Saturday, October 13, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 826 TO 840

826. ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாட்டிற்குக் கஷ்டப்பட்ட நாட்கள் எனக்கு உண்டு.பசி அறிந்தால் தான் கஷ்டம் தெரியும்,அறிவு வரும்,ஞானம் வளரும்

827. விலைக்கு மேலே விலை வைத்தாலும் மனிதன் விலை என்ன? உயிர் விட்டு விட்டால், உடல் சுட்டு விட்டால் அதில் அடுத்த கதை என்ன? சிறந்த வரிகள.

828. ஒருவர் எந்த அளவுக்கு பெரிய ஆளாய் இருக்கிறாரோ,அந்த அளவுக்கு அடி பலமாய் இருக்கும்,அவர் தனது நிலையில் இருந்து சிறிது தவறி விழுந்தால்.

829. எங்கு சென்றாலும் தேவை அறிந்து, நேரம் அறிந்து, பசி அறிந்து, ருசி அறிந்து என் மனைவி எனக்கு உணவு கொடுத்து விடுவாள். எனக்கென்ன கவலை?

830. சம வயதில் உள்ள இருவரை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது, பேசக் கூடாது. அது எதிர்மறையான விளைவுகளைத் தான் நிச்சயம் உண்டாக்கும்.

831. எவ்வளவோ முயற்சி செய்து விட்டேன். உனக்கும் பேபே, உங்க அப்பனுக்கும் பேபே என்கிறது. வழியே தெரியவில்லை எனக்கு. வளரும் தொப்பையை குறைக்க

832. எந்த இடத்திலேயும் நானாக எதையும் எடுத்து/கேட்டு சாப்பிடும் பழக்கம் கிடையாது. அவர்களாக கொடுக்கும் பழக்கமும் இல்லை. திண்டாட்டம் தான்.

833. பார்ப்பது, கேட்பது, ருசிப்பது, பேசுவது, உணர்வது எல்லாம் மிக குறைந்து விட்டன. மீதம் இருப்பது நினைப்பது மட்டும்.அது எவ்வளவு நாட்களோ?

834. தேவை அறிந்து, நேரம் அறிந்து, பசி அறிந்து, ருசி அறிந்து தாய் தந்தையர்க்கு உணவு அளிப்பது குழந்தைகளின் கடமை. இறந்தபின் கதறி பயனில்லை.

835. மீதமுள்ள வாழ்நாள் எப்போது முடியும் எனத் தெரியாமல் கதறும் எத்தனையோ வயதானவர்களில் இந்தக் கிழவனும் ஒருவன். இறைவா காதில் விழவில்லையா?

836. ஒரு போதும் யாரையும் குறை கூறி எழுத/பேசக் கூடாது. எப்போதும் நல்லதை நினைக்க வேண்டும், நல்லதை சொல்ல வேண்டும், நல்லதை செய்ய வேண்டும்.

837. நகைச்சுவை உணர்வு மிக முக்கியம். ஆனால் சீரியஸ் ஆன விஷயத்தில் தமாஷ் செய்வதும், நகைச்சுவையான இடத்தில் சீரியஸ் ஆக இருப்பதும் சரியல்ல.

838. பிறருக்கு நல்லது செய்வது என்பது ஒரு உன்னதமான செயல். ஆனால் நல்லது செய்கிறோம் என்று கர்வப்படுவது அதனால் ஏற்படும் பலனை அழித்து விடும்.

839. பல ஊர்களையும், மக்களையும், மொழிகளையும், பண்பாடுகளையும், வாழ்க்கை முறைகளையும் சந்திக்கும் போது, நான் இந்தியன் என்ற உணர்வு வருகிறது.

840. தனக்கு சாதகமாக இருந்தால் ஒரு விஷயத்தை நம்புவதும், பாதகமாக இருந்தால் அதை நம்பாததும் மனிதனின் இயற்கையான குணம். இது எப்படி வந்ததோ !!!



Friday, October 12, 2018

நான் ஒரு மாதிரியான பேர்வழி சார்

1. நான் சிக்கன பேர்வழி. கணக்கு எழுதும் போது.வரவுக்கும் செலவுக்கும் மீதிக்கும் ஒரு ரூபாய் வித்யாசம் வந்தாலும் மண்டையை உடைத்து கொள்வேன்.

2. நான் ஒரு சந்தேகப் பேர்வழி. அலுவலக அதிகாரியைப் போல தவறு கண்டு பிடிப்பதில் குறியாக இருப்பேன். அதனால் எனக்கு நெருங்கியவர்கள் குறைவு.

3. நான் டிசிப்ளின் பேர்வழி. வைத்த பொருள் வைத்த இடத்தில் தவறாமல் இருக்க வேண்டும். வேறு இடத்தில் இருந்தால் எனக்கு துளியும் பிடிக்காது.

4. நான் ஜாக்கிரதை பேர்வழி. எதையும் யோசித்து செய்வேன். சிலர் வாழ்க்கை அனுபவிக்க என்பார்கள். அவர்களைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது.

5. நான் கடிகார பேர்வழி. நேரம் தவறாமை மிக முக்கியம். ஒவ்வொரு வேலையும் நேரப் பிரகாரம் செய்ய வேண்டும். இல்லாவிடில் மண்டை வெடித்துவிடும்.

6. நான் பிடிவாதப் பேர்வழி. செலவு செய்வதிலும், முதலீடு செய்வதிலும் திட்டமிட்ட இலக்கை எப்படியும் அடைந்தே தீருவது என்கிற பிடிவாதம் உண்டு

7. நான் மரியாதைப் பேர்வழி. பெரியவர்களுக்கு மரியாதை காட்ட வேண்டும். கால் மேல் கால் போடுவது, அலட்சியமாகப் பேசுவது எனக்குப் பிடிக்காது.

8. நான் திட்டமிடும் பேர்வழி. தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர மேலும் வாழ்க்கை திட்டங்கள் போட்டு சரி பார்ப்பது எனது நம்பிக்கை.

9. நான் ஒரு எளிமை பேர்வழி. படாடோபமான உடை, வாய்ச் சவடால் பேச்சு, கெட்ட வார்த்தைகளை உரக்க பேசுவது போன்ற நற்குணங்கள் என்னிடம் கிடையாது.

10. நான் ஒரு சமாதானப் பேர்வழி. சண்டை போடுவது எனக்குப் பிடிக்காது. என்மீது தவறு இருந்தால் ஒரு மணி நேரத்தில் சமாதானம் செய்து விடுவேன்.

11. நான் ஒரு சாந்தப் பேர்வழி. கோபமே வராது எனக்கு. சத்தம் போட்டு கத்துவது இல்லை. அவர்களுக்கு அறிவில்லை என்று நினைத்து விட்டு விடுவேன்.

12. நான் ஒரு கூண்டுப் பேர்வழி. எவ்வளவு நாட்கள் ஆனாலும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டின் உள்ளேயே அடைந்து கிடக்க என்னால் முடியும்

13. நான் அதிசய பேர்வழி. ஐபோன், டெபிட் கார்ட், க்ரெடிட் கார்ட், ஏசி கார், ரயில், விமான பயணம் விரும்பாத, செலவு செய்யாத ஜீவராசி நான் தான்.

14. நான் ஒரு உல்லாசப் பேர்வழி. எனது சக்திக்குள், வரவுக்குள் எவ்வளவு சந்தோஷமாக வாழ முடியுமோ அந்த அளவு சந்தோஷமாக இருக்க முயற்சிப்பேன்.

15. நான் சங்கீதப் பேர்வழி. காலையில் ஒரு பாட்டு மனதில் தோன்றி விட்டால் நாள் முழுக்க அதே பாடலை எனது வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.



Thursday, October 11, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 811 TO 825.

811. நமது கஷ்டங்களுக்கு நாம் தான் காரணம். ஏதோ ஒரு நிலையில் தெரியாமல் தவறு செய்து விட்டோம்.நமது தவறான எண்ணங்களும் மனோபாவமும் தான் காரணம்

812. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காகக் கஷ்டப் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தீர்வு அவர்கள் கையில் தான் இருக்கிறது. மற்றவரிடம் இல்லை.

813. தந்தை இல்லாதவர்கள் அமாவாசை,தமிழ் மாத பிறப்பு,க்ரஹந காலத்தில் தனது பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும்

814. தேளுக்கு மணியம் கொடுத்தால் நாழிக்கு நாழி கொட்டும் என்பது முதுமொழி.தகுதி இல்லாதவர்க்கு மணியம் ஏன் கொடுக்கணும்,பிறகு வருத்தப்படணும்.

815. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம். பல நல்ல செயல்களில் ஒரு கெட்ட செயல். பல கெட்ட செயல்களில் ஒரு நல்ல செயல். எல்லாம் ஒரே விளைவு தான்.

816. நிறைய பொக்கிஷங்கள் இருந்தால் சந்தோஷம். சிறந்த மதங்கள், மொழிகள் இருந்தால் வருத்தப் படுகிறோம், சண்டை போடுகிறோம். மாற்றி யோசியுங்கள்.

817. நம் நாட்டில் பல மதங்களும், சாதிகளும், மொழிகளும் இருப்பதால் தான் நாம் நமக்குள் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்

818. நாய் மனிதனுடன் நட்பாக இருக்கிறது.ஆனால் நாயுடன் சண்டை போடுகிறது.மனிதன் நாயுடன் நட்பாக இருக்கிறான்.ஆனால் மனிதனுடன் சண்டை போடுகிறான்.

819. 2017 உலக ஜனத்தொகையில் கிருஸ்தவர்கள்238 கோடி,முஸ்லிம்கள்180 கோடி,ஹிந்துக்கள்110 கோடி.ஹிந்து மதத்துக்கு மாற முடியாது.மாற்ற முடியாது.

820. கூந்தல் தலையில் இருக்கும் வரை தான் அதற்கு மதிப்பு,மரியாதை.கீழே விழுந்தால் வேறு பெயர். உணவிலோ,வாயிலோ அகப்பட்டால் அதன் மீது வெறுப்பு

821. நமது உடலில் இருக்கும் ஆத்மா தான் இறைவனுக்கும், நமக்கும் உள்ள ஒரே தொடர்பு. யாராவது கொஞ்சம் வால் ஆட்டினாலும், ஒட்ட நறுக்கி விடுவான்.

822. ஒவ்வொரு வினாடியும் நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதை இறைவனின் பிரதிநிதியால் பதிவு செய்யப் படுவதை அறியாமல் வாழ்கிறோம்.

823. நாற்பது வயதுக்குள் ஒருவர் உணவு பழக்கத்தை கட்டு படுத்தவில்லை என்றால், தானும் கஷ்டப்பட்டு பிறரையும் கஷ்டப்படுத்துவார் என்பது உறுதி.

824. ஒரு பதினாலு வயது சிறுவன் காலை ஒன்பது மணிக்கு இஷ்டமில்லாமல் படுக்கையை விட்டு எழுந்து கண்ணை இடுக்கி கொண்டு முதலில் தேடுவது செல்போன்.

825. உங்கள் கற்பனையில் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி ஆங்கிலத்தில் அல்லது தமிழில் ஒரு நாலு பாரா எழுதிப் பார்த்தால் பிறகு அதன் கஷ்டம் தெரியும்.

நமஸ்காரம் புனிதமானது.

1. நமஸ்காரம் பண்ணுவதின் தத்துவம் சரணாகதி. நமஸ்காரம் பண்ணும் அளவுக்கு தகுதி உள்ள ஒருவரை, எதிர்ப்பது, மரியாதை இல்லாமல் பேசுவது கூடாது.

2. நமஸ்காரம் புனிதமானது. நமஸ்காரம் செய்ய வேண்டிய இடத்தில் வணக்கம் சொல்லிப் பலனில்லை. வணக்கம் சொல்லும் இடத்தில் நமஸ்காரம் செய்வது தவறு

3. தாய் தந்தையை நமஸ்காரம் செய்யும் போது, நமது நெற்றி அவர்களுடைய பாதத்தில் நன்கு படும்படி வைத்து மனப்பூர்வமாக நமஸ்காரம் செய்ய வேண்டும்

4. நமஸ்காரம் கிழக்கு, மேற்கு திசையில் செய்ய வேண்டும். வடக்கு பார்த்து செய்யக் கூடாது. பித்ருக்களுக்கு தெற்கு பார்த்து செய்ய வேண்டும்.

5. அண்ணனின் மனைவி [மன்னி] நம்மை விட வயது குறைந்தவராக இருந்தாலும் அண்ணனுடன் சேர்ந்து நின்று அவர்களை நமஸ்காரம் செய்ய வேண்டியது முறை.

6.திருமணமானவர்கள் முடிந்த வரையில் தம்பதிகளாக, தம்பதிகளை நமஸ்கரிக்க வேண்டும். ஆண் இடது புறமும், பெண் வலது புறமும் இருக்க வேண்டும்.

7. கோயிலில் இறைவனை நமஸ்காரம் செய்யும் போது, துவஜஸ்தம்பத்துக்குப் பின்புறம் தான் நமஸ்காரம் செய்ய வேண்டும். நடுவில் செய்யக் கூடாது.

8. கோயிலில் இறைவனை மட்டும் தான் நமஸ்காரம் செய்ய வேண்டும். வேறு யாரையும் எந்தக் காரணம் கொண்டும் நமஸ்காரம் செய்யக் கூடாது. அது பாபம்.

9. தாய், தந்தை, ஆசிரியர், தெய்வம், மாமனார், மாமியார், அண்ணா, மன்னி தவிர யாரையும் நமஸ்காரம் செய்ததில்லை.எனக்கு செய்வதை விரும்புவதில்லை


Wednesday, October 10, 2018

கண்ணா, கருமை நிறக் கண்ணா !!

நான் பிறந்த உடன் எனக்குக் கிருஷ்ணமூர்த்தி என்றுதான் பெயர் வைத்தார்கள். நான் அழகாக இருந்த காரணத்தினாலோ அல்லது அதிகமாக விஷமம் செய்ததாலோ என்னைக் கண்ணன் என்று அழைத்தனர். 

என்னைப் பள்ளியில் சேர்க்கும்போது என் தகப்பனார் அதே பெயரைக் கொடுத்து விட்டார். பிறகு கண்ணன் என் பெயராக மாறிவிட்டது. என் பெயர் எல்லோருக்கும் பிடித்தமான பெயர். அதுவும் குறிப்பாக கவிஞர்களுக்கு மிகவும் பிடிக்கும்.. 


பக்தியோ, காதலோ, சந்தோஷமோ, வருத்தமோ எதுவானாலும் கண்ணனை நினைத்துப் பாடினால் மனம் லேசாகும். எனது பெயர் எவ்வளவோ திரைப்படப் பாடல்களில் இடம் பெற்று இருக்கிறது. அவைகளை உங்களால் வரிசைப் படுத்திக் கூற முடியுமா?


1. கங்கை கரை தோட்டம் -  [வானம்பாடி ]


2. எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி  நான் என்றான் -(படிக்காத மேதை 


3. கோபியர் கொஞ்சும் ரமண (திருமால் பெருமை ] 


4. கேட்டதும் கொடுப்பபவனே -  (தெய்வ மகன் ] 


5. புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் -  (இரு கோடுகள் ] 


6. காக்கை சிறகினிலே நந்தலாலா [திருமால் பெருமை / ஏழாவது மனிதன் ] 


7. காவிரி கரையின் தோட்டத்திலெ  [இரு வல்லவர்கள்]


8. கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல (வெண்ணிற ஆடை ] 


9. கண்ணா கருமைநி கண்ணா - [நானும் ஒரு பெண் ]


10. கண்ணான கண்ணனுக்கு அவசரமா (ஆலய மணி ] 


11. கண்ணன், மனநிலையில் தங்கமே தங்கம் (தெய்வத்தின்  தெய்வம் ] 


12. கண்ணனை நினைக்காத நாளில்லையே -  (சீர்வரிசை ] 


13. கண்ணன் வருவான் கதை சொல்லுவான் -  (பஞ்சவர்ணக்கிளி  ] 


14.கண்ணன் பிறந்தான்,  எங்கள் கண்ணன் பிறந்தான் -[பெற்றால் தான் பிள்ளையா ]


15. கண்ணன் பிறந்த வேளையிலே அந்த தேவகி இருந்தால் காவலிலே (புகுந்த வீடு ] 


16. கண்ணனுக்கெத்தனை கோபமோ  [வேட்டைக்காரன் ]


17. கண்ணன் வந்தான், இங்கே கண்ணன் வந்தான் (ராமு ] 


18. நீலவண்ண கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன் (மல்லிகா ] 


19. யமுனா நதி இங்கே  ராதை முகம் இங்கே  கண்ணன் போவதெங்கே  (கௌரவம் ] 


20. கோகுத்தில் கண்ணன் -  (கோகுத்தில் சீதை ] 


21. காற்றோடு குழலின் நாதமே..கண்ணன் வரும் நேரம்  (கோடை மழை ]  


22. கண்ணன் வந்து பாடுகின்றான் காலம் எல்லாம் (இரட்டைவால் குருவி 

23. யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே  (தளபதி ] 


24. சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ [வாழ்க்கைப் படகு ]


25. சின்கண்ணன் அழைக்கிறான்  [கவிக்குயில் ]


26. பிருந்தாவனத்துக்கு  வருகின்றேன் [லக்ஷ்மி கல்யாணம் ]


27. கண்ணன் முகம் காண காத்திருந்தாள்  ஒரு மாது  [ஆயிரம் ஜென்மங்கள் ]


28. ராதைக்கேற்ற கண்ணனோ  [சுமைதாங்கி ]


29. நீலவண்ண கண்ணா வாடா, நீ யொரு முத்ம் தாடா [மங்கையர் திலகம் ]


30. தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு [தங்க பதக்கம்]


31. ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே [கனி முத்து பாப்பா ]


32. கண்ணுக்கு குமேது, என் கண்ணா  [கர்ணன்]


33. என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா  [  யார் நீ ]


34. அள்ளித்தண்டு  காலெடுத்து  அடிமேல் அடியெடுத்து[ காக்கும் கரங்கள் ]


35. காத்திருப்பான் கமலக் கண்ணன். அங்கே [ உத்தம புத்திரன்]


36. கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் [மாணவன் ]


37. வெண்ணிலா நேரத்திலே வேணு கானம் (அவசர கல்யாணம் ] 


38. கண்ணா நீயும் நானுமா (கெளரவம்)


39. கண்ணணுக்கு கோபமென்ன ( அன்னபுரணி ]


40. ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை வருவான் கண்ணன் என நினைத்தேன் நடக்கவில்லை  [பணத்தோட்டம் ]

Tuesday, October 9, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 796 TO 810

796. தனது வாழ்க்கையை சீராக, நேர்மையாக வாழ்ந்தாலே போதும். மற்ற எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் ஒருவருக்கு இல்லை.

797. சுருக்கமாக கூறினால், எனக்கு என்னுடைய மதம், அதன் கோட்பாடுகள், நம்பிக்கைகள் தான் முக்கியம். மற்ற மதங்களைப் பற்றிய கவலை எனக்கு இல்லை.

798. நான் கோயிலுக்கு செல்லும் பழக்கம் கிடையாது' யாராவது வற்புறுத்தினால் போவது வழக்கம். பக்தி, சிரத்தை, தியானம் எல்லாம் வீட்டில் தான். 

799. என்னிடம் அன்பு காட்டுபவர்களுக்கு நான் இரண்டு பங்கு அன்பைத் தருகிறேன். வெறுப்பு காட்டுபவர்களுக்கு இரண்டு பங்கு வெறுப்பைத் தருகிறேன்

800. நம்மிடையே ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான வாழ்க்கைச் கூழலில் வாழ்கிறார்கள். அதற்குத் தகுந்தாற்போல தான் ஒருவருடைய மனோபாவமும் அமையும்.

801. அமெரிக்காவில் நாய் என்று சொல்லக் கூடாது. பெயர்,அவன்,அவள் என்று சொல்ல வேண்டும். நாயைப் பாதுகாக்கிறார்கள். தாயைப் பாதுகாப்பது இல்லை.

802. நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் வராது. அது அவர்கள் வாழும் வாழ்க்கையை பொருத்தது. அடையும் சந்தோஷத்தை பொருத்தது. குழந்தை மனது வேண்டும்

803. கறுப்புப் பணம்,பினாமி சொத்து,கற்பழிப்பு இந்த குற்றங்களுக்கு மரண தண்டனை.லஞ்சம் ஊழலுக்கு ஆயுள் தண்டனை விதித்தால் குற்றங்கள் குறையும்

804. வயதான காலத்தில் கணவன் மனைவி இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தாமல் குழந்தைகள் மேல் கவனம் செல்லும் போது மனஸ்தாபம் வருகிறது.

805. அநேக தம்பதிகள் வயதான காலத்தில் ஒற்றுமையின்றி வாழ்கிறார்கள். சிறிது காலம் ஒருவரையொருவர் பிரிந்து இருந்தால் எல்லாம் சரியாகி விடும்.

806. நான் பரமாச்சாரியாரின் உபதேசங்களைப் படித்துத் தெளிந்தவன், வாழ்ந்தவன். அவைகளைப் பதிவாகப் போட்டால் ஒரு 5 பேர்கள் கூடப் படிக்கவில்லை. 

807. பட்டம் என்பது ஒருவருடைய அறிய செயலுக்காக அரசாங்கம் வழங்குவது.ஆனால் ஒரு அரசியல் கட்சியில் மட்டும் தாங்களே பட்டம் அளித்து கொள்வார்கள்

808. தொலைகாட்சி நிகழ்ச்சிகள் எதுவும் எனக்கு ரசிக்க வில்லை. பார்க்க பிடிக்கவில்லை. எல்லாம் ஒரே அபத்தமாக இருக்கிறது. காரணம் தெரியவில்லை.

809. லஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கு அல்லது குறைப்பதற்கு வழி சொல்லாமல், வீணாக மற்றவர்களைக் குறை சொல்வதால் எவ்விதப் பலனும் இருக்கப் போவதில்லை.

810. ஒரு தனி மனிதன் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது அல்லது தலைமையில் இருக்கும் போது ஊழலும் லஞ்சமும் ஆரம்பம் ஆகின்றன என்பது என் கருத்து.

Sunday, October 7, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 781 TO 795

781. சும்மா நான் ஒரு ஹிந்து என்று கூறிப் பலனில்லை. எந்த அளவு அதன் கோட்பாடுகளை, நம்பிக்கைகளை பின் பற்றுகிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது

782. பிராமண வகுப்பில் பல பிரிவுகள் உள்ளன. இறை வழிபாடு, வாழ்க்கைமுறை, பேசும் மொழி, உணவுமுறை, கலாசாரம், சம்பிரதாயம் எல்லாம் மாறுபடுகிறது.

783. என் எண்ணங்களை கொள்கைகளை, என் குழந்தைகள் உட்பட யாரிடமும் வற்புறுத்துவது இல்லை. யாரும் என்னிடம் வற்புறுத்துவதை நான் விரும்புவதில்லை.

784. இரட்டை மாட்டு வண்டியில் மாடுகளை மாற்றிக் கட்டினால் வண்டியை நேராக இழுக்காது. மாடுகள் கூட பாதுகாப்பான இடம் தேடுகிறது என்று தெரிகிறது

785. வாழ்க்கையில் ஒருவருக்கு பலவிதமான சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றில் இருந்து மீள்வது மிக கடினம். அதில் மிகவும் மோசமானது மலச்சிக்கல்.

786. அரசியல்வாதிகளை தேர்ந்து எடுப்பது மக்கள். அவர்களை குறை கூறுவதும் மக்கள்.என்ன செய்ய முடியும்?அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்

787. மரண படுக்கையில் இறைவனை நினைப்பவர் மிகச்சிலரே. சொத்துக்களையும், சுகத்தையும் விட்டு விட்டுப் போகிறோமே என்கிற கவலை தான் மேலோங்கும்.

788. அறுபது வயதிற்குப் பிறகு கோயில், பூஜை, தியானம், யோகா, நடை, புத்தகம், இசை, பயணம், என்று வாழ்வை சந்தோஷமாகக் கழிக்க தயார் ஆக வேண்டும்.

789. எல்லாப் பெண்களும் பிரசவ வலி பட்டு தான் குழந்தை பெறுகிறார்கள். ஆனால் இந்தத் தலைமுறை காட்டும் பாசம் இருக்கிறதே சொல்லி மாளாது போங்க.

790. பெரியவர்கள் கூறும் விஷயங்களை புரிந்து கொள்ள திறமையும் பொறுமையும் வேண்டும்.வரிகளை மேலாக படித்தால் போதாது, கூர்ந்து கவனிக்க வேண்டும்

791. அன்பு செலுத்துவது என்பது ஒருவழிப் பாதை அல்ல.இருவழிப் பாதை.நம்மிடம் அன்பு செலுத்தாதவர்களை விட்டு விலகி இருப்பது இருவருக்கும் நல்லது

792. நாம் பேருந்தில் பயணம் செய்யும் போது ஓட்டுணரின் கஷ்டத்தை உணர்கிறோமா? பயணம் முடிந்தபின் அவருக்கு சிறிய நன்றி சொல்கிறோமா? ஏன் கூடாது?

793. ஒரு பாடல் சிறப்பாக அமைவததற்கு காரணம் பாடலா, இசை அமைப்பா, பாடியவரின் குரல் வளமா என்று அறுதியிட்டுக் கூறுவது மிகவும் கடினமான விஷயம்.

794. ஒரு நல்ல விஷயம் நல்லவர்கள் மனதில் தானே நல்ல விதமாகப் பதியும். அதற்கு ஒரு சினிமா நடிகர் அல்லது நடிகையை உதாரணம் காட்ட வேண்டியதில்லை.

795. ஒரே சாதி, நல்ல படிப்பு, வேலை, சம்பளம், குடும்பம், 3 வயது வித்யாசம், கெட்ட பழக்கம், முன்கோபம் இல்லை,காதலிக்க ஆணின் முக்கிய தகுதிகள்

மனதில் தோன்றிய எண்ணங்கள் 766 TO 780

766. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007 என்று ஒரு சட்டம் இருப்பதே இன்றய தலைமுறைக்குத் தெரியவில்லை. ஆச்சரியம்.

767. ஒருவர் நேர்மையான வழியில் வாழும் போது எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. தவறான வழியில் செல்லும் போதுதான் கவலைப்பட வேண்டும்.

768. தமிழ்நாட்டில் தமிழ்ப் பற்று அதிகரிக்க திருக்குறளை மு.வரதநாசனார் அவர்கள் உறையுடன் பதிவுகளாகப் போடலாமா என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.

769. திருக்குறளில் சொல்லப் படாத விஷயமே கிடையாது. இவ்வுலகில் மிகச்சிறந்த நூல் அதுதான். உலகப் பொதுமறை என்று அதைக் கூறுவதில் வியப்பே இல்லை

770. காதலிப்பது இயற்கை. அதில் தவறு எதுவும் இல்லை. அது வயதின் கோளாறு. ஆனால் காதலில் விழுந்த உடன் பெற்றோரின் சம்மதம் வாங்குவது முக்கியம்.

771. திருமணத்திற்குப் பின்பு கணவன் மனைவியின் மனோபாவத்திற்குத் தகுந்தால் போல் வாழ்க்கை அமையும். யாரையும் குற்றம் குறை சொல்லிப் பயனில்லை.

772. ராமாயணம், மஹாபாரதம், திருக்குறள் இவைகளை நன்றாகப் படித்து, மேடைப் பேச்சுத் திறமையும் ஒருவருக்கு இருந்தால் இந்த உலகத்தையே கலக்கலாம்.

773. மஹாபலியை விட பெரிய ஆள் யாரும் கிடையாது. வாமனன் தன்னுடைய சிறிய பாதங்களின் பெருவிரலால் ஒரு சின்ன அழுத்து, இன்னமும் தேடுகிறார்கள்.

774. அதென்னமோ தெரியவில்லை,எனக்கும் மெத்தப் படித்தவர்களுக்கும் ஒத்துப் போவதே இல்லை.நெருங்கிய நண்பர்கள் உட்பட.எனக்கு அறிவு கொஞ்சம் குறைவா

775. எந்த ஒரு பதிவிலும் தான் ஒரு அறிவாளி என்று காட்ட வேண்டிய அவசியமே இல்லை. சமுதாயத்திற்கு என்ன நல்லது செய்கிறது என்பது தான் முக்கியம்.

776. வேறு மொழித் திரை படங்களில் மொழி தெரியாத, காது கேட்காதவர்களுக்கு ஆங்கிலத்தில் சூப் திடிலே போடுகிறார்கள். தமிழ்ப் படங்களில் இல்லை என்?

777. குழந்தைகள் எவ்வளவு படித்திருந்தாலும், உயர்ந்த நிலையில் இருந்தாலும் தாய், தந்தையை விட அறிவுள்ளவர்கள் என்று நினைப்பது தவறான எண்ணம்.

778. திருமணம் செய்து கொடுத்த பிறகு, தனக்கும் தன்னுடைய குழந்தைக்கும் இடையே உள்ள உறவு முடிந்து விட்டது என்று பல பெற்றோர்கள் உணருவது இல்லை

779. பெண்களில் பலர் தங்கள் திறமையைக் காட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள், ஆண்களில் பலர் அவர்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று தெரியாமல்.

780. மந்திரங்கள் அர்த்தம் தெரியாவிட்டாலும், புரியாவிட்டாலும், அதை சரியாக சொன்னால் அதற்குண்டான பலனை கொடுக்கும். எந்த சந்தேகமும் வேண்டாம்

Saturday, October 6, 2018

வானப்பிரஸ்தம்

உலகியலில் ஈடுபடும் ஒரு மனிதனின் வாழ்க்கையை பிரம்மசரியம், கிருஹஸ்தாசிரமம், வானப்பிரஸ்தம் என மூன்று கட்டங்களாகப் பிரித்திருந்தார்கள். அதாவது கல்விப்பருவம், இல்லறப்பருவம், துறவுப்பருவம். 

இதைத்தவிர சன்னியாசம் என்று ஒரு பருவம் உண்டு. அது உலகியலைத் துறந்து செல்பவர்களுக்கு உரியது. இவை நான்கு ஆசிரமங்கள் என்று சொல்லப்பட்டன. நான்கனுள் மனைவியுடன் காட்டிற்குச்சென்று தவம் செய்யும்நிலை வானப்பிரஸ்தம்


எந்த ஒரு மனிதனும் இந்த மூன்று கட்டங்கள் வழியாகக் கடந்து சென்றால்தான் அவன் வாழ்க்கை முழுமை அடையும் என்று விஷ்ணுபுராணம் மூன்றாம் பருவம் ஒன்பதாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.


வானப்பிரஸ்தம் என்பது ஒருவகைத் துறவு. அதுவரை செய்துவந்த உலகியல் சார்ந்த விஷயங்கள் எல்லாவற்றில் இருந்தும் முழுமையாக விடுபட்டு, தன்னுடைய மனநிறைவுக்குரிய செயல்களை மட்டுமே செய்தபடி வாழ்வதுதான் அது.


பழங்காலத்தில் காட்டுக்குச் சென்றுவிடுவார்கள். இன்றைக்கு காட்டுக்குச் செல்லமுடியாது. இன்றைக்கு நவீன மருத்துவம் வளர்ந்துவிட்டது. ஆகவே மக்களின் ஆயுள் நீள்கிறது. சாதாரணமாக எண்பது தொண்ணூறு வயது வரை வாழ்கிறார்கள். 


ஆனால் அறுபது வயதில் தொழிலில் இருந்து ஓய்வுபெற வேண்டியிருக்கிறது. அதன்பிறகும் முப்பது வருட வாழ்க்கை மிச்சமிருக்கிறது. ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் துறவு தேவை. அதைத்தான் வானப்பிரஸ்தம் என்கிறார்கள்.


பிள்ளைகள் வளர்ந்து அவர்களும் குடும்பவாழ்க்கைக்கு வந்ததும் ஒருவன் அதற்கு மேலும் வாழ்க்கையில் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடாது. அது அவனுக்கும் கஷ்டம் பிள்ளைகளுக்கு அதைவிடக் கஷ்டம். அவன் தன் மனைவியை பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பவாழ்க்கையை விட்டு முழுமையாக விலகிவிடவேண்டும். 


அதற்குப்பெயர்தான் வானப்பிரஸ்தம். வனம்புகுதல் என்று பொருள்.

மனைவியும் வானப்பிரஸ்தம் வர விரும்பினால் அவளையும் கூட்டிக்கொண்டு செல்லலாம். வானப்பிரஸ்தம் என்பது ஒருவகைத் துறவு.

தனியாக ஒரு அறையில் தங்கி, தனது துணிகளை தானே துவைத்து, நடைப் பயணம், தியானம், யோகா முதலியன செய்து, தனது உணவைத் தானே சமைத்து உண்டு, நல்ல புத்தகங்களைப் படித்து, பள்ளிச் சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, குடும்ப சம்பந்தம் இல்லாமல் தனது வாழ்க்கையை தானே வாழ்தல் வானப்ரஸ்தம் எனப்படும்.  


இது எப்படி இருக்கு?

இப்பொழுது  கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகிறார்கள். வீட்டு வேலையும் பார்த்துக் கொண்டு, அலுவலக வேலையும் பார்த்துக் கொண்டு, குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு பெண்கள் படும் கஷ்டத்திற்கு அளவேயில்லை . அதனால் அவர்கள் சிறு வயதிலேயே பலவித நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

நன்றாகப் படித்தும், வேலைப்பார்த்தும், சம்பாதித்தும்  பெண்களுக்கு  தன்னுடைய பணத்தை செலவு செய்யும் சுதந்திரம் இல்லை. பல குடும்பங்களில் பண விவகாரங்களை ஆண்கள் தான் கவனிக்கிறார்கள்.

இன்னும் ஆணுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். பெண்கள், தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, அவர்கள் கணவனிடம் கொடுத்து விட்டு அனுமதிக்கப் பட்டதை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். 

சம்பாதித்த பணத்தை தங்கள் இஷ்டப்படி கையாள முடியவில்லை என்றால், ஏன் சம்பாதிக்கணும். இது உண்மையான  பெண்கள் மேம்பாடா? அந்தக் காலம் போல் மறுபடியும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள். 

இந்தக் குறைபாட்டை போக்க, பெண்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாக்க, நான் ஒரு வழி சொல்கிறேன். ஆனால் பெரும்பாலோர் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

கணவனும் மனைவியும் வேலை பார்த்தால் :

1.இருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை பாக்கெட் மணியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. எல்லா குடும்ப செலவுகளையும் கணக்கு எழுதி அவர்களுடைய சம்பள விகிதத்தில் பிரித்துக் கொள்ள வேண்டும்.

3. மீதி உள்ள பணத்தை அவர்கள் விருப்பம் போல செலவு செய்யலாம்.

4. கடைசியில் மீதி உள்ள பணத்தை அவரவர் பெயரில் கூட்டுக் கணக்காக முதலீடு செய்யவேண்டும்.


Friday, October 5, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 751 TO 765

751. விருந்தோம்பலைப் பற்றி நான் ஒன்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.முதல் நாள் வாழை இலை. இரண்டாம் நாள் வாட இலை. மூன்றாம் நாள் வாடால. சரியா?

752. நான் யாருடனும் சண்டை போட மாட்டேன். போட்டால் பிறகு பேசவே மாட்டேன்.சிலர் என்னுடன் சண்டை போடுவார்கள்.ஆனால் பேசாமல் இருக்க மாட்டார்கள்

753. ஆங்கிலம் வேற்று மொழி. ஹிந்தி இந்திய மொழி. இரண்டும் தெரியாது. ஆனால் ஆங்கில திரைப்படங்களை பார்க்கலாம்,ஹிந்தி படங்களை பார்க்க கூடாது.

754. நமது குழந்தைகளின் தவறுகளை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கோடிக்கணக்கான குழந்தைகளின் தவறுகளை எப்படி இறைவன் ஏற்றுக் கொள்கிறார்?

755. அறிவு பூர்வமாக சிந்திப்பவர்கள் அதிகம் உணர்ச்சி வசப் படமாட்டார்கள். இதய பூர்வமாக சிந்திப்பவர்கள் அதிகம் உணர்ச்சி வசப் படுவார்கள்.

756. விருந்தினர் எல்லோரையும் நன்கு உபசரிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. என்னை உபசரிக்காத இடத்திற்கு செல்ல நான் கொஞ்சமும் விரும்புவது இல்லை

757. பணக்காரனாகப் பிறந்தாலும் தாழ்ந்த எண்ணங்களைக் கொண்டவர்களும் உண்டு. ஏழ்மையாகப்  பிறந்தாலும் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவர்களும் உண்டு.

758. நீங்கள் எப்போதும் மகள் நல்லவள் மருமகள் கெட்டவள் என்ற எண்ணத்தோடு பார்த்தால் எல்லாம் தவறாகத் தெரியும். மகளை விட நல்ல மருமகள் அநேகம்.

759. சாதாரணமாக மகள் தன் பெற்றோரிடம்,மருமகள் உங்களை சரியாக கவனித்து கொள்கிறாளா என்று கேட்பது வழக்கம்.ஏன் மகளுக்கு அந்த பொறுப்பு இல்லையா?

760. அரசியல்வாதிகள் பரபரப்பு ஏற்படுத்துவதற்காக ஏதாவது உளறுவார்கள். அதை தவிர்க்க வேண்டும். முக்கியத்துவம் கொடுத்தால் மேலும் உளறுவார்கள்.

761. INTERVENE க்கும் INTERFERE க்கும் என்ன வித்யாசம் என்று ஒரு நண்பர் கேட்டார். INTERVENE என்றால் தலையீடு. INTERFERE என்றால் குறுக்கீடு.

762. ஒரு ஜாதியினரை எல்லோரும் தாக்கி
எழுதுகிறார்கள்.அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை.வாழ்க்கையில் முன்னேறுவதே அவர்கள் குறிக்கோள்.

763. நாட்டில் மக்களிடம் தெய்வபக்தி அதிகமாகும் போது கவலையும் அதிகமாகிறது. தர்ம விரோத, சட்ட விரோத செயல்கள் அதிகமாகி விட்டதோ என்ற கவலைதான்

764. நாம் தாய் மொழியைப் பேச்சு வழக்கில் [ஸ்ல்யாஂக்] பேசி எழுதுகிறோம். செந்தமிழில் அல்ல. அதேபோல ஆங்கிலேயர்களும் அப்படித்தான். அது தவறு அல்ல.

765. நாய்களுக்கு ராபீஸ் தடுப்பு ஊசி போடலாம். கர்பத் தடை செய்வது நியாயம் இல்லை. பாவம். அதுவும் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருள்ள ஜீவன்.


மனதில் தோன்றிய எண்ணங்கள் 736 TO 750

736. உயர் நிலையில் இருக்கும் ஒருவர் என்ன உளறினாலும் அது தத்துவம். தாழ்ந்த நிலையில் இருக்கும் ஒருவர் என்ன தத்துவம் பேசினாலும் அது உளறல்.

737. பகவான் கூறியபடி, இறை நம்பிக்கை உள்ளவர்கள் பத்து பிறவிகளிலும், இறை நம்பிக்கை இல்லாதவர்கள் மூன்று பிறவிகளிலும் இறைவனை அடைவார்கள்.

738. இறைவன் மீது நம்பிக்கை உள்ளவர்கள் எப்பொழுதாவது இறைவனை நினைக்கிறார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் எப்பொழுதும் இறைவனையே நினைக்கிறார்கள்.

739. எதைப்பற்றி எழுதும் போதும் அறிவு பூர்வமாக எழுத வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு எழுதக் கூடாது.அவருடைய ஆரோக்கியம் கெடும்.மனம் பாதிக்கும்

740. ஈ என்றுஒருவரிடம் நின்று கேளாத இயல்பும்,ஒருவர் ஈதிடு என்ற போதுஅவருக்கு இல்லை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும்[வள்ளலார் கந்தகோட்டம்]

741. தன்னுடைய வீட்டிலேயே உணவைத் தானே எடுத்துச் சாப்பிடுவது சிலர் வழக்கம். அது தவறு. கொடுத்து உண்ண வேண்டும் அல்லது கேட்டு உண்ண வேண்டும்.

742. பாலும் மோரும் சமம் இல்லை என்று கூற "பாலும் பதக்கு, மோரும் பதக்கு"என்பார்கள். பாலில் இருந்து மோர் வரும். மோரில் இருந்து பால் வராது.

743. அந்த நாளில் சினிமாவுக்கு மேல் வகுப்பினர் ஒரு முறையும்.கீழ் வகுப்பினர் பல முறையும்  வருவார்கள்.அதனால் அவர்களை கவரும் படம் எடுத்தனர்

744. அந்தக் காலத்தில் சினிமாவுக்கு ஆண் தனியாக வருவான். பெண் குடும்பத்துடன் வருவாள். அதனால் பெண்களைக் கவரும் விதமாகப் படம் எடுத்தார்கள்.

745. மகளின் திறமையும், கெட்டிக்காரத்தனமும் தெரியும். ஆனால் வரும் மருமகளை பற்றி ஒன்றும் தெரியாது. அதனால் மருமகளை தேர்ந்தெடுப்பது கஷ்டம்.

746. மகளுக்கு திருமணம் செய்வது தான் கஷ்டமான காரியம் என்று பலர் கூறுவார்கள்.மகனுக்கு திருமணம் செய்வது அதைவிட கஷ்டம் என நான் நினைக்கிறேன்

747. சினிமாவில் நடிப்பவர்கள் சாதாரண மனிதர்கள் தான். ஆகாயத்தில் இருந்து குதிக்கவில்லை. அவர்கள் மீது மோகம் கொள்வது பைத்தியக்காரச் செயல்.

748. சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம். அதைப் பார்த்தவுடன் மறந்து விட வேண்டும். அதையே நினைத்துக் கொண்டிருந்தால் நமது வாழ்க்கை வீணாகிவிடும்.

749. சிறிது காலத்திற்கு முன்னால் அறை வெப்பத்தில் உறையும் குணம் கொண்ட தேங்காய் எண்ணை உடலுக்குக் கேடு என்றனர்.இப்போது நல்லது என்கின்றனர்.

750. நான் பெரிய அறிவாளியும் இல்லை, மேதையும் இல்லை. நான் கடற்கரையில் கிடக்கும் ஒரு சாதாரண கூழாங்கல், நீர்ச் சுழலில் ஒரு சிறிய கொப்பளம்.


Thursday, October 4, 2018

எது சிறந்த திருமணம் ?

நமது நாட்டில் திருமணம் புனிதமாகக்  கருதப் படுகிறது. ஆனால் மேலை நாடுகளில் திருமணம் ஒரு ஒப்பந்தமாக மட்டும் கருதப் படுகிறது.

நமது ஊரில் திருமணங்கள் எப்படி நடக்கிறது என்று நமக்கு நன்கு தெரியும். மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், திருமணங்கள் எப்படி நடக்கிறது என்பதை  நான் படித்து அறிந்த வரை எழுதுகிறேன்.


1. முதலில் ஆணும் பெண்ணும் ஏதோ ஒரு சூழ்நிலையில் சந்திக்கிறார்கள். பார்த்தவுடன் இருவருக்கும் பிடித்து இருந்தால் ஆண் முதலிலும் பிறகு பெண்ணும் ஹெலோ   சொல்கின்றனர்.


2. அத்துடன் சரி. பிறகு மறுபடியும் .வேறு இடத்தில் சந்திக்கும் போது மறுபடி ஹெலோ   சொல்லி இருவரும் சிறிது நேரம் பேசுகிறார்கள்.


3.  அதன் பிறகு, மறுபடியும் சந்திக்கும் போது, ஹெலோ   சொல்லி,  சிறிது நேரம் பேசிவிட்டு  காஃபி , டீ அல்லது டிபன் சாப்பிட ஆண் பெண்ணை அழைக்கிறான்.


4. பெண்ணுக்குப்  பிடித்து இருந்தால் சம்மதிக்கிறாள் . இதற்கு டேடிங் என்று பெயர். அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால் மறுத்து விடுகிறாள். 


5. அதன்பிறகு பலமுறை வெளியில் சாப்பிடப் போகிறார்கள். இருவரும் மனம் விட்டுப் பேசுகிறார்கள். தங்களுடைய பழைய வாழ்க்கை, குறை நிறைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.


6. அதன் பிறகும் ஒருவரை ஒருவர் விரும்பினால், ஒரு சந்திப்பிற்கு பிறகு ஆண் பெண்ணிற்கு முதல் முறையாக உதடுகளில் முத்தம் கொடுக்கிறான். 


7. இன்னும் நெருங்கிப் பழகிய பிறகு , பெண் அவனைத் தன்னுடைய பெற்றோர்களுக்கு அறிமுகப் படுத்துகிறாள். பெற்றோர்கள் அவனைப் பற்றி அவர்களுடைய அபிப்பிராயத்தை கூறுகிறார்கள் .


8. அதன் பிறகு ஆண் அவளைத் தன்னுடைய பெற்றோர்களுக்கு அறிமுகப் படுத்துகிறான். அவர்கள் அவர்களுடைய அபிப்பிராயத்தை சொல்கிறார்கள்/


9. இருவருடைய பெற்றோர்களும்  கூடுமானவரை தவறான அபிப்பிராயம் எதுவும் கூறாமல் அவர்கள் காதலை வாழ்த்துகின்றனர். 


10. அதன் பிறகு ஒரு நாளில் ஆண் அவளுடைய வீட்டில், அவளுடைய சம்மதத்துடன், அவளுடன் உடல் உறவு கொள்கிறான். இது பல நாட்கள் தொடர்கிறது.


11. அதற்குப் பிறகும் ஒருவரை ஒருவர் விரும்பினால் ஆண் முதலில் தன்னுடைய காதலைத் தெரிவிக்கிறான். அதன் பிறகு பெண்ணும் தன்னுடைய காதலைத் தெரிவிக்கிறாள்.


12. கிட்டத் தட்ட ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் மனம் விட்டுப் பழகிய பின் ஆண், அவள் முன்னால்  மண்டியிட்டு, மலர் கொத்து கொடுத்து, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டுகிறான்.


13. பெண் அதை ஏற்றுக் கொண்டவுடன் அவன் அவளுக்கு நிச்சயதார்த்த மோதிரம் அணிவிக்கிறான்.. அவளும் பதிலுக்கு மோதிரம்  அணிவிக்கிறாள்.


14. இருவரும் சேர்ந்து ஒரு சௌகரியமான  நாளை திருமணத்திற்கு நிச்சயம் செய்கின்றனர். அந்த நாளில் சர்ச்சில் உறவினர்கள் சூழ திருமணம் நடை பெறுகிறது.


15. அதன் பிறகு, மன வேறுபாடு வந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தால் நீதி மன்றம் கால தாமதம் இன்றி உடனே விவாகரத்து கொடுத்து விடுகிறது. 


இந்தத் திருமண முறை சிறந்த முறையா அல்லது நமது  திருமண முறை சிறந்த முறையா?

INTERRELIGIOUS MARRIAGES.

It has been scientifically proved that 99.99% of the DNA for all human beings is the same and only 0.01% differs. This 0.01% contributes to all the differences between individuals. 

The basis for a marriage is love, caring, sharing, adjusting, accepting, accommodating, understanding and tolerating. However, the following factors are also to be considered before deciding to marry inter-religion to sustain the marriage.


1. If the couple belongs to the Hindu religion and to the same community,  irrespective of their differences, they continues to live together and avoid a divorce for the sake of the family, and to avoid a second marriage.


2. If the couple belongs to the Christian religion where the western culture is very much in vogue, they easily take the decision to divorce and there is no difficulty for a second marriage.


3. If the couple belongs to the Muslim religion, the girl does not enjoy as much freedom and the man is allowed to marry four girls after divorcing the wife.


4. Muslims are governed by Sharia law, or Islamic law, forming part of the Islamic tradition. It is derived from the religious precepts of Islam, particularly the Quran and the Hadith.


5. In the entire world, marriage is considered only as a contract and not as a sacred one. Only in the Hindu religion it is considered to be a sacred one. 


6. In western countries, the man and woman meet, develop understanding, make love [sex] and then marry. In India, especially in the Hindu religion, it is considered a sin. 


7. There is a stigma for divorced woman in Indian society especially when she is married to a person who belongs to a different religion or community. 


8. The Indian society insists on the religion and caste for any job or educational opportunity for children and the woman has to convert to the religion to which the man belongs. 


9. The main purpose of living is eating. One cannot sacrifice food habits for the sake of the spouse. If anyone happens to be different, then there will always be a problem.


10. Even animals are classified into carnivorous and herbivorous ie non-vegetarian and vegetarian. The animals and plants do not copulate if they belong to a different groups.


11. As long as the women are childbearing, irrespective of the country, religion, caste, and creed the women are the ultimate sufferers and not the men in case of a failure of a marriage.


12. Irrespective of religion, caste, community, and country, if the girl belongs to a poor family, she has to think thrice before marrying a man of another religion.


13. There is a lot of difference between love before marriage and love after marriage. I have written an article on this subject under the title LOVERS EVEN AFTER MARRIAGE.

Wednesday, October 3, 2018

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே

உத்தியோகத்தில் இருக்கும் போது  வாழ்க்கையில் பணத்தைத் தேடுகிறோம். அதன் பிறகு வாழ்க்கையில் நிம்மதியைத் தேடுகிறோம். இரண்டுமே கிடைப்பது அதிர்ஷ்டம். இறைவனின் ஆசீர்வாதம். 

உத்தியோகத்தில் இருக்கும் போது ஒருவருக்கு நிகழ்காலமும் எதிர்காலமும் உண்டு. ஆனால் ஓய்வு பெற்ற பிறகு  இறந்த காலமும் நிகழ்காலமும் தான் உண்டு. எதிர்காலம் கிடையாது. 

உத்தியோகத்தில் இருக்கும்  வரை சுறுசுறுப்பாக நேரமில்லாமல் இருந்தவர் ஓய்வு பெற்ற பிறகு  வேலை  வெட்டி எதுவும் இல்லாமல் நேரத்தை எப்படி கழிப்பது என்று தவிக்கிறார். அவர்களுக்கு எப்போதும் "ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே" தான்.

சில புத்திசாலிகள் தனது நிலையைப் புரிந்து கொண்டு பூஜை, தியானம், யோகா, கோயில், புத்தகம், பிரயாணம், நடை, செய்தித்தாள், இசை, சினிமா என்று நேரத்தை செலவு செய்கின்றனர்.

அவர்களைப் போல  நேரத்தை செலவழிக்கத் தெரியாமல் கஷ்டப் படுகிறவர்கள் வேறு வழி இல்லாமல் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைப்  பிறரிடம் பகிர்ந்து கொள்ள ஆவலாய் இருப்பார்கள்.

சிலருக்குப் பேசத் தெரியும். சிலருக்குப் பேச வராது. பொறுமையாகக் கேட்க வேண்டும். விவாதம் செய்யக் கூடாது. சண்டை போடக் கூடாது. அவருடைய சந்தோஷம் தான் முக்கியம் என நினைக்கவேண்டும்.

அவர்களுடன் பேசுவது, அவர்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது அவசியம். இல்லை என்றால் அவர்களுக்குப் பலவித மன நோய்கள் வருவதற்கு வாய்ப்புண்டு. செலவும் கஷ்டமும் அதிகமாகும்.

குடும்பத்தில் உள்ள நெருங்கியவர்கள் தான் அவருடன் கவலையுடனும், இரக்கத்துடனும் பேசி அவருக்குப் பொழுது போக உதவ முடியும். இல்லையென்றால் முதியோர் இல்லத்திற்கு அனுப்ப வேண்டும்

பிறகு  அவர் வாழ்க்கை நரககமாகி பல நோய்களுக்கு ஆளாகி தானும் கஷ்டப் பட்டு பிறரையும் கஷ்டப் படுத்தி கடைசியில் நொந்து நூலாகி ஒருவிதமாக இறைவனடி சேருவார்.

குடும்பத்துக்காகத் தன்னுடைய வாழ்நாள் முழுவதும்  செலவு செய்த ஒருவருக்கு நாம் காட்டும் நன்றிக் கடன் இதுதானா என்று யோசிக்க வேண்டும். எதை நாம் விதைக்கிறோமோ அதுதான் விளையும்.

இதனால் நமக்குக் குறைவு ஒன்றும் ஏற்படப் போவதில்லை. அவருடைய ஆசீர்வாதமும் சந்தோஷமும் நமக்கு என்றும் நன்மையே தரும். நமது குழந்தைகள் மனதில் அழுத்தமாகப்  பதியும். சிறிது யோசியுங்கள்.

என் குழந்தைகள் பிஸி, அவர்களுக்குப் பேசத் தெரியும், ஆனால் அதிகம் பேசுவதில்லை.. நான் பொழுது போகாமல் கஷ்டப்படும் போது என் அருகில் வந்து பேசத் தூண்டுவார்கள். நான் பேசுவதை மிகுந்த ஆர்வத்துடன் கேட்பார்கள்.

நானும் ஏதாவது பழைய கதைகள் அல்லது புதிய கதைகள் என்று எனக்குத் தோன்றியதை  உளருவேன். அவர்களும் மிக சுவாரசியமாக பங்கு கொள்வார்கள். என் மனதில் அழுத்தம் குறையும், சந்தோஷம் உண்டாகும்.



Monday, October 1, 2018

மத [மன]மாற்றம்

அன்பே சிவம், அன்புதான் இறைவன் என்கிறோம். எல்லா மதங்களும் அன்பைத் தான் போதிக்கின்றன. எல்லோரும் ஓர் குலம் என்கிறோம். சமத்துவம், சகோதரத்துவம் என்கிறோம். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. மதத் துவேஷம் அதிகம் காணப்படுகிறது.

வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை, வான் மதியும், மீனும், கடல்  காற்றும், மலரும், மண்ணும், கொடியும், சோலையும் நதியும் மாறவில்லை. மனிதன் மாறிவிட்டான். மதத்தில் ஏறி விட்டான் என்று கவிஞர் பாடினார்.  அதை எல்லோரும் மறந்து விட்டனர்.


2017 உலக ஜனத்தொகையில் கிருஸ்தவர்கள் 238 கோடி, முஸ்லிம்கள் 180 கோடி, ஹிந்துக்கள் 110 கோடி. சில வருடங்களில் முஸ்லிம்கள் கிருஸ்தவர்களை விட அதிகம் இருப்பார்கள் என்று கணக்கிடப் பட்டு இருக்கிறது.


வேறு மதத்தில் இருந்து கிருஸ்தவ, முஸ்லிம் மதத்திற்கு மாற முடியும். கிருஸ்தவர்கள் மத மாற்றத்தை பரப்புகிறார்கள். கிருஸ்துவராக மாறுவதற்கு ஒரு தேவாலயத்தில் ஞானஸ்தானம் செய்விக்க வேண்டும். முஸ்லிம் ஆக மாறுவதற்கு கலிமா ஓத வேண்டும். 


ஆனால் ஹிந்து மதத்துக்கு யாரும் மாற முடியாது. மாற்ற முடியாது. மாறுவதற்கு எந்த வழிமுறையும் கிடையாது. ஹிந்துவாக மாறுவதற்கு எதுவுமே செய்ய வேண்டாம். அந்த வாழ்க்கை முறையைக் கடைப் பிடித்தால் போதும். அது ஹிந்து மதத்தின் தனித்தன்மை.


ஹிந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு ஒருவர் மாறப் பல காரணங்கள் இருக்கும். அதற்கு மற்றவர் வருத்தப் படலாம், கோபப். படலாம். என்ன செய்ய முடியும். அது அவர் விருப்பம். அதனால்  மத விஷயத்தில் அதிகம் தலையிடாமல் இருப்பது எல்லோருக்கும் நல்லது.


நம் நாட்டில் பல மதங்களும், சாதிகளும், மொழிகளும் இருப்பதால் ஒற்றுமை இல்லை. நிறைய பொக்கிஷங்கள் இருந்தால் சந்தோஷப்படுகிறோம். சிறந்த மதங்கள், மொழிகள் இருந்தால் சண்டை போடுகிறோம். மாற்றி யோசியுங்கள்.


பின் குறிப்பு : நான் இங்கே உளறி இருப்பது உங்களில் பலருக்குப் பிடிக்காது என்று எனக்கு நன்கு தெரியும். ஏதோ பொழுது போகாமல், வேறு வேலை இல்லாமல் இதை எழுதி விட்டேன். நான் சொல்வதில் ஏதேனும் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்.