Tuesday, June 5, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 421 TO 435

421. அமெரிக்க பயணத்தில் நான் கண்ட காட்சிகளைத் தொகுத்து அளிக்கிறேன். ஏழை நாடு பணக்கார நாடு என்றில்லை. மக்களின் மனோபாவம் தான் முக்கியம். 

422. மற்ற நாடுகளில் உள்ள நல்ல விஷயங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. நல்லதை வரவில் வைப்போம். கெட்டதை செலவில் வைப்போம். வாழ்க வளமுடன்.


423. அமெரிக்காவில் கடையில் வாங்கின பொருளை 90 நாட்களுக்குள் திருப்பி கொடுத்து மாற்றலாம் அல்லது பணம் திரும்பப் பெறலாம். அவ்வளவு நம்பிக்கை


424. அமெரிக்காவில் சாலை போக்குவரத்து வலது பக்கம். ஓட்டுனர் இடதுப்பக்கம். இந்தியாவில் சாலை போக்குவரத்து இடது பக்கம்.ஓட்டுனர் வலது பக்கம்


425. அமெரிக்காவில் மரங்கள் அடர்ந்து காணப்படும். எங்கு பார்த்தாலும் உயரமான, அடர்த்தியான மரங்கள். FALL காலத்தில் பலவித வண்ணங்களில் மாறும்


426. அமெரிக்காவில் மார்ச் 21 முதல் ஜூன் 21 வரை இளவேனில் காலத்து ஒவ்வாமை எல்லோரையும் பாதிக்கும். தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.


427. அமெரிக்காவின் பல பகுதிகளில் நவம்பர் முதல் ஞாயிறு முதல்,மார்ச் 2வது ஞாயிறு வரை இரவு 2 மணிக்கு நேரம் ஒரு மணி குறைத்து வைக்க படுகிறது


428. அமெரிக்காவில், பொது நிகழ்ச்சியில் மேடையில் ஒருவர் பேசும் போது,வேறு யாரும் பேசவோ, சத்தம் போடவோ கூடாது. முடிவில் அளவோடு கை தட்டலாம்


429. அமெரிக்காவில் சாலைகள் மிக அழகு, விதிகளைத் துல்லியமாக மதிப்பார்கள், அபராதம் அதிகம், லஞ்சம் கிடையாது, பாதசாரிகளுக்கு மரியாதை அதிகம்.


430. அமெரிக்காவில் எங்கும் எதிலும் வரிசை முறை தான்.வயதானவர்கள் கூட பொறுமையாக நிற்பார்கள்.எக்காரணம் கொண்டும் வரிசையைத் தாண்ட மாட்டார்கள்


431. அமெரிக்காவில் கார் இல்லாதவர்கள் இல்லை. பெரிய கார்கள் தான். 
சிறிய கார்கள் கிடையாது. பெட்ரோல் மலிவு. ஹாரன் ஒலி எழுப்ப மாட்டார்கள்.

432. அமெரிக்காவின் பரப்பளவு  இந்தியாவை விட மூன்று மடங்கு பெரியது. இந்தியாவின் ஜனத்தொகை அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகம்.


433. அமெரிக்காவில் இருப்பது பெருமை அல்ல, இந்தியாவில் இருப்பது சிறுமை அல்ல. என் பதிவுகள் அமெரிக்காவைப் பற்றி நண்பர்கள் தெரிந்து கொள்ளவே.


434. அமெரிக்காவில் வீட்டு வேலைகளைச் செய்வதற்கு வேலை ஆட்களை அமர்த்துவது இல்லை. ஊதியம் அதிகம்.எல்லா வேலைகளையும் தானே செய்து கொள்கிறார்கள்


435. அமெரிக்காவில் கிழக்கு கரையில் இருந்து மேற்குக் கரைக்கு நேரம் வித்யாசம் மூன்று மணி. இந்தியாவில் கல்கத்தா, மும்பை இடையில் கிடையாது.



RANDOM THOUGHTS 31 TO 45

31. Mind is compared to a monkey. To stop it from going to wrong paths, we must control it by doing good deeds

32. It is an art to appreciate others. Hardly one gets it. We may think why should we appreciate. Do not leave it. You will see the result later.


33. During the 44 years of my married life so far, I have never gone to any entertainment alone without my wife and children.


34. When the son becomes a father, the father becomes a grandfather. The son can never be like the father in knowledge, experience, and wisdom.


35. There are many people to write about politics, religion, caste, cinema, and home medicines. I write about life.


36. Mother, Father, wife, and children are your soul. You should live and die only for them. There is unique happiness. Rest is false.


37. The sacred thread [Yagnopaveedam] divides the body into two parts. The right side performs noble acts. The left side other acts.

38. If you think you are bigger than me, I am much bigger than you. If you think you are smaller than me, I am much smaller than you.


39. A friend asked for a loan. My guru said if money is important to forget the friend. If a friend is important, forget the money.


40. At the end of each year, one should assess his financial improvement during the year. Only then he will know his progress in life.


41. 41 years have gone since I started my life with Rs.50/. Duty, family, thriftiness, confidence, and effort are the soul manthras.


42. For the development of our country Love for cinema, political interest, religious affiliation, communal feelings should be avoided.


43. Can't we pray for few minutes, utter a small sloka and do 12 thopukaranams both in the morning and evening before the Lord.


44. To progress in life, one must follow a Guru. The Guru must have good character, experience, knowledge, wisdom, and right attitude.


45. It is inhuman to bargain with menial workers, servant maids, small-time vendors on the street. We must give them even more.

Monday, June 4, 2018

இப்படித்தான் வாழ வேண்டும்

1. பாரதி கூறினார் கல்வி சாலைகள் வைப்போம் என்று. பிச்சையெடுத்தோ, கடன் வாங்கியோ, உழைத்தோ ஒருவர் எந்த வழியிலாவது கல்வியைக் கற்க வேண்டும்

2. வாழ்க்கையில் எல்லா வயதினருக்கும் தனித் தனியாகக் கடமைகள் உண்டு. அந்தக் கடமைகளை நாம் விருப்பு வெறுப்பு இல்லாமல் நிறைவேற்ற வேண்டும்.


3. பெற்றோர் தெய்வத்திற்கு சமமானவர்கள். அவர்கள் மனம் வருந்தும்படி நடத்த கூடாது. நாளைக்கு நமது பிள்ளைகளும் நம்மை அப்படித்தான் நடத்தும்


4. வாய்மையே வெல்லும். எங்கும் எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும். விளையாட்டுக்கு கூட பொய் பேசுதல் கூடாது. அதனால் மன நிம்மதி கிடைக்கும்.


5. எல்லா இடத்திலும் இறைவன் இருக்கிறார். யாரையும் எதையும் உடலாலோ, மனதாலோ துன்புறுத்தக் கூடாது. அந்தப் பாவம் நம்மை பின்னால் பாதிக்கும்.


6. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். நாம் கற்ற கல்வியை பிறருக்கு சொல்லித் தருவது பெரிய செயல் ஆகும். அதனால் எல்லோரும் கற்றவர் ஆவார்கள்.


7. மனிதனாக பிறந்த எல்லோருக்கும் சுய மரியாதை மிக முக்கியம். பிறரிடம் நம்முடைய தகுதி எப்போதும் தாழ்ந்து போகாமல் பார்த்து கொள்ள வேண்டும்


8. வயது முதிர்ந்த பெரியவர்கள் நமக்கு எப்பொழுதும் நல்லதை மட்டும் சொல்வார்கள்.கெட்டதை சொல்லமாட்டார்கள். அவர்கள் சொல்வதை மதிக்க வேண்டும்


9. ஏழைகள் இறைவனின் குழந்தைகள். அவர்களின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். நாம் எப்போதும் ஏழைகளுக்கு உதவ முன்வர வேண்டும். அது நமது கடமை.


10. இறைவன் மேல் நம்பிக்கை வை. தினமும் காலையும் மாலையும் குளித்து விட்டு இறைவனை தியானம் பண்ண வேண்டும். மனத்திடமும் நம்பிக்கையும் வளரும்


11. மகாத்மா காந்தி அஹிம்சையை நமக்கு போதித்தார். வன்முறையால் எந்தப் பலனும் நமக்குக்  கிடைக்கப் போவதில்லை. பின் எதற்கு நம்மிடம் வன்முறை?


12. நமது வாழ்க்கையை நல்ல விதத்தில் வாழ முயற்சிக்க வேண்டும். மது, மாது, சிகரெட், புகையிலை போன்ற கெட்ட குணங்களை  அறவே தவிர்க்க வேண்டும்.


13. தாவர உணவு நமது உடலுக்கு நல்லது.மாமிச உணவு நமது உடலுக்கு கெடுதல்.நாம் மாமிசம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.நமது ஆரோக்கியம் முக்கியம்.

மனதில் தோன்றிய எண்ணங்கள் 406 TO 420

406. சைனாவின் ஜனத்தொகை 138 கோடி. சைனீஸ் மொழி பேசுவோர் 120 கோடி. இந்தியாவின் ஜனத்தொகை 131 கோடி. ஹிந்தி மொழி பேசுவோர் 55 கோடி. 

407. உலகில் சைனீஸ்,ஸ்பானிஷ் மொழிகளுக்கு அடுத்து ஆங்கிலம் அதிக மக்களால் பேசப்படுகிறது.அது எல்லா நாடுகளையும் இணைக்கும் மொழியாக இருக்கிறது


408. இந்தியாவில் ஹிந்தி 55 கோடி, ஆங்கிலம் 13 கோடி, பெங்காலி 9 கோடி, தெலுங்கு 8 கோடி, மராத்தி 8 கோடி, தமிழ் 6 கோடி மக்கள் பேசுகிறார்கள் 


409. ஒவ்வொரு மாநிலத்திற்க்கும் தனியாக ஒரு மொழி உண்டு. ஆனால் அந்த மாநிலத்தைச் சேராதவர்கள் பேசும் பொது மொழி ஹிந்தி. தமிழ் நாடு ஒன்றைத் தவிர 


410. வெளி மாநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்கள் தமிழ் கற்று கொள்கிறார்கள். தமிழ் நாட்டில் பலருக்கு சரியாக தமிழில் பேச, எழுத தெரியாது. 


411. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம். உண்மை. ஆனால் அந்தப் பாட்டையே எவ்வளவு நாளைக்குப் பாடிக் கொண்டிருப்பது? 


412. 1965இல் "ஹிந்தி எதிர்ப்பு" என்பதற்கு பதிலாக "தமிழ் ஆதரவு" என்று போராட்டம் செய்திருந்தால், பலர் இரண்டு மொழிகளையும் கற்றிருப்பார்கள்


413. தமிழ் ஒரு சிறந்த மொழிதான். ஆனால் கடந்த ஐம்பது வருடங்களாக அரசியல்வாதிகள் பாமர மக்களை வேறு மொழிகளை கற்க விடாமல் செய்து விட்டார்கள். 


414. சந்தேகம் இல்லை. தமிழ் மொழி  நம்முடைய தாய் மொழி தான். ஆனால் தமிழர்களைத் தவிர வேறு யாரும் தங்கள் மொழியைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதில்லை. 


415. தமிழ் தெரிந்தால், தமிழ் நாட்டில் மட்டும் வாழ முடியும். ஹிந்தி தெரிந்தால், இந்தியாவில் வாழலாம். ஆங்கிலம் தெரிந்தால், உலகில் வாழலாம்  


416. முதலில் நான் ஒரு இந்தியன். எனக்கும் நாட்டுப் பற்று உண்டு. அதற்காக மற்ற நாடுகளில் உள்ள நல்ல விஷயங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது


417 . சில வகுப்பினர் மட்டும் எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப் படாமல், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளைக் கற்று முன்னேறுகிறார்கள். மற்றவர்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


418. வீடு1கோடி,குழந்தைகள் படிப்பு2கோடி,பெற்றோர் மருத்துவம்1கோடி,எதிர்கால முதலீடு1கோடி.மொத்தம்5கோடி 25 வருடங்களில் சேமிக்கணும்.ஜாக்கிரதை


419. இரண்டு ஆண்கள் பேசுவதை விட, இரண்டு பெண்கள் பேசும் போது, ஸ்வாரஸ்யம் மிக அதிகமாக இருக்கும் என்று, ஊரில் பேசிக் கொள்கிறார்களே உண்மையா?


420. தனது தகுதிக்கு மீறிய விஷயங்களில் தலையிடுவது, அபிப்பிராயம் சொல்வது,விவாதம் செய்வது,சண்டைக்கு போவது, இவைகளை ஒருவர் தவிர்க்க வேண்டும்


மனதில் தோன்றிய எண்ணங்கள் 391 TO 405

391. பிறர் கூறுவதை நியாயப் படுத்திப் பார்ப்பது மனித நேயத்தில் ஒரு சிறந்த அணுகுமுறை. ஆனால் சுலபத்தில் வராது. அதிகம் முயற்சிக்க வேண்டும்.

392. புலி பசித்தாலும் புல்லைத் தின்ணாது. எக்காரணத்தைக் கொண்டும் தன்னுடைய மரியாதை, தரம், தகுதி கீழே போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

393. 
ஒருவர் கூறுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா, "இவ்வளவு அறிவிலியாக இருக்கிறாரே" என்று மனதில் நினைத்து அவரை இரக்கத்துடன் பாருங்கள்.

394. "லங்கணம் பரம ஔஷதம்" என்பதைத் தவிர எனக்கு கை மருத்துவத்தில்  நம்பிக்கை கிடையாது. வேண்டும் என்றால் முதல் சிகிச்சையாக பரிசோதிக்கலாம்.


395. ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகுவது மிகவும் தவறு. பாலியல் குற்றங்களுக்கு இதுவே முதல் காரணம். ஆனால் பலர் இதை ஒப்புக் கொள்ளமாட்டார்கள்


396. ஒரு காலத்தில் வருவாய் குறைவாக இருந்ததால், சிக்கனம் குறிக்கோளாக இருந்தது. இப்போது அதிகமாக இருப்பதால் சிக்கனம் காணாமல் போய் விட்டது.


397. வாழ்க்கை என்ற ஒரு வழிப் பாதையில், அறுபதுக்கு முன் முட்படுக்கை, அறுபதுக்குப் பின் மலர்ப்படுக்கை. வாழத் தெரிந்தவர்களுக்கு மட்டும். 


398. நகரத்திலிருந்து கிராமத்தைப் பார்த்தாலும், கிராமத்திலிருந்து நகரத்தைப் பார்த்தாலும் இரண்டும் இனிமையாக இருக்கிறது.அது மனதை பொருத்தது


399. 1947இல் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிவினையை சரியான முறையில் நடத்தி இருந்தால் இதுவரை கோடிக்கணக்கான பணம்,உயிர் நஷ்டம் ஆகி இருக்காது.


400. எந்த வயதினர் ஆயினும், தாய்,மனைவி,சகோதரி, மகள் இவர்களைத் தவிர வேறு பெண்களைத் தொட்டுப் பேசுதல் தவறு.கை கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும்


401. நிலை மாறினால், குணம் மாறுவார், பொய் நீதியும், நேர்மையும் பேசுவார், தினம் ஜாதியும், பேதமும் கூறுவார், அது வேதம், விதி என்றோதுவார்.


402. லஞ்சத்தை நம் நாட்டை விட்டு விரட்ட ஒரே வழி "இந்திய லஞ்சக் கட்டுப்பாடு சட்டம்" என்ற சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தால் ஒழிந்து விடும்.


403. சைனாவின் ஜனத்தொகை 138 கோடி. இந்தியா 131 கோடி. 2022 வருடத்தில் இந்தியாவின் ஜனத்தொகை சைனாவை மிஞ்சி விடும் என்று கணிக்கப் படுகிறது.


404. 
கல்வித் தரத்தில் உலகில் முதலிடம் வகிப்பது பின்லாந்து, இரண்டாவது இடம் ஜப்பான், மூன்றாவது இடம் தென்கொரியா. 20வது இடம் அமெரிக்கா.

405. மனதை அது போகும் போக்கில் விடாமல், தீமைகளிலிருந்து விலக்கி, நன்மையில் போக விடுவதே அறிவு. பெரியோர்களின் அறிவுரைகளைப் பின் பற்றுவோம்.

Sunday, June 3, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 376 TO 390

376. அந்தக் காலத்தில் பெரிய கூட்டுக் குடும்பங்களின் தேவைகளை, பெண்கள் தனியாக, எந்த சாதனங்களின் உதவியும் இல்லாமல் எப்படி சமாளித்தார்கள்?

377. வேலைக்குப் போகும் காரணத்தினால், பலவித நவீன சாதனங்கள் இருந்தும், பெண்களால் தனது சிறிய குடும்பத்தை, இப்பொழுது சமாளிக்க முடிவதில்லை.


378. 
டிவி,செல்போன்,ஃப்ரிட்ஜ், ஏசி,கெய்ஸர்,மிக்ஸி,வெட் கிரைன்டர், காஸ்ஸ்டவ், பிரஷர்குக்கர்,காபி மேக்கர்,அவன்,இந்த சாதனங்கள் இல்லை எனில்?

379. மேல் ஜாதிக்காரர் தான் தாழ்ந்தவர் இல்லை என்கிறார். கீழ் ஜாதிக்காரர் தான் உயர்ந்தவர் இல்லை என்கிறார். இவர்கள் மாற்றி சிந்தித்தால்?


380. எனது பத்து: சந்திரலேகா,உத்தம புத்திரன்,பாசமலர், கல்யாணபரிசு, துலாபாரம்,நெஞ்சில் ஓர் ஆலயம்,மூன்றாம் பிறை,பாட்ஷா,நாயகன், எந்திரன்.


381. எல்லா மதம்,ஜாதியில் நல்லவர்கள்,கெட்டவர்கள் இருக்கிறார்கள்.இதை நன்கு உணர்ந்தால் தன்னை உயர்த்தி,பிறரைத் தாழ்த்தி பேசும் தன்மை வராது.


382. நமது நாட்டில் ஏழைகளில் பலர், அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்கும் சலுகைகளை நன்கு பயன் படுத்தி, வாழ்க்கையில் முன்னேற மறுக்கிறார்கள்.


383. அரசு தரும் உதவிப் பணத்தை ஏழை மக்கள் உபயோகமாக செலவு செய்யாமல், மது, மாது, சினிமா, சூதாட்டம் போன்றவற்றில் வீணாக செலவு செய்கிறார்கள்.


384. நமது நாட்டில் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு தரும் உதவித் தொகை, மற்ற சலுகைகளால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது


385. அரசு ஏழைகளுக்கு தரும் சலுகைகளை நிறுத்தினால் நாடு முன்னேறும்.ஏழைகள் வீண்செலவு செய்யமாட்டார்கள். ஆனால் அரசியல்வாதிகள் எதிர்ப்பார்கள்


386. ஜனநாயகம் என்பது ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது. பணக்காரர்களை ஏழையாக்குவது அல்ல.ஏழைகள் உயர மறுத்தால் அங்கு ஜனநாயகம் தோற்கும்.


387. வெளிநாட்டுப் பொருட்களின் மேல் நமக்கு உள்ள மோகம் தான் எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணம். இந்த உண்மையை அறிந்தவர் சிலர், அறியாதவர் பலர். 


388. குடும்பத்தை வெறுப்பது வேறு,குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்வது வேறு,குடும்பத்துக்காக உயிரை விடுவது வேறு.உயிரை விடுபவர்கள் மிகச் சிலரே.


389. முன்பெல்லாம் சினிமாவில் ஆபாசம், வன்முறை கதைக்குத் தகுந்தாற்போல் குறைந்த அளவில் இருந்தது. இப்பொழுது மிக அதிக அளவில் இருப்பது வேதனை


390. நான் சாதாரணமானவன். அதிகம் படித்தவன் அல்ல. கடற்கரையில் ஒரு கூழாங்கல். தண்ணீரில் ஒரு நீர்குமிழி.முகநூலில் தெரிந்ததைக் கிறுக்குகிறேன்

மனதில் தோன்றிய எண்ணங்கள் 361 TO 375

361. கஷ்டப் படும் ஒரு ஏழைக்கு உதவி செய்தால் அவர் கண்களில் தெரியும் நன்றியும் அவர் புன்னகையில் தெரியும் சந்தோஷமும் விலை மதிப்பில்லாதது.

362. எந்த ஒரு பிரச்சனையிலும் சுயமாக முடிவு எடுப்பதை விட தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான இருவரைக் கலந்து ஆலோசிப்பது  நல்ல முடிவைத் தரும்.


363. கடமைகளைத் தவறாமல் செய், பெற்றோர்களை சந்தோஷப் படுத்து, ஏழைகளுக்கு முடிந்த வரை உதவி செய், இறைவனைத் தியானம் செய். மனநிம்மதி நிச்சயம்.


364. இசையை ரசிப்பவர்கள் ஒன்று கூடி ஒரு குழு ஆரம்பித்தால் எல்லோரும் அவரவர்களுக்குப்  பிடித்த பாடல்களை பதிவு செய்து எல்லோரும் ரசிக்கலாமே.


365. புலம்புவதால் பலனில்லை. வருவதை எதிர் கொள்ளத்தான் வேண்டும். விதைத்தது நாம் தான். அறுவடையும் நாம் தான் செய்யவேண்டும். தப்ப முடியாது.


366. உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியின் தீர்ப்பை விமர்சனம் செய்யும் அளவுக்கு நம் நாட்டில் அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.


367. தண்ணீர் எப்போதும் மேட்டில் இருந்து பள்ளத்திற்குப் பாயும். அது போல, பணம் இருப்பவன், இல்லாதவனுக்குக் கொடுத்தால் தான் ஏழ்மை மறையும்.


368. பொது மக்கள் பணத்தை கொள்ளை அடித்த ஒரு தனிமனிதனைக் குற்றவாளி என்று நிரூபிக்க  கோடிக்கணக்கான பணமும் பலரது நேரமும் காலமும் வீணாகிறது.


369. மஹாத்மா காந்தியை நம் தேசப் பிதா என்கிறோம். ஆனால் நாட்டில் தினம் நடப்பதோ பொய் பித்தலாட்டம், வன்முறை, கற்பழிப்பு, லஞ்சம் ஆகியவை தான்


370. 
நான் எப்போதும் தூரப்பயணம் செய்யும் போது வெள்ளை வேஷ்டி, சட்டை, கதர் உள் ஆடைகள் தான் அணிவேன். பாண்ட் அணிவதில்லை. அதன் சுகமே தனி தான்.

371. என்ன ஆனாலும் சரி, ஒரு பைசா கூட லஞ்சமாக வாங்கவோ / கொடுக்கவோ மாட்டேன். என் தாயின் மீது சத்தியம் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.


372. லஞ்சம், ஊழலை ஒழிப்பது தான் நமது எல்லோருடைய இன்றைய தலையாய கடமை. அதற்காக உண்ணாவிரதம், கடை அடைப்பு எதுவும் நடத்தியதாகத் தெரியவில்லை.


373. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பிடித்த சனியாக இருப்பது லஞ்சம்,ஊழல்.எந்த கட்சி அதில் குறைந்த மார்க் வாங்குகிறதோ அதை தேர்ந்தெடுங்கள்


374. கீழ் கோர்ட், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், இவற்றின் குறிக்கோள் சட்டத்தை நிலை நாட்டுவது. ஆனால் அணுகுமுறை வேறு.அது அறிவு சார்ந்தது


375. ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு, கலாசாரம், மொழி, இயற்கை வளம், கல்வி அறிவு, வாழ்க்கை முறை, சட்ட திட்டங்கள், நல்ல ஆட்சி, தேசபக்தி முக்கியம்.

மனதில் தோன்றிய எண்ணங்கள் 346 TO 360

346. நமது கலாசாரம், பண்பாடு, குடும்பம், உறவுகள், வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், தர்மங்கள் என்றும் மாறாது, மாற்ற முடியாது

347. தான் சொல்வது தான் சரி மற்றவர்கள் கூறுவது தவறு என்கிற மனோபாவத்தில் விவாதம் செய்வது ஒருவரது வெற்றிக்கு வழி காட்டாது. பகையை வளர்க்கும்

348. மனது, மனிதனுக்கு இறைவன் கொடுத்த பரிசு. அதை நல்ல வழியில் உபயோகப் படுத்தினால் ஆரோக்கியம் கூடும். தவறாக உபயோகித்தால் வியாதிகள் வரும்.

349. மாற்றம் தேவை என்று எல்லோரும் கோஷம் போடுகிறார்கள்.விளைவு உபயோகமானதாக இருந்தால் வரவேற்கலாம். இல்லை என்றால் அந்த மாற்றம் தேவையே இல்லை.

350. இப்பொழுது ஆடைகள் அதிகம் வாங்குகிறோம். முதியோர் இல்லங்கள் பெருகி விட்டன. உங்கள் பழைய ஆடைகளை அவர்களுக்குக் கொடுத்தால் வாழ்த்துவார்கள்

351. மது அருந்துவது, அரசியல், மதம், ஜாதி, சினிமா, டிவி சீரியல் பற்றி பேசிப் பொழுதைக் கழிப்பது இவை தனி மனித முன்னேற்றத்திற்குத் தடை ஆகும்

352. பெரியவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் இளைய தலைமுறைக்கு ஒரு நல்ல வழிகாட்டி. அதை உதாசீனப் படுத்துவது, எள்ளி நகையாடுவது , அழிவின் அறிகுறி.

353. ஒரு மாநிலம் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல், எதிர்க்காமல், அமல்படுத்தாமல் இருந்தால் அந்த மாநிலத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது?

354. எவ்வளவோ பேர்கள் அரசியல், மற்றும் சினிமாவைப் பற்றி வீடியோ எடுத்து பிழைப்பு நடத்துகின்றனர். ஆதாரமற்றதை உண்மை என்று நம்புவது சரியல்ல.

355. மோட்டார் வாகனங்களைத் தவிர்த்து பேருந்தில் சென்றால், செலவு குறையும், ஆரோக்கியம் கூடும், ஆபத்து இல்லை, சாலை சீராகும், உலகம் தெரியும்

356. என் மனைவியும் நானும் ஹோட்டலில் டிபன் சாப்பிடும் பொழுது அவற்றைப் பகிர்ந்து உண்போம்.செலவு குறையும், திருப்தி அதிகம், ஆரோக்கியம் கூடும்

357. ஒருவர் தன்னுடைய மகள்,மருமகன் வாழ்க்கை முறையில் இருந்து விலகி இருப்பது சுலபம். ஆனால் மகன், மருமகளிடம் இருந்து விலகி இருப்பது கடினம்.

358. மாதம் இருமுறை விடுமுறை நாளில் வீட்டில் பொருட்களை இடம் மாற்றி வைத்தால், வீடு சுத்தமாகும், அழகு கூடும், ஆரோக்கியம் வரும், மனம் களிக்கும்

359. ஒரு திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வந்த பின் உடனே அதை மறப்பது என் வழக்கம். பலமுறை பார்ப்பது, பலரிடம் பேசுவது நான் விரும்புவதில்லை.

360. எம்.ஜி.ஆர் பல வெற்றிகளை அடைந்ததற்குக் காரணம் அவரது அரசியல், சினிமா கவர்ச்சி, பொது வாழ்க்கை, பாடிய பாடல்கள் எதுவென்று கூற முடியுமா?




Friday, June 1, 2018

RANDOM THOUGHTS 16 TO 30

16. In life, education gives knowledge, experience gives intelligence, age gives wisdom and attitude gives a character as gift.

17. Interest in education, keenness in the class, effort, and the urge to succeed are the important aspects of success in education.


18. A student who scores 80% by understanding the subject is far better than the student who scores 90% by mugging up.


19. Laughter is sweet people like, hatred is sour people avoid, pride is bitter people dislike, and anger is hot people reject.


20. The time you assist others without selfishness, the time you help the poor from what you have earned is an auspicious time.


21. The Mahalaya Paksham falls between Sept 6th to 19th. People who do not have father will worship him and other ancestors.


22. Family is a temple. For marriage, mutual understanding is more important than education, beauty, wealth, and character. 


23. In our country, most of the people do not have an interest in the economy than in cinema and politics. It is their ignorance.


24. Only a few people know about the economy of the country. All should try to know all aspects clearly without any doubt.


25. Poverty, ignorance, bribe, corruption, cinema, party politics, avoiding taxes, and alcohol are stumbling blocks for development.


26. A planned life is the best-lived life. Do you really believe in writing accounts of your income and expenditure to get the savings?


27. I just do my duty. I do not love, long for, hate or feel restless for my wife and children. I think about God and pray to him daily.


28. In society, 90% of the people are good people and 10% bad. Instead of this 90% correcting the rest, 10% is spoiling the 90%.


29. Is it possible to show love, attachment, liking, respect, fear and strictness in equal measure to all the member of the family?


30. In a family, if the relationship among the father, mother, son, daughter in law, daughter, son in law is cordial, it is heaven.


RANDOM THOUGHTS 1 TO 15

1. The quality of pudding is in the eating. The quality of mind is in the attitude. The quality of life is in living. Am I correct?

2. We have a tendency to oppose anything and everything. Is it due to the freedom of expression? Can't we remain without opposing?


3. In any matter of importance do you welcome the idea of consulting your views with others or do you wish to take your own decision?


4. The root is important for the stability of the tree. For a family, senior citizens are like the root. We should strive for their happiness? 


5. Borrowing is the order of the day now. After borrowing, one loses peace of mind and happiness. Can't we live without borrowing?


6. Do you consider compulsory military training for two years for all people after 21, will discipline them and benefit the country?


7.Om namachivaaya namaha. Om namo narayanaya namaha. Sri Rama Jayam. Om sakthi parasakthi. Jai anjaneya. Sri ragavendraaya. Om sai jai sai.


8. Om namo brahmane  namo astvagnaye  namah prthivyai nama oshadhiibhyah / namo vaache namo vaachaspataye namo visnave brhate karomi  [Hindus may pray three times]


9. Sri  rama  rama raamethi rame rame mano rame. Sahasra nama thathulyam rama nama varaanane

[Hindus may pray three times]

10. 
This is the jewel of mantras. Hindus may recite 54 times daily early in the morning: 
Sriman Narayana charanou, saranam prabadhye srimathe narayanaya namaha.

11. Om vishnave namaha, om shivayai namaha, om labdha kamayai namaha.


12, keshava, narayana, madhava, govindha, vishnu, madusudhana, thrivikrama, vaamana, sridhara, rishikesa, padmanabha, dhaamodhara.


13. Gayathri mantra : Om Bhoor bhuwah swah, tat savitur varenyam Bhargo devasya dheemahi, Dhiyo yo nah pra-chodayaat 

14. achudaaya nanaha, ananthaaya namaha, govindhaya namaha.

15. Suklam baradharam vishnum sasi varnam sadurpujam prasanna vadhanam dyayeth sarva vigna  upasanthaye.

அமெரிக்கா, அமெரிக்கா தான்.

நண்பர்களே, 

முதலில் நான் ஒரு இந்தியன். எனக்கும் நாட்டுப் பற்று உண்டு. அதற்காக மற்ற நாடுகளில் உள்ள நல்ல விஷயங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. 


அமெரிக்க பயணத்தில் நான் கண்ட காட்சிகளைத் தொகுத்து அளிக்கிறேன். ஏழை நாடு பணக்கார நாடு என்றில்லை. மக்களின் மனோபாவம் தான் முக்கியம். 


அறுபது வருடங்களுக்கு முன் இந்தியாவின் கலாசாரமும் மக்களின் மனோபாவமும் சிறந்து விளங்கின.உலகில் ஒரு சிறந்த நாடாக நமது நாடு விளங்கியது


இப்பொழுது வசதிகள் அதிகமானாலும் மக்கள் மனோபாவம் சரியாக இல்லை.மக்கள் மாற வேண்டும்.நமது நாடு பழைய உயர்ந்த நிலைக்குத் திரும்ப வேண்டும் 


1. அமெரிக்காவில்  இருப்பது பெருமை அல்ல, இந்தியாவில் இருப்பது சிறுமை அல்ல. என் பதிவுகள் அமெரிக்காவைப் பற்றி நண்பர்கள் தெரிந்து கொள்ளவே.


2. அணில் பெருச்சாளி மாதிரி இருக்கும். மேலே கோடுகள் இல்லாமல் பார்க்க சகிக்காது. நமது ஊரில் அணில் எவ்வளவு அழகாக இருக்கும்.


3. காய்கறி, பழங்கள், மளிகை சாமான்கள் ஆகிய எல்லாப் பொருட்களின் தரம் சிறப்பாக இருக்கும்.கலப்படம், சொத்தை எதுவும் இருக்காது


4. பிரஜை, தொழில் செய்வோருக்கு "சமூக பாதுகாப்பு எண்" ஒன்று தரப்படும். அது அவர் ஜாதகம். அது இல்லாமல் எதுவும் செய்ய முடியாது


5. மக்கள் தேசப்பற்று மிகுந்தவர்கள்.தேசியக் கொடிக்கு அதிக மரியாதை கொடுப்பவர்கள்.எல்லா இடங்களிலும் தேசியக் கொடியை பார்க்கலாம்.


6. மக்கள் குளிர் காலத்தில் தங்கள் உடலை 90 சதவிகிதம் ஆடையால் மறைத்து இருப்பார்கள்.கோடை காலத்தில் 10%மறைத்து இருப்பார்கள்


7. தெரு நாய்கள் இல்லை. நாய் வளர்காதவர்கள் குறைவு. அவர்கள் நாய் தெருவில் மலம் கழித்தால் அவர்களே சுத்தம் செய்து விடுவார்கள்


8. தூசி என்கிற பேச்சுக்கே இடமில்லை. ஒரு மேஜையின் மேல் ஆறு மாதங்கள் வரை துடைக்ாவிட்டாலும் ஒரு துளி தூசி கூட இருக்காது.


9. பட்டப் படிப்பு 4 வருஷம். கட்டணம் வருஷத்திற்கு 7 லட்சம். முதுகலை பட்டப் படிப்பு 2 வருஷம். கட்டணம் வருஷத்திற்கு 17 லட்சம்


10. அமெரிக்காவில் கிழக்கு கரையில் இருந்து மேற்குக் கரைக்கு நேரம் வித்யாசம் மூன்று மணி. இந்தியாவில் கல்கத்தா, மும்பை இடையில்  வித்யாசம் கிடையாது.


11. கடையில் வாங்கின பொருளை 90 நாட்களுக்குள் திருப்பி கொடுத்து மாற்றலாம் அல்லது பணம் திரும்பப் பெறலாம். அவ்வளவு நம்பிக்கை


12. சாலை போக்குவரத்து வலது பக்கம். ஓட்டுனர் இடதுப்பக்கம். இந்தியாவில் சாலை போக்குவரத்து இடது பக்கம். ஓட்டுனர் வலது பக்கம்


13. மரங்கள் அடர்ந்து காணப்படும். எங்கு பார்த்தாலும் உயரமான, அடர்த்தியான மரங்கள். FALL காலத்தில் பலவித வண்ணங்களில் மாறும்


14. மார்ச் 21 முதல் ஜூன் 21 வரை இளவேனில் காலத்து ஒவ்வாமை எல்லோரையும் பாதிக்கும். தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.


15. பல பகுதிகளில் நவம்பர் முதல் ஞாயிறு முதல்,மார்ச் 2வது ஞாயிறு வரை இரவு 2 மணிக்கு நேரம் ஒரு மணி குறைத்து வைக்க படுகிறது


16. பொது நிகழ்ச்சியில் மேடையில் ஒருவர் பேசும் போது,வேறு யாரும் பேசவோ, சத்தம் போடவோ கூடாது. முடிவில் அளவோடு கை தட்டலாம்


17. சாலைகள் மிக அழகு, விதிகளைத் துல்லியமாக மதிப்பார்கள், அபராதம் அதிகம், லஞ்சம் கிடையாது, பாதசாரிகளுக்கு மரியாதை அதிகம்.


18. எங்கும் எதிலும் வரிசை முறை தான். வயதானவர்கள் கூட பொறுமையாக நிற்பார்கள். எக்காரணம் கொண்டும் வரிசையைத் தாண்ட மாட்டார்கள்


19. கார் இல்லாதவர்கள் இல்லை. பெரிய கார்கள் தான். 
சிறிய கார்கள் கிடையாது. பெட்ரோல் மலிவு. ஹாரன் ஒலி எழுப்ப மாட்டார்கள்.

20. அமெரிக்கா பரப்பளவு  இந்தியாவை விட மூன்று மடங்கு பெரியது. இந்தியாவின் ஜனத்தொகை அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகம்.


21. 60வயதுக்கு மேற்பட்டவர்களை அரசாங்கம் பாதுகாக்கிறது. அவர்களுக்கு மாத உதவித்தொகை, குறைந்த விலையில் வீடு, ரேஷன் அளிக்கிறது


22. வங்கிகளில் வட்டி விகிதம் [கொடுப்பது / வாங்குவது] மிகக் குறைவு. அதனால் சேமிப்பு குறைவு. செலவு செய்யும் மனோபாவம் அதிகம்


23. பாதையில் வாழும் ஏழைகள் குறைவு. அவர்களுக்கு குளிர் காலத்தில் உணவு, தங்கும் வசதிகள் கிருஸ்துவ மிஷன் செய்து கொடுக்கிறது


24. லஞ்சம் வாங்காமல், முப்பது நிமிடங்களில், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், தகுதி சான்றிதழ், மாசுக் கட்டுப்பாடுப் பரிசோதனை செய்யப் படுகிறது


25. வீட்டு வேலைகளைச் செய்வதற்கு வேலை ஆட்களை அமர்த்துவது இல்லை. ஊதியம் அதிகம்.எல்லா வேலைகளையும் தானே செய்து கொள்கிறார்கள்


26. வாசக சாலை அனுபவம் ஒரு அற்புதம். வெளியே வரவே மனது வராது. புத்தகங்கள் அழகாக, ஒழுங்காக, சுத்தமாக வைக்கப் பட்டு இருக்கும்.


27. சாலையில் உள்ள குப்பைகளை காற்றுத் துருத்தி மூலம் ஊதி, ஒன்று சேர்த்து இயந்திரம் மூலம் உறிஞ்சி எடுத்து கொண்டு போவார்கள்

28. சாலையில் இடைஞ்சலாக உள்ள மரக்கிளைகளை இயந்திரத்தினால் அறுத்து, இயந்திரம் மூலம் பொடி செய்து எடுத்துக் கொண்டு போவார்கள்.

29. சமயலறைக் கழுவுத் தொட்டியின் கீழே சிறிய கிரைன்டர் வைத்து இருக்கிறார்கள். அது குப்பையை அரைத்து வெளியே தள்ளி விடுகிறது.

30. ஒரு பொருளை வாங்கி கொஞ்சம் உபயோகப்படுத்திப் பார்த்து திருப்தி இல்லை என்று திருப்பிக் கொடுத்தால் பணம் கொடுத்து விடுவார்கள்.

31. அமெரிக்கப் புராணம் இத்துடன் முடிவுற்றது. நல்லதை வரவில் வைப்போம். கெட்டதை செலவில் வைப்போம். பொறுமையாக படித்தவர்க்கு நன்றி வணக்கம்.