Friday, August 17, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 661 TO 675

661. வயதான காலத்தில் முடிந்த வரை தனியாக வாழ்வதே சொர்க்கம். அப்படி முடியாமல் பையனுடன் இருந்தால் அது புழல்.பெண்ணுடன் இருந்தால் அது வேலூர்

662. தாத்தா பாட்டிக்கும் பேரக் குழந்தைகளுக்கும் இடையே பரஸ்பர அன்பின் அளவுகோல்.முதல் குழந்தை 6 வயது வரை,இரண்டாவது 4 வயது,மூன்றாவது 2வயது


663. ஐந்து மணிக்கு காப்பி கிடைக்கும் போது ஏழு மணிக்கு எழுந்திருப்பேன். இப்போது ஐந்து மணிக்கு எழுந்தால் ஏழு மணிக்கு காப்பி கிடைக்கிறது.


664. இந்த உலகத்தில் யாரும் யாரிடத்திலும் சொல்ல விரும்பாத ரகசியம் ஒன்றே ஒன்றுதான். அந்த ரகசியத்தை நான் உங்களுக்குச் சொல்ல விரும்பவில்லை.


665. இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்  பெற்றோர்களிடம் அன்புடன் இருக்கிறார்கள் என்பது உண்மை.ஆனால் சென்ற தலைமுறை போல முழு ஈடுபாடு கிடையாது


666. நமக்கென்று ஒரு குறிக்கோள்,அதற்கென்று ஒரு பாதை,அதை அடைய ஒரு வழி என்று செல்லாமல் வேறு ஒருவன் காட்டும் வழியில் செல்வது மிகவும் ஆபத்து


667. ஆங்கிலம் ஒரு வார்த்தை தெரியவில்லை. ஒரு வரி படிக்க முடிவதில்லை, பேச முடியவில்லை. ஆனால் mother's day, father's day கொண்டாடுகிறோம்.


668. தமிழ், தமிழர் பண்பாடு, தமிழ் வாழ்க என்று கோஷம் போடுகிறோம். பின்பு எங்கே இருந்து எப்படி வந்தது அன்னையர் தினமும், தந்தையர் தினமும்?


669. வெள்ளையனே வெளியேறு என்ற கூக்குரல் இன்னம் கேட்கிறது. இப்போது எதிலும் எப்போதும் வெள்ளையன் செய்வதை சொந்த அறிவில்லாமல் பின்பற்றுகிறோம்


670. அன்னையர் தினமும், தந்தையர் தினமும் ஞாயிற்றுக்கிழமை தான் வருமாம். அன்றுதான் வெள்ளையர்கள் தங்கள் பெற்றோர்களைப் பார்க்கப் போவார்களாம்


671. தந்தையர் தினத்திற்கு மறுநாள் மாமனார் தினம், அன்னையர் தினத்திற்கு மறுநாள் மாமியார் தினம் கொண்டாடுவதாய் தீர்மானிக்கப் பட்டுள்ளது.


672. அன்னையர் தினம்,தந்தையர் தினம் என்று கொண்டாடுவது போல மாமியார் தினம்,மாமனார் தினம் என்று ஏன் அனுசரிப்பது இல்லை என்று சொல்ல முடியுமா?


673. முடிவை வைத்துத்தான் வழி சரியா இல்லையா என்று தீர்மானிக்கவேண்டும். தவறான வழியில் சென்று விட்டு முடிவை நினைத்து வருந்துவதில் பலனில்லை


674. வாழ்க்கையில் இளம் வயதில் நாம் செய்த தவறுகளை நினைத்து வருந்துவதால் எவ்வித பலனும் இல்லை. அவைகளை அழிக்கவோ, மாற்றவோ யாராலும் முடியாது.


675. ஒருவரின் நல்ல குணங்களை பார்த்தால் நல்லவராக தெரிவார். கெட்ட குணங்களை பார்த்தால் கெட்டவராக தெரிவார். எல்லாம் நமது பார்வையில் இருக்கு

Monday, August 13, 2018

விடிகிற போது விடியட்டும்.

1. நமது  நாட்டின் முன்னேற்றத்தைப் பெருமளவு கெடுப்பது லஞ்சமும் ஊழலும்  கறுப்புப் பணமும் தான். அதனை ஒழித்து விட்டால் எங்கும் சுபிக்ஷம் நிலவும். நிம்மதி பெருகும். வளம் கொழிக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.

2. லஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கு அல்லது குறைப்பதற்கு வழி சொல்லாமல், வீணாக மற்றவர்களைக் குறை சொல்வதால் எவ்விதப் பலனும் இருக்கப் போவதில்லை.


3. ஒரு தனி மனிதன் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது அல்லது அதன் தலைமையில் இருக்கும் போது தான் ஊழலும் லஞ்சமும் ஆரம்பம் ஆகின்றன என்பது என் கருத்து.


4. ஒரு பட்டத்தை பறக்க விடும் போது அது மேல் காற்றுக்கு சென்று விட்டால் பிறகு தடுமாறாது. நிலையாக இருக்கும்.. கீழ்க் காற்றின் வேகம் அந்தப் பட்டத்தை ஒன்றும் செய்யாது. 


5. அதே போல, கட்சி அரசியலில் ஒருவர் மேல் நிலையை அடையும் போது அவருக்கு தனி சக்தி வந்து விடுகிறது.  அவரை சுலபமாகப் பதவியில் இருந்து நீக்க முடிவதில்லை. 


6. அதனால் எல்லோரும் அவரைக் கண்டு பயப்படுவார்கள். இந்த பயத்தை மனதில் விதைத்த பின், அவர் எது வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம்.


7. உடனே எல்லோரும் தங்கள் சுய லாபதிற்காக அவரைப் புகழ ஆரம்பிப்பார்கள். மற்றவர்களும்  பைத்தியம் போல அவர்களைப் பின் பற்றுவார்கள். இதை மாற்ற முடியாது.


8. இதுதான் நடைமுறையில் நாட்டில் நடப்பது. இந்த நிலமை எல்லா நிலைகளிலும்  இருக்கிறது. அவர் காலம் முடியும் வரை இது தொடரும். 
இதை மாற்ற என்னதான் வழி ?

9. எல்லா அரசியல் கட்சிகளையும் கலைத்து விட்டு, தொழிலாளர், ஜனநாயகம், குடியரசு என்ற மூன்று கட்சிகள் மட்டும் நம் நாட்டில் இருக்க வேண்டும். வேறு கட்சிகள் எதுவும் இருக்கக் கூடாது.


10. ஒவ்வொரு கட்சியும் பத்து பேர்கள் அடங்கிய குழுவால் ஜனநாயக முறையில் நிர்வகிக்கப் பட வேண்டும். மெஜாரிடீ முறையில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட வேண்டும்.


11. அகில இந்தியாவில் இருந்து பல துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்கள் 50 பேர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வசம் நாட்டை ஆளும் பொறுப்பைக் கொடுக்க வேண்டும்.


12. தேர்தல் முறை, அரசாங்க அமைப்பு, எல்லாம் பழையபடியே தொடர்ந்து இருக்கலாம். ஆனால் தீர்மானங்கள் 50 பேர்கள் அடங்கிய குழுவின் ஒப்புதல் பெற வேண்டும்.


13. தேர்தல் செலவுகளைக் கட்சி தான் செலவு செய்ய வேண்டும். கட்சி தான் கணக்குக் காட்ட வேண்டும். தனி நபர் எந்த செலவும் செய்யக் கூடாது. செலவு செய்தால் அவர் தேர்தல் செல்லாது.


14. யாரும் எந்தப் பதவியிலும் ஐந்து வருடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது.  குடும்ப நபர்களும் வேறு எந்தப் பதவியிலும் இருக்கக் கூடாது. பதவி முடிந்ததும் அரசியலை விட்டு விலக வேண்டும்.


15. எல்லா அலுவல்களும் கணனி முறையில் மாற்றப் பட வேண்டும். அரசாங்க அலுவல் நேரத்தில் தனியார் யாரும் அலுவலகத்தில் நுழையக் கூடாது. நுழைந்தால் கைது செய்யப் பட வேண்டும்


16. நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்ட நல்லவர்கள் ஒன்று சேர்ந்து இதை உச்ச நீதி மன்றத்தில் உடனே கவனிக்க வேண்டிய  ஒரு வழக்காகத்  தொடர வேண்டும்.


17. நான் ஒரு பைத்தியம். இதெல்லாம் நடக்கப் போவதில்லை, யாரும் இதைப் படிக்கப் போவதில்லை  என்று தெரிந்தே இதை எழுதுகிறேன். ஏதோ ஒரு சபலம். ஊதுகிற சங்கை ஊதுகிறேன், விடிகிற போது விடியட்டும்.

Sunday, August 12, 2018

குழந்தையும் தெய்வமும் / THE CHILD IS LIKE GOD

1. குழந்தைகள் தெய்வத்திற்கு சமமானவர்கள். எத்தனையோ லக்ஷக்கணக்கான மனிதர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை இல்லையே என்று மிகவும் ஏங்குகிறார்கள்

1. The children are like Gods. Lakhs of people are longing to get a child.


2. குழந்தைகள் விஷமம் செய்வது இயற்கை. அது அவர்களுடைய அறிவை வெளிப்படுத்தும் முறை. சும்மா இருந்தால் மூளையில் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.


2. It is natural that children are mischievous. That only exhibits their intelligence. If they are idle, then there is something wrong with their brain.


3. குழந்தைகள் செய்யும் விஷமத்தைத் தாங்க முடியாத பெற்றோர்கள் உண்டு. விஷமம் செய்ய ஒரு குழந்தை இல்லையே என்று எங்கும் பெற்றோர்களும் உண்டு.


3. There are parents who are unable to bear the tantrums of a child. There are also parents who pray to get a child to do tantrums.


4. குழந்தைகளை ஒரு போதும் கையால் அல்லது வேறு பொருளால் அடிக்கக் கூடாது. அவர்கள் உடலில் சக்தி வந்தபிறகு உங்களை அடிக்கக் காத்திருக்கும்.


4. The parents should never beat the children either by hand or by other means. When the children become physically strong they will await to return it.


5. குழந்தைகளிடம் ஐந்து வயது வரை அன்பு காட்ட வேண்டும். பதினைந்து வயது வரை சொல்லிக் கொடுக்க வேண்டும். பிறகு நல்ல தோழனாக இருக்க வேண்டும்


5. The parent should pour love on the child until it is five, guide until it is fifteen and then treat the child as a friend thereafter.


6. பெண் குழந்தைகளுக்கு பலவித உடல் மற்றும் மனது சம்பந்தமான பிரச்சனைகள் உண்டு. அவைகளை தாயால் தான் தீர்த்து வைக்க முடியும், தந்தையால் அல்ல


6. The girl children are physically and mentally different from male children. Their problems can be solved only by their mother and not by the father.


7. குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பதும் தவறு. அதிக கண்டிப்பு காட்டுவதும் தவறு. அவை அளவுடன் இருக்க வேண்டும். பரஸ்பர அன்பு முக்கியம்


7. It is totally wrong to give full freedom to the children and it is also equally wrong to be very strict always. Mutual love is more important.


8. குழந்தைகள் தவறு செய்யும் போது கோபத்தை அடக்குவது கஷ்டம். நாம் அந்த வயதில் எப்படி இருந்தோம் என்று கொஞ்சம் நினைத்து பார்த்தால் போதும்.


8. It is difficult to control our anger when the children commit mistakes. Just think how you were when you were of his age.


9. எல்லாக் குழந்தைகளுக்கும் ஆண்டவன் அறிவை சமமாகப் படைப்பது இல்லை. ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒருபோதும் ஒப்பிட்டு பேசக் கூடாது


9. God does not create all children with equal intelligence. Hence one child should never be compared with another child.


10. குழந்தைகளுக்கு தங்களுடைய தாய், தந்தைதான் ஹீரோக்கள். அந்த உயரிய எண்ணத்தை பாதிக்கும்படி பெற்றோர்கள் ஒருபோதும் நடந்து கொள்ளக் கூடாது.


10. The parents are the heroes for the children. The parents should never do anything to spoil that great impression in their minds.


11. வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் தன்னுடைய குழந்தைகளின் தயவில் வாழ வேண்டியது வரும் என்ற உண்மையை பெற்றோர்கள் எப்போதும் மறக்கக் கூடாது.


11. The parents have to live at the mercy of the children sometime in their life. This fact should never be forgotten while bringing them up.

Saturday, August 11, 2018

கடவுளின் கணக்கு

ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போக்கர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். 

சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர். ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றார். ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள், இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக் கொள்ள முடியும்? என்றார்.

மூன்றாம் நபர் இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். நீங்கள் உங்கள் ரொட்டிகளை ,ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். அப்பொழுது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். 

இது சரியான யோசனை என்று ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள். பொழுது விடிந்தது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணயங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவர் அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள். ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(5:3)

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன். நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது, என்றாலும் சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

சுமுகமான முடிவு எட்டாத்தால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு எவ்வாறு தீர்ப்பு சொல்வது என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான். இரவு கனவில் கடவுள் காட்சி அளித்து சொன்ன தீர்ப்பும், விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான். மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டிகள் கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசு வழங்கப்பட்டவர், மன்னா! இது அநியாயம். அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க சம்மதித்தார்.

அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அதில் அவனுக்கு எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது.ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அவன் தருமம் செய்தது ஏழு துண்டு ரொட்டிகள்.

கடவுளின் கணக்கு துல்லியமாக இருக்கும். இழந்ததை தருவது அல்ல அவன் கணக்கு. எது புண்ணியம் சேர்க்குமோ அதுதான் அவன் கணக்கு. அவனது கணக்கு புண்ணியக்கணக்கு!! கடவுளின் கணக்கு!!!



Friday, August 10, 2018

வாழ்க்கையில் வெற்றி பெற

பல வியாபாரங்கள் செய்து தோற்றுவிட்ட ஒருவன் அந்த ஊருக்கு வந்த சந்நியாசி ஒருவரை சென்று சந்தித்து தனது நிலைமையை சொல்லி புலம்பினான். மக்களுக்கு எது அன்றாடம் தேவைப்படுகிறதோ எது வாங்க வாங்க தீர்ந்துபோகிறதோ அதை நீ வியாபாரம் செய், உன் பிரச்சனை முடிவுக்கு வரும். நான் வடக்கே யாத்திரை செல்கிறேன். இரண்டொரு மாதங்களில் திரும்ப வருவேன். அப்போது வந்து என்னை மீண்டும் பார்” என்று ஆசி கூறிவிட்டு சென்றார்.

தொடர்ந்து தனது மனைவி மற்றும் நலம் விரும்பிகளுடன் ஆலோசித்து, அந்த ஊரில் ஒரு காய்கறி கடையை திறந்தான். வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அவனுக்கு வாடிக்கையாளர்கள் பெருகினர். துறவியின் வாக்கு பலித்ததை எண்ணி அகமகிழ்ந்தவன் அவருக்கு மானசீகமாக நன்றி சொன்னான். 

இந்நிலையில், பக்கத்து ஊர் செல்வந்தர் ஒருவர், இவனது கடைக்கு எதிரே இருந்த ஒரு காலி நிலத்தை வாங்கி அந்த இடத்தில் மிக பிரமாண்டமான கட்டிடம் ஒன்றை கட்ட ஆரம்பித்தார். தனது கடைக்கு எதிரே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்படுவதை பார்த்த இவன் என்ன ஏது என்று விசாரித்தபோது, மிகப் பெரிய பல சரக்கு கடை ஒன்று அங்கு வரப்போவதாகவும், அங்கு காய்கறி முதல் மளிகை சாமான்கள், வீட்டு உபயோக வரை அனைத்தும் கிடைக்கும் என்றும் கூறினார்கள். 

அதைக் கேட்ட இவனுக்கு அடிவயிறு கலக்கியது. இத்தனை ஆண்டுகள் நஷ்டத்தில் வணிகம் செய்து வந்தோம். இப்போது தான் ஓரளவு வியாபாரம் ஆகிறது. இந்நிலையில் இப்படி ஒரு போட்டியா? இந்த கடை கட்டி முடிக்கப்பட்டால், எல்லோரும் இதற்கு செல்லவே விரும்புவார்கள். என் கடையை யார் எட்டிப் பார்ப்பார்கள்? இறைவா இது என்ன சோதனை என்று கலங்கித் தவித்தான்.

இந்நிலையில், அந்த சந்நியாசியும் தனது யாத்திரை முடிந்து திரும்பினார். அவரிடம் சென்று நடந்ததை விளக்கி, “நான் இப்போது என்ன செய்யவேண்டும்?” என்றான். “ஒன்றும் வேண்டாம். நான் சொல்வதைப் போல செய். 

தினமும் காலை உன் கடையை திறக்கும்போது, *’இன்று எனக்கு வியாபாரம் நன்றாக நடக்கவேண்டும்’* என்று கடவுளை பிரார்த்தனை செய். அப்படியே எதிர்புறமும் திரும்பி *அந்த புதிய கடையிலும் நன்றாக வியாபாரம் நடக்க வேண்டும்’* என்று பிரார்த்தனை செய். 

ஒப்புக்காக பிரார்த்திக்காமல் மானசீகமாக அதை விரும்பு. நல்லதே நடக்கும்” என்றார். “என்னது எனது போட்டியாளரும் நன்றாக இருக்கவேண்டும்? அவருக்கும் நன்கு வியாபாரம் நன்கு நடக்கவேண்டும் என்று பிரார்த்திப்பதா?”.

ஆமாம்… நீ அவருக்கு கூறும் ஒவ்வொரு வாழ்த்தும், நல்லெண்ணமும் உனக்கே பன்மடங்கு திரும்ப வரும். அதே போல அவருக்கு தீமை நினைத்தால் அதுவும் உனக்கே திரும்ப வரும்” என்றார். “அதே போல அவரை எங்கேனும் சந்திக்க நேர்ந்தால், ஒரு போட்டியாளரை பார்ப்பது போல பார்க்காது, ஒரு நண்பரை நலம்- விரும்பியை பார்ப்பது போல பார்த்து ஒரு புன்னகை செய்.” என்றார். 

இதன் பயனாக நாளடைவில் இருவரிடமும் ஒரு வித நட்பு ஏற்பட்டுவிட, தனது கடைக்கு காய்கறிகளை கொள்முதல் செய்யும் பொறுப்பை இவரிடம் விட்டுவிட்டார் அவர். விளைவு இவனுக்கு பன்மடங்கு பிஸ்னஸ் கிடைத்தது. நாளடைவில் இவன் கடையும் வளர்ந்து ஒரு மிகப் பெரிய காய்கறி சந்தையாக மாறிவிட்டது. 
ஒருவரைப் பற்றி நமக்கு ஏற்படும் நல்ல சிந்தனையோ கெட்ட சிந்தனையோ அவரை தீர்மானிப்பதில்லை. நம்மையே தீர்மானிக்கின்றன. எனவே வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புகிறவர் என்றும் எப்போது நல்ல நேர்மறையான சிந்தனையையே வளர்த்துக்கொள்ள வேண்டும்.






Wednesday, August 8, 2018

கடவுளின் விளையாட்டு

"நாம ஒன்னு நினைச்சா, தெய்வம் ஒன்னு நினைக்குது"

கோவில் கூட்டத்தில் வரிசையில். உண்டியல் அருகே வந்தவுடன் ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன், அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக, ஆனால் அது சற்று கிழிந்து இருந்தது. வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்தது.

சரி விடு, கடவுள் தானே அவரிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ. வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும். 

வரிசை நகர நகர, சில வினாடிகளில் பின்னாளில் இருந்து எனது தோளை தொட்டு ஒருவர் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை என்னிடம் கொடுத்தார்.

அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை வாங்கி உண்டியலில் போட்டு விட்டு, சே, எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்.

பின் பிள்ளையாரை வணங்கி விட்டு, வெளியே வந்தால், அவரும் அருகே நடக்க அவரிடம் "சார் நீங்கள் உண்மையிலேயே கிரேட்" என்றேன். அவர் புரியாமல் எதுக்கு என்றார்...

கடவுளின் உண்டியலில் ரூ 2000 போடுகிறீர்களே, எவ்வளவு பக்தி உங்களுக்கு? என்றேன்.

நானா? இல்லங்க சார், நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து அந்த 2000 ரூபாய் நோட்டு விழுந்தது. அதைத்தான் நான் எடுத்து உங்ஙளுக்கு கொடுத்தேன். அதை வாங்கி உண்டியலில் போட்ட நீங்கள்தான் உன்னதமான கிரேட் மேன் என்றார்.

டமார்னு ஒரு சத்தம். (வேற என்ன நெஞ்சு தான்) இதுதான் கடவுளின் விளையாட்டு.


Monday, August 6, 2018

யார் பிராமணர் ?

பிராமணர் என்பது ஒரு ஜாதி என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது ஒரு வாழ்க்கை முறை. 

மஹாபாரதத்தில் தர்மபுத்திரர் நச்சுப் பொய்கை என்ற பகுதியில் கூறுகிறார், "பிறப்பால் ஒருவன் பிராமணன் ஆக மாட்டான். நல்ல குணத்தாலே தான் ஒருவன் பிராமணன் ஆவான்" என்கிறார்.


பல ஆண்டு காலமாக அவர்களுக்கு நல்ல குணங்களை அடைவதற்கு பயிற்சி அளிக்கப் பட்டு இருக்கிறது. பலர் அந்தப் பயிற்சியில் வெற்றி அடைந்து இருக்கிறார்கள். பலர் தோல்வியும் அடைந்து இருக்கிறார்கள்.


வெற்றி அடைந்தவர்கள்  பிராமணர். வெற்றி அடையாதவர்கள்  பிராமணர் இல்லை. அந்த நல்ல குணங்கள் பின் வருமாறு: 


1. பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது ஆன்றோர் வாக்கு. கல்வியின் முக்கியத்தைக் கூறுகிறது. கல்வி கற்ப்பதால் அறிவு வளரும்.


2. விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒருவர் தன்னுடைய கடமைகளைச் செய்ய வேண்டும். கடமைகளில் இருந்து எப்போதும் தவறக் கூடாது.


3. எந்த நிலையிலும் தாய் தந்தையைக் காப்பாற்ற வேண்டும். அவர்கள் மனம் கோணும்படி  நடக்கக் கூடாது. அவர்கள் சந்தோஷம் முக்கியம்..


4. எப்போதும் உண்மையே பேச வேண்டும். விளையாட்டுக்குக் கூட பொய் பேசக் கூடாது. உண்மை பேசுவதால் மனத் தைரியம் உண்டாகும்.


5. யாரையும் வார்த்தையால், செயலால் மனம் புண் படும் படி நடக்கக் கூடாது. அவர்கள் மன வருத்தம் நம்மை பாதிக்கும்.


6. தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்குக் கற்பிக்க  வேண்டும். அதனால் சமுதாயம் மேம்படும். கற்ற கல்வி மறந்து போகாமல் இருக்கும்.


7. சுய மரியாதை முக்கியம். யார் தயவிலும் ஒருவர் இருக்கக் கூடாது. அடிமை எண்ணத்தை வளர்க்கும். தன்னம்பிக்கை குறையும்.


8. வயதில் மூத்த பெரியவர்களை மதிக்க வேண்டும். அவர்கள் சொற் படி கேட்க வேண்டும். அவர்கள் ஆசீர்வாதம் நன்மை பயக்கும்.


9. தெய்வ நம்பிக்கை வேண்டும். தினமும் காலையும் மாலையும் குளித்து விட்டு  இறைவனைத் தொழ வேண்டும். மன நிம்மதி கிடைக்கும்.


10.  வன்முறையை அறவே தவிர்க்க வேண்டும். இது வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம். அதனால் எந்தப் பலனும் கிடையாது.


11. மது, மாது, புகை பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாமல் நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும்.


12. மாமிச உணவுகளை உண்ணக் கூடாது. அது பாவமான செயல். தாவர உணவுகளை மட்டும் உண்ண வேண்டும்.


இப்போது புரிந்ததா. இந்தக் குணங்களெலாம் யாரிடம் இருக்கிறதோ அவர் பிராமணர். அப்படி இல்லை என்றால் அவர் பிராமணர் இல்லை.


நான் ஒரு  பிராமணன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். நீங்கள் யார்? ஒரு  பிராமணர் தானே?

Sunday, August 5, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 646 TO 660

646. அமெரிக்காவில் ஒரே கடை/பிராண்ட் பொன்னி பச்சரிசி வாங்குகிறோம்.ஒருதரம் பிரமாதமாக இருக்கும்.மறுதரம் மோசமாக இருக்கும்.ஏமாற்றும் இந்தியா

647. அமெரிக்காவில் சாலையில் உள்ள குப்பைகளை காற்றுத் துருத்தி மூலம் ஊதி, ஒன்று சேர்த்து இயந்திரம் மூலம் உறிஞ்சி எடுத்து கொண்டு போவார்கள்

648. அமெரிக்காவில் சாலையில் இடைஞ்சலாக உள்ள மரக்கிளைகளை இயந்திரத்தினால் அறுத்து, இயந்திரம் மூலம் பொடி செய்து எடுத்துக் கொண்டு போவார்கள்.

649. அமெரிக்காவில் சமயலறைக் கழுவுத் தொட்டியின் கீழே சிறிய கிரைன்டர் வைத்து இருக்கிறார்கள். அது குப்பையை அரைத்து வெளியே தள்ளி விடுகிறது.

650. அமெரிக்காவில் மரங்கள் உயரமாகவும், அடர்த்தியாகவும், அதிக எண்ணிக்கையுடனும் காணப்படுகிறது. அதனால் அங்கு மழையும் அதிகம், வளமும் அதிகம்

651. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்றார் ஓரிடத்தில்.சுந்தரதெலுங்கினில் பாட்டிசைத்து என்றார் இன்னோரிடத்தில்

652. யானை தனது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும். தேர்தலின் போது ஒட்டுப் போடுவதற்கு முன் இதை ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும்.

653. நமது பாமர மக்கள் பொதுத் தேர்தலை ஒரு தமாஷாக நினைத்து ஒட்டுப் போடுகிறார்கள். அதன் முக்கியத்துவம் தெரியவில்லை என்று நான் நினைக்கிறேன்.

654. வாழ்க, ஒழிக என்று சத்தம் போட்டு பலனில்லை.அவர்கள் நன்கு படித்து விட்டு, அமெரிக்கா போய் நிறைய சம்பாதித்து கோடிஸ்வரன் ஆகி விடுவார்கள் 

655.திட்டமிட்ட வாழ்க்கை சிறப்பான வாழ்க்கை. நீங்கள் உங்கள் வரவு செலவு கணக்கு எழுதி திட்டமிட்டு சேமிப்பதில் நம்பிக்கை உள்ளவரா இல்லையா?

656. ஆண்களுக்கு ஒன்றும் கொம்பு முளைக்கவில்லை. வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்தால் அவர்கள் பதிலுக்கு உங்களை சந்தோஷப் படுத்துவார்கள்

657. நான் இன்று இருக்கும் உயர்ந்த நிலமைக்கு எனது தாய், தந்தையர் தான் முக்கியக் காரணம் என்ற எண்ணம் ஒருவருக்கு மேலோங்கி இருப்பது சிறந்தது

658. கணவன்,மனைவி இடையே கருத்து வேறுபாடு வரும்போது,இருவரும் சந்தோஷமாக இருந்த தருணத்தை கொஞ்சம் நினைத்துக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்.

659. ஒரு நாடு முன்னேற நல்ல ஆசிரியர்கள் தேவை. நன்கு படித்தவர்கள் ஆசிரியராக விரும்புவதில்லை. அதில் உள்ள சந்தோஷம் அவர்களுக்கு தெரியவில்லை.

660. எந்த காரணத்தைக் கொண்டு இந்தப் பாமர மக்கள் நமது அரசியல் தலைவர்களைப் போற்றிப் புகழ்கிறார்கள் என்று எனக்குக் கொஞ்சமும் புரியவே இல்லை.


மனதில் தோன்றிய எண்ணங்கள் 631 TO 645

631. பெண்கள்,தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை,தங்கள் இஷ்டப்படி கையாள முடியவில்லை என்றால்,ஏன் சம்பாதிக்கணும், அடிமையாக வாழ வேண்டும்

632. அமெரிக்காவில் ஒரு பொருளை வாங்கி கொஞ்சம் உபயோகப்படுத்தி பார்த்து திருப்தி இல்லை என்று திருப்பி கொடுத்தால் பணம் கொடுத்து விடுவார்கள்


633. எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். நேர்மையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதைப் பின்பற்றுவது மிகவும் கஷ்டமான செயல்


634. கொடுப்பது இன்பம். வாங்குவது துன்பம். என் தந்தை சொல்வார், எப்போதும் உன் உள்ளங்கை கீழ்நோக்கியே இருக்கணும்,மேல்நோக்கி இருக்கக்கூடாது.


635. தனி மனித சுதந்திரம் ஒருவருக்கு அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு. அதில் தலையிட யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது.


636. எந்த ஒரு பெண்மணியும், ஒரு ஆணையோ, கணவனையோ, புகழ்ந்தோ, இகழ்ந்தோ, ஒரு கவிதையோ கட்டுரையோ எழுதி இதுவரை நான் பார்த்தது இல்லை.ஏன் அப்படி?


637. ஒரு பக்கம் பெண்களை புகழ்ந்து கவிதைகள் எழுதுகிறார்கள். இன்னொரு பக்கம் மனைவியை கிண்டல் செய்து எழுதுகிறார்கள். ஒன்றுமே புரியவில்லை.


638. எவ்வளவோ கஷ்டங்களுக்கு இடையில் பெண்ணைப் படிக்க வைத்து ஆளாக்கினேன். அவளால் எனக்கு ஒரு பயனும் இல்லையென்று அவள் பெற்றோர் கதறுகின்றனர்.


639. பெண்களைத் தங்களுடைய கண்களுக்கு மேலாக நினைத்து வளர்த்த பெற்றோர்கள் இன்று அவள் படும் கஷ்டத்தை நினைத்து ரத்தக்கண்ணீர் சிந்துகிறார்கள்


640. ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் , பாடற மாட்டைப் பாடிக் கறக்கணும். இன்றைய  இளைஞர்களுக்கு இந்தப் பாடம் மிக நன்றாகத் தெரிந்து இருக்கிறது. 


641. பெண்கள் நன்றாக படித்து, வேலைக்குப் போய், உழைத்து, சம்பாதித்து வெற்றி அடைந்தார்கள். ஆனால் இன்னும் ஆணுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள்


642. பெண் சுதந்திரம் என்ற பெயரில் தாங்கள் ஏமாற்றப்படுவது கொஞ்சமும் தெரியாமலேயே இன்றைய பெண்கள் கடினமாக உழைப்பது மிகவும் வேதனையான செயல்.


643. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. இன்றைய இளைஞர்கள் பெண்களின் உழைப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்வது மிகவும் வேதனையான செயல்.


644. பல் போனால் சொல் போகும். பல்செட் வைத்துக் கொள்ளலாம். அது இல்லை என்றால் கடித்து சாப்பிடமுடியாது. அது இருந்தால் உணவின் ருசி தெரியாது.


645. வைரங்கள் எங்கு பார்த்தாலும் சாதாரண கற்களை போல விழுந்து கிடந்தால், அதற்கு கூழாங்கல்லுக்கு இருக்கும் மதிப்பு கூட துளியும் இருக்காது.

Saturday, August 4, 2018

நான் சொல்வது சரிதானே.

நான் இது மூன்றாவது தடவை அமெரிக்கா வருகிறேன். 2013ல் முதல் தரம், 2015ல் இரண்டாம் தரம் 2018ல் மூன்றாம் தரம். இன்னும் எவ்வளவு தரம் என்று தெரியவில்லை.

முதல் தடவை மிகப் பிரமாதமாக இருந்தது. இரண்டாம் தடவை மஹா போர். மூன்றாவது தடவை மஹா மஹா போர். அடுத்த தடவை எப்படி இருக்குமோ.


நாடு அழகாகத் தான் இருக்கிறது. அதில் குறைவில்லை. அதில் எனக்கென்ன இலாபம். எனக்குப் பிடிக்கவில்லை. வேறு வழி இல்லை. மகள் இங்கு இருக்கும்வரை வராமல் இருக்கமுடியாது. 


பிறர் தயவு இல்லாமல் பத்து அடி கூட போக முடியாது. நம் இஷ்டத்துக்கு ஒரு கடலை மிட்டாய் வாங்கித் தின்ன முடியாது. ஒரு கரும்புச்சாறு வாங்கிக் குடிக்க முடியாது.


எங்கு போவதாக இருந்தாலும் காரில் தான் போக வேண்டும். எந்த இடமும் பத்து கிலோ மீட்டர் தொலைவில் தான் இருக்கும். இரண்டு தடவை போனால் அலுத்து விடும். ஒரே எந்திர வாழ்க்கை.


மகள், மாப்பிள்ளை, பேரன்கள் எல்லோருக்கும் துளியும் ஓய்வு கிடையாது.. அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். பேசுவதும் அதிகம் கிடையாது.  என்னால் பேசாமல் இருக்க முடியாது. 


எல்லா இடமும் ஏற்கனவே பார்த்து அலுத்து  விட்டது. அமெரிக்கா இந்தியாவைப் போல நான்கு மடங்கு பெரியது. எல்லா இடங்களையும் பார்ப்பது என்பது இயலாத காரியம். நேரமும் செலவும் மிக அதிகமாகும்.


புத்தகம் படிக்கலாம், மடிக் கணனி பார்க்கலாம், பாட்டு கேட்கலாம். தூங்கலாம். அவர்கள் உண்ணும் நேரம்,  உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை வேறு. எங்களது வேறு. நாங்கள் இந்தியன் அவர்கள் அமெரிக்கன்.


மகளிடம் இருக்க வேண்டும் என்பதற்காக வர வேண்டி உள்ளது. சொல்லப் போனால் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் 2020இலும் இன்னொரு முறை வந்தாலும் வரலாம்.


வயதாகி மகன், மகளுடன் இருக்கும் போது நம்முடைய சௌகரியத்தை பார்க்க முடியாது. அவர்களுடைய விருப்பத்தை பூர்த்தி செய்வது தான் முக்கியம். 


புழல் என்றும் வேலூர் என்றும் நான் குறிப்பிடுவது சிறையை அல்ல. சுதந்திரத்தை இழப்பதை.  ஐம்பது வருடங்கள் சுதந்திரமாக வாழ்ந்து விட்டு பிறகு அதை இழப்பது வருந்துவதற்கு உரியது. 


நல்ல வேளை என் குழந்தைகள் நல்லவர்களாக இருக்கிறார்கள். இல்லை என்றால் நரகம் தான். இறைவன் எப்போது நிரந்தர சுதந்திரம் தருவார் என்று தெரியவில்லை.


என்னை மாதிரி வயதானவர்களுக்கு இந்த இடம் சௌகரியப் படாது. எப்போது ஊருக்குப் போவோம் என்று இருக்கும். உடனே கிளம்ப முடியாது. அதிகம் செலவு ஆகும். 


ஊருக்குப் போனால் எப்போது வருவோம் என்று இருக்கும். வந்தால் எப்போது போவோம் என்று இருக்கும். மனிதன் புத்தி குரங்கு புத்தி. என்ன நான் சொல்வது சரிதானே.

Friday, August 3, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 616 TO 630

616. மத நல்லிலக்கணம், சாதி ஒருமைப்பாடு இவை எல்லாம் பிறரைக் குற்றம் சொல்வதால் வரவே வராது. அவர்களைப் பாராட்டிப் பேசுவதால் மட்டுமே வரும்.

617. பிற மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை, வழிமுறைகளை நாம் பின்பற்றினால், அவர்கள் நமது மதக் கருத்துகளை, வழிமுறைகளைப் பின் பற்றுவார்கள்.

618. முஸ்லிம்கள் ஒரு நாளில் ஐந்து முறை தொழவேண்டும். எல்லோரும் பின்பற்ற மசூதியில் ஒலிபரப்புகிறார்கள். அப்போது நாமும் நம் இறைவனை தொழலாமே.

619. கை வைத்தியம் சொல்வதில் தவறு இல்லை. ஆனால் நன்றாகத் தெரிந்தவர்களுக்குச் சொல்லுங்கள். உயிருக்கு ஆபத்தான நோய்களுக்குச் சொல்லாதீர்கள்.

620. எல்லா மொழிகளும் சிறந்த மொழிகள் ஆகும். தாய் மொழியாகப் பேசும்போது அது இன்னும் சிறந்ததாகத் தெரியும். ஒவ்வொருவருக்கும் அது பொருந்தும்

621. ஏற்படுத்தப் பட்ட விதிகள், விதிகள் தான். அவைகளை மாற்ற முடியாது. அதற்கு விதிவிலக்குகள் உண்டு. ஆனால் விதிவிலக்குகள் விதியாக முடியாது.

622. பொழுது புலர்ந்து வெளிச்சம் வருவதற்குள் படுக்கையை விட்டு எழ வேண்டும் என்பது நியதி. இதை இப்போது பலரால் ஏன் கடைப்பிடிக்க முடியவில்லை?

623. ஒருவர் பலனில்லாத ஒரு காரியத்தை செய்வதற்கு, "இல்லாத கறுப்புப் பூனையை இருட்டில் தேடுவதைப் போல" என்று கூறுவார்கள். வீண் வேலை தானே?

624. இந்தத் தலைமுறையைப் போல நான் கஷ்டப்பட்டு வேலை செய்ததில்லை. நிறைய சம்பாதித்ததில்லை. நிறைய செலவும் செய்ததில்லை. அந்த வாழ்க்கையே தனி.

625. நமக்கு வயதாகிவிட்டதால் வேலை இல்லாமல் இருக்கிறபோது, நமது குழந்தைகள் கஷ்டப்பட்டு வேலை செய்வதைப் பார்க்கையில், மனம் வேதனைப்படுகிறது.

626. உபயோகிக்கக் கூடாத கெட்ட வார்த்தைகளை உபயோகித்து, விமர்சனம் செய்து, தாங்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் என்று காட்டுவதில் என்ன பலன்?

627. பிறரிடம் உள்ள நல்ல குணங்களைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யவேண்டும். அது சுய பரிசோதனை. அது ஒருவரை மேம்படுத்தும். நாட்டை மேம்படுத்தும்

628. பொறாமை, ஆசை, கோபம், கடும் சொற்கள் இவைகளைத் தவிர்க்க வேண்டும் என்று திருவள்ளுவர் நமக்குக் கூறி உள்ளார். பலருக்கு அதெல்லாம் தெரியாது

629. இசை ஞானமும் மத நல்லெண்ணமும் கொண்ட ஒரு பாடகர் எந்தப் பாடலையும் பாட அவருக்கு உரிமை உண்டு. தவறு இல்லை. அது அவரது தனி மனித சுதந்திரம்.

630. ஒருவருக்கு தலைமுடி கருப்பாக இருக்கிறது. தாடி வெள்ளையாக இருக்கிறது.என்ன அர்த்தம்? தாடிக்கு கலர் கொடுக்க முடியவில்லை என்று அர்த்தம்.

மனதில் தோன்றிய எண்ணங்கள் 601 TO 615

601. நான் பெண்களை குறை கூறுவதாக நினைக்கக் கூடாது. எனக்கும் தாய், மனைவி, மகள் இருக்கிறார்கள். என்னை நேசிக்கும் அளவு அவர்களை நேசிக்கிறேன்

602. ராக்கம்மா கையைத் தட்டு, ராஜா கையை வச்சா போன்ற இலக்கியத் தரமான தமிழ்ப் பாடல்களைக் கேட்கும் போது உண்மையிலே எனது உடல் புல்லரிக்கிறது.


603. தாய், தாய் என்று புகழ்கிறோம். அந்தத் தாய் மருமகளைப் பாடாய்ப் படுத்துகிறாள். தனது ஆண் பெண் குழந்தைகள் இடையே பாரபக்ஷம் காட்டுகிறாள்.


604. வேறு வேலை ஒன்றும் இல்லையா. உடனே பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டு ஏதாவது பெண்ணின் அழகைப் பற்றி கவிதை எழுதுவது தான் சிறந்த வேலை.


605. ஆணும் பெண்ணும் இறைவனால் அவரவர்களுக்கு என்று விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்கிறோம். இதில் எங்கிருந்து எப்படி வந்தது உயர்வும் தாழ்வும்?


606. பெண்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு அவர்கள் எந்த விதத்திலும் உயர்ந்தவர்களும் அல்ல. ஆண்கள் தாழ்ந்தவர்களும் அல்ல.


607. 
நான் அவரை நேசிக்கும் அளவு அவர் என்னை நேசிக்கவேண்டும். இது என் நிபந்தனை. ஒருவரை கூட இதுவரை சந்திக்கவில்லை.இன்னும் காத்திருக்கிறேன்.

608. ஆண் பெண் இரு பிரிவிலும் திறமைசாலிகள் இருக்கிறார்கள். கணவன் மனைவியில் யார் திறமைசாலி என்பதைப் பொறுத்து அவர்களுடைய மனோபாவம் அமையும்.


609. திறமைசாலிகள் இருவகை. ஒன்று பிறவியில் இருந்தே. மற்றொன்று வாழ்க்கை ஆரம்பித்த பிறகு. ஏனோ தெரியவில்லை, எனக்கு இரண்டாவது வகை பிடிக்கும்


610. கணவன் மனைவி இருவரும் ஒருவரிடம் ஒருவர் முக்கியமாக எதிர்பார்ப்பது உண்மையாய் இருத்தல்.அப்படி இல்லாத தம்பதிகள் ஒற்றுமையாய் வாழ்வதில்லை


611. ஆண் பெண் இருவரும் சமம். உயர்வு தாழ்வு கிடையாது. ஆனால் பெண்களைப் பாராட்டிப் பேசும் ஆண்களைப் போல, ஆண்களைப் பாராட்டும் பெண்கள் அரிது.


612. ஒரு கைம்பெண் தன்னுடைய குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்ப்பது போல,மனைவியை இழந்த கணவனும் அதைப்போல் தன்னுடைய குழந்தைகளை பாதுகாக்க முடியும்


613. தன்னுடைய வாழ்க்கையில் நடப்பது தான் உலகில் நடக்கிறது என்று பலர் நினைக்கிறார்கள். உலகம் பல விதத்தில் நம்மிடம் இருந்து மாறுபடுகிறது.


614. மனம் ஒருமித்து வாழ்ந்த தம்பதிகள், அந்திம காலத்தில் ஒருவரை ஒருவர் பிரியும் போது மற்றவருக்கு ஏற்படும் மனக் கஷ்டம் அளவிட முடியாதது.


615. சரியான நேரத்தில் ஒருவர் மற்றொருவருக்கு செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும்,அதனால் ஏற்படும் பலனை  அறிந்தால் அது உலகைவிட மிக பெரிதாகும்

Thursday, August 2, 2018

WHAT THIS GENERATION MISSED

1. There are 60 years in Sanskrit. They are:

Prabava, Vibava, Sukkila, Pramodhuda, Prajothpathi, Angirasa, Srimuka, Bhava, Yuva, 
Dhaadhu, Eswara, Vegudhanya, Piramadhi, Vikrama, Vishu, Chitrabanu, Subhanu, Thaarana, Parthiba, Viya, Sarvajithu, Sarvadhari, Virodhi, Vikrudhi, Kara, Nandhana, Vijaya,  Jaya, Manmadha, Dhurmuki, Yevilambi, Vilambi, Vikari, Saarvari, Bhilava, Subakrudhu, Sobakrudhu, Kurodhi, Visuvaavasu, Paraabhava, Bhilavanga, Keelaka, Sowmiya,Sadhaarana,  Virodhikrudhu, Parithabi, Pramadheecha, Anandha, Raakshasa, Nala, Bhingala, Kalayukthi, Siddharthi, Rowthri, Dhunmuki, Dhundhubi, Rudhrothkaari, Rakthaakshi, Kurodhana, and Akshya.

2. There are two Ayanams per year. They are:


Utharayanam [Thai  to  Aani]  and Dhakshinayanam [Aadi  to  Marghazhi]


3. There are six Rudhukal  per year. They are:


Vasantha rudhu [Chithirai-Vaikasi], Kreeshma rudhu [Aani-Aadi],  Varusha rudhu [Aavani-Purattasi],  Sarath rudhu, [Aippasi-Karthigai],  Hemantha rudhu [Marghazhi- Thai], Sisira rudhu [Maasi-Panguni]


4.There are 12 months [Tamil/Sanskrit] per year. They are:


Chithirai [Mesham], Vaikaasi [Rishabam], Aani [Midhunam], Aadi [Katakam], Aavani [Simham], Purattasi [Kanni], Aippasi [Thulam], Karthikai [Viruchikam], Marghazhi [Dhanush], Thai [Makaram], Maasi [Kumbam], Panguni [Meenam].


5. There are two Pakshams per month. They are:


Sukkila paksham [15 days from New moon day] Krishna paksham [15 days from full moon day]


6. There are 15 Thithis for each Paksham. They are:


Pournami  or Ammavasai, Pradamai, Dhuvithai, Thrithiai, Chadhurthi, Panchami, Sashti, Sapthami, Ashtami, Navami, Dasami, Ekadasi, Duvadhasi, Thraiyodhasi, Chadhurthasi 


7. There are 27 stars to a month. Each day will have a star. They are:


Aswathi, Bharani, Karthigai, Rohini, Mirugasirisham, Thiruvadhirai, Punarpoosam, Poosam, Ayilyam, Makam, Pooram, Uthiram, Hastham, Chithirai, Swathi, Visakam, Anusham, Kettai, Moolam, Puradam, Uthiradam, Thiruvonam, Avittam, Sadayam, Purattadhi, Uthirattadhi, Revathi.


8.Yokam. There are 3 important yokams. Sidda Yokam and Amirtha Yokam are auspicious and Marana Yokam is inauspicious.


9.Kaalam. There 3 kaalams. They are Rahu Kaalam, Yama Kandam, which are inauspicious.
They are of one and half hours duration. Kuligan is the period in which we should not return home after attending a funeral.

10.There are 9 grahams, They and the month in which they rule are:


Soorian [Chithirai,Aavani], Chandran [Vaikasi,Aadi], Chevvai [Chithirai,Karthigai,Thai],

Bhudhan [Aani,Purattasi], Guru [Aadi,Marghazhi,Panguni], Sukhran [Vaikasi,Aippasi,Panguni], Sani [Aipasi,Thai,Maasi], Raahu/Kethu [Karthigai]
The grahams and the period they rule are as under:
Sooriyan-6 years, Chandran-10 years, Chevvai-7 years, Raagu-18 years, Guru-16 years, Sani-19 years, Bhudhan-17 years, Kethu-7 years, Sukran-20 years.

11. There are 60 Naazhis  per day, each of 24 minutes. The 24 hours from 6 AM to 6AM on the next day is divided into 12 equal parts of  2 hours each. Each part represents the Raasi/ Lagna for the day. There are 12 raasis / lagnas per day. Starting from the 1st day of the month, the time limit of rasi / lagna will go on be reducing everyday till the end of the month. In Chithirai it is Mesha Raasi / mesha lagna. In Vaikasi it is Rishaba  Raasi / rishaba lagna. The astrologer will guide you the exact time of the raasi / lagnam.


12. It is not easy to fix up an auspicious day and time for conducting auspicious functions. We have to take into account, the Ayanam, Rudhu, Month, Patcham,  Day, Thithi, Star, Yokam Lagnam, Kaalam, Daara balan,  Chandra balan, and Kala horai. These are important. For not so important functions, we can leave some of them. The astrologer will be able to guide you to fix the time.

Wednesday, August 1, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 586 TO 600

586. ஒருவர் தன்னுடைய காரியம் சீக்கிரம் நிறைவேற, அரசியல்வாதியிடம் அல்லது அரசு அலுவலர் இடம் லஞ்சம் கொடுக்கிறார். லஞ்சம் அங்கே பிறக்கிறது.

587. நானும் சமீபமாக அரசியல், மதம், சாதி, சினிமா பற்றி பதிவு போடுகிறேன். யாரும் கடுமையாக விமர்சிக்கவில்லை. ஒருவேளை உப்பு, காரம் இல்லையோ?


588. இந்தியாவில் ஹிந்து, கிருஸ்தவ, முஸ்லிம் பண்டிகைகள் மற்றும் தேசிய விடுமுறைகள் உண்டு.எந்த நாட்டிலேயும் இந்த முறை பின்பற்றப் படவில்லை.


589. எனக்கு இந்து,கிருஸ்தவ,முஸ்லிம் நண்பர்கள் உண்டு.என்னிடம் பிரியமாகவும் மரியாதையுடனும் இருக்கிறார்கள்.மாவின் மணம் பணியாரத்தின் குணம்.


590. இந்தியாவின் ஜனத்தொகை 131 கோடி. அதில் அரசியல்வாதிகள் 10000 பேர். எப்படி 10000 பேர் 131 கோடி பேரை லஞ்சம் கொடுப்பவராக மாற்ற முடியும்?


591. ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதற்கு முன் இருவரின் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட அவர்களின் மனப் பொருத்தம் பார்ப்பது மிகவும் நல்லது.


592. தமிழ் பண்பாட்டின் படி ஆண்கள் வேட்டி சட்டை,பெண்கள் புடவை ப்ளவுஸ்,சிறுவர்கள் அரை நிஜார் சட்டை,சிறுமிகள் பாவாடை தாவணி அணிந்தால் என்ன?


593. பலர் தான் சாப்பிட்ட எச்சில் தட்டை தானே கழுவுவது இல்லை. பிறருடைய சங்கடங்களை  யோசிப்பதும் இல்லை. இது மிகவும் கண்டிக்க தக்க செயலாகும்


594. உபசரித்தல் என்ற வார்த்தையே இப்போது மறைந்து விட்டது. தனக்கு வேண்டியதைத் தானே கேட்டு பெற்றுக்கொள்வது தான் இன்றைய நாகரீக முன்னேற்றம்.


595. பிறருக்கு கெடுதல், துரோகம் செய்யும் போது நமது மனம் சந்தோஷப்படும். அதே கெடுதல் துரோகம் நமக்கு வரும் போது மனம் பல மடங்கு கஷ்டப்படும்


596. ஒரு பெண் முதலில் தன்னுடைய தந்தையின் பாதுகாப்பிலும், பின் கணவன் பாதுகாப்பிலும், அதன் பிறகு குழந்தைகளின் பாதுகாப்பிலும் வாழ்கிறாள்.


597. மனைவிக்கு கணவன், கணவனுக்கு மனைவி இறைவன் கொடுத்த பரிசு. சிலர் அதைப் பொக்கிஷமாகப்  பாதுகாக்கிறார்கள். சிலர் சிறிதும் கவனிப்பதே இல்லை.


598. கணவன் மனைவி இருவரும் மற்றவரிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். அதை வெளியே சொல்வதில்லை. கிடைத்தால் சந்தோஷம், இல்லாவிடில் வருத்தம்.


599. ஒருவர் ஒரு பாடலுக்கு இசை அமைக்கிறார்.அது வெற்றி பெறுகிறது. மற்றொருவர் இசை,பாடலை தவிர மற்றவற்றை மாற்றி பெயர் பெற பார்ப்பது நியாயமா?


600. ஏழைகள் இறைவனின் குழந்தைகள். அவர்களின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். நாம் எப்போதும் ஏழைகளுக்கு உதவ முன்வர வேண்டும். அது நமது கடமை.

மனதில் தோன்றிய எண்ணங்கள் 571 TO 585

571. விதி வலியது. அது இறைவனின் மறு அவதாரம். நாம் வெற்றி அடையும் போது அதை நினைப்பதில்லை. தோல்வி அடையும் போது அதைக் குற்றம் சொல்கிறோம்.

572. தாவர உணவு நமது உடலுக்கு நல்லது.மாமிச உணவு நமது உடலுக்கு கெடுதல்.நாம் மாமிசம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.நமது ஆரோக்கியம் முக்கியம்.


573. நமது வாழ்க்கையை நல்ல விதத்தில் வாழ முயற்சிக்க வேண்டும். மது, மாது, சிகரெட், புகையிலை போன்ற கெட்ட குணங்களை  அறவே தவிர்க்க வேண்டும்.


574. மகாத்மா காந்தி அஹிம்சையை நமக்கு போதித்தார். வன்முறையால் எந்தப் பலனும் நமக்குக்  கிடைக்கப் போவதில்லை. பின் எதற்கு நம்மிடம் வன்முறை?


575. இறைவன் மேல் நம்பிக்கை வை. தினமும் காலையும் மாலையும் குளித்து விட்டு இறைவனை தியானம் பண்ண வேண்டும். மனத்திடமும் நம்பிக்கையும் வளரும்


576. வயது முதிர்ந்த பெரியவர்கள் நமக்கு எப்பொழுதும் நல்லதை மட்டும் சொல்வார்கள்.கெட்டதை சொல்லமாட்டார்கள். அவர்கள் சொல்வதை மதிக்க வேண்டும்


577. மனிதனாக பிறந்த எல்லோருக்கும் சுய மரியாதை மிக முக்கியம். பிறரிடம் நம்முடைய தகுதி எப்போதும் தாழ்ந்து போகாமல் பார்த்து கொள்ள வேண்டும்


578. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். நாம் கற்ற கல்வியை பிறருக்கு சொல்லித் தருவது பெரிய செயல் ஆகும். அதனால் எல்லோரும் கற்றவர் ஆவார்கள்.


579. எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறார். யாரையும்,எதையும் உடலாலோ,மனதாலோ துன்புறுத்த கூடாது. அந்தப் பாவம் நம்மை பின்னால் பாதிக்கும்.


580. வாய்மையே வெல்லும். எங்கும் எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும். விளையாட்டுக்கு கூட பொய் பேசுதல் கூடாது. அதனால் மன நிம்மதி கிடைக்கும்.


581. பெற்றோர் தெய்வத்திற்கு சமமானவர்கள். அவர்கள் மனம் வருந்தும்படி நடத்த கூடாது. நாளைக்கு நமது பிள்ளைகளும் நம்மை அப்படித்தான் நடத்தும்


582. பாரதி கூறினார் கல்வி சாலைகள் வைப்போம் என்று. பிச்சையெடுத்தோ, கடன் வாங்கியோ, திருடியோ ஒருவர் எந்த வழியிலாவது கல்வியை கற்க வேண்டும்.


583. வாழ்க்கையில் எல்லா வயதினருக்கும் தனித் தனியாகக் கடமைகள் உண்டு. அந்தக் கடமைகளை நாம் விருப்பு வெறுப்பு இல்லாமல் நிறைவேற்ற வேண்டும்.


584. மற்றவரைப் போல் வசதியாக வாழவில்லையே என்று நினைக்க கூடாது.நம்மை விட வசதியற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை நினைக்க வேண்டும்


585. கோவிலுக்கு சென்றால் தான் புண்ணியம் என்பதில்லை. ஏழைகளுக்கு உதவி, யாருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தாலே கோவிலுக்கு சென்ற பலன் உண்டு.