Sunday, December 30, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1006 TO 1020

1006. ஹிந்துக்கள் மட்டும் தான் வாழ்த்துகள் சொல்வது. கிரிஸ்தவர்கள், முஸ்லிம்கள் சொல்வது கிடையாது. வாழ்த்தவும் வேண்டாம், வீழ்த்தவும் வேண்டாம்.

1007. திரு எம்.ஜி.ஆர் அவர்களை நாம் போற்றிப் புகழுகிறோம். மக்களுடைய நன்மைக்காக அரசியலில் அவர் செய்த அரிய சாதனைகளை விளக்கிக் கூற முடியுமா?

1008. கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த வார்த்தையும் அதிக நாளைக்கு நிலைக்காது என்று சொல்வார்கள். தானாக பிழைக்கும் வழி தேடவேண்டும்.

1009. ஒவ்வொருவரும் அரசியலில் ஒரு தலைவரை ஆதரிக்கிறீர்கள். அவர் பதவிக்கு வந்து லஞ்சம்,ஊழல்,ஏழ்மையை ஒழிக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

1010. சரி, போகிறது. நமது நாட்டிற்கு இப்போது தேவை முன்னேற்றம் அல்ல. லஞ்சம் ஊழல் ஒழிய வேண்டும். அதற்கு உங்கள் தலைவர் உறுதிமொழி தருகிறாரா?

1011. என்னை தப்பா நினைக்காதீங்க. மதம், சாதின்னு கட்டிக்கிட்டு அலையுறோமே, நாம் நமது  பெற்றோரின் குழந்தைதான் என்று நமக்கு நிச்சயமாக தெரியுமா? 

1012. எனக்கு என் பெற்றோர்களைத் தெரியாது. அவர்கள் தான், நான் அவர்கள் பிள்ளை என்று சொன்னார்கள். அதை நான் இதுவரை நம்பிக்கொண்டு இருக்கிறேன்.

1013. நான் ஒரு முஸ்லிமாக, கிருஸ்துவனாக இருக்கலாம்.நான் பிறக்கும் போது ஆஸ்பத்திரியில் குழந்தை மாறி இருக்கலாம். இறைவனுக்கு தான் தெரியும்.

1014. தந்தை என்பார், சகோதரன் என்பார், நண்பர் என்பார். மன வேற்றுமை வந்து விட்டால் மமதை வந்துவிடும். உறவுமுறை மறந்து விடும். இதுதான் உலகம்.

1015. நாம் பிறக்கும்போதே நமது வாழ்க்கைப் பாதை இறைவனால் போடப்பட்டு விட்டது. அந்த வழியில் நாம் நடக்கத்தான் செய்கிறோம்.அதை மாற்ற முடியாது.

1016. நமக்கு வருடப் பிறப்பு சித்திரை மாதத்தில். ஜனவரிக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் வாழ்த்து சொல்லாமல் யாரும் இருக்கப் போவதில்லை.

1017. நிஜ வாழ்க்கையில் பேஸ்ட்க்கு அப்புறம் காப்பி வரும். கம்ப்யூட்டர் வாழ்க்கையில் காப்பிக்கு அப்புறம் பேஸ்ட் வருது. ஒண்ணுமே புரியலே.


1018. பெண்கள் அசிங்கமாக உடை உடுத்தக் கூடாது என்ற கருத்தை சொல்ல அவர்களுக்கு அசிங்கமாக உடை அணிவித்து திரைப்படம் எடுத்தால் என்ன செய்யலாம்?


1019. கண்ணாடி துண்டும் கற்கண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரித் தெரியும். சுவைத்துப் பார்த்தால் தான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.


1020. உணவுப் பசி இரண்டு வகைப்படும். ஒன்று வயிறு காலியாகி கேட்பது. இரண்டு நாக்கு வேண்டும் எனக் கேட்பது.முதலாவது நல்லது.இரண்டாவது கெடுதல்.




Saturday, December 29, 2018

படித்ததில் பிடித்தது..

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை..? என்று கேட்டான்.

குதிரையின் உரிமையாளரோ..,


"ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்" என்றார்.

சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்.." என்றான்.

குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்..! பிறகு பதில் சொல்லுங்கள்..!


ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம்...ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை.

இது ஏன்..? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்" என்றார்.

சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்துவிட்டான்.


சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.


குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்."


"துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா..? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்..?" என்றார்.


நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.


அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.


"ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்..? "


" பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்" என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.


சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி..! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா..!" என்றார்.


பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா..! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்..?" எனக் கேட்டார்.


அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான்.


அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள் எல்லாரும் திகைத்தார்கள்.


"அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது..?" எனக் கேட்டார்கள்.


தர்மர்பதில்சொல்ல தொடங்கினார்..


"தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன..."


அதை நினைத்துத்தான் நடுங்கினேன்.


"ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்.." என்று விரிவாகக் கூறினார்.


"உங்களிடம் கேள்வி கேட்டவன் "கலி புருஷன்" அவன் கேட்ட முதல் கேள்வியில்

" பெரிய கிணறு என்பது பெற்றோர்கள்...
ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி...! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்பது குறிக்கிறது.

ஆனால், அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.."


"அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும்.

ஆனால், நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்..."

"அடுத்து மூன்றாவது கேள்வியில், 

"பயிர்கள்" என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள்..."

இதைத்தான், வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்..


கலியுகத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் என்பது மகாபாரத காலத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

Tuesday, December 11, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 991 TO 1005

991. குழந்தைகள் தெய்வத்திற்கு சமமானவர்கள். எத்தனையோ லக்ஷக்கணக்கான மனிதர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை இல்லையே என்று மிகவும் ஏங்குகிறார்கள்

992. குழந்தைகள் விஷமம் செய்வது இயற்கை. அது அவர்களுடைய அறிவை வெளிப்படுத்தும் முறை. சும்மா இருந்தால் மூளையில் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.


993. குழந்தைகள் செய்யும் விஷமத்தைத் தாங்க முடியாத பெற்றோர்கள் உண்டு.விஷமம் செய்ய ஒரு குழந்தை இல்லையே என்று எங்கும் பெற்றோர்களும் உண்டு.


994. குழந்தைகளை ஒரு போதும் கையால் அல்லது வேறு பொருளால் அடிக்கக் கூடாது. அவர்கள் உடலில் சக்தி வந்தபிறகு உங்களை அடிக்கக் காத்திருக்கும்.


995. குழந்தைகளிடம் ஐந்து வயது வரை அன்பு காட்ட வேண்டும். பதினைந்து வயது வரை சொல்லிக் கொடுக்க வேண்டும். பிறகு நல்ல தோழனாக இருக்க வேண்டும்


996. பெண் குழந்தைகளுக்கு பலவித உடல் மற்றும் மனது சம்பந்தமான பிரச்சனைகள் உண்டு.அவைகளை தாயால் தான் தீர்த்து வைக்க முடியும்,தந்தையால் அல்ல


997. குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பதும் தவறு.அதிக கண்டிப்பு காட்டுவதும் தவறு.அவை அளவுடன் இருக்க வேண்டும்.பரஸ்பர அன்பு முக்கியம்


998. குழந்தைகள் தவறு செய்யும் போது கோபத்தை அடக்குவது கஷ்டம்.நாம் அந்த வயதில் எப்படி இருந்தோம் என்று கொஞ்சம் நினைத்து பார்த்தால் போதும்.


999. எல்லாக் குழந்தைகளுக்கும் ஆண்டவன் அறிவை சமமாகப் படைப்பது இல்லை. ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒருபோதும் ஒப்பிட்டு பேசக் கூடாது


1000. குழந்தைகளுக்கு தங்களுடைய தாய், தந்தைதான் ஹீரோக்கள். அந்த உயரிய எண்ணத்தை பாதிக்கும்படி பெற்றோர்கள் ஒருபோதும் நடந்து கொள்ளக் கூடாது.


1001. வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் தன்னுடைய குழந்தைகளின் தயவில் வாழ வேண்டியது வரும் என்ற உண்மையை பெற்றோர்கள் எப்போதும் மறக்கக் கூடாது.


1002. எல்லோரும் தங்கள் மதம் தான் உயர்ந்தது, சிறந்தது என்கிறார்கள். அப்போது எம்மதமும் சம்மதமே என்ற உயரிய கருத்துக்கு கொஞ்சமும் இடமே இல்லை


1003. ஆண்களைப் போல அல்லாமல், பெண்களுக்கு இறைவன் அளித்துள்ள "ஜாக்கிரதை" மனப்பான்மை, அவர்களை ஆபத்துகளில் இருந்து, கவசம் போல பாதுகாக்கிறது.


1004. தந்தை என்பார், அண்ணன் என்பார், நண்பர் என்பார்,மன வேற்றுமை வரும் வரை. பிறகு மமதை வந்துவிடும். உறவுமுறை மறந்து விடும்.இதுதான் உலகம்.


1005. எத்தனை நாள் வெளியூர் சென்றாலும், வெள்ளையில் மூன்றுசெட் 4முழவேட்டி,பனியன், அண்டர்வேர்,இரண்டு ஸ்லாக்,ஒரு துண்டு இவைதான் என் லக்கேஜ்.


Monday, December 10, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 976 TO 990

976. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது தான் வாழ்க்கை. விட்டுக் கொடுத்தால் தான் கட்டிக் கொள்ள முடியும். சுதந்திரம் கூடாது

977. "கனியிருப்பக் காய்கவர்ந் தற்று" என்றார் திருவள்ளுவர். ஆனால் இப்போதெல்லாம் காயைத் தான் எல்லோரும் விரும்புகிறார்கள் கனி இருக்கும்போது.

978. அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் கூறினார்: மக்களுடைய அரசு, மக்களால் ஆன அரசு, மக்களுக்கான அரசு இந்தப் பூமியில் என்றும் அழிவதில்லை

979. அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு நிதி நிலையை அடிப்படையாக வைத்தால், நமது திறமைசாலிகள் பெரும் பணக்காரரை பரம ஏழையாகக் காட்டி விடுவார்கள்.

980. அரசின் சலுகைகளை பெறுவதற்கு சாதியை அடிப்படையாக வைத்தால், நமது திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேற சிறிதும் முயற்சி செய்ய மாட்டார்கள்.

981. இந்தப் பருவகாலத்தில் சென்னையில் இது வரை 68 செமீ  மழைக்கு பதிலாக 34 செமீ  மழை தான் பெய்துள்ளது. வரும் காலத்தில் தண்ணீர் பஞ்சம் வரும்.

982. ஆங்கிலத்தில் ஒரே உச்சரிப்பு உள்ள இரு வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் உண்டு. அது இடத்திற்கு ஏற்றபடி மாறும். அது ஆங்கிலத்தின் சிறப்பு

983. ஒரு தாய், தனது குழந்தைகளை பாரபட்சமில்லாமல் நடத்த வேண்டும். அதிலும் மூத்தவரை மதிக்க வேண்டும். மற்றவர்கள் அவரை மதிக்க செய்யவேண்டும்.

984. என் பாட்டி சொல்வார்கள், "கழுதை விட்டை கை நிறைய" அதாவது உபயோகம் இல்லாத பொருட்கள்  அதிகம் இருப்பதால் யாருக்கும் எந்தவித பலனும் இல்லை.

985. நமது திரைப்படங்களும் பத்திரிகைகளும், தொலைக்காட்சியும் நமக்குக் கூறுவது இதுதான்."எதையும் அசிங்கமான எண்ணத்தோடு பார்க்காதீர்கள்"என்று

986. மனிதன் மலம், மாட்டுச் சாணம், கழுதை விட்டை, குதிரை / யானை லத்தி, ஆட்டுப் புழுக்கை.பொருள் ஒன்று வார்த்தைகள் பல.ஆஹா,தமிழின் அழகே அழகு

987. மாடு, ஆடு, கோழி, வாத்து, பன்றி,மீன் முதலிய வீட்டுப் பிராணிகளை வளர்த்து குடிசைத் தொழிலாக லாபம் சம்பாதிக்க முயற்சி செய்தால் பலனுண்டு.

988. சாராயக் கடைகளிலும் சினிமா தியேட்டர்களிலும் கூட்டம் அலை மோதுகிறது யார் சொன்னார்கள் மக்கள் கஷ்டப் படுகிறார்கள் என்று?சும்மா காதுல பூ

989. குடும்பம் முன்னேறினால், நாடு முன்னேறும். குடும்பம் முன்னேறாவிட்டால் குடும்பம், நாடு இரண்டுமே முன்னேறாது. பல குடும்பங்கள் ஒரு நாடு.

990. அறிவுள்ளவன் நாம் சொல்வதை ஒப்புக்கொள்ள மாட்டான். அறிவில்லாதவன் நாம் சொல்வதை புரிந்து கொள்ள மாட்டான். இருவரிடமும் பேசுவது வீண் வேலை.

Sunday, December 9, 2018

மாடுகள் எப்போது உறங்கும்?

பரபரப்பான வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறேன். பல பிரச்சனைகள். வீட்டில், தெருவில், ஊரில், உறவில், நண்பர்களிடத்தில், வேலை செய்யும் இடத்தில் என பிரச்சினை, பிரச்சினை, பிரச்சனை... ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது. தூங்கமுடியவில்லை. எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள் சாமி" என்றவாறே அந்த முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன். அப்போது மாலை நேரம்.


முனிவர் அவனிடம் "பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன அவை என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார். சென்றவன் திரும்பி வந்து... "100 மாடுகள் இருக்கும் சாமி... எல்லா மாடுகளும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான்.


"நல்லது. உனக்கு இன்னிக்கு ஒரு சின்ன வேலை தர்றேன்... நீ அந்த 100 மாடுகளையும் தூங்க வைக்கணும். அந்த 100 மாடுகளும் தரையில் படுத்து ஓய்வானவுடன் அங்கே பக்கத்துலயே இருக்கிற சின்ன ஓய்வறையில் நீ போய் படுத்து தூங்கிக்கலாம்... 100 மாடுகளும் படுக்கணும்... அதுதான் முக்கியம். சரியா? இந்த வேலைய முடிச்சுட்டு காலையில் திரும்பி வா..." என்றார்.


"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் இரவெல்லாம் இருந்துவிட்டு... கண்களில் தூக்கமின்றி காலையில் களைப்புடன் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை ..." என்றான்.


"என்ன ஆச்சு?" என்றார் முனிவர்...


"100 மாடுகளையும் படுக்க வைக்க படாதபாடுகள் பட்டும் முடியவில்லை. சில மாடுகள் தானாகவே தரையில் படுத்துவிட்டன. சில மாட்டை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன். ஆனால் அனைத்து மாட்டையும் படுக்கவைக்க முடியவில்லை. 


சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன. அனைத்து மாட்டையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை... சாமி! அதனால நான் தூங்குவதற்கு போகவே இல்லை. இரவு முழுவதும் தூங்கவும் இல்லை!" என்றான்.


முனிவர் சிரித்தபடியே, "இதுதான் வாழ்க்கை.! வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது மாடுகளை படுக்க வைப்பது போன்றது...!*


சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்... சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்... ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிதாக எழலாம். அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது...*


பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே. தீர்க்கமுடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை கடவுளின் கைகளில் அல்லது காலத்தின் ஓட்டத்தில் ஒப்படைத்துவிட்டு. உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள்!" என்றார்.


முனிவரை வணங்கிவிட்டு சென்றவன் சிலநாள் கழித்துவந்து முனிவரிடம் "சில மாடுகள் படுக்கவில்லை என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன்.." என்றான். 


வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு மாடுகள் போன்றது...*அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே. ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது...


அப்படியே நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது. ஆகவே சிலவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு, வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்.


வாழ்வு பிரச்சனையாக இருப்பதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் மனம்தான் காரணம். சூட்சுமத்தை புரிந்து கொண்டால் சுகமாய் வாழலாம்...

அறிவோம், தெளிவோம். வாழ்க வளமுடன்.




Friday, December 7, 2018

பாரம்பரிய பழக்க வழக்கம்

ஒரே தலைவலி. மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான். உனது ‘ஓனர்’ எங்கேப்பா என்று கேட்டேன்.


அவருக்குச் சரியான தலைவலி. அதோ அந்தக் காப்பிக் கடையில் காப்பி சாப்பிடப் போயிருக்கிறார் என்றான் அவன்!


என் கையிலிருந்த தலைவலி மாத்திரை ஸ்டிரிப் என்னைப் பார்த்து ‘ஙே’ என்று விழித்தது!


அம்மாவுக்கு பிபியும் (ப்ப்) ஷுகரும் ஏறி விட்டது. ஆகவே அலறி அடித்துக் கொண்டு டாக்டரைப் பார்க்க காலையிலேயே அம்மாவுடன் கிளம்பினேன்.


டாக்டர் யோகா செய்து கொண்டிருந்தார். முக்கால் மணி நேரம் காத்திருந்தோம். அம்மாவை செக் பண்ணிப் பார்த்த டாக்டர் மருந்துகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்த வேண்டும் என்றும் வேளாவேளைக்குச் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை பகன்றார். அவர் எழுதித் தந்த அதிகப்படியான 5, 6 மாத்திரைகள் கொண்ட சீட்டை வாங்கிக் கொண்டேன்.


ஒரு ஆவல் உந்த, “டாக்டர், நீங்கள் யோகா செய்கிறீர்களா?” என்று கேட்டேன். 15 வருடமாகச் செய்து வருவதாகவும் அதனால் தான் பிபி, ஷுகர் இல்லாத ஆரோக்கிய வாழ்வைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.


பிபி, ஷுகரைக் குறைக்க அவர் எழுதித் தந்த நீண்ட மாத்திரை சீட்டைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று என்னைப் பார்த்து விழித்தது.


மனைவியின் தலைமுடி கோரமாக ஆகிக் கொண்டிருப்பதாக அவளுக்கு ஒரு உணர்வு. "சரி, வா பியூட்டி பார்லர் போவோம்!" என்றேன்.


நமது நலனைக் கருதி பல்வேறு பேக்கேஜ்கள் நமக்கு உகந்ததாக இருப்பதாக ரிஸப்ஷனிஸ்ட் அன்புடன் சொன்னாள். 1200 ரூபாயில் ஆரம்பம். 3000 ரூபாய் வரை போகிறது லிஸ்ட். பேரம் பேசி 3000 ரூபாய் பேக்கேஜை 2400'க்கு முடித்தேன். (அட, என்ன எனது சாமர்த்தியம் பார்த்தீர்களா!)


மனைவியின் கேசத்தைக் கோதி விட்டுக் கொண்டிருந்த பெண்மணியின் தலை முடி அழகாக இருந்ததோடு கம கமவென ஒரு நறுமணமும் அதிலிருந்து வந்தது.


‘அட, நல்ல வாசனையாக இருக்கிறதே’, என்று அவளைப் பாராட்டினேன்.


அவள் நன்றி தெரிவித்ததோடு, காலம் காலமாக அனைவரும் உபயோகித்து வரும் சம்பிரதாயமான எண்ணெயைத் தான் சூடத்தைக் கலந்து உபயோகித்து வருவதாகவும் அதனால் முடி நீண்டு அழகாக இருப்பதாகவும் தெரிவித்தாள்.


2400 ரூபாய்க்கு பேரம் பேசிய என்னைப் பார்த்து என் மனைவி விழிக்க அவளைப் பார்த்து நான் விழித்தேன்.


ஒருநாள் மதிய உணவிற்குப் புகழ் பெற்ற உணவு விடுதிக்குக் குடும்பத்தோடு சென்றேன்.


சாப்பிட்டு முடிந்தவுடன் பில்லை நீட்டிய மானேஜர், “சாப்பாடு எப்படி சார் இருந்தது? பசு நெய், சுத்தமான ஆயில், பாஸ்மதி அரிசி மட்டும் தான் நாங்கள் உபயோகிக்கிறோம். அடிக்கடி வாருங்கள்” என்று சொன்னார். அத்துடன் தன் கேபினுக்கு அழைத்து தனது விஸிடிங் கார்டையும் கொடுத்தார்.


அங்கிருந்த டிபன் கேரியரை நான் பார்த்தேன். அப்போது ஹோட்டல் பணியாளர்கள் இருவர் தங்களுக்குள் பேசிக் கொண்டதையும் கேட்டேன்.


“சுனில், சாரோட டிபன் பாக்ஸை எடுத்து தனியே வை. அவர் சாப்பிட வர இன்னும் பத்து நிமிடமாகும்”


அவரைப் பார்த்து நான் கேட்டேன், “ஏன், உங்கள் சார் இந்த ஹோட்டலிலேயே சாப்பிட மாட்டாரா?”


“ஊஹூம்! ஒருபோதும் சாப்பிட மாட்டார். அவருக்கு வீட்டு சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்!”


என் கையில் இருந்த 1670 ரூபாய் பில்லைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று விழித்தது. 


நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தோ மானால் நமக்கு செலவுக்குச் செலவும் மிச்சம்; ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் அற்புதமாக நிலைத்து நீடித்திருக்கும்!



அவசியமில்லா நுகர்வு

 ``எங்கப்பா என்னைவிட குறைவாதான் சம்பாதிச்சார். வீட்ல  மூணு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும்  கட்டிட்டு, கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.


ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல...’’


இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், லக்ஸரி கார், அபார்ட்மென்ட் என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை . அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்... மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது புரிபடவேயில்லை.


இப்படிப்பட்ட இளைஞர்கள  தங்களுடைய 30-வது வயதில் ஆறு இலக்க சம்பளம், காஸ்ட்லி கார்கள், சகலவசதி வீடுகள், பார்ட்டி, கொண்டாட்டம் என  வாழ்கிறார்கள். ஆனால், ஏதோ குறைவதை உணர்கிறார்கள். உழைத்த பணத்தில் எதை எதையோ வாங்கி, வாங்கிக் குவிப்பதும் மகிழ்ச்சியில்லை என்பதை உணர்கிறார்கள். 


புரிந்துகொண்ட நொடியில் "குறைந்தபட்சம்" என்கிற கான்செப்ட் பிறக்கிறது. பொருள்களை வாங்குவதுதான் மகிழ்ச்சி, என்கிற கருத்து தவறு. உண்மையில், பொருள்களை வாங்குவதில் மகிழ்ச்சியில்லை; அதை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது.


"குறைந்தபட்சம்" என்றாலே கஞ்சப்பிசனாரி யாக வாழ்வது அல்ல. அவசியமானவற்றுடன் அளவாக வாழ்வது. உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்தால், நோய்கள் எப்படி வருமோ அதுபோலவேதான்.  இடநெருக்கடியில் தொடங்கி பணநெருக்கடி வரை அனைத்திற்கும் காரணமாக இருப்பது  இந்த ‘அவசியமில்லா நுகர்வு’தான்.


அதென்ன அவசியமில்லா நுகர்வு?


நடந்துபோகிற தூரத்திற்கு காரில் செல்வது, எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே அதிக விலைகொடுத்து செல்போன் வாங்குவது, இரண்டுபேர் வாழ கடனுக்காவது நான்காயிரம் சதுர அடியில் மிகப்பெரிய வீட்டை வாங்கிக்கொள்வது, அதில் அலங்காரத்திற்கென லட்ச லட்சமாய் செலவழித்துப் பொருள்களை அடுக்குவது எல்லாமே தேவையில்லா நுகர்வுதான்.


இதைப் பின்பற்றுபவர்கள் . அதிக நேரம், அதிக மகிழ்ச்சி, அதிக சேமிப்பு, அதிக படைப்பாற்றல் என தங்களுடைய வாழ்வில் அவசியமானதை அதிகப்படுத்திக்கொள்கிற வாழ்வையே வாழ்கிறார்கள்’’ நம்முடைய பெற்றோர்களும் முன்னோர்களும் அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். 


வீட்டில் தேவையில்லாமல் ஒரு பல்ப் எரிந்தால்கூட ஓடிச்சென்று அணைக்கிற பெரியவர்களை இப்போதும் நம் வீடுகளில் காண முடியும். அதுதான் நம்ம வீட்டு "குறைந்தபட்சம்". இதுபோன்ற சின்னச் சின்ன சேமிப்புகளின் வழிதான் அவர்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்வாகக் கட்டமைத்தார்கள்.

Thursday, December 6, 2018

எனக்குப் பிடித்தது இரண்டு

நான் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, இங்கிலீஷ், ப்ரென்ச், ரஷ்யன், ஜாப்பனீஸ், சைநீஸ், இத்தாலியன் மற்றும் கொரியன் திரைப்படங்கள் பார்த்து இருக்கிறேன்.


எனக்கு சினிமாவைப் பிடிக்கும். ஆனால்  நடிகர்கள் மீது மோகம் கிடையாது. சினிமாவை பற்றி என் அணுகுமுறை வேறு. நான் இயக்குநரின் விசிறி. 


தமிழ் கதாநாயகர்கள்  ஆயிரம் திரைப்படத்தில் நடித்து இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு நடிகருக்கும் எனக்குப் பிடித்தது இரண்டு படங்கள் தான். அவைகள் இதுதான்.


T.S.பாலையா : தில்லானா மோகனாம்பாள், காதலிக்க நேரமில்லை.

S.V.சுப்பையா : வாழ வைத்த தெய்வம், காவல் தெய்வம்

S.V.ரங்காராவ் : கை கொடுத்த தெய்வம், படிக்காத மேதை

M.R.ராதா : ரத்தக்கண்ணீர், சித்தி

T.R.ராமச்சந்திரன் : அடுத்த வீட்டுப் பெண், சுமைதங்கி

J.B.சந்திரபாபு : சபாஷ் மீனா, சகோதரி

M.G.R. : எங்க வீட்டு பிள்ளை, அன்பே வா

சிவாஜி கணேசன் : உத்தம புத்திரன், படிக்காத மேதை 

ஜெமினி கணேசன் : கல்யாண பரிசு, நான் அவன் இல்லை

ரவிச்சந்திரன் : அதே கண்கள், நான்

ஜெயசங்கர் : நூற்றுக்கு நூறு, குழந்தையும் தெய்வமும்.

முத்துராமன் : போலீஸ்காரன் மகள், கண் கண்ட தெய்வம்.

நாகேஷ் : நீர்குமிழி, பூஜைக்கு வந்த மலர்

கமல் ஹாசன் : மூன்றாம் பிறை, அன்பே சிவம்

ரஜினிகாந்த் : ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும்.

அர்ஜுன் : ரிதம், வேதம்.

கார்த்திக் : அரிச்சந்திரா ,கோகுலத்தில் சீதை

பிரபு : அக்னி நட்சத்திரம், சின்ன தம்பி

விஜய் காந்த் : வைதேஹி காத்திருந்தாள், சின்ன கௌண்டர்.

சத்திய ராஜ் : வேதம் புதிது, அமைதிப்படை   

பிரகாஷ் ராஜ்  : ஆசை, இருவர்

பார்த்திபன்  : புதிய பாதை, வெற்றி கொடி கட்டு

விக்ரம் : தெய்வத் திருமகள், சேது

விஜய் : குஷி, காதலுக்கு மரியாதை

அஜித் : வில்லன், வாலி

சூரியா : பிதா மகன், காக்க காக்க

மாதவன் : அலைபாயுதே, அன்பே சிவம்

தனுஷ் : காதல் கொண்டேன், ஆடுகளம்

கார்த்தி : பருத்தி வீரன், தோழா

வடிவேலு : வின்னர், வெற்றி கொடி கட்டு


பின் குறிப்பு : ஏனோ தெரியவில்லை. சிவகுமார், விஜய்குமார், மேஜர் சுந்தரராஜன், ஏவிஎம் ராஜன், அசோகன், மோகன், ராமராஜன், சிம்பு , பிரஷாந்த், ஸ்ரீகாந்த், விஷால்,,விஜய்சேதுபதி, சிவ கார்த்திகேயன் ஆகியவர்களை சேர்க்க மனமில்லை.

மனதில் தோன்றிய எண்ணங்கள் 961 TO 975

961. அறிவு என்பது கர்ம பலன்.கொஞ்சம் முயன்றால் படிப்பு வரும்.சலுகைகள் கொடுப்பதால்,அறிவு வராது.கல்வித் தரம் கீழே போகும்.நாடு பின் தங்கும்

962. உடலைப் பிரியும் ஆத்மா, தன்னுடன் கர்ம பலனையும் அடுத்த பிறவிக்கு எடுத்துச் செல்கிறது. அந்தப் பலனைப் பொறுத்து, அடுத்த பிறவி அமைகிறது.

963. தாய் இல்லாமல் ஒரு பெண் குழந்தையை தந்தை தனியாக வளர்ப்பதும், தந்தை இல்லாமல் ஒரு ஆண் குழந்தையை தாய் தனியாக வளர்ப்பதும் மிகவும் கஷ்டம்.

964. சரியான முறையில் குழந்தைகளை வளர்க்கா விட்டால்,பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்து தப்பிக்கலாம்.ஆண் குழந்தைகளிடம் தப்ப முடியாது

965. போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து. ஆசைக்கு அளவே கிடையாது. அதிக ஆசை, நம்முடைய மன நிம்மதியைும், தைரியத்தையும் கெடுத்து விடும்.

966. திரையில் சினிமாவைப் பார்ப்பது, மனிதனுக்குத் தோன்றும் இயற்கையான ஆர்வம், தூண்டுதல். இதை வைத்து எத்தனை பேர் பிழைப்பு நடத்துகிறார்கள்?

967. கோடி கணக்கில் ஒரு நடிகருக்கு பணம் கொடுக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது, அதனால் நாம் எப்படி பாதிக்கப் படுகிறோம் என்று யோசிக்கணும்

968. முன்னணி இயக்குநர்கள் நல்ல கதையில். புதுமுக நடிகர்களை நடிக்க வைத்து, சிக்கனமாக படத்தை தயாரித்தால் பெரிய நடிகர்கள் கொட்டம் அடங்கும்.

969. அந்தக் காலத்தில் சிவாஜி,எம்ஜிஆர் கோலோச்சிய போது, ஸ்ரீதர்,பாலசந்தர், கோபாலகிருஷ்ணன், முதலியோர் புது முகங்களை வைத்து படம் எடுத்தனர்.

970. எளிமையாக வாழுங்கள், இனிமையாகப் பேசுங்கள், ஆரோக்கியமாக இருங்கள், நிம்மதியாகத் தூங்குங்கள், அதுதான் சிறந்த வாழ்க்கை முறை. வேறு இல்லை

971. முதல் வகுப்பு ரூ4இல் படம் பார்த்த காலம் போய் இப்போது ரூ40இல் பார்க்கலாம்.ஆனால் ரூ400இல் பார்க்கமுடியுமா?ஏழைகள் மதுவை நாடுவார்கள்.

972. தமிழில் மனதை உருக்கும் கதை எழுத யாருமில்லையே? அந்த மாதிரி திரைப்படங்களைப் பார்த்து வருடங்கள் பல ஆயிற்றே. சிறந்த எழுத்தாளர் எங்கே?

973. சினிமாவைப் பற்றி ஒன்றுமே தெரியாமல், இந்த ஜனங்கள் சினிமாப் பைத்தியமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு சிரிக்கத்தான் தோன்றுகிறது.

974. நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது சினிமா நடிகர்களின் மீது மக்களின் பைத்தியம்,மதுவின் மீது உள்ள மோகம்.இதை ஒழித்தால் போதும்

975. செவிடன் காதில் ஊதிய சங்கு என்பார்கள்.நான் ஊதுர சங்கை ஊதி விட்டேன்.காது செவிடா இல்லையா என்று எனக்குத் தெரியாது.உங்களுக்கு தெரியும்.

Wednesday, December 5, 2018

MANAGING TENSE SITUATIONS

A few days back, I was traveling on a bus. I was sitting near the window. In the opposite seat, a middle-aged woman and a boy of around 16 were sitting. I presumed they were mother and son. Just to while away the time, I inquired the boy about his studies. He said, he was studying in a popular school in X11 standard, he ranked 3rd in the class of 40 students, he played cricket and his favourit subject was English. 


When I asked him whether I could put some questions in English grammar, he agreed. Then I asked him whether he knew about tenses. I could feel he became very tense. He could not give any answer to any question on tenses and his mother was annoyed. She asked him to learn tenses from me. Then I taught him tenses as under.


1. Present tense: Eg. I write, you walk, he plays, they [ or we ] read. [Please note, the verb takes 'S' at the end [suffix] if the subject is third-person singular 'he'


2. Past tense: Eg. I wrote, you walked, he played, they [or we] read [red].


3. Future tense. : Eg. I will write, you will walk, he shall play, they [or we] will read.


4. Present continuous tense: Eg. I am writing, you are walking, he is playing, they [or we] are reading.


5. Past continuous tense: Eg. I was writing, you were walking, he was playing, they [or we ] were reading.


6. Future continuous tense: Eg. I will be writing, you will be walking, he shall be playing, they [ or we ] will be reading.


7. Present perfect tense: Eg. I have written, you have walked, he has played, they [or we] have read [red].


8. Past perfect tense: Eg. I had written, you had walked, he had played, they [ or we] had read [red].


9. Future perfect tense: I would have written, you would have walked, he should have played, they [ or we ] would have read [red].


10. Present perfect continuous tense: Eg. I have been writing, you have been walking, he has been playing, they [ or we ] have been reading.


11. Past perfect continuous tense: Eg. I had been writing, you had been walking, he had been playing, they [ or we ] had been reading.


12. Future perfect continuous tense : Eg. I would have been writing, you would have been walking, he should have been playing, they [ or we ] would have been reading.


Then I asked him a few questions in tenses and he answered them correctly. His mother was happy. She thanked me for taking the initiative and to spend the time usefully. I wished him all success in his exams. I also told him "if you suffer for 4 years and study hard, you will live happily for 40 years" Saying good bye to them, I left at my destination. I also told him two important points in grammar. 


1. In a sentence, when the subject is third person singular, and in present tense, the verb takes the letter 's' at the end [ suffix ]. Eg. He takes, she walks, Ram reads. 


2. In a sentence, when article THE comes before a vowel [ a,e,i,o,u ] it is pronounced as DHE. When it comes before a consonant [ other letters ] it is pronounced as DHA. Eg. DHE elephant, DHA book 

மனதில் தோன்றிய எண்ணங்கள் 946 TO 960

946. சாதகமான ஒரு காரியத்திற்கு என்ன காரணம் என்று நமக்கு நன்றாகத் தெரியும். பாதகமான ஒரு விஷயத்திற்கு என்ன காரணம் என்று தெரியவே தெரியாது.

947. அந்தக் காலத்தில் திரைப்படங்களில் செந்தமிழில் பேசுவது வழக்கம்.ஏனோ எனக்கு செந்தமிழில் பேச, எழுத விருப்பம் இல்லை. காரணம் தெரியவில்லை.

948. ஒரு கவிதை எழுதலாம் என்று என் மனம் நினைத்தால், கவிஞர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்கிற கவலை முதலில் வருகிறது.என்ன செய்வது?

949. மழை பெய்கிறது,வெயில் அடிக்கிறது,பனி கொட்டுகிறது,குளிர் வாட்டுகிறது,காற்று வீசுகிறது,மேகம் நகர்கிறது,மரம் ஆடுகிறது.மனம் களிக்கிறது

950. இருவிழிகளில் பன்னீர் துளிகள் மகிழ்ச்சி, 
கருவிழிகளில் கண்ணீர் துளிகள் வீழ்ச்சி. விழிகளில் துளிகள் வருவது இயற்கை. இடங்கள் தான் வேறு

951. வானத்திலிருந்து பூமிக்கு மழை தாரையாக பொழிகிறது. பூமிதாய் அதை உள்வாங்கி குடிக்கிறாள்.மக்களுக்கு தேவையின் போது அன்புடன் அளிக்கிறாள்.

952. சூரிய பகவான் காலையில் இருந்து மாலை வரை தினமும் தவறாமல் பூமிக்கு வெப்பத்தை அளிக்கிறார். அந்த வெப்பம் இல்லையென்றால் உயிர் நமது இல்லை.

953. புஷ்பத்தை பார்க்கும் போது மனதில் எவ்வளவு பூ பூக்கிறது தெரியுமா? நமது கஷ்டமெல்லாம் காற்றில் தூசியாக பறந்து விடுகிறது என்பது உண்மை.

954. மறக்கலாம் என்றால் முடியவில்லை. நினைக்காமல் இருக்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை.நினைவை விட்டு போக மாட்டேன் என்கிறாள்.என்ன செய்ய?

955. மயக்கும் அந்தி நேரம். ஆற்றின் கரை. முழு நிலா வானில். பச்சை புல்வெளி. மயக்கும் இசை. தென்றல் சுகம். அதோ அவள் வருகிறாள்.கவலையை காணோம்

956. பூக்கும் என நினைத்தேன்.பூத்தது மட்டுமல்ல,பார்த்து சிரித்தது.சிரித்தது மட்டுமல்ல,அருகில் அழைத்தது.அழைத்தது மட்டுமல்ல,மோகம் தந்தது!!

957. வெகுநேரம் காத்திருந்தது தான் மிச்சம்.எப்போது பார்ப்போம் எனத் தெரியவில்லை.மனம் தவிக்கிறது. ஆர்வம் அதிகமாகிறது. எங்கே இந்த பேருந்து?

958. திருமணத்தில் பெண்ணின் சகோதரன் ஹோமத்தில் நெல்பொரி இடுவதற்கும், கார்த்திகையில் அவள் நெல்பொரி உருண்டை படைப்பதற்கும் என்ன சம்பந்தம்?

959. புடவை கடையில் ஒன்பது கஜ புடவைகள் அதிகம் இருக்காது. இப்போது யாரும் அதை உடுததுவது இல்லை. எப்படி உடுததுவது என்று பலருக்குத் தெரியாது.

960. காற்று மிக வேகமாக வீசினால் நஷ்டம்.மெதுவாக வீசினால் சுகம்.மிதமாக வீசினால் இஷ்டம்.வீசவில்லை என்றால் கஷ்டம்.காற்றுக்கு எவ்வளவு சக்தி.

Tuesday, December 4, 2018

THANKSGIVING

In the US, Thanksgiving originated as a harvest festival. It has been celebrated since 1789. Under the presidency of Abraham Lincoln, it became a federal holiday in 1863, during the American Civil War. Lincoln proclaimed a national day of "Thanksgiving and Praise to our beneficent Father who dwelleth in the Heavens," to be celebrated on the fourth Thursday in November.


In INDIA, understanding is different. The food is one of the necessities of life. Without food no one can exist in this world. To sustain life, food is necessary. Only God can give the food and no one else. For providing food for us, we have to thank God by offering the food to Him before eating. It is not done once a year. It is done daily whenever we eat food. The following is the procedure to be followed every time.


Initially, a small quantity of rice is served on the plate on which we are going to eat.  Over the rice, a spoonful of ghee is served. We take a small quantity of rice with the ghee, using our first 3 fingers, and by simultaneously saying each of the following mantras, we swallow the food without chewing it. This is also called Neivedyam. After completion, other items of the food are served for eating.


Om Pranaya svaha 

Om apanaya svaha 

Om vyanaya svaha

Om Udanaya svaha 

Om samanaya svaha 

Om brahmane svaha 


Prana  — the principal breath

Apana  — responsible for the excretory activity

Samana — responsible for digestive activity

Vyana — responsible for the circulatory activity

Udana — respiratory activity

Brahmane --- the Lord

Svaha --- means prostrate


NOTE. Brahmins after their Upanayanam [ Sacred thread ceremony] follow this procedure before eating food. Their ladies perform this Neivedyam after preparing the food. Others can also follow if they are interested. After all, we are the only thanksgiving to the Lord for the food provided to us. MAY GOD BLESS YOU. 

Monday, December 3, 2018

THE RIGHTS AND DUTIES OF PARENTS

It is the duty of the parents to bring up the child from the time they come into their life. They have to nourish the child with food, shelter, clothing, and education. No other person will take such a responsibility. 


However, they should not claim any right over the child. Beating, scolding etc are not allowed. It will only lead to negative effect. The children will wait for an opportune time to return it back to them. Some people are of the opinion that it is the bounden duty of the parents to advise their children whenever they find them wrong.


In bringing up children, one should always use the carrots. When they are children, they should be taught about health. When they go to school, about education. When they are adults, about getting into vices. When they get married, about how to live happily.  The job is then over and they have to carry on. We cannot carry them on our shoulders indefinitely. 


The responsibility of the parent will cease when their children are educated, employed and married. After the marriage, the children become a separate legal entity in which no outsider, including the parents, has any right to interfere, advise, control or condemn. It is the couple who took the marriage vows and not the parents.


A couple after their marriage faces many problems, with the spouse or the parents or the children. It may be physical, financial, emotional, or intellectual. They have to mutually discuss and take a decision together.


If they wish to consult the parents, they can only guide them with their experience but cannot demand its implementation. It is up to the couple to take it or leave it. Such an understanding only will lead to mutual love, respect, and happiness.

மனதில் தோன்றிய எண்ணங்கள் 931 TO 945

931. மஹாகவி பாரதியாருக்கு, தமிழைத் தவிர சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரென்சு மொழிகள் நன்றாகவும், அரபிக் கொஞ்சமும் தெரியும்

932. வாஷிங் மெஷின் உபயோகிப்பதால் பணம்,தண்ணீர் அதிகம் செலவாகிறது,துணி சீக்கிரம் அழுக்காகிறது,கிழிந்து போகிறது,மனிதனை சோம்பேறி ஆக்குகிறது

933. நாம் பிறர் மனம் வருந்தும்படியான விஷயங்களை ஒருபோதும் பேசுதல் கூடாது. எப்போதும் பிறர் சந்தோஷப்படும் விஷயங்களையே பேசுதல் வேண்டும். பலன் உண்டு.

934. சரியான, நம்பகமான தினசரி பெய்யும் மழை மற்றும் மழை சம்பந்தமான செய்திகளை அறிய வ்வ்வ்.இம்ட்ச்சேன்னை.கவ்.இன் என்ற வலை தளத்துக்குச் செல்லவும்.

935. உங்கள் குழந்தைகளிடம் அவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை கூறுங்கள். அவர்கள் எதிர்த்து பேசவில்லை என்றால் உங்களிடம் அன்பு கொண்டவர்கள்

936. தாயாரை பிடிக்கும் என்று கூறினால்,மனைவியை பிடிக்காது என்று அர்த்தமில்லை. ஆங்கிலத்தைக் கற்றால் தமிழை வெறுக்கிறோம் என்று அர்த்தமில்லை

937. துக்கத்தையும், வெறுப்பையும், கோபத்தையும் வெளிப்படுத்த சீதை, கண்ணகி தலைவிரி கோலமாக இருந்தனர். இப்போது பெண்கள் என்ன காரணத்தினாலோ?

938. "உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு" என்பது பழமொழி. சாப்பிட்ட பிறகு ஏன் உறக்கம் வருகிறது என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

939. சாப்பிட்ட பின் இதயம் வயிற்றுக்கு அதிக இரத்தத்தை செலுத்துவதால், மூளைக்கு இரத்தம் குறைந்து, பிராணவாயுவும் குறைவதால் உறக்கம் வருகிறது

940. நடக்கும் போது இதயம் அதிக இரத்தத்தை கால்களுக்கு செலுத்துகிறது. சாப்பிட்ட பிறகு நடந்தால் இதயம் அதிகம் வேலைசெய்து மாரடைப்பு வருகிறது.

941. கொட்டாவி ஒருவருக்கு ஏன் வருகிறது? அவருடைய மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து, பிராணவாயுவும் குறைவதால் கொட்டாவி வருகிறது

942. நமது நாட்டில், ஆயிரக்கணக்கான ஏழைகள் உணவின்றித் தவிக்கும் போது மதம், சாதி, வழக்கம் என்ற பெயரில் வீண் செலவுகள் செய்வது மிகவும் தவறு.

943. ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்பு செய்யும் இரத்த பரிசோதனையில் ஒருவர் பாசிடிவ் ஒருவர் நெகடிவ்வாக இருந்தால் திருமணம் செய்ய கூடாது

944. பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் கார்த்திகை தீபம் கொண்டாட வேண்டும்.இந்த வருடம் நவம்பர் 23 ஆம் தேதி.

945. கார்த்திகை மாதம் மாலையில் விளக்கு வைக்கும் போது, வீட்டு வாசலில் அகல் விளக்கு ஏற்ற வேண்டும். மார்கழி மாதம் விடியலில் ஏற்ற வேண்டும்.

Sunday, December 2, 2018

DETACHMENT 60%

My wife needed a 9-yard sari since the old one has lost its sheen.  As we are new to this place, we requested our son whether he can take us to the Nalli shop in Somajiguda, only where this sari will be available. He agreed and it was decided to leave at 4 PM and to have dinner also in the hotel after the purchase.


I used to sit on the passenger seat, my wife and DIL on the rear with our granddaughter in between. This is the arrangement decided by my DIL as she felt that I would be comfortable in the front. At Nalli, we got a beautiful 9-yard silk-cotton sari, with attached blouse, in parrot green with magenta border. The price was reasonable at Rs.2000.


Then, we proceeded to the Chutney restaurant, which is famous for its quality. The food is very costly. Though the cost is beyond my reasoning, I kept quiet as it is my son's wish and I do not want to interfere. Many people used to wait for their seat. Though costly, my son is particular about this restaurant and he does not like to go elsewhere.


We had a sumptuous dinner and it was followed by Ice cream. I didn't have ice cream for health reasons. However, I requested them to go ahead as my granddaughter would be greatly disappointed and my wife was also fond of ice cream. We were all happy as everything went on well as planned and we returned to the car.


When I was about to take my seat, my granddaughter wanted to sit on my lap. I gladly agreed. It was both a pleasure and pain which I had to endure. At that time, I accidentally noticed a gold plated Lord Ganesha idol and a Cross fixed over the dashboard. Though I respect other religions, I am a firm believer of Hindu religion and its philosophy and I am a follower of Paramacharya. 


I thought of inquiring into his belief and to advise him about the glory of our religion. If he does not agree with me, I will be unhappy. After 45 minutes, the car reached home and even then I could not decide.  It was 10 PM, already late to go to bed. Lying on my bed, I finally decided not to intervene or to interfere with his likes and dislikes. Then I calmly fell into a deep sleep.


NOTE: In bringing up the children, I always used the carrots. When my son was a child, I taught him about health. When he went to school, I explained to him about education. When he was an adult, I cautioned him about getting into vices. When he got married, I advised him how to live life happily.  My job was then over and he has to carry on. I cannot carry him on my shoulders indefinitely. How much the son loves you or hates you is the result of 28 years of upbringing.


CAT ON THE WALL / மதில் மேல் பூனை

1. I am apolitical. But I very well know politics. I write this, with a lot of concern for the thousands of youth, who are going behind the political party, wasting their precious time.

2. Politics is like a cat on the wall. No one can predict which side it will jump. Similarly, in politics how the alliance between the parties will be finalized will not be known to anyone. Even the leader of the party may not know. So there is no point in discussing now the elections.

3. When the alliance for the election is finalized, you will like one of the parties. You may not like the other party. You cannot do anything. What decision will you take then? It is difficult to decide. In the election, you will only vote for the party you like.

4. That is why I say, you wait patiently for the elections to be over. If the party you like wins the elections you feel happy. Afterward, if you are an expert in economics, you may raise questions when the Govt takes steps in the wrong direction. Am I correct?

1. நான் அரசியல் சார்பு இல்லாதவன். ஆனால் எனக்கு அரசியல் நன்றாகத் தெரியும். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு அரசியல் கட்சிகளின் பின்னால் போகிறார்களே என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன்.

2. அரசியல் என்பது மதில் மேல் பூனை போன்றது. எந்தப் பக்கம் தாவும் என்று தெரியாது. எந்தக் கட்சி யாருடன் கூட்டு வைத்துக் கொள்ளும் என்று தெரியாது. யாராலும் சொல்லவும் முடியாது. ஏன், கட்சித் தலைவருக்கே தெரியாது. அதனால் இப்போது தேர்தலைப் பற்றி விவாதம் செய்வதால் பலனில்லை.

3. தேர்தல் உடன்பாடு வந்த பிறகு, அதில் ஒரு கட்சியை உங்களுக்குப் பிடிக்கும், இன்னொரு கட்சியைப் பிடிக்காது. உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அப்போது என்ன முடிவு எடுப்பீர்கள்? கஷ்டமான விஷயம் தான். தேர்தலில் ஓட்டுப் போடும்போது உங்களுக்குப் பிடித்த கட்சிக்கு ஓட்டுப் போடுவீர்கள்.

4. அதனால் தான் சொல்கிறேன், தேர்தல் நடந்து முடியும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். நீங்கள் ஓட்டுப் போட்ட கட்சி ஜெயித்தால் சந்தோஷப் படுங்கள். அதன் பிறகு நீங்கள் பொருளாதாரத்தில் பெரிய திறமைசாலியாக இருந்தால், அரசு செய்யும் தவறான செயல்களுக்கு  எதிர்ப்புத் தெரிவியுங்கள். என்ன, நான் சொல்வது சரிதானே?

Saturday, December 1, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 916 TO 930

916. கழுதைக்கு எவ்வளவு தான் காதிலே உபதேசம் செய்தாலும், அது அவலமாகக் கத்தத் தான் செய்யும். மூடர்களுக்கு செய்யும் உபதேசமும் அதுபோலத்தான்.

917. வாழ்க்கையில் காதலும், காமமும் உணவில் போடப்படும் உப்பு மாதிரி. அதிகமானாலும், குறைந்தாலும் உணவின் ருசி கெட்டு விடும். அது போலத் தான்

918. அரசன்:மந்திரி, அரண்மனைக்கு வந்த திருடனை கண்டு பிடியுங்கள்.மந்திரி: சேவகா,திருடனை உடனே கண்டு பிடி. ஆஹா, மந்திரி வேலை ரொம்ப சுலபம்

919. குளிக்கும் போது ஷவரில் குளித்தால் தண்ணீர் செலவு கணிசமாக குறையும்.தோட்டத்திற்கு பூவாளியில் தண்ணீர் விட்டால் தண்ணீர் செலவு குறையும்.

920. மந்திரி, மக்களுக்கு இசையில் நாட்டம் இல்லை போல் தெரிகிறதே? ஆம் மன்னா, அவர்களுக்கு அரசியல், மதம், சாதி, இவற்றில் நாட்டம் அதிகம்.

921. ஒரு குடும்பத்தில்,தந்தை,தாய்,மகன்,மகள்,மருமகன், மருமகள் ஆகிய ஆறு பேர்களுக்குள்  சுய மரியாதை என்ற வார்த்தைக்கு சிறிதும் இடமேயில்லை.

922. ஸ்ரீ ஹனுமனுக்கு தெரியாத விஷயமே உலகில் கிடையாது. அவர் அறிவாளிகளுக்கு எல்லாம் அறிவாளி. அவர் யாருக்கும் எந்த உபதேசமும் செய்தது இல்லை.

923. "அழ அழ சொல்வார் தமர், சிரிக்க சிரிக்க சொல்வார் பிறர்" என்றொரு பழமொழி உண்டு. நமது நலனில் அக்கறை உள்ளவர்களை புரிந்து கொள்ள வேண்டும்.

924. "நரி வலமாய் போனால் என்ன, இடமாய் போனால் என்ன, கடிக்காமல் போனால் சரி"  "துஷ்ட்டனைக் கண்டால் தூர விலகு" என்பார்கள். எல்லாம் நன்மைக்கே

925. திருமணமான தம்பதிகள் சட்டத்தால் அங்கீகரீக்கப்பட்ட ஒரு குடும்பம். அவர்கள் விருப்பமில்லாமல் அவர்கள் வாழ்க்கையில் தலையிட உரிமையில்லை.

926. மருமகளும் ஒரு மனுஷி தான். அவர் நம்மைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பார் என்கிற  அச்சம் ஒருவருடைய மனதில் எப்போதும் இருக்க வேண்டும்.

927. வெளியில் இருந்து தனது வீட்டிற்குள் நுழைந்தவுடன் கை,கால் கழுவி, திருநீறு அணிந்து, இறைவனைத் துதித்து பிறகு வேலைகளை கவனிக்க வேண்டும்.

928. இறைவனின் திருநாமத்தை உச்சரித்தால் அவருக்குக் கேட்கும். அதனால் தான் அவர் திருநாமத்தைப் பெயர்களாக வைப்பது நமது பெரியோர்கள் நம்பிக்கை

929. உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்பது குறள்.ஒருவர் கேட்கிறார் இப்போது எல்லோரும் டவுசர் தானே அணிகிறார்கள்.

930. ஆண்கள் தினத்தில் பெண்கள் மட்டும் ஆண்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும்; ஆண்கள் தெரிவிக்கக் கூடாது என்பது யாருக்கும்  தெரியவில்லை.

அந்தப் பொக்கிஷங்கள் கிடைக்கப் போவதில்லை

1990க்கு முன்பு வாழ்க்கை எப்படி இருந்தது? எல்லோரும்  கட்டாயம் படிக்கவேண்டியவை. சிரிப்போடு கண்ணீர் வரும். அப்போது  பிறந்தவர்களுக்கு  மட்டும் அந்த அருமை புரியும்.

1. காலை எழுந்ததும் பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.


2. ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்.


3. ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர, ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ நினைத்ததில்லை.


4. பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்.


5. மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக ஜடை போட்டுவிட்டார்.


6. உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் கட்டி, அக்கா தங்கைக்கு அம்மாவே சூட்டி  அழகு பார்த்தார்.


7. நம் அக்காவும் தங்கையும் இரட்டைப் பின்னல்  ஜடை  போட்டு வீதிகளில் வலம் வந்தனர்.


8. மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்.


9. தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமையன்று கிராம ஊராட்சி அலுவலகங்களில் நண்பர்களுடன் இரவு "ஒளியும் ஒலியும்" பார்த்தோம்.


10. அம்மாக்கள், அன்று "சீரியல்" என்னவென்று  தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து பக்கத்து வீட்டுப் பெண்களுடன் அரட்டை அடித்தனர்..


11. ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்.


12. ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கித்  தவித்தோம்.


13. ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கை பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது.


14. ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில்  தொடர்ந்தது.


15. உறவினர்களுக்காக  வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்களா என காத்து கொண்டிருந்தோம்.


16. பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் போனோம். வாங்கி கொடுத்த துணியை அணிந்தோம்.


17. காதலிப்பதே அபூர்வமாக இருந்தது. அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்.


18. 10வது மற்றும் 12வது வகுப்பு பரீட்சை ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்.


19. யாராவது  சாதாரண செல்போன் ( Rs. 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்.


20. பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA [SLR] சைக்கிள் வைத்திருந்தார்கள்.


21. போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்.


22. வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது.


23. வீட்டில் திருமணம் நடந்தால், எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்.


24. ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்.


25. குறைந்த பட்சம் பத்துக்கு எட்டு கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது.


26. குறைந்த பட்சம் பத்துக்கு எட்டு ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது.


27. பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில்உள்ள உறவினர்கள்  வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்.


28. கிணற்றில் மற்றும் ஆறுகள் ஆகிய இடங்களில் குளிக்கும் பழக்கம் இருந்தது. பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது.


29.பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் துணிப் பைகளையே உபயோகித்தோம்.


30. எவ்வளவு மணி நேரம் விளையாடினாலும், உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது.


31 இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்.


32. உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை. பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை. அன்றைய வாழ்நாள் தான் சொர்க்கம்.

Thursday, November 15, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 901 TO 915

901. PETER ENGLAND, LOUIS PHILIPPE என்றெல்லாம் துணிகளுக்குப் பெயர் வைக்கிறார்கள். "வேல் முருகன்" என்று பெயர் வைப்பதில்லையே.என்ன காரணம்?

902. நமது நாட்டு மக்கள் வழிமுறை தவறா அல்லது நாட்டை ஆட்சி செய்பவர்கள் வழிமுறை தவறா என்று அறுதியிட்டுக் கூறமுடியாத நிலையில் இருக்கிறோம்.

903. அரசியல்வாதி லஞ்சம் கொடுக்கிறார். பொதுமக்கள் அதை வாங்கிக் கொள்கின்றனர். தவறு யார் மீது? லஞ்சம் கொடுத்தது தவறா? அதை வாங்கியது தவறா?

904. ஏன் வண்டு மலரைத் தேடிப் போகிறது? மலர் வண்டை கவர்ந்து இழுக்கிறது. ஏன் மலர் வண்டை கவர்ந்து இழுக்கிறது? அது இயற்கையின் திருவிளையாடல்.

905. பெண்கள் தங்கள் வீட்டை துடைப்பத்தால் கூட்டிய பிறகு குப்பையை மூலையில் குவித்தால், பண்டிகை நாளில் மாத விலக்கு வரும் என்பது நம்பிக்கை.

906. ஒருவர் இளமையில் தனது வாழ்க்கைத் துணையை நேசிப்பது வேறு. அது காதல் எனப்படும். அதுவே முதுமையில் நேசிப்பது வேறு. அது கரிசனம் எனப்படும்.

907. "கர்வால்" என்று ஒரு மருந்து.விலை ரூ 5.ஐந்து சொட்டு இருக்கும்.கொதிக்கும் நீரில் சொட்டு சொட்டாக விட்டு ஆவி பிடித்தால் சளி குணமாகும்.

908. "பசி வந்தால் பத்தும் பறந்து விடும்" என்று சொல்வார்கள்."சளி பிடித்தால் உலகமே வெறுத்து விடும்" என்று சொல்கிறேன்.உங்கள் அனுபவம் என்ன?

909. நமது நாட்டில் நடக்கும் சீர்கேடுகளுக்கு சினிமா தான் காரணம் என்று கூறினால், அதைப் புறக்கணிக்க யாரும் முன்வராதது ஒரு பரிதாபமான விஷயம்

910. தெரியாமல் கேட்கிறேன். தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தாமல் எப்படி ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க போகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.

911. நேர்மையான திறமைசாலி அரசியல் கட்சி ஆரம்பித்தால் மற்றவர் அவரைக் கெடுத்து விடுவர்.அவரே ஒரு கட்சியில் இருந்தால் கட்சி கெடுத்து விடும்.

912. ஒரு சிற்பியின் திறமையில் சிலை உருவாகிறது.ஒரு இயக்குனரின் திறமையில் நடிகர் உருவாகிறார்.யாரை பாராட்டுவது என்று பலருக்கு தெரிவதில்லை.

913. "அரவிந்தா ஸமேதா" தெலுங்கு திரைப்படம் பார்த்தோம். வன்முறை கூடாது என்று உபதேசம் செய்து விட்டு வன்முறையை மிக அதிகமாகக் காட்டும் படம்.

914. ஆளைக் கண்டு மயங்காதே ஊது காமாலை என்பார்கள். அழகுக்கும் நடிப்புக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. நமது மக்கள் அழகில் மயங்குகிறார்கள்.

915. திருமண நாள், பிறந்த நாள், திதி நாள் இவற்றை தவிர மற்ற நாட்களில் நானோ, என் மனைவியோ, குழந்தைகளோ கோயிலுக்கு செல்லும் பழக்கம் கிடையாது.

Tuesday, November 13, 2018

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்.

முகநூலில் நிமிடத்திற்கு ஒரு பதிவு வீதம் அரசியலைப் பற்றி பதிவுகள் வருகின்றன. படித்தவர்களும், பாமரர்களும், அரசியல் சார்பு உள்ளவர்களும், இல்லாதவர்களும் பதிவுகள் போடுகிறார்கள். அதைப் படித்து விட்டு பலர் பல விதமான கருத்துகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். 

நான் ஒரு எளியவன். 73 வயதான முதியவன். அரசியல் சார்பு இல்லாதவன். நான் கூறுவதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள். நாட்டுக்கு சேவை செய்யும் எண்ணம் உள்ளவர் ஒரு கட்சி ஆரம்பித்து, பொது மக்களிடம் நன்கொடை வாங்கி, கணக்கு வழக்குகளை சரியாக தணிக்கை செய்யப்பட்டு, தேர்தலில் தனது வேட்பாளர் சார்பில் செலவு செய்ய வேண்டும்.


வேட்பாளர் தனது சொந்தப் பணத்தை செலவு செய்யக் கூடாது. அப்படி செய்தால், தேர்தலுக்குப் பிறகு செலவு செய்த பணத்தை திரும்ப பெறுவதில் குறியாக இருப்பார். அங்கு தான் லஞ்சம் ஊழல் எல்லாம் ஆரம்பம் ஆகிறது.


உங்களுக்கு நன்றாகத் தெரியுமா? நீங்கள் ஆதரிக்கும் நபர் நேர்மையானவர், லஞ்சமோ ஊழலோ செய்யமாட்டார். அவரது கட்சிக்காரர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள், அவர் சொற்படி நடப்பார்கள் என்று உங்களால் உறுதியாகக் கூற முடியுமா? அப்படியென்றால் அவருக்கு ஓட்டுப் போடுங்கள்.


இந்த நாட்டில் எந்தத் தனி மனிதன் தனது கட்சியையும் வேட்பாளர்களையும் தனது கட்டுக் கோப்பில் வைத்திருந்து லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சியை தருவார் என்று நம்புகிறீர்கள். ஆனானபட்ட எம்ஜியார் பட்ட கஷ்டங்கள் உங்களுக்குத் தெரியாதா, மறந்து விட்டதா?


தெரியாமல் கேட்கிறேன். தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தாமல் எப்படி ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க போகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆளாளுக்கு எவரையாவது தலையில் தூக்கி வைத்து பேயாட்டம் ஆடுகிறீர்கள்.


அவர்  தேர்தலில் அளவுக்கு மீறி செலவு செய்ய மாட்டார் என்று தெரியுமா? அப்படி ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க முடியாத போது, ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன?. இங்கு நிலமை என்றும் மாறப் போவது இல்லையே?


இந்த திருநாட்டில், ஒரு நேர்மையான திறமைசாலி தனியாக அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவரைச் சுற்றி உள்ளவர்கள் அவரை நேர்மையாக இருக்க விடமாட்டார்கள். அவரே ஒரு அரசியல் கட்சியில் இருந்தால், அந்தக் கட்சி அவரை நேர்மையான வழியில் போக விடாது.


ஒரு புரட்சி வெடித்தாலே ஒழிய இந்த அரசியல்வாதிகள்  திருந்த மாட்டார்கள். ஓட்டுப் போட்டாலும் ஆபத்து, போடா விட்டாலும் ஆபத்து. பேசாமல் நோட்டாவில் ஒட்டைப் போட்டு விட்டு கிருஷ்ணா, ராமா என்று பேசாமல் இருங்கள். புரட்சி தானே வெடிக்கும். மாற்றம் வரும். நல்ல காலம் பிறக்கும்.


இதைப் படித்த பிறகும் உங்கள் கருத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று எனக்கு நன்கு தெரியும். இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று ஒரு நப்பாசை. விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா, அதை மாற்றுவது மிகவும் கஷ்டமான காரியம். பிறகு இறைவன் சித்தம்.

Monday, November 12, 2018

I HAVE A NAME

I was studying in 6th form in Board High School, Andipatti. in 1956 when I was 11.​ I was residing in Vaigai Dam. I was travelling to the school in a blue colour GMC van both in the morning and evening. One by name, Bose was also coming in the same van. His father was working as constable in the police dept. 

He was a senior, tall, stout and well built. He was arrogant because his father was a policemen. He never called me by my name but only by my caste name [ Iyer,ஐயரே ] and he belonged to a different community. This annoyed me very much. In spite of many requests, he never listened nor bothered. I was apprehensive whether other students would also start calling me like that.


One day, I complained to my father about him. Without understanding my feeling, he advised me not to move with him and to keep away from him. I told him that he was not my classmate nor my friend nor I moved with him. I also told him that in spite of my requests, he continued to call me by my caste and also about my apprehension that other students would follow suit. 


My father ignored my complaint. However, Bose never stopped calling me by caste. We again had an argument and he asserted that he would call me only like that and I could do whatever I might like to do. On that evening, after returning from school, I complained to my mother how much I was mentally disturbed and also wondered why father could not warn him. 


When my father returned home from office at 7 PM, on my behalf, my mother took up the matter with him during dinner. Then my father asked me where Bose's residence was and I told him the location. After dinner, my father washed his hands, put on his shirt, went out and returned after half an hour. I did not know what happened. On the next day, Bose cajoled me and started calling me by my name and not by my caste name.[ஐயரே]

Saturday, November 10, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 886 TO 900

886. பெண்கள் தங்களுடைய கற்பைப் பாதுகாக்க வேண்டும் என்று அலுக்காமல் கூறும் ஆண்கள் தங்களுக்கும் அதேபோல கற்பு உண்டு என்று நினைக்க வேண்டும்

887. திருமணமான ஆண்கள் தனது மனைவியைத் தவிர மற்ற பெண்களை தாய், சகோதரி, அல்லது மகள் என்று நினைக்கவேண்டும். அது ஆண்களின் கற்பு எனப்படும். 

888. திருமணம் ஆகாத ஆண்கள், பெண்களின் காலை முதலில் பார்க்க வேண்டும். காலில் "மெட்டி" இருந்தால், தாய் அல்லது சகோதரி மாதிரி கருத வேண்டும்.

889. பலவித கெட்ட குணங்களைக் கொண்டவர்கள் இறைவனைத் தரிசிக்க கோவிலுக்குச் செல்வதைப் பார்த்தால் அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை.

890. வெள்ளிக்கிழமை பெண்களுக்கு ஒரு விசேஷமான நாள். அதனால் அவர்கள் அன்று கோயிலுக்குப் போகிறார்கள்.ஆண்கள் கூட்டம் ஏன் அங்கு அலை மோதுகிறது?

891. கோவிலுக்கு இறைவனை தரிசனம் செய்யப் போகும் போது, நமது உடல் சுத்தமாகவும், மனது, வாக்கு இரண்டும் இறைவனை பற்றி மட்டுமே நினைக்கவேண்டும்.

892. எத்தனை மாத்திரை சாப்பிடுகிறோம் என்பதைப் பொருத்தது ஆரோக்கியம். குறைந்த மாத்திரை அதிக ஆரோக்கியம். அதிக மாத்திரை குறைந்த ஆரோக்கியம்.

893. பெண்டாட்டி பேச்சைக் கேட்டு பெற்றோர்களைத் தவிக்க விடுவதும் தவறு, பெற்றோர்கள் பேச்சைக் கேட்டு பெண்டாட்டியைத் தவிக்க விடுவதும் தவறு.

894. நீச்சல் கற்றுக் கொள்ள தண்ணீரில் இறங்கினால் தான் கற்றுக் கொள்ள முடியும். வெறும் தரையில் எவ்வளவு முயற்சி செய்தாலும் கற்க முடியாது.

895. ஒருவர் வாழ்க்கையில் கஷ்டப்படுவது சகஜம்.அதற்காக எல்லாவற்றையும் சோகமாகப் பார்க்கக் கூடாது.மனதை மாற்றி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.

896. எப்பொழுதும் பிறருக்குக் கொடுக்க வேண்டும். வாங்கவே கூடாது. நமது உள்ளங்கை கீழ் நோக்கியே இருக்கவேண்டும், மேல் நோக்கி இருக்கக் கூடாது.

897. பிரபலமானவர்களைக் கண்டால் ஒதுங்கிப் போகும் மனப்பான்மை எப்போது இந்த மக்களிடம்  வருகிறதோ அப்போது தான் இந்த நாடு உண்மையில் முன்னேறும்.

898. பண்டிகை நாளில் நான் இறந்து விடக் கூடாது என்று இறைவனிடம் வேண்டிக் கொள்வேன். என் சந்ததி அந்தப் பண்டிகையைக் கொண்டாட முடியாது என்பதால்

899. ஒவ்வொரு தலைமுறையும், அதற்கு முந்திய தலைமுறையை விட, அதிகம் படித்திருக்கிறார்கள், புத்திசாலியாக இருக்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள்.

900. தீபாவளிக்கு குழந்தைகள் பெற்றோர்களுக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். குழந்தைகளை ஆசீர்வதித்து ஒவ்வொருவருக்கும் பணம் கொடுக்க வேண்டும்.



Wednesday, November 7, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 871 TO 885

871. சைவர்கள் அஷ்டமி திதி வரும் நாளை கொகுலாஷ்டமி என்றும், வைஷ்ணவர்கள் ரோகிணி நட்சத்திரம் வரும் நாளை ஸ்ரீஜயந்தி என்றும் கொண்டாடுகின்றனர்

872. நமது இந்தியமுறை கக்கூஸ் தான் சிறந்தது. அடிவயிறு அழுந்த வேண்டும். மேல்நாட்டு முறைக் கக்கூஸ் உட்கார முடியாதவர்களுக்கு மட்டும் தான்.

873. ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்த ஒருவர், மற்ற கட்சிகளைச் சாடுகிறாரே தவிர, தன்னுடைய கட்சியின் சாதனைகளைப் பற்றிக் கூறுவதே இல்லை.

874. ஒரு காலத்தில் தேசம் முழுவதும் தமிழர்கள் பதவியில் இருந்தார்கள்.தமிழ், ஆங்கிலம்,ஹிந்தி எல்லாம் தெரிந்தது.இப்போது ஒன்றும் தெரியவில்லை

875. உச்ச நீதி மன்றத்தின் செயல்முறை, நீதிபதிகளின் சட்ட அறிவு, அதிகாரம், அணுகுமுறை,அங்கு வக்கீல்களின் நிலை இவைகளை அறிந்து கொள்வது நல்லது

876. கிராமத்தில் படிக்காதவன் அரைநிஜார் அணிந்தால் அதற்கு ஒரு மரியாதை,வெளி நாட்டிலிருந்து வந்த படித்தவன் அணிந்தால் அதற்கு ஒரு மரியாதை.ஏன்?

877. அவன் யார் தலையில் கை வைத்தாலும் எரிந்து போகவேண்டும் என்று அசுரனுக்கு சிவன் வரம் அளித்தார்.அவன் அவர் தலையிலேயே சோதிக்க விரும்பினான்

878. தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன், உங்களிலும் என்னிலும் இருப்பார் எனில், உங்களுக்கு புரிபவர், எனக்கு புரியாமல் இருப்பது ஏன்?

879. எண்ணும் இல்லை, எழுத்தும் இல்லை. இலக்கணமும் இல்லை, இலக்கியமும் இல்லை, தமிழும் இல்லை, ஆங்கிலமும் இல்லை, பேசவும் முடியாது.அது தங்லிஷ்

880. இறைவன் மீது நம்பிக்கை உள்ளவர்களை விட நம்பிக்கை இல்லாதவர்கள், அவர்களது நம்பிக்கையில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள் போலத் தெரிகிறது.

881. மனதுக்குப் பிடித்த ஒரு விஷயம் கிடைத்தால் அதை நெருங்கியவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் ஒருவருக்கு ஏற்பட வேண்டும்.

882. அதிகாரத்தின் சக்தியை அறியாத பாமரர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.அந்த அதிகாரத்தைக் கொடுத்தவர்களே அவர்கள்தான் என்பது வேடிக்கை.

883. நாம் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.நன்மை செய்ய முடியவில்லையா. ஒருவருக்கு தீமை செய்யாமல் இருப்பதே அவருக்கு நன்மை செய்தது போல ஆகும்

884. ஒருவருடைய பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையில், அவர் செய்யும் பாவம், புண்ணியம் மட்டுமே மிஞ்சும். அவருடன் கடைசி வரை வருவதும் அவைகளே.

885. என்னதான் சட்டப்படி மகளுக்கு சொத்தில் சமபங்கு கொடுத்தாலும், திருமணமான பின் பெற்றோர்கள் அவளுடன் நிரந்தரமாக வாழ்வதை விரும்புவதில்லை.