271. பிறரிடம் எதையாவது எதிர்பார்ப்பதே எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணம். எதிர்பார்க்காமல் வாழக்கற்றுக் கொள்ள வேண்டும். அந்த மகிழ்ச்சியே தனி
272. தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்வதே வாழ்க்கையின் தத்துவம். கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஏற்படும் மனத்திருப்தியே தனி.
273. தனியான, சுதந்திரமான வாழ்க்கையே மகிழ்ச்சியானது. வயதாகி, உடல் முடியாவிட்டால் குழந்தைகளுடன் அனுசரித்துப் போகும் வாழ்க்கையும் சிறந்தது
274. "எல்லாம் இறைவன் செயல்" என்பார் சிலர். "முயற்சி திருவினையாக்கும்" என்பார் சிலர். இரண்டுமே முக்கியம். ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை.
275. இறைவன் அருளில் பிறருக்குக் கஷ்டம் தராத இறப்பு வேண்டும். அதற்கு மனக் கட்டுப்பாடு, ஆரோக்கியம் மிக முக்கியம். அதற்கு முயற்சி அவசியம்.
276. காமத்தில் காதல் பிறக்கும். காதல் வந்த பின் காமம் மறந்து போகும். காதல் நிலைக்கும். வயதான காலத்தில் காதல் இல்லையேல் வாழ்க்கை நரகம்.
277. பெற்றோர்களிடம் இருந்து தான் குழந்தைகள் நல்லது,கெட்டதுகளை தெரிந்து கொள்கிறார்கள். அவர்கள் எப்படியோ அப்படித்தான் குழந்தைகள் இருக்கும்
278. வீடோ, நிலமோ விற்க வேண்டும் என்றால், கருப்புப் பணம் வாங்கிக் கொண்டால் அதிக விலை. வேண்டாம் என்றால் குறைந்த விலை. இது என்ன நியாயம்?
279. வீட்டிலோ, நாட்டிலோ, காட்டிலோ, வானத்தில்லோ நிலைமை உங்களை மீறிப் போய் விட்டால், உங்கள் விதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
280. என் மனைவி குழந்தைகளின் தவறுகளைத் திருத்த என்னை நான் தண்டித்து கொள்வேன்.அவர்களும் உணருவார்கள். அவர்களுக்கு என் மீது அன்பும் பெருகும்
281. அந்த காலத்தில், நான் ஒரு பையில் மளிகை வாங்கி வந்தேன். என் மகன் ஒரு காரில் வாங்கி வருகிறான். என் பேரன் ஒரு லாரியில் வாங்கி வருவான்.
282. நான் சாப்பாட்டில் நெய் உபயோகப் படுத்துவதில்லை. நல்லெண்ணை தான் உபயோகப் படுத்துகிறேன். ஆரோக்கியம், மனக் கட்டுப்பாடு இரண்டு காரணங்கள்
283. சில சமயம் இசையின் தரத்தால் பாடகரின் குரல் சிறப்பாக தெரியும்.சில சமயம் பாடகரின் குரல் வளத்தால் இசை இனிமையாக தெரியும். இரண்டும் இனிமை
284. ஒரு பாடகர் பாடும் போது சிரித்த முகத்துடன் பாட வேண்டும். முகத்தில் கஷ்டங்களை காட்ட கூடாது. உச்சஸ்தாயியில் குரலில் பிசிர் தட்ட கூடாது.
285. குளிர் பிரதேசங்களில் உணவு பொருட்கள் சீக்கிரம் கெட்டுப் போவதில்லை. அதனால் அவர்களுக்கு தினம் சமைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை.