்டுக்காரி...
பதினெட்டில் அடிதடி,
இருபதுக்குள் 
எத்தனையோ பெண்களிடம் விளையாட்டு. 
இரண்டு மூன்று முறை கருக்கலைப்பு...

எட்டாவது பெயிலுக்கு 
ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ?
மண்லாரி ஓட்டினால் 
லோடுக்கு நூறு தருவார்கள. 
வாங்கும் பணத்துக்கு 
குடியும் கூத்தியாரும் என, 
எவன் சொல்லியும் திருந்தாமல் 
எச்சிப் பிழைப்பு பிழைக்க, 
கை மீறிப் போனதென்று, 
கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனா் .

வேசிக்குக் காசு வேணும். 
வருபவள் ஓசிதானே. 
மூக்குமுட்டத் தின்னவும், 
முந்தானை விரிக்கவும், 
மூன்று பவுனுடன், 
விவரம் தெரியாத ஒருத்தி 
விளக்கேற்ற வீடு வந்தாள் .

வயிற்றில் பசித்தாலும், 
வயிற்றுக்குக் கீழ் பசித்தாலும், 
வக்கணையாய் பறிமாறினாள். 
தின்னு கொழுத்தேனே தவிர, 
மருந்துக்கும் திருந்தவில்லை...

மூன்று பவுன் போட 
முட்டாப் பயலா நான். 
இன்னும் ஐந்து வேண்டுமென்று, 
இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க, 
கறவை மாட்டை சந்தைக்கு அனுப்பி, 
நான் கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான். 
சொந்தம் விட்டுப்போகாமல் இருக்க, 
மாமனாரான மாமன்...!

பார்த்து வாரமானதால், 
பசிக்கிறதென்று கைப்பிடிக்க, 
தள்ளிப் போனதென்று 
தள்ளி விட்டாள் சிறுக்கிமவ.
இருக்கும் சனி போதாதென்று 
இன்னொரு சனியா..?

மசக்கை என்று சொல்லி 
மணிக்கொரு முறை வாந்தி. 
வயிற்றைக் காரணம் காட்டி, 
வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை. 
சாராயத்தின் வீரியத்தால் 
சண்டையிட்டு வெளியே அனுப்ப, 
தெருவில் பார்த்தவரெல்லாம் 
சாபம் விட்டுப் போவார்கள் .

கடைசி மூன்று மாதம், 
அப்பன் வீட்டுக்கு அவள் போக, 
கறிவேப்பிலைக்காரி ஒருத்தி 
வாசனையாய் வந்து போனாள்..,

தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக 
தகவல் சொல்லியனுப்ப..
ரெண்டு நாள் கழித்து 
கடமைக்கு எட்டிப் பார்த்தேன். 
கருகருவென என் நிறத்தில் 
பொட்டப்புள்ள..!

எவன் கேட்டான் இந்த மூதேவியை... ? 
'கள்ளிப் பால் கொடுப்பாயோ ...
கழுத்தைத் திருப்புவாயோ, 
ஒத்தையாக வருவதானால், 
ஒரு வாரத்தில் வந்து விடு' 
என்று சொல்லித் திரும்பினேன் .

ஆறு மாதமாகியும் 
அவள் வரவில்லை. 
அரசாங்க மானியம் 
ஐயாயிரம் கிடைக்குமென்று 
கையெழுத்துக்காகப் பார்க்கப் போனேன். 
கூலி வேலைக்குப் போனவளைக் 
கூட்டி வரவேண்டி 
பக்கத்து வீட்டுப் பாப்பா ஓடிச் செல்ல...

ஆடி நின்ற ஊஞ்சலில் 
அழுகுரல் கேட்டது. 
சகிக்க முடியாமல் எழுந்து தூக்கினேன். 
அதே அந்த பெண் குழந்தை..!
அடையாளம் தெரியவில்லை. 
ஆனால் அதே கருப்பு...

கள்ளிப் பாலில் 
தப்பித்து வந்த அது. 
என் கைகளில் சிக்கிக் கொண்டது. 
வந்த கோபத்திற்கு 
வீசியெறியவே தோன்றியது. 
தூக்கிய நொடிமுதல்...
சிரித்துக் கொண்டே இருந்தது,

என்னைப் போலவே 
கண்களில் மச்சம், 
என்னைப் போலவே 
சப்பை மூக்கு, 
என்னைப் போலவே 
ஆணாகப் பிறந்திருந்தால் 
இந்நேரம் இங்கிருக்க வேண்டியதில்லை...,

பல்லில்லா வாயில் 
பெருவிரலைத் தின்கிறது.
கண்களை மட்டும்..,
ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது.
ஒரு கணம் விரல் எடுத்தால்...
உதைத்துக் கொண்டு அழுகிறது, 
எட்டி... விரல் பிடித்துத் 
தொண்டை வரை வைக்கிறது,

தூரத்தில் அவள் வருவது கண்டு 
தூரமாய் வைத்து விட்டேன். 
கையெழுத்து வாங்கிக்கொண்டு 
கடைசி பஸ்ஸுக்கு திரும்பி வருகிறேன், 
முன் சீட்டில் இருந்த குழந்தை 
மூக்கை எட்டிப் பிடிக்க
நெருங்கியும், விலகியும் நெடுநேரம் 
விளையாடிக் கொண்டு இருந்தேன்!

ஏனோ அன்றிரவு தூக்கம் நெருங்கவில்லை, 
கனவுகூட கருப்பாய் இருந்தது.
வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன். 
போட்ட கையெழுத்துப் பொருந்தவில்லை 
என்ற பொய்த்தனத்தோடு 
இன்னொரு கையெழுத்துக்கு 
மீண்டும் சென்றேன்,

அதே கருப்பு, 
அதே சிரிப்பு, 
கண்ணில் மச்சம், 
சப்பை மூக்கு, 
பல்லில்லா வாயில் 
பெருவிரல் தீனி. 
ஒன்று மட்டும் புதிதாய், 
எனக்கும் கூட சிரிக்க வருகிறது ...

கடைசி பஸ், ஆனால் 
பேருந்தில் எந்த குழந்தையும் இல்லை. 
வீடு நோக்கி நடந்தேன்.
பாதி வழியில் கறிவேப்பிலைகாரி. 
கைப் பிடித்தாள்
உதறிவிட்டு நடந்தேன். 
தூக்கம் இல்லை நெடுநேரம். 
பெருவிரல் ஈரம் பட்டதால் 
மென்மையாக இருந்தது. 
முகர்ந்து பார்த்தேன் ....

விடிந்தும் விடியாததுமாய் 
காய்ச்சல் என்று சொல்லி 
ஊருக்கு வரச் சொன்னேன், 
பல்கூட விளக்காமல் 
பஸ் ஸ்டேண்டுக்கு சென்று விட்டேன். 
பஸ் வந்ததும், லக்கேஜைக் காரணம் காட்டி 
குழந்தையைக் கொடு என்றேன் !

பல்லில்லா வாயில் பெருவிரல். 
இந்த முறை பெருவிரலைத் தாண்டி... 
ஈரம் எங்கோ சென்று கொண்டு இருந்தது. 
தினமும் என் மீது படுத்துக்கொண்டு 
பொக்கை வாயில் கடிப்பாள்,

அழுக்கிலிருந்து அவளைக் காப்பாற்ற, 
நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன், 
பான்பராக் வாசனைக்கு மூக்கைச் சொரிவாள்,
விட்டு விட்டேன். 
சிகரெட் ஒரு முறை சுட்டு விட்டது.
விட்டு விட்டேன். 
சாராய வாசனைக்கு வாந்தியெடுத்தாள்.
விட்டு விட்டேன்,

ஒரு வயதானது. 
உறவுகளெல்லாம் கூடி நின்று, 
'அத்தை சொல்லு  
'மாமா சொல்லு '
'பாட்டி சொல்லு '
'அம்மா சொல்லு '
என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். 
எனக்கும் ஆசையாக இருந்தது,
'அப்பா' சொல்லு என்று சொல்ல முடியவில்லை. 
ஏதோ என்னைத் தடுத்தது,

ஆனால் 
அவளை எதுவும் தடுக்கவில்லை. 
அவள் சொன்ன முதல் வார்த்தையே 'அப்பா'தான்! 
அவளுக்காக எல்லாவற்றையும் விட்ட எனக்கு, 
அப்பா என்ற அந்த வார்த்தைக்காக 
உயிரைக்கூட விடலாம் என்று தோன்றியது,

அவள் வாயில் இருந்து வந்த 
அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன்.
இந்த சாக்கடையை அன்பாலேயே கழுவினாள். 
அம்மா சொல்லித் திருந்தவில்லை, 
அப்பா சொல்லித் திருந்தவில்லை, 
ஆசான் சொல்லித் திருந்தவில்லை, 
நண்பர்கள் சொல்லித் திருந்தவில்லை, 
நாடு சொல்லியும் திருந்தவில்லை, 
முழுசாய் மூன்று வார்த்தை பேச வராத 
இந்த முகத்தைப் பார்த்துத் திருந்தி விட்டேன்..

வளர்ந்தாள். 
நானும் மனிதனாக வளர்ந்தேன். 
படித்தாள், 
என்னையும் படிப்பித்தாள். 
திருமணம் செய்து வைத்தேன். 
இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள், 
இரண்டு குழந்தைகளுமே, 
பெரியவர்களாய் வளர்ந்து விட்டார்கள், 
நானும்கூட தாத்தாவாகி விட்டேன் ,

என்னை மனிதனாக்க, 
எனக்கே மகளாய் பிறந்த,
அந்த தாய்க்காகக் காத்திருக்கிறது. 
இந்தக்_கடைசி_மூச்சு..! 
ஊரே ஒன்று கூடி 
உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,

எனக்குத் தெரியாதா என்ன? 
யாருடைய பார்வைக்கப்புறம் 
பறக்கும் இந்த உயிரென்று? 
வானத்தைப் பார்த்துக் காத்திருக்கிறேன்... ......................
வாசலில் ஏதோ சலசலப்பு, 
நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்..,

என் பெருவிரலை யாரோ தொடுகிறார்கள். 
அதோ அது அவள்தான்,
மெல்லச் சாய்ந்து என் முகத்தைப் பார்க்கிறாள். 
என்னைப் போலவே 
கண்களில் மச்சம், 
சப்பை மூக்கு, 
கருப்பு நிறம், 
நரைத்த தலைமுடி, 
தளர்ந்த கண்கள், 
என் கைகளை முகத்தில் புதைத்துக் கொண்டு,
'அப்பா அப்பா' என்று குமுறிக் குமுறி அழுகிறாள்,

அவள் எச்சில் என் பெருவிரலிட, 
உடல் முழுவதும் ஈரம் பரவ... 
ஒவ்வொரு புலனும் துடித்து அடங்குகிறது. 
"தாயிடம் தப்பி வந்த
மண்ணும் கல்லும்கூட 
மகளின் கை பட்டால் 
காந்தச் சிலையாகும்! " 

இதைப் படிக்கும்போது கண்கள் ஈரமானால் நீங்கள் நல்ல பாசமுள்ள பிள்ளையாக இருப்பீர்கள்.

நன்றி நண்பர் திரு.ஏ.எஸ்.கே.கபில்.