Thursday, November 15, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 901 TO 915

901. PETER ENGLAND, LOUIS PHILIPPE என்றெல்லாம் துணிகளுக்குப் பெயர் வைக்கிறார்கள். "வேல் முருகன்" என்று பெயர் வைப்பதில்லையே.என்ன காரணம்?

902. நமது நாட்டு மக்கள் வழிமுறை தவறா அல்லது நாட்டை ஆட்சி செய்பவர்கள் வழிமுறை தவறா என்று அறுதியிட்டுக் கூறமுடியாத நிலையில் இருக்கிறோம்.

903. அரசியல்வாதி லஞ்சம் கொடுக்கிறார். பொதுமக்கள் அதை வாங்கிக் கொள்கின்றனர். தவறு யார் மீது? லஞ்சம் கொடுத்தது தவறா? அதை வாங்கியது தவறா?

904. ஏன் வண்டு மலரைத் தேடிப் போகிறது? மலர் வண்டை கவர்ந்து இழுக்கிறது. ஏன் மலர் வண்டை கவர்ந்து இழுக்கிறது? அது இயற்கையின் திருவிளையாடல்.

905. பெண்கள் தங்கள் வீட்டை துடைப்பத்தால் கூட்டிய பிறகு குப்பையை மூலையில் குவித்தால், பண்டிகை நாளில் மாத விலக்கு வரும் என்பது நம்பிக்கை.

906. ஒருவர் இளமையில் தனது வாழ்க்கைத் துணையை நேசிப்பது வேறு. அது காதல் எனப்படும். அதுவே முதுமையில் நேசிப்பது வேறு. அது கரிசனம் எனப்படும்.

907. "கர்வால்" என்று ஒரு மருந்து.விலை ரூ 5.ஐந்து சொட்டு இருக்கும்.கொதிக்கும் நீரில் சொட்டு சொட்டாக விட்டு ஆவி பிடித்தால் சளி குணமாகும்.

908. "பசி வந்தால் பத்தும் பறந்து விடும்" என்று சொல்வார்கள்."சளி பிடித்தால் உலகமே வெறுத்து விடும்" என்று சொல்கிறேன்.உங்கள் அனுபவம் என்ன?

909. நமது நாட்டில் நடக்கும் சீர்கேடுகளுக்கு சினிமா தான் காரணம் என்று கூறினால், அதைப் புறக்கணிக்க யாரும் முன்வராதது ஒரு பரிதாபமான விஷயம்

910. தெரியாமல் கேட்கிறேன். தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தாமல் எப்படி ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க போகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.

911. நேர்மையான திறமைசாலி அரசியல் கட்சி ஆரம்பித்தால் மற்றவர் அவரைக் கெடுத்து விடுவர்.அவரே ஒரு கட்சியில் இருந்தால் கட்சி கெடுத்து விடும்.

912. ஒரு சிற்பியின் திறமையில் சிலை உருவாகிறது.ஒரு இயக்குனரின் திறமையில் நடிகர் உருவாகிறார்.யாரை பாராட்டுவது என்று பலருக்கு தெரிவதில்லை.

913. "அரவிந்தா ஸமேதா" தெலுங்கு திரைப்படம் பார்த்தோம். வன்முறை கூடாது என்று உபதேசம் செய்து விட்டு வன்முறையை மிக அதிகமாகக் காட்டும் படம்.

914. ஆளைக் கண்டு மயங்காதே ஊது காமாலை என்பார்கள். அழகுக்கும் நடிப்புக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. நமது மக்கள் அழகில் மயங்குகிறார்கள்.

915. திருமண நாள், பிறந்த நாள், திதி நாள் இவற்றை தவிர மற்ற நாட்களில் நானோ, என் மனைவியோ, குழந்தைகளோ கோயிலுக்கு செல்லும் பழக்கம் கிடையாது.

Tuesday, November 13, 2018

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்.

முகநூலில் நிமிடத்திற்கு ஒரு பதிவு வீதம் அரசியலைப் பற்றி பதிவுகள் வருகின்றன. படித்தவர்களும், பாமரர்களும், அரசியல் சார்பு உள்ளவர்களும், இல்லாதவர்களும் பதிவுகள் போடுகிறார்கள். அதைப் படித்து விட்டு பலர் பல விதமான கருத்துகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். 

நான் ஒரு எளியவன். 73 வயதான முதியவன். அரசியல் சார்பு இல்லாதவன். நான் கூறுவதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள். நாட்டுக்கு சேவை செய்யும் எண்ணம் உள்ளவர் ஒரு கட்சி ஆரம்பித்து, பொது மக்களிடம் நன்கொடை வாங்கி, கணக்கு வழக்குகளை சரியாக தணிக்கை செய்யப்பட்டு, தேர்தலில் தனது வேட்பாளர் சார்பில் செலவு செய்ய வேண்டும்.


வேட்பாளர் தனது சொந்தப் பணத்தை செலவு செய்யக் கூடாது. அப்படி செய்தால், தேர்தலுக்குப் பிறகு செலவு செய்த பணத்தை திரும்ப பெறுவதில் குறியாக இருப்பார். அங்கு தான் லஞ்சம் ஊழல் எல்லாம் ஆரம்பம் ஆகிறது.


உங்களுக்கு நன்றாகத் தெரியுமா? நீங்கள் ஆதரிக்கும் நபர் நேர்மையானவர், லஞ்சமோ ஊழலோ செய்யமாட்டார். அவரது கட்சிக்காரர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள், அவர் சொற்படி நடப்பார்கள் என்று உங்களால் உறுதியாகக் கூற முடியுமா? அப்படியென்றால் அவருக்கு ஓட்டுப் போடுங்கள்.


இந்த நாட்டில் எந்தத் தனி மனிதன் தனது கட்சியையும் வேட்பாளர்களையும் தனது கட்டுக் கோப்பில் வைத்திருந்து லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சியை தருவார் என்று நம்புகிறீர்கள். ஆனானபட்ட எம்ஜியார் பட்ட கஷ்டங்கள் உங்களுக்குத் தெரியாதா, மறந்து விட்டதா?


தெரியாமல் கேட்கிறேன். தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தாமல் எப்படி ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க போகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆளாளுக்கு எவரையாவது தலையில் தூக்கி வைத்து பேயாட்டம் ஆடுகிறீர்கள்.


அவர்  தேர்தலில் அளவுக்கு மீறி செலவு செய்ய மாட்டார் என்று தெரியுமா? அப்படி ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க முடியாத போது, ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன?. இங்கு நிலமை என்றும் மாறப் போவது இல்லையே?


இந்த திருநாட்டில், ஒரு நேர்மையான திறமைசாலி தனியாக அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவரைச் சுற்றி உள்ளவர்கள் அவரை நேர்மையாக இருக்க விடமாட்டார்கள். அவரே ஒரு அரசியல் கட்சியில் இருந்தால், அந்தக் கட்சி அவரை நேர்மையான வழியில் போக விடாது.


ஒரு புரட்சி வெடித்தாலே ஒழிய இந்த அரசியல்வாதிகள்  திருந்த மாட்டார்கள். ஓட்டுப் போட்டாலும் ஆபத்து, போடா விட்டாலும் ஆபத்து. பேசாமல் நோட்டாவில் ஒட்டைப் போட்டு விட்டு கிருஷ்ணா, ராமா என்று பேசாமல் இருங்கள். புரட்சி தானே வெடிக்கும். மாற்றம் வரும். நல்ல காலம் பிறக்கும்.


இதைப் படித்த பிறகும் உங்கள் கருத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று எனக்கு நன்கு தெரியும். இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று ஒரு நப்பாசை. விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா, அதை மாற்றுவது மிகவும் கஷ்டமான காரியம். பிறகு இறைவன் சித்தம்.

Monday, November 12, 2018

I HAVE A NAME

I was studying in 6th form in Board High School, Andipatti. in 1956 when I was 11.​ I was residing in Vaigai Dam. I was travelling to the school in a blue colour GMC van both in the morning and evening. One by name, Bose was also coming in the same van. His father was working as constable in the police dept. 

He was a senior, tall, stout and well built. He was arrogant because his father was a policemen. He never called me by my name but only by my caste name [ Iyer,ஐயரே ] and he belonged to a different community. This annoyed me very much. In spite of many requests, he never listened nor bothered. I was apprehensive whether other students would also start calling me like that.


One day, I complained to my father about him. Without understanding my feeling, he advised me not to move with him and to keep away from him. I told him that he was not my classmate nor my friend nor I moved with him. I also told him that in spite of my requests, he continued to call me by my caste and also about my apprehension that other students would follow suit. 


My father ignored my complaint. However, Bose never stopped calling me by caste. We again had an argument and he asserted that he would call me only like that and I could do whatever I might like to do. On that evening, after returning from school, I complained to my mother how much I was mentally disturbed and also wondered why father could not warn him. 


When my father returned home from office at 7 PM, on my behalf, my mother took up the matter with him during dinner. Then my father asked me where Bose's residence was and I told him the location. After dinner, my father washed his hands, put on his shirt, went out and returned after half an hour. I did not know what happened. On the next day, Bose cajoled me and started calling me by my name and not by my caste name.[ஐயரே]

Saturday, November 10, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 886 TO 900

886. பெண்கள் தங்களுடைய கற்பைப் பாதுகாக்க வேண்டும் என்று அலுக்காமல் கூறும் ஆண்கள் தங்களுக்கும் அதேபோல கற்பு உண்டு என்று நினைக்க வேண்டும்

887. திருமணமான ஆண்கள் தனது மனைவியைத் தவிர மற்ற பெண்களை தாய், சகோதரி, அல்லது மகள் என்று நினைக்கவேண்டும். அது ஆண்களின் கற்பு எனப்படும். 

888. திருமணம் ஆகாத ஆண்கள், பெண்களின் காலை முதலில் பார்க்க வேண்டும். காலில் "மெட்டி" இருந்தால், தாய் அல்லது சகோதரி மாதிரி கருத வேண்டும்.

889. பலவித கெட்ட குணங்களைக் கொண்டவர்கள் இறைவனைத் தரிசிக்க கோவிலுக்குச் செல்வதைப் பார்த்தால் அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை.

890. வெள்ளிக்கிழமை பெண்களுக்கு ஒரு விசேஷமான நாள். அதனால் அவர்கள் அன்று கோயிலுக்குப் போகிறார்கள்.ஆண்கள் கூட்டம் ஏன் அங்கு அலை மோதுகிறது?

891. கோவிலுக்கு இறைவனை தரிசனம் செய்யப் போகும் போது, நமது உடல் சுத்தமாகவும், மனது, வாக்கு இரண்டும் இறைவனை பற்றி மட்டுமே நினைக்கவேண்டும்.

892. எத்தனை மாத்திரை சாப்பிடுகிறோம் என்பதைப் பொருத்தது ஆரோக்கியம். குறைந்த மாத்திரை அதிக ஆரோக்கியம். அதிக மாத்திரை குறைந்த ஆரோக்கியம்.

893. பெண்டாட்டி பேச்சைக் கேட்டு பெற்றோர்களைத் தவிக்க விடுவதும் தவறு, பெற்றோர்கள் பேச்சைக் கேட்டு பெண்டாட்டியைத் தவிக்க விடுவதும் தவறு.

894. நீச்சல் கற்றுக் கொள்ள தண்ணீரில் இறங்கினால் தான் கற்றுக் கொள்ள முடியும். வெறும் தரையில் எவ்வளவு முயற்சி செய்தாலும் கற்க முடியாது.

895. ஒருவர் வாழ்க்கையில் கஷ்டப்படுவது சகஜம்.அதற்காக எல்லாவற்றையும் சோகமாகப் பார்க்கக் கூடாது.மனதை மாற்றி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.

896. எப்பொழுதும் பிறருக்குக் கொடுக்க வேண்டும். வாங்கவே கூடாது. நமது உள்ளங்கை கீழ் நோக்கியே இருக்கவேண்டும், மேல் நோக்கி இருக்கக் கூடாது.

897. பிரபலமானவர்களைக் கண்டால் ஒதுங்கிப் போகும் மனப்பான்மை எப்போது இந்த மக்களிடம்  வருகிறதோ அப்போது தான் இந்த நாடு உண்மையில் முன்னேறும்.

898. பண்டிகை நாளில் நான் இறந்து விடக் கூடாது என்று இறைவனிடம் வேண்டிக் கொள்வேன். என் சந்ததி அந்தப் பண்டிகையைக் கொண்டாட முடியாது என்பதால்

899. ஒவ்வொரு தலைமுறையும், அதற்கு முந்திய தலைமுறையை விட, அதிகம் படித்திருக்கிறார்கள், புத்திசாலியாக இருக்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள்.

900. தீபாவளிக்கு குழந்தைகள் பெற்றோர்களுக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். குழந்தைகளை ஆசீர்வதித்து ஒவ்வொருவருக்கும் பணம் கொடுக்க வேண்டும்.



Wednesday, November 7, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 871 TO 885

871. சைவர்கள் அஷ்டமி திதி வரும் நாளை கொகுலாஷ்டமி என்றும், வைஷ்ணவர்கள் ரோகிணி நட்சத்திரம் வரும் நாளை ஸ்ரீஜயந்தி என்றும் கொண்டாடுகின்றனர்

872. நமது இந்தியமுறை கக்கூஸ் தான் சிறந்தது. அடிவயிறு அழுந்த வேண்டும். மேல்நாட்டு முறைக் கக்கூஸ் உட்கார முடியாதவர்களுக்கு மட்டும் தான்.

873. ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்த ஒருவர், மற்ற கட்சிகளைச் சாடுகிறாரே தவிர, தன்னுடைய கட்சியின் சாதனைகளைப் பற்றிக் கூறுவதே இல்லை.

874. ஒரு காலத்தில் தேசம் முழுவதும் தமிழர்கள் பதவியில் இருந்தார்கள்.தமிழ், ஆங்கிலம்,ஹிந்தி எல்லாம் தெரிந்தது.இப்போது ஒன்றும் தெரியவில்லை

875. உச்ச நீதி மன்றத்தின் செயல்முறை, நீதிபதிகளின் சட்ட அறிவு, அதிகாரம், அணுகுமுறை,அங்கு வக்கீல்களின் நிலை இவைகளை அறிந்து கொள்வது நல்லது

876. கிராமத்தில் படிக்காதவன் அரைநிஜார் அணிந்தால் அதற்கு ஒரு மரியாதை,வெளி நாட்டிலிருந்து வந்த படித்தவன் அணிந்தால் அதற்கு ஒரு மரியாதை.ஏன்?

877. அவன் யார் தலையில் கை வைத்தாலும் எரிந்து போகவேண்டும் என்று அசுரனுக்கு சிவன் வரம் அளித்தார்.அவன் அவர் தலையிலேயே சோதிக்க விரும்பினான்

878. தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன், உங்களிலும் என்னிலும் இருப்பார் எனில், உங்களுக்கு புரிபவர், எனக்கு புரியாமல் இருப்பது ஏன்?

879. எண்ணும் இல்லை, எழுத்தும் இல்லை. இலக்கணமும் இல்லை, இலக்கியமும் இல்லை, தமிழும் இல்லை, ஆங்கிலமும் இல்லை, பேசவும் முடியாது.அது தங்லிஷ்

880. இறைவன் மீது நம்பிக்கை உள்ளவர்களை விட நம்பிக்கை இல்லாதவர்கள், அவர்களது நம்பிக்கையில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள் போலத் தெரிகிறது.

881. மனதுக்குப் பிடித்த ஒரு விஷயம் கிடைத்தால் அதை நெருங்கியவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் ஒருவருக்கு ஏற்பட வேண்டும்.

882. அதிகாரத்தின் சக்தியை அறியாத பாமரர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.அந்த அதிகாரத்தைக் கொடுத்தவர்களே அவர்கள்தான் என்பது வேடிக்கை.

883. நாம் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.நன்மை செய்ய முடியவில்லையா. ஒருவருக்கு தீமை செய்யாமல் இருப்பதே அவருக்கு நன்மை செய்தது போல ஆகும்

884. ஒருவருடைய பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையில், அவர் செய்யும் பாவம், புண்ணியம் மட்டுமே மிஞ்சும். அவருடன் கடைசி வரை வருவதும் அவைகளே.

885. என்னதான் சட்டப்படி மகளுக்கு சொத்தில் சமபங்கு கொடுத்தாலும், திருமணமான பின் பெற்றோர்கள் அவளுடன் நிரந்தரமாக வாழ்வதை விரும்புவதில்லை.


Tuesday, November 6, 2018

SELF RESPECT

It was 1966. I was 21. I just finished my degree. I got employment in the co-operative dept. of the Madras state Govt on a temporary basis as Junior Inspector of Coop Societies. The posting was at Pudukottai near Tiruchy. My uncle, father's elder brother, was living there with his family. 

He was a humble and pious man and he liked my father and me very much. He used to stay with us many times. His only daughter, my cousin sister, was of my age and we were close. We were studying in the same class in school and we used to vie with each other in getting more marks.


When I was about to leave, my father told me not to stay in his brother's house but to take up a room. He also told me to visit his brother and to seek their blessings. Later, he had helped his brother in getting his daughter married and also presented her with diamond ear and nose studs.


After 15 years in 1981, due to old age, his brother wanted to settle with his daughter in Nagpur. My father sent them to me at Madras and asked me to keep them for a week and to send them to Nagpur and also to give them some money. I sent them by sleeper in Ganga Kaveri express and gave him Rs. 300/ for pocket expenses with food and water for the journey. My father was happy.


I really wonder about my father, who was very close and also fond of his elder brother, asked me not to stay with them but to help them when they were in need. He used to advise me not to receive anything from anybody but only to give. In other words, my palm should always be downward [giving] and not upward [receiving]. 


When we stay with someone, we cannot keep our eyes closed. We may observe something unpleasant. We may be unhappy, we may try to interfere or we may try to advise. Nowadays, we do not mind about self-respect and we go and stay with anyone, without bothering about how close the relationship is, for our personal gains. Lifestyle has changed a lot.


In those days, even parents did not wish to stay with the married daughter. For the simple reason, they could not share the space with the SIL's parents. Even if they were elsewhere, they would not prefer to stay because they would be unhappy if there was a misunderstanding between their daughter and SIL or if the SIL treated their daughter badly. 


It is no better, in the case of the married son. That is why, in the Hindu dharma, it is advised that the father after fulfilling his duties to the family, should leave the mother with the children and go elsewhere to lead his own life as he pleases. If the mother is willing to come with him then he can take her also. This is called VANAPRASTHAM.

Monday, November 5, 2018

WRONG ANNOUNCEMENT / தவறான அறிவிப்பு

WRONG ANNOUNCEMENT

There was an announcement on the Radio.


"50 people got crushed at the Railway station, one escaped unhurt"


The TV station immediately sent a reporter to interview the person who escaped. 


The reporter asked him, "What happened? How 50 people got crushed?" 


The man replied, "Due to a small mistake in the announcement, the accident happened"


The reported asked, "What was the small mistake?"


The man said, "They announced that the train would arrive on platform 3 shortly. On hearing this, all 50 people moved from the platform to the nearby track to save themselves, but the train wrongly came on the track and they got killed."


The reporter then asked him, "How you escaped?


He said, "I was lying on the track to suicide myself. On hearing the announcement  I moved from the track to the platform. But the train did not come on the platform.as announced and I escaped."


தவறான அறிவிப்பு

புதுடில்லி வானொலி செய்தியில் ஒரு ஒலிபரப்பு. "ரயில் நிலையத்தில் ஐம்பது பேர் நசுங்கி சாவு. ஒருவர் உயிர் தப்பினார்". 

உடனே தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து ஒரு பெண்மணி ரயில் நிலையம் சென்று அந்த தப்பித்த நபரைப் பேட்டி கண்டார்.

"எப்படி இந்த விபத்து நடந்தது?

ஒலிபெருக்கியில் ஓர் தவறான அறிவிப்பினால் இந்த விபத்து நடந்தது.

என்ன தவறான அறிவிப்பு?

"சென்னை எக்ஸ்‌ப்ரெஸ் இன்னும்  சிறிது நேரத்தில் மூன்றாவது ப்ளாட்பாரத்திற்கு  வந்து சேரும் என்று அறிவித்தார்கள். உடனே எல்லோரும் ப்ளாட் பாரத்திலிருந்து ரயில் பாதையில் அமர்ந்து கொண்டார்கள். ஆனால் ரயில் ப்ளாட் பாரத்தில் வராமல் தவறுதலாக ரயில் பாதையில் வந்து எல்லோரையும் அரைத்து விட்டது.

நீங்கள் எப்படி உயிர் தப்பினீர்கள்?

நான் தற்கொலை செய்து கொள்வதற்காக ரயில் பாதையில் படுத்து இருந்தேன். அறிவிப்பை கேட்டவுடன் ப்ளாட்பாரத்தில் வந்து படுத்துக் கொண்டேன். ஆனால் ரயில், ப்ளாட்பாரத்தில் வராமல் தவறுதலாக ரயில் பாதையில் வந்து விட்டது. அதனால் உயிர் தப்பினேன்.


மனதில் தோன்றிய எண்ணங்கள் 856 TO 870

856. ராணுவத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கு, சம்பளத்தைத் தவிர்த்து, அவருக்கு அரசாங்கம் அளிக்கும் சலுகைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

857. கற்பனைக்கு எட்டாத, கண்ணுக்கு தெரியாத கடவுளை பற்றி கஷ்டப்பட்டு கற்பனை செய்யாமல், கஷ்டப்படுவோருக்கு கால் வயிறு கஞ்சி கொடுப்பது மேல்.

858. உங்கள் அனுபவம் எனக்கு இருக்க வேண்டும் என நினைப்பது தவறு. என் அனுபவம்  உங்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைப்பது அதைவிட பெரிய தவறு

859. கடவுள் பக்தி இரண்டு வகைப்படும். ஒன்று இளமையில் வருவது. மற்றது முதுமையில் வருவது. முதலாவது உறுதியானது. இரண்டாவது பயத்தில் வருவது.

860. போன தலைமுறையில் கண்டிப்பும் தண்டனையும் உண்டு. அடுத்த தலைமுறையில் கண்டிப்பும் அன்பும் உண்டு. இந்தத் தலைமுறையில் அன்பு மட்டும் உண்டு

861. வயது ஆக ஆக அறிவும் ஞானமும் வளர வேண்டும். நாலு பேருக்கு அறிவுரை சொல்லும் தகுதி வர வேண்டும். தகுதியற்றவர் பேச்சில் மயங்கக் கூடாது.

862. ஒருவருக்கு ஒருவர் கலந்து பேசாமல், உணராமல், பகிர்ந்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்தால் மனம் துருப்பிடித்து வீணாகிப் போவது நிச்சயம்.

863.கொடிது கொடிது வறுமை கொடிது, அதனிலும் கொடிது இளமையில் வறுமை. கொடிது கொடிது தனிமை கொடிது, அதனிலும் கொடிது முதுமையில் தனிமை. இறைவா.

864. தினசரி வாழ்க்கையில் நடப்பதைப் பார்த்து எனது மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. அவைகளை வார்த்தைகளாக மாற்றித் துணுக்குகளாக எழுதுகிறேன்.

865. பெரியவர்களை நாம் நமஸ்காரம் செய்தால் அவர்கள் ஆசீர்வதிப்பார்கள். அதனால் நமக்குப் புண்ணியம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பலனும் கிடையாது

866. பலதரப்பட்ட மக்கள், பலதரப்பட்ட இடங்களில், பலதரப்பட்ட சூழ்நிலையில், பலதரப்பட்ட எண்ணங்களுடன், பலதரப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

867. இன்று அமெரிக்காவில் தொழிலாளர் தினம். மரத்தில் இலை கூட அசையவில்லை. அவ்வளவு அமைதி. இந்தியாவில் மே தினம் எவ்வளவு கோலாகலமாக இருக்கும்.

868. இன்றைய தலைமுறையினரிடம் பணம் அதிகமாக இருக்கிறது. அதனால் அவர்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்ற அஹங்காரம் இருக்கக் கூடாது.

869. திருமணமான மகளின் வீட்டில் என் பெற்றோர்கள் எப்போதும் தங்கியதில்லை. அதை நான் அப்போது ஒப்புக்கொண்டதில்லை. இப்போது ஒப்புக்கொள்கிறேன்.

870. ஒருவருடைய நியாயமில்லாத செயல்களைப் பார்க்கும்போது மனம் வேதனைப்படுகிறது. யார் எப்படிப் போனால் என்ன என்று சும்மா இருக்க முடியவில்லை


Saturday, November 3, 2018

அலமாரியில் இருந்து

1. ஆடி வெள்ளிக்கிழமை.

இன்று ஆடி வெள்ளிக்கிழமை. அதுவும் கடைசி வெள்ளிக்கிழமை. ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் எது தவறினாலும் என் மனைவி ஒரு பாயசம் செய்து இறைவனுக்கு நெய்வேத்யம்  செய்வது தவறாது. 


எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. பிரசாதம் கருதி கொஞ்சம் சாப்பிடுவேன். இன்று ஜவ்வரிசி பால் பாயசம். சேமியா பால் பாயசமாக இருந்தால் குழந்தைகள் நூடுல்ஸ் போல விரும்பி சாப்பிடுவார்கள். 


எனக்கு திரு சாவியின் "வாஷிங்டன்இல் திருமணம்" நாவல் ஞாபகம் வந்தது. அமெரிக்கர்கள் ஜவ்வரிசியை ஃபோர்க் கொண்டு சாப்பிடும் கலாட்டாவை ரசித்தது நினைவுக்கு வந்தது.


2. வியாபாரத் திறமை.

கோதுமை, கேழ்வரகு, புழுங்கல் அரிசி, உடைத்த கடலை நான்கையும்  சம அளவில் தனித்தனியாக மிதமாக வறுத்து , கலந்து, சிறிது ஏலம் சேர்த்து மிஷினில் நைசாக அரைத்து, சலித்து, பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு சக்தியும்,விட்டமீன்களும் நல்ல தாது பொருட்களும் கிடைக்கும். செலவும் குறைவு. 

அதையே ஒரு பாட்டிலில் அடைத்து, ஒரு வயதில் நாலு அடி வளர்வது போலவும், படிக்காமலேயே நூறு மார்க் வாங்குவது போலவும், ஒரே பந்தில் வீரட் கோலியை வீட்டிற்கு அனுப்புவது போலவும் காட்டி அநியாய விலையில் நம் தலையில் கட்டுவது தான் வியாபாரத் திறமை. நாம் எல்லோரும் வாங்குவோம்  என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது.

3. மூட நம்பிக்கை.

ஒரு ஜென் ஸந்யாஸி தியானத்தில் அமர்ந்தார். அப்போது ஒரு பூனை அங்கும் இங்கும் ஓடி அவருக்கு இடைஞ்சல் கொடுத்தது. அவர் தனது சிஷ்யர் ஒருவரை கூப்பிட்டு அந்தப் பூனையை  ஒரு தூணில் கட்டச் சொன்னார்.


சிறிது காலம் சென்று, அவர் இறந்த பிறகு அவருடைய சிஷ்யர் தியானம் செய்யும் போது அதே போல பூனையை தூணில் கட்டச் சொன்னார். 


பிறகு தியானம் செய்வதற்கு முன்பு பூனையைத் தூணில் கட்ட வேண்டும் என்ற நம்பிக்கை வழக்கத்திற்கு வந்தது.

4. சினிமாவில் நடிப்பது பல வகைப் படும். 


1. அளவாக நடிப்பது, 

2. அளவுக்கு மீறி நடிப்பது, 
3. இயக்குநர் சொல்லிக் கொடுத்தபடி நடிப்பது, 
4. சில படங்களில் மட்டும் சிறப்பாக நடிப்பது, 
5. சிறந்த கதையில் நடிப்பது, 
6. இயற்கையாகவே நடிப்புத் திறமை இருப்பது. 

அழகுக்கும் நடிப்புக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. தமிழ் திரைப்படங்களில் இயற்கையாகவே சிறந்த நடிப்புத் திறமை உள்ள என்னைக் கவர்ந்த பத்து நடிகர்கள் இவர்கள்.


1. டி. எஸ். பாலையா.
2. எஸ். வி. ரங்கா ராவ்.
3. எஸ். வி. சுப்பையா.
4. எம். ஆர். ராதா.
5. ஜே. பி. சந்திரபாபு.
6. நாகேஷ்.
7. வடிவேலு.
8. பிரகாஷ் ராஜ்.
9. எம். என். நம்பியார்.
10. மனோரமா.
உங்கள் அபிப்பிராயம் மாறுபட்டு இருக்கும் என்று எனக்கு நன்கு தெரியும்.

5. தீபாவளி மலரும் நினைவுகள் 


தீபாவளி அன்று காலை 4 மணிக்கு உங்களை கண்டிப்பாக எழுப்பி, கோலம் போட்ட ஒரு மரப் பலகையில் உட்கார வைத்து, மிளகு, மிளகாய், வெற்றிலை போட்ட நல்லெண்னை ஒரு ஸ்பூன் உங்கள் தலையில் வைத்து, வயதான பெண்மணி ஒருவர் கௌரி கல்யாணம் வைபோகமே என்று பாட, தீபாவளி களை கட்ட ஆரம்பிக்கும்.,


பிறகு நீங்கள் உடலில் எண்ணை தேய்த்து, வெந்நீரில் குளித்து, புதிய ஆடை அணிந்து, இறைவனைத் துதித்து, பெரியவர்களை நமஸ்காரம் செய்து, அம்மா கொடுக்கும் லேகியத்தை சாப்பிட்டு, பிறகு காரம், இனிப்பு சாப்பிட்டு, விடியும் வரை பட்டாசு வெடிக்கப் போய் விடுவீர்கள்.


இது மாதிரி நான்  ஒரு சிறுவனாக, பெரியவனாக, அண்ணனாக, கணவனாக, அப்பாவாக, தாத்தாவாக இதுவரை 65 தீபாவளிகளை சந்தித்து இருக்கிறேன். அந்த மகிழ்ச்சிகரமான நாட்கள் இனி திரும்பி வராது.

Friday, November 2, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 841 TO 855

841. தலையில் தூசு படியாமல் இருக்க ஒத்தைப் பின்னல், இரட்டைப் பின்னல் என்று பெண்கள் தங்கள் முடியை அலங்காரம் செய்த நாட்கள் மலையேறிவிட்டது.

842. நியூயார்க் தொ சென்னை வரும் விமானம் 16000 கிமீஐ 45000 அடி உயரத்தில் -50டிகிரி ஸீஇல் மணிக்கு 1000 கிமீ வேகத்தில்16 மணியில் கடக்கிறது.

843. எல்லா நீதிபதிகளையும் நியமிப்பது, வழக்குகளை ஒத்திவைப்பதை குறைப்பது, குறித்த காலத்தில் தீர்ப்பு சொல்வது, இவை வழக்குகளைக் குறைக்கும்.

844. ஒருவருக்கு வருவாய் அதிகம் ஆகும்போது, தான் மட்டும் சுகமாக வாழவேண்டும் என்ற எண்ணம் வரும்போது, தனியாக, சுதந்திரமாக வாழ ஆசை வருகிறது.

845. கூட்டுக் குடும்பங்களால் பலவித நன்மைகள் உண்டு. ஒருவருக்கு ஒருவர் நட்பு, ஆலோசனை, உதவி, குறைந்த செலவு, பாதுகாப்பு, சந்தோஷம் எல்லாமே.

846. மனைவியுடன் வீட்டு வேலைகளில் பங்கு கொள்ள விருப்பமில்லாத கணவன்மார்கள் ஏன்  அவர்களை வேலைக்கு அனுப்பி அவர்கள் பணத்தில் வாழ வேண்டும்?

847. காய்கறிகள் செடியின் ஒரு பகுதி. அதைப் பறிப்பதால் செடி இறப்பதில்லை. முட்டை கோழியின் பகுதி இல்லை. அதை உண்பதால் கோழிக்குஞ்சு இறக்கிறது

848. இறைவனை அடையும் வழி. கடமையைச் செய்வது, ஆசையைத் துறப்பது, ஞானத்தை அடைவது, தியானம் செய்து பக்தி செலுத்துவது. வேறு வழி எதுவும் இல்லை.

849. பேசுவதை நிறுத்தி விட்டேன். இனிமேல், யாராவது ஏதாவது கேட்டால் பதில் சொல்வது ஒன்றைத் தவிர, வேறு பேச்சு பேசுவது இல்லை என்று தீர்மானம்.

850. அறுபது வயது வரை வாழும் வாழ்க்கையில் பணத்தைத் தேடுகிறோம். அதன் பிறகு வாழும் வாழ்க்கையில் நிம்மதியைத் தேடுகிறோம். இரண்டுமே கஷ்டம். 

851. அறுபது வயதுக்கு முன் ஒருவருக்கு நிகழ்காலமும் எதிர்காலமும் உண்டு. ஆனால் அறுபது வயதிற்குப் பின் இறந்த காலமும் நிகழ்காலமும் தான் உண்டு

852. உங்களுக்கு எது தேவையோ, அதை நன்றாக யோசித்து, முடிவு செய்து, இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். ஒருவேளை, கிடைத்தாலும் கிடைத்து விடும்.

853. யாருடனும் சண்டை போடுவது தவறு. அப்படிப் போட்டாலும் அவருடைய வயது, அறிவு, உடல் வலிமை, பணபலம் எல்லாம் நமக்குச் சமமாக இருக்க வேண்டும்.

854. காலையில் சீக்கிரம் எழாததால் அப்பாவிடம் தண்டனை அடைந்த நாட்கள் அன்று. சீக்கிரம் எழுவதால் குழந்தைகளிடம் தண்டனை அடையும் நாட்கள் இன்று.

855. தன்னுடைய சந்தோஷத்திற்காக மட்டும் வாழ்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.  பிறருடைய சந்தோஷத்திற்காக வாழ்பவர்கள் கஷ்டப்படுகிறார்கள். 

Thursday, November 1, 2018

நானும் எனது நெருங்கிய நண்பனும்.

1. நான் இளையவன். அவர் மூத்தவர்.

2. நான் ஐயர் அவர் முதலியார்.

3. நான் நல்ல நிறம். அவர் கோதுமை நிறம்

4. நான் சைவம் அவர் அசைவம்.

5. நான் பட்டதாரி. அவர் எஸ்எஸ்எல்ஸி.

6. எனக்கு இறை நம்பிக்கை உண்டு.  அவருக்குக் கிடையாது.

7. எனக்கு இனிப்பு பிடிக்காது.  அவர் இனிப்பு பைத்தியம்.

8. நான் சிக்கனம்.  அவர் செலவாளி.

9. எனக்கு இரண்டு குழந்தைகள். அவருக்கு மூன்று.

10. எனக்கு பெண் குழந்தை உண்டு.  அவருக்கு கிடையாது.

11. எனக்கு பெற்றோர் இருந்தனர். அவருக்கு இறந்துவிட்டார்கள்.

12. எனக்கு சம்பளம் ரூ 1000. அவருக்கு ரூ 1500.

13. அவர் சிவாஜி கணேசன் ரசிகர். எனக்கு குறிப்பாக யாரையும் பிடிக்காது.

14. அவர் கலைஞர் கருணாநிதியின் பக்தன். நான் பரமாச்சாரியரின் பக்தன். 

15. அவர் அரசியல் பேசுவார். நான் பேச மாட்டேன்

16. அவர் அரசியல் மீட்டிங் போவார். நான் போக மாட்டேன்.

17. நான் காமகோடி படிப்பேன் அவர் முரசொலி படிப்பார்.

18. நான் கடன் வாங்கமட்டேன். அவர் கடன் வாங்குவார்.

19. அவருக்கு பிராமணர்களை பிடிக்காது. எனக்கு எல்லோரையும் பிடிக்கும்.

20. அவர் டீ  கடையில் டீ குடிப்பார்.  நான் குடிக்க மாட்டேன்.

21. அவருக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி உண்டு. எனக்குக் கிடையாது.

22. நான் உயிரோடு இருக்கிறேன். அவர் இறந்து விட்டார்.

நாங்கள் 1967 இல் இருந்து 1997 வரை முப்பது வருடங்கள் இணை பிரியாத தோழர்கள். இருவரும் சேர்ந்து பஸ் அல்லது சைக்கிளில் வருவோம். தினம் சந்திப்போம். பல விஷயங்களைப் பற்றி பேசுவோம். ஒரு நாள் கூட சண்டை போட்டது கிடையாது. ஒருவர் நம்பிக்கையில் ஒருவர் தலையிட்டது கிடையாது. ஒருவரை ஒருவர் மாற்ற முயற்சி செய்தது கிடையாது. அவரது இளைய மகனும் எனது மகளும் பொறியியல் கல்லூரியில் ஒரே வகுப்பு. இப்போது அவரை நினைத்தாலும் என் கண்கள் கலங்குகின்றன.